இன்று மார்க்சிய மேடையில் பேசியது….தோழர்களே நாம் மார்க்சியம் ஏன் கற்க்க வேண்டும்? (1). பணக்கார நாடுகளில் வாழும் 20% மக்கள் உலக வளங்களில் 86% அனுபவிகின்றனர், 20% ஏழைகள் 1.3% மட்டுமே நுகர்கின்றனர்.(2). அதே 20% வசதியானவர்கள் 50% உணவை உட்கொள்கின்றனர், அதே கீழ் நிலையில் உள்ள மக்கள் பட்டினி வாழ்வில் துவள்கின்றனர்.(3). 200 பெரும் பணக்காரர்களின் செல்வம் பல்கிப் பெருகிவிட்டது, அதே சமயத்தில் வேலையின்மையும்-வறுமையும் உலக மயமாகிவிட்டது.(4). ஒரு பணக்காரனுக்கு 25 ஏழைகள் என்ற விகிதம் கடந்த பத்தாண்டுகளில் ஒரு பணக்காரனுக்கு 95ஏழைகள் என்றாகிவிட்டது.(5). உலகில் 85% மக்கள் மீது 15% உயர்குடிகளின் ஆதிக்கம் நிறுவப்பட்டுள்ளது.இவை மூலதனக்குவியலின் விளைவுகள்.தனியார் மயம், தாராள மயம் (உலக மயம்), சுதந்திரச் சந்தை என்ற புதிய பொருளாதார கொள்கைகள், அமெரிக்க ஏகாதிபத்திய தேவைக்காக அதன் ஆழமான பொருளாதார நெருக்கடியை தீர்த்து கொள்ள வழிவகை செய்யும்.இந்தியாவில் ஒருபுறம் துயரம் என்பது என்னவென்றே அறியாத ஒரு சிலரும் பெரும்பான்மை மக்கள் வாழ வழியற்று துயரமே வாழ்க்கை வாழ்வதும் வான்வெளி தொட உயர்ந்து நிறக்கும் மாடமாளிகையில் வாழ்வதோ ஒரு சிலர்… இங்கே கோடானகோடி மக்கள் வயித்து பசி போக்கவே முடியாத நிலையில் ஏதோ ஒதுங்கி வாழ ஒரு இடமிருந்தால் போதுமென வாழ வழியற்று கிடக்கும் நாட்டில் நமது அறிவியல் பூர்வமான தேடுதலில் கிடைக்கும் விடை மார்க்சியம் மட்டுமே….யாரொருவர் நல்லெண்ணத்தோடு இந்தச் சமுதாயத்தின் அழுக்குகள் கொடிய சுரண்டல்கள் ஒழியவேண்டும் அதற்கான அறிவும் நடைமுறையும் நமக்குத் தேவை என்று நினைக்கிறாரோ அவருக்கு சமூகத்தில் நடக்கும் ஒவ்வொரு செயல்களையும் ஆராய்ந்து பார்த்து துல்லியமாக ஒரு முடிவுக்கு வருவதற்கு சரியான ஆய்வு முறை தெரிந்திருக்க வேண்டும். அப்படி தெரியாவிட்டால் எடுப்பார் கைப்பிள்ளையாக சொல்லுவதெல்லாம் கேட்டு நடக்க வேண்டியதுதான். நாம் ஒரு ஊருக்கு போவது என்றால் அதற்கான வழியை தெரிந்து கொள்ளாவிட்டால் அந்த ஊருக்கு போய் சேருவது இயலாத காரியம் அல்லவா எனவே நடைமுறைக்கு சாத்தியமான அறிவை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.நாம் அறிந்து கொள்ள போகும் அறிவியல் முறையில் தன்மையானது என்றைக்கும் மாறாத நிலைத்திருக்கும் ஒன்றாக இருக்க முடியாது எப்படி என்றால் எல்லா நோய்க்கும் ஒரே மாதிரியான சர்வ நிவாரணி என்பார்களே அதை போல் இல்லாமல் ஒவ்வொரு பிரச்சனைக்கும் அதன் தன்மையை உணர்ந்து அதற்கேற்ற மாதிரியான தீர்வுகளை தேர்ந்தெடுப்பது என்பதாக இருக்க வேண்டும்.