தோழர்களே மார்க்சியம், குறித்த 26ம் பதிவு.ஆதி மனிதனின் வாழ்வில் சடங்குகளாகவும் வேட்டை நடனங்களாகவும் தொடங்கிய மனிதனின் மூடநம்பிக்கை குலசமூகங்களில் சடங்கு செய்யும் பூசாரிகள் எனும் வருணத்தை உருவாக்கியது.அடிமை உடமை காலத்தில் இப்பூசாரிகள் சமூகத்தின் அதிகாரம் கொண்ட அமைப்பாக உருவானார்கள்,அடிமை முறை சட்டங்கள் இவர்களால் கடவுளின் பெயரால் பாதுகாக்கப்பட்டன.நிலவுடமை காலத்தில்தான் மதம் தனது உச்சத்தை அடைந்தது மதநிறுவனங்களே அரசனை கட்டுப்படுத்தின அல்லது கடவுளின் பெயரால் தமது மத நிறுவனங்களின் ஆட்சியை அமைத்தார்கள.ஐரோப்பாவில் கிபி 500க்குபின்னால் நிலவுடமை முறையின் தோற்றத்தோடு படிப்படியாக ஆட்சிக்கு வந்த கிறித்துவம் சிலுவை போருக்கு பின் அய்ரோப்பா முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.கடவுளின் பெயராலும் மத சட்டங்களின் பெயராலும் ஐரோப்பா முழுவதும் நிலவுடமை கொடுங்கோண்மை அரங்கேறியது.கடவுளின் பெயரால் நாடு நகரங்கள் சூறையாடப்பட்டன பெண்கள் சாத்தானின் ஊடகம் என வர்ணிக்கப்பட்டார்கள் உலகில் கொடுமைகள் நிகழ அவர்களே காரணம் ஏனெனில் சாத்தானின்சொல் கேட்டு விலக்கப்பட்ட கனியை புசித்துஆணுக்கும் கொடுத்து அவனையும் பாவக்குழியில் தள்ளியவள் என்று பெண்கள் மீது வெறுப்பை உமிழும் கருத்துக்கள் பரப்பப்பட்டது.அறிவிற் சிறந்த பெண்கள் சாத்தானின் கைப்பாவைகள் எனக்கூறி எரித்துக்கொல்லப்பட்டார்கள் இக்காலம் காட்டுமிராண்டித்தனத்தின் உச்சமாக இருந்தது.நிலப்பிரபுத்து அரசர்கள் தங்கள் திருமணம் விவாகரத்து அனைத்துக்கும் போப்பின் அனுமதி பெற வேண்டி இருந்தது.1500களில் தோன்றிய முதலாளிய உற்பத்தி முறை பெரும் நிலவுடமை வர்த்தக வளையங்களை உருவாக்க வேண்டிய தேவையை நிலவுடமை அரசர்களுக்கு ஏற்படுத்தியது.ஐரோப்பிய மக்களும் ஆளும் வர்க்கத்தின் சில பிரிவுகளும் ரோமன் கத்தோலிக கொடுங்கோண்மைக்கு எதிராக கிளர்ந்து எழ ஆரம்பித்தார்கள் இவர்களின் பிரதிநிதியாக மார்ட்டின் கிங் லூதர் இருந்தார்.1500க்குபின்னால் புரோட்டஸ்டாண்ட் அமைப்பு உருவானது கத்தோலிக்கர்களுக்கும் புரோட்டஸ்டாண்டுகளுக்கும் நடந்த யுத்தத்தில் கோடிக்கணக்கான ஐரோப்பிய மக்கள் கொல்லப்பட்டார்கள்.மேற்கு ஐரோப்பாவின் பெரும்பாண்மை நாடுகள் போப்பின் கட்டுப்பாட்டில் இருந்து வெளியேறி தனி ஆட்சிகளையும் தனி மத குருக்களையும் உருவாக்கிக்கொண்டார்கள்.இதுபோலவே மத்திய ஆசியாவிலும் இஸ்லாம் மதத்தின் பெயரால்தான் மத்திய ஆசிய நிலவுடமை அரசுகள் கிபி 600 க்குபின் உருவாக்கப்பட்டது இதை தொடங்கி வைத்தவர் நபிகள் .இப்படி மத நிறுவனங்கள் நிலவுடமை காலத்தின் சர்வாதிகார கொடுங்கோண்மை அமைப்பாக மத்திய ஆசியா ஐரோப்பாவை ஆட்டி வைத்தன.