உதாரணமாய் சமூக மனிதர்களின் வரலாற்றில் அவர்களுக்கு ஏற்படும் நோய்கள் ஒரே மாதிரி என்றும் இருந்ததில்லை இன்று குரோனவின் நோய் உலகை எப்படி பல கட்டங்களில் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது அதற்கான மருந்து கண்டுபிடிப்பு பற்றி நாம் கேட்டுக் கொண்டுதான் உள்ளோம். அதையொட்டியே நாமும் தத்துவத்தை கையாளத் தெரிந்து அனைத்து மாற்றங்களையும் உள்வாங்கி தக்கமுறையில் ஆய்வு நடத்தி சரியான திசையில் பயணிக்க வேண்டிய விஷயம். ஆகவேதான் தோழர்களே மார்க்சியத்தை கற்று தேறுவோம்,மார்க்சியம் என்றால் என்ன? உலகைப் பற்றிய விஞ்ஞான ரீதியான கருத்தே மார்க்சியம் நாம் வாழும் உலகம் அந்த உலகின் ஒரு பகுதியாகி மனித சமூகம் ஆகியவைகளில் பொது தத்துவம்.காரல் மாக்ஸ் பெயரில் இருந்து பிறந்ததுதான் மார்க்சியம் எங்கெல்சும் சேர்ந்து கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்த தத்துவத்தை உருவாக்கினார். மனித சமுதாயம் இன்றைய நிலையில் இருக்க காரணம் என்ன ? அது ஏன் மாறுகிறது இன்னும் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்? என்பன போன்ற விவரங்களை கண்டு பிடிக்கும் வேலையில் அவர்கள் ஈடுபட்டனர். நீண்ட ஆராய்ச்சியின் பலனாக இந்த மாற்றங்கள் வெளி இயற்கையில் ஏற்படும் மாற்றங்கள் போன்று தற்செயலான அல்ல . இவை சில நியதிகளை பின்பற்றுகின்றன என்பதை அவர்கள் கண்டுபிடித்தனர்.சமூகத்தைப் பற்றி வெளியிடப்பட்ட இன்னும் வெளியிடப்படுகின்ற தெளிவற்ற கருத்துக்களுக்கு- மதநம்பிக்கை, இன ஆராதனை வீரவணக்கம் தனிப்பட்ட விருப்பங்கள், அல்லது கற்பனை கனவுகள் ஆகியவைகளை சார்ந்த நிற்கும் தெளிவற்ற கருத்துகளுக்கு முற்றிலும் மாறுபட்ட மனிதனுடைய அனுபவங்களை ஆதாரமாகக்கொண்டு சமூகத்தைப் பற்றிய ஒரு விஞ்ஞான ரீதியான தத்துவத்தை உருவாக்க இந்த உண்மைகள் உதவின.சமூக வளர்ச்சியை விஞ்ஞானரீதியாக பரிசீலனை செய்ய வேண்டுமானால் மற்ற விஞ்ஞானங்கள் போன்று அனுபவங்களையும் வரலாறும் நம்மை சுற்றியிருக்கும் உலகம் அறிவுறுத்தும் உண்மைகளையும் ஆதாரமாகக்கொண்டு பரிசீலனை செய்ய வேண்டும் ஆகவே மார்க்சியம் பூர்த்தி செய்யப்பட்ட நிர்ணயமான ஒரு கோட்பாடு அல்ல வரலாறு விரிவடையும்போது மனிதன் மேலும் அதிக அனுபவத்தை பெரும் பொழுது அரசாங்கத்திற்கு வரும் புதிய உண்மைகளை க்கும் பொருந்தும் முறையில் மாட்சியும் வளர்கிறது விரிவடைகிறது மார்க்ஸ் மறைந்த பிறகு லெனினும் அவருக்குப் பிறகு வந்த ஸ்டாலினும் மாவோவும் மார்க்சியத்தை வளர்த்தனர்.வெளி உலகை மாற்ற விஞ்ஞான அறிவு பயன்படுவது போன்று சமூகத்தை விஞ்ஞான ரீதியாகப் பரிசோதனை செய்வதால் பெரும் அறிவு சமூகத்தை மாற்ற பயன்படுகிறது. அதனால் வெளி உலகை நிர்ணயிக்கும் நெறிகளை போன்றவை.சமூக அசைவில் நியதிகளை நிர்ணயிக்கும் பொது விதிகள் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது. மனிதனுக்கும் பொருளுக்கும் பொருந்தும் இந்த நியதிகளை மார்க்சின் தத்துவம் அல்லது உலகை பற்றிய விஞ்ஞான ரீதியான கருத்து எனலாம். (இதனை விரிவாக வேறொரு நேரத்தில் பார்ப்போம் தோழர்களே).சரி தோழர்களே இனி இன்றைய நமது தலைப்பிற்க்கு வருவோம் தோழர்களே மேற்கு ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் உறுதியாய் நிலைபெற்றுவிட்ட முதலாளித்துவம் கோடிக்கணக்கான விவசாயிகளைத் தொழிலாளர்களாக மாற்றி, தாங்கமுடியாத உழைப்பும் வறுமையும் அவர்கள் கதி என்றாகிய போது, தமது துன்பங்களுக்குக் காரணமாக தன்கை உழைப்பு பறி போய் இயந்திரங்களும் இயந்திர மயமாக்கப்பட்ட உற்பத்தியுமே என்று பல தொழிலாளர்களுக்கு தோன்றியது.எனவே இதைக் கண்டிக்கும் முறையில் இயந்திரங்களை உடைக்கும் தொழிலாளர்களின் வெகுஜன இயக்கம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் தன்னியல்பாக தோன்றியது .ஆனால் சமுதாய நிகழ்ச்சிப் போக்கை வேறுமாதிரியாக பர்க்கும்மாறு விரைவில் வாழ்க்கையே திரளான மக்களுக்கு வற்புறுத்தியது.பத்தொன்பதாம் நூற்றாண்டின் 30 -40 ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்தில் தோன்றிய சார்ட்டிஸ்ட் இயக்கம், பிரான்ஸ் தொழிலாளர்களின் எழுச்சிகள் (1831 மற்றும்1834) ஜெர்மனியின் சைலிசிய நெசவாளர்கள் எழுச்சி (1844) இவை தொடர்ந்து நடந்த வேலைநிறுத்தங்கள் வரலாற்று அரங்கில் ஒரு புதிய வர்க்கம் தோன்றியுள்ளது இந்த வர்ககம் முதலாளித்துவத்திற்கு மட்டுமின்றி மனிதனை மனிதன் சுரண்டுகின்ற சகாப்தத்தை முற்றுப்புள்ளி வைக்குமாறு கட்டுறுதி கொண்டிருக்கிறது என்பதை எடுத்துக் காட்டின.இத்தகைய அடிப்படையான புரட்சியைக் கொண்டு வரவேண்டுமானால் பாட்டாளி வர்க்கம் சமுதாய வளர்ச்சியின் விதிகள் பற்றி இன்னும் ஆழமான அறிவு பெற்றிருக்க வேண்டும் .இதை விட அளவில் சிறிய சமுதாய மாற்றங்களை கொண்டு வந்த மற்ற புரட்சிகர வர்க்கங்களுக்கு தேவையாய் இருந்தது விட இவ்விதிகள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது என்பதை மேலும் தெளிவாக புரிந்து கொள்ளவும் வேண்டும்.