ஆனால் இந்திய துணைக்கண்டத்தில் மத நிறுவனங்களின் ஆட்சி அமைய வில்லை மாறாக நிலவுடமை அரசர்களின் அதிகாரமே மேலோங்கி இருந்தது அதேவேளை நிலவுடமை அரசுகள் மீது மத நிறுவனங்கள் தமது ஆதிக்கத்தை செலுத்தின.இதற்கு காரணம் ஒரு நீண்ட வரலாற்று தொடர்ச்சியை கொண்டதாகும்.பவுத்தம் ஜைனம் அஜிவிகம் போன்ற மதங்கள் கிமு 600க்கு முன்பிருந்தே அடிமை உடமை காலத்திலேயே சத்ரிய வருணத்துக்கே முன்னுரிமை வழங்கினார்கள் புரோகிதர்களுக்கு இரண்டாம் இடத்தையே வழங்கினார்கள் .இது ஒரு தொடர்நிகழ்வாக பிம்பிசாரன் காலத்தில் இருந்து அசோகரின் மவுரிய காலம் வரை தொடர்ந்தது இவர்கள் யாரும் மத நிறுனவங்கள் தங்களுக்கு மேலாக செல்ல அனுமதிக்கவில்லை.ஆட்சி அதிகாரம் சத்ரியர்களின் உரிமையாக இங்கு நிலைபெற்றது எனவே பார்பணர்கள் என்னதான் தகிடு தத்தம் செய்த போதும் ஆட்சி அதிகாரம் செலுத்த முடியவில்லை.\நிலவுடமை அரசுகளை அண்டி யாகங்கள் வேள்வி மூலம் அரசனை ஏய்த்து பிழைக்கும் கூட்டமாகவே இங்கு மதம் இருந்தது.ஆனாலும் இங்கு நிலவுடமை அமைப்பின் தோற்றத்தோடு மத நிறுனவங்களும் செல்வாக்கு மிக்கதாக மாறின .மதநிறுவனங்களை பகைத்துக்கொண்டு எந்த அரசனும் ஆட்சி செய்ய முடியாது எனும் நிலை இந்தியாவில் இருந்தது.ஆனால் எப்போதுமே அரசனின் அதிகாரத்தை தாண்டி செல்ல அவர்கள் அனுமதிக்கப்பட்டதே இல்லை.இதற்கு கிமு 50களில் எழுதப்பட்ட கவுடில்யரின் அர்த்த்சாஸ்திரமும் ஒரு வழிகாட்டலை வழங்குகிறது.ஒரு அரசனுக்கு தனது ராஜ்ஜிய ஆட்சியும் விரிவாக்கமே முக்கியமானது இதை தடுக்கும் எந்த மதவாதிகளின் கருத்தையும் அரசன் ஏற்ககூடாது என்கிறார்.அதுபோல் கிபி 700 தொடக்கத்தில் ஹர்ஷவர்த்தனர் ஆட்சிக்காலத்தில் இந்தியாவுக்கு வந்த யுவான் சுவாங்கை கொலை செய்ய பார்பண புரோகிதர்கள் முயற்சி செய்தனர் அதை அறிந்த ஹர்சர் அவர்களை கடுமையாக எச்சரித்தார்.இதனால் ஆத்திரம் கொண்ட பார்பண புரோகிதர்கள் ஹர்ஷவர்த்தனரையும் கொலை செய்ய சதி செய்தனர் இதை அறிந்த ஹரசர் 500 பார்பணர்களுக்கு மரணதண்டை விதித்தார் ,ஐரோப்பாவிலோ மத்திய ஆசியாவிலோ 500 பாதிரிகளையோ முல்லாக்களையோ மரண தண்டனைக்கு உட்படுத்துவதை நினைத்து பார்க்க முடியுமா?இப்படி புராதன இனக்குழு சமூகத்தில் சடங்குகளாக தோன்றிய மதம் நிலவுடமை காலத்தில் தனது உச்சம் தொட்டு முதலாளிய அமைப்பின் தோற்றத்தோடு தனது வீழ்ச்சியை நோக்கி நகரத்தொடங்கி இருக்கிறது.சுரண்டலும் ஏற்றதாழ்வும் ஒழிந்ததும் தன்னை பராமரிக்க அரசனோ முதலாளியோ இல்லாமல் போகும்போது மனிதன் தன் சிக்கல்களை தன் அறிவு கொண்டு தீர்த்துக்கொள்ளும் சூழலை அமைத்துக்கொள்ளும் போதும் லாபத்தை மட்டுமே குறியாக கொண்ட சந்தை உற்பத்தி ஒழியும்போது மதம் அதன் வேர்களை இழந்து காணாமல் போய்விடும்தொடரும்