இதுவரை வரலாறு கண்டிராத பணிகளை நிறைவேற்ற வேண்டுமானால் புதிய சித்தாந்த சாதனமான புதிய உலக கண்ணோட்டம் முதல் பெரும் தேவையாகும்.மார்க்சிய தத்துவஞானம் தோன்றுவதற்கு இவைதான் பொருள்வகை, சமுதாய- வரலாற்று முன்தேபடைத்தனர்.தமக்கு முந்திய தத்துவஞானம் இயற்கை விஞ்ஞானம் சமுதாய விஞ்ஞானங்கள் ஆகிய அனைத்தின் உடைய வளர்ச்சியையும் அவற்றின் சாதனைகளையும் சிந்தாந்த அடிப்படையாகக் கொண்டு கார்ல் மார்க்சும் எங்கெல்சும் மார்க்சிய தத்துவத்தை படைத்தனர்.இனி நாம் மார்க்சியத்திற்க்கு முந்தைய தத்துவத்தை பற்றி சற்று விரிவாக பார்ப்போம் தோழர்களே.உலகத்திற்கு மனித வாழ்விற்கு தரப்படும் பல்வேறு விளக்கங்களை எல்லாம் சித்தாந்தம் மெய்யியல் அல்லது தத்துவ ஞானம் என்றெல்லாம் தமிழில் கூறலாம். இங்கு சித்தாந்தமும் உற்பத்தி முறையில் மாறுதல்களை ஒட்டி பல்வேறு வடிவங்களை பெற்று வந்துள்ளது ஆயினும் அவை மதத்தின் பிடியிலிருந்து விடுபடவில்லை பொருள்முதல்வாதம் இந்தியாவில் மதங்களோடு ஒட்டி நீண்ட காலமாக நிலைத்து இருந்தபோதும் கற்பனாவாத மதத்தை வெற்றி கொள்ள முடியவில்லை.வேதங்கள் உபநிடதங்கள் பின்னர் ஜைன புத்த மத போதனைகள் சைவ சித்தாந்தம் பற்றி எல்லாம் பல பாடங்கள் கற்றுக் கொள்ளும் நாம்,” வாழ்க்கை மாயமானது மண்ணாவது ஊண்மை” என்பவை உழைக்கும் வர்க்கத்திற்கு மற்றொரு கற்பனை உலகை சொர்க்கத்தையும் நரகத்தையும் காட்டி ஏமாற்றி கொண்டுள்ளன. பரமாத்மா, ஜீவாத்மா ,பதி ,பசு, பாசம், ஆணவம், கர்மம், மாயை போன்ற பல கற்பனை விளக்கங்களை மனித வாழ்விற்கு கூறிக் கொண்டமை இவை எல்லாம் உழைக்கும் மக்கள் அறியாத வார்த்தைகள் . உடைமை வர்க்கதவரே சித்தாந்திகளை ஆக்கி அவற்றுள் ஆராய்ச்சி நடத்துவர்.அறிஞர்கள் எனக் கருதப்பட்டோர் சமுதாயத்தின் உயர்மட்டத்தில் வாழ்பவரின் கண்ணோட்டங்களைத் தொகுத்து பல்வேறு சித்தாந்தங்களாக வகைப்படுத்தினர். அவை பற்றி தம்முள்ளே பொழுது போக்காக விவாதித்தனர் சண்டையிட்டனர். உலகிற்கு பல்வேறு விளக்கம் கூறி வந்தனர். இவர்கள் பரந்துபட்ட மக்களுக்கு புரியாத வகையில் சித்தாந்தங்கள் பற்றி எழுதிச் சிக்கலாக்கினர்.இன்றைய கல்வி நிலையங்களில் கற்பிக்கப்படும் பல்வேறு சித்தாந்தங்கள் இது மேல்தட்டு மக்களின் நலன் சார்ந்தே இந்த சித்தாந்தகள் தொகுக்கப் பட்டன.உதாரணமாக கூறின் கல்வி அறிவிக்கே வாய்ப்பில்லாத உழைப்பே வாழ்வாகத் துன்பப்படும் மக்களுக்குத் தலைவிதி நியாயம் முற்பிறப்பு பயன் பாவபுண்ணியம் என்றெல்லாம் உலக வாழ்வு பற்றி விளக்கம் கூறி அவர்களது சிந்தனையையும் தொடர்ந்து மழுப்பி வந்தனர்.உலகில் மனித உயிரினம் தோன்றிய காலம் தொட்டு உணவுப்பொருட்கள் தேடுதல், தற்காப்பு , கருவிகள் ஆக்கல் முதலாக பொருள்முதல் வாழ்வே மக்கள் வாழ்ந்து வந்தனர். இயற்கையின் உற்பத்தியாக மனித இனம் பூமியில் வாழ்வதால் இயற்கையின் சீற்றத்திற்கு அஞ்சி இயற்கையை வழிபட்டு வந்தனர்.உழைப்பு மனித இனத்தின் தனி சிறப்பாக விளங்கியது. வளர்ச்சியடைந்த கருவிகள் மிருக வேட்டை பிற கணக்குழுக்களுடன் மோதுவதில் வீரர்களாக விளங்குவர்களுக்கும் அவர் தம் கருவிகளுக்கும் கணக்குழு சார்ந்தவர் வீரவணக்கம் செலுத்தி வந்தனர் .கருவிகளின் வளர்ச்சியோடு உற்பத்தியும் மேம்பட சமூகத்தையும் உற்பத்தி சாதனங்களையும் உடமையாக கட்டுப்படுத்தும் இறைவன் என மன்னன் தோன்றினான். அதைத்தொடர்ந்து வர்க்க சமுதாயம் நிலைபெற்றது . சமூக வளர்ச்சிப் போக்கில் மன்னனின் வர்க்க நலன் குறைபாடுகளையும் கண்டறிந்து சிந்தனையாளர்கள் மன்னனிலும் உயர்ந்த வடிவமாக கற்பனை கடவுளையும் மனித உருவிலே படைத்தினர். சமுதாயத்தில் பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் நிலவிய போதும் தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகி தெய்வத்தின் முன் அனைவரும் சமம் அனைவருக்கும் ஒரே ஆத்மா உள்ளது என சமரச பேணுவதற்காக ”படைத்தவன் படி அளப்பான் | என்பது மட்டுமல்லாது “தெய்வ நீதி என்றும் நிலைத்து நிற்கும் “ என்ற கருத்துகளையும் நம்பிக்கையை யும் ஏற்படுத்தினர் .மதங்களை தொட்டே பெரும்பாலான சித்தாந்தங்கள் தோன்றி மறைந்தன. பல இன்றும் நிலைத்து ஆதிக்கம் செலுத்துகின்றன. நமது கல்வி நிலையங்களில் இவை கற்பிக்கும் பல நியாயங்கள் ஒடுக்கும் வர்க்க நலனை கருத்தில் கொண்டதே என்பது குறிப்பிடத் தக்கவை. மதங்களைப் போலவே அவற்றின் மற்றோர் தோழனாக சித்தாந்தங்களையும் அரசுகள் பேணி வளர்த்து வந்துள்ளன. மன்னர்கள் எல்லோரும் ஏதாவது ஓர் மதத்தை அண்டி இருந்தனர் என்பதை சாதாரணமாக விளக்க வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.இன்று முதலாளித்துவ நாட்டு சித்தாந்தங்கள் கருத்தியலாக மதத்தோடு இணைந்து நிற்கின்றன இன்றைய உற்பத்தி முறைக்கு துணை செய்து சுரண்டலுக்கு உதவுமாறு உற்பத்தியின் தொடர வழி செய்கின்றன சமுதாய அமைப்பை உயர்மட்டத்தில் நின்று நீதி படுத்தி விளக்கம் கூறுகின்றனர் உழைக்கும் வர்க்கத்தை இவற்றை அறியாத போதும் அடக்கி ஒடுக்கி அரசு எந்திரத்தை சேர்ந்தவர்களுக்கு சமாதானமாக கூறுகின்றனர் சாதகமாக இருக்கும் அவர்களது வன்முறைகளை சமூகநீதி என நீதி வழங்குகின்றனர்.கருத்தியல்கள் மனிதச் சிந்தனையை சிறைப் பிடித்து வைத்திருப்பது நன்கு தெரிந்து கொள்ள வேண்டும் . நமது சிந்தனையை இன்றைய அரசால் பேணி பாதுகாக்கப்பட்டு அக் கருத்தே எங்கும் நீக்கமற நிறைந்து படிந்து உள்ளது . அவற்றை துடைத்தெறிந்து சரியான தெளிவான சிந்தனையை நம்மால் ஏற்படுத்திக் கொண்டால் மட்டுமே விஞ்ஞான கண் கொண்ட பார்வை நமக்கு கிடைக்கும்.இன்றும் முதலாளித்துவ நாட்டு அரசுகள் எதுவும் மதத்தில் இருந்து விடுபட்டு விட்டதாக கூற முடியாது மக்களின் வாக்குகளை பெறுவதற்காக பெரும்பாலான மக்களின் மதத்தையே அரசுகள் சார்ந்து இருப்பதை காணலாம் இன்று இந்திய ஆளும் கட்சியான பிஜேபி மதத்தை தனது தேவைகளுக்காக எப்படியெல்லாம் பயன்படுத்துவது என்பது கண்கூடாக நாம் அறிந்த ஒன்றல்லவா இவை பின்னர் பார்ப்போம்.இன்று பள்ளி கல்லூரிகளில் இந்த ஆளும் வர்க்க சித்தாந்தம் மாணவர்களிடையே பரப்பப்பட்டு இது நீதி படுத்தப்படுவது இந்த அரசு தனது சுரண்டலை மூடி மறைப்பதற்காகவே என்றால் மிகை ஆகாது . சித்தாந்தமும் வெறும் கருத்துக்களால் ஆன கருத்தியலே மூட நம்பிக்கைகளையும் பொய்மைகளையும் கொண்டது. மக்களுக்கு புரிய முடியாத மயக்க வார்த்தைகளில் கூறப்படுவது. மதம் தவிர்த்து எவ்வித நடைமுறையில் கொண்டது அல்ல இச் சித்தாந்தம்.விஞ்ஞான வளர்ச்சியை ஒட்டியே சித்தாந்தங்களும் வளர்கின்றன என்பதால் தாலஸ், பைதகோரஸ் போன்ற கிரேக்க அறிஞர்கள் கணிதத்தை சூத்திரங்கள் நிரூபணம் மூலம் விஞ்ஞான மையப்படுத்திய பின்னரே சாக்ரடீஸ் பிளாட்டோ போன்றோர் தங்கள் கருத்துகளை ஆராய சித்தாந்தத்தை தொடங்கினர் இதே கணித விஞ்ஞான வளர்ச்சியிலே பல தத்துவ ஞானம் நிரூபண கருத்துக்களை அணுகுமுறையில் வளர்ச்சி அடைந்தன என்று கூறவேண்டும்.பதினேழாம் நூற்றாண்டில் கலிலியோ நியூட்டன் ஆகியோர் பௌதிகத்தை கணிதத்தோடு இணைத்து விஞ்ஞான படுத்திய பின்னர் இயக்க மறுப்பியல் (மெட்டா பிசிக்ஸ்) என்ற சித்தாந்தம் மேல்நாடுகளில் தோன்றியது ஆந் நாட்டவர்களின் ஆட்சியாளர்கள் தேவைகளை ஒட்டியே இச் சித்தாந்தம் அறிமுக படுத்தப்பட்டது. நிலப்பிரபுத்துவம் முதலாளித்துவம் தமது வர்க்க நலன் பேணுவதற்காக சித்தாந்த தலைவர்களாக சில அறிஞர்கள் அறியப் படுவதும் அவர்கள் ஆளும் வர்க்க செயல்களை நீதியானவை என்று தூக்கி நிறுத்தவே உள்ளனர் என்பது கண்கூடானவை. “முதலாளித்துவத்தில் ஆசிரியர்கள் அதிகாரிகள் மருத்துவர்கள் மதகுருமார்கள் சித்தாந்தவாதிகள் அனைவரும் கூலி அடிமை ஆக்கப்படுவர் “ என மார்க்ஸ் எங்கெல்ஸ் எழுதிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை கூறும்.வர்க்க சமுதாயத்தில் முதலாளிகளின் உலகக் கண்ணோட்டம் பாட்டாளிகளதும் வேறுபட்டே இருக்கும். உலகின் பெரும்பான்மையினரான பாட்டாளிகளின் உலகு பற்றிய கண்ணோட்டத்தை விளக்கு சித்தாந்தம் எதுவும் சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதிவரை வகுக்கப்படவில்லை .ஜெர்மானிய சித்தாந்தவாதியாகிய ஹேகல் என்பவரின் இயங்கியல் கொள்கையும்.அவரின் மாணாக்கராகிய பயர்பாக்ஸ் என்பவரது பொருள் முதல்வாத கோட்பாட்டையும் உள்ளடக்கிய இயங்கியல் பொருள்முதல்வாதம் என்ற நடைமுறை கொண்ட சித்தாந்தத்தை காரல் மார்க்சே தொகுத்து பாட்டாளி வர்க்கத்தின் தனிப்பெரும் கோட்பாடாக வழங்கினார். ஏற்கனவே 1848 ல் மார்க்ஸ் எங்கெல்ஸ் இணைந்து வரலாற்றுப் பொருள்முதல்வாதம் மூலம் மனித வரலாற்றில் விஞ்ஞான மயப்படுத்தி எழுதி வெளியிட்டனர். மனித வரலாற்றில் ஏற்பட்ட பல்வேறு உற்பத்தி முறைகளையும் சமூக அமைப்புகளையும் வரலாற்றுப் பொருள்முதல்வாதம் விரிக்கும். அத்தோடு ஒரு சமூக அமைப்பில் இருந்து மற்றோர் சமூக முறைக்கு மாறுவதையும் இது விளக்கிக் கூறும்.உலகில் பல நூறு சித்தாந்தங்கள் தொகுக்கப்பட்டன.இச் சித்தாந்தங்கள் அனைத்திற்கும் இயங்கியல் பொருள் முதல் வாதத்திற்கும் இடையில் மாபெரும் வேறுபாடு உள்ளது . பிற சித்தாந்தங்கள் அனைத்தும் உலகிற்கு பல்வேறு வகையில் விளக்கம் கூறுவன. இயங்கியல் பொருள்முதல் ஒன்றே உலகை மாற்றியமைக்க வழி கூறும் நடைமுறை கொண்ட சித்தாந்தம் ஆகும்.உலகை மாற்றி அமைக்கக்கூடியவர் பரந்துபட்ட மக்களே; உழைக்கும் பாட்டாளி மக்களாலேயே சாதிக்க கூடிய செயலாகும். இவர்களுக்காக உருவாக்கப்பட்ட சித்தாந்தமே இயங்கியல் பொருள்முதல்வாதமாகும். மற்றைய சித்தாந்தங்கள் போல வெறும் ஏட்டுச் சுரைக்காயாக இயங்கியல் பொருள் முதல்வாதம் இருக்கவில்லை. லெனினால் சோவியத் நாட்டிலும் சீனாவில் மாவோவினாலும் நடைமுறைப்படுத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டது . அதனாலேயே தனது அழிவை நோக்கிக் கொண்டிருக்கும் ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகள் இதை கண்டு அஞ்சுகின்றனர். கம்யூனிசம் என்ற வார்த்தையையும் புரட்சியையும் நசுக்க பல வழிமுறைகளை கையாளுகின்றனர்.ஒன்று படுத்தப்பட்ட வர்க்கப் போராட்டத்திற்கும் பதிலாக பிளவுபடுத்தப்பட்ட இலக்கு ஏதுமற்ற கலகங்கள் வரவேற்கப்படுகின்றன. பண்பாட்டுத்தளத்தில் பின்நவீனத்துவம் போன்றவை இதற்காக இறக்குமதி செய்யப்பட்டு எங்கும் பரவிக் கிடக்கின்றன.சோவியத் வீழ்ச்சியும் அதன் பின் உலகமயமாக்கலும் ஏகாதிபத்தியம் தன்னை தீவிரமாக புதுப்பித்துக்கொண்டு மார்க்சிய விரோத போக்குகளை வளர்தெடுத்தன. நுகர்வுவாதம், வகுப்புவாதம், ஜாதி வாதம் போன்றவைகளும் பலவகைப்பட்ட தனிநபர் வாதம் செயல்பட வைத்தன.சோசலிசத்தின் அடிப்படையிலான பல நாடுகள் தோல்வி அடைந்து ஒட்டி ஏற்பட்ட குழப்பத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய சுதந்திரமான மார்க்சியங்கள் உருவாக்கப்பட்டன. மார்க்சியத்தின் பற்றி பிரச்சினை எழுப்பப்பட்டு மார்க்சியத்தின் போதாமை என்று பிரச்சினை எழுப்பப்பட்டு மார்க்சிய எதிர்ப்பு கோட்பாடுகள் முன்வைக்கப்பட்டன. வர்க்கப் போராட்டமும் கலைக் கோட்பாடு தாக்குதலுக்குள்ளான. இவ்வாறு மக்களை ஒன்று படுவதற்கு பதிலாக பிளவுபடுத்தும் மனித சமூகம் இருப்பின் மறுத்து தனிநபர் அராஜக வளர்ச்சியும் இத்தகைய புதிய இலக்கு கோட்பாடுகளால் முன்வைக்கப்பட்டு தமிழகத்தில் பலர் செயல்பட்டுக் கொண்டுள்ளனர்.ஊடகம் சினிமா சின்னத்திரை எங்கெங்கும் பார்ப்பினும் அவை நடைமுறை சார்ந்த மக்கள் பிரச்சனையை பேசப் படுவதே இல்லை. மக்கள் தினம் போராடிக் கொண்டுள்ளனர் பல்வேறு விதமான சுரண்டலுக்கு எதிராக அவை இன்று புதிய காலனிய சுரட்டலுக்கு எதிராக இவை ஏதேனும் ஒரு வகையில் செய்தியாகினும் உண்மையை எந்த ஊடகமும் நம்முன் வைப்பதில்லை அந்த ஊடக நிறுவனங்களை நடத்துபவர்கள் முதலாளிகளே. ஆகவே சமூக பிரச்சினைகளை இருட்டிப்பு செய்துவிட்டு வெறும் கொலை கொள்ளை பாலியல் விசயங்களை முன்னிறுத்தி சமூக பிரச்சினைகளை திசைத் திருப்பும் வேலை செய்கின்றனர்.சோவியத் வீழ்ச்சிக்குப் பின் பாசிசத்தை விடக் கேடானதாக மார்க்சிய வகைப்பட்ட சோசலிசத்தைச் சித்தரித்துக் காட்டி சோசலிச எதிர்ப்பு இயக்கத்தை கட்டுவதில் ஏகாதிபத்தியம் முனைப்பாக செயல் பட்டது செயல்பட்டு கொண்டிருக்கின்றது. தோழர்களே நான் இதனை தயாரிக்க பயன்படுத்திய நூல் விவரங்களை இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்று பொருள்முதல்வாதமும் (NCBH), குமரனுக்கு கடிதங்கள் செ.கனேசலிங்கம், மனித சமூக சாரம் ஜார்ஜ் தாம்சன்…. இன்னும் சில இதில் உள்ள கருத்துகள் எல்லாம் நமது முன்னோடிகளினுடையவையே.நன்றி தோழர்களே….