மார்க்சியத்தை குழப்பும் குழப்பவாதிகள்-1
மார்க்சியத்தை குழப்பும் குழப்பவாதிகள்-1

மார்க்சியத்தை குழப்பும் குழப்பவாதிகள்-1

இன்றைய தமிழக சூழலில் சிலர் ஏன் சில புரட்சிகர அமைப்புகளே மார்க்சியத்தை எதிர்த்து கொண்டே தாங்கள் ஏதோ மார்க்சியவாதியாக நடித்துக் கொண்டிருப்பது எப்படி அறிந்து கொள்ள இந்தப் பதிவு அவர்களின் நிலையை ஆய்வு செய்ய பயன்படும் என்று நினைக்கிறேன்….
ஒடுக்கும் வர்க்கம், ஒடுக்கபடும் மக்களுக்காக போராடிய கம்யூனிச இயகங்களை அரசியல் ரீதியாக நேர் கொள்ள முடியவில்லை, இதனை நிரைவு செய்ய வந்தவர்களே ஏகாதிபத்திய காவலர்களாகி போன ட்ராட்ஸ்கியவாதிகள்  இப்படி மார்க்சிய பெயரில் ஏமாற்றி திரியும் ஒரு பெருங்கூட்டமுள்ளது.
இவர்களின் பணி, “இடதுசாரி அறிவாளிகளை களத்தில் தோற்கடிப்பதைவிட அவர்களின் இலட்சியத்தில் இருந்தும், அமைப்பில் இருந்தும் விலக்கி இழுத்து செல்வதுதான் இந்த ஏகாதிபத்திய ஏவலர்களின் நோக்கம்.
இரண்டு உலக போரின் பின் பல நாடுகள் சோசலிச முகாமை நோக்கி சென்று கொண்டிருந்தது, அமெரிக்காவின் உள்ளேவும் பெரும் நிறுவனங்களால் சக்கையாகப் பிழியப் பட்ட அனைத்து தொழிலாளர்களிடமும் முதலாளித்துவத்துக்கு எதிரான தொழிற்சங்கங்களுக்கு ஆதரவு பெருகி கொண்டிருந்தது. இவை அமெரிக்க ஏகாதிபத்தியதிற்க்கு அச்சுறுத்தலாக இருக்கவே, கம்யூனிச விரோத கோட்பாடுகளை உருவாக்கி உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதோடு மட்டும் அல்லாமல் தங்களது பல்கலைக்கழகங்கள் மூலம் கம்யூனிசத்துக்கு மாற்றான தத்துவத்தை உருவாக்க முனைந்தன, அங்கிருந்தே உலக நாடுகளுக்கு பல அறிவுஜீவிகளை உற்பத்தி செய்து உலகை தன் சுரண்டலுக்கு ஏதுவாக வைத்து கொள்ள கொணர்ந்த தத்துவமே மார்க்சியத்தையே கேள்வி கேட்கும் புதிய வகை தத்துவங்கள், இவை அமெரிக்காவில் இருந்து பிரான்ஸில் புகுந்து ”தெரிதோ,பூக்கோ” பெயர் தாங்கி சற்று வளர்ச்சி பெற்று இலங்கை மூலம் இந்தியாவை அடைந்தது.  இன்றோ ஏகாதிபத்திய ஏவலர்கள் மார்க்சிய போர்வையில் தமிழக பல மா-லெ அமைப்புகளில் ஊடுருவி உள்ளதை தொடர் நிகழ்வுகள் நிருபித்து கொண்டுள்ளன, ஏகாதிபத்திய கைகூலிகளுடன் பல புரட்சிகர அமைப்புகள் சேர்ந்து நடத்தும் நிகழ்ச்சி நிரல் என்ன சொல்கின்றது??? .
இதோ லெனின் என்ன சொல்கிறார்…
சோசலிச புரட்சி என்றால் என்ன அது எங்கே நடந்தது என்று? ஒரு அறிவார்ந்த கேள்வியை கேட்டிருந்தார் தனக்குதானே மார்க்சிய அறிவாளியாகவும் எந்த மார்க்சிய நூலையும் படிக்காமலே சுயம்புவாக மார்க்சியத்தை போதிக்கும் இவரை பற்றி இவரின் நோக்கம் பற்றி எழுதுவதை விட; இவர் மார்க்சியமே இல்லாதவற்றை மார்க்சியம் என்று கடை விரித்துள்ளார் என்பதை… லெனின் நூலின் அடிப்படையில் விளக்க சிறிய முயற்சி ….
நேற்றைய கிளப் அவுஸ் “சர்வதேச உழைக்கும் பெண்கள் தினம்” பற்றி பேசிய பொழுது ஒரு தோழர் வைத்த கேள்விக்கு பதில் மட்டும் இப்பொழுது சொல்லிக் கொள்ள விழைகிறேன். மற்ற படி தோழர்களின் நல்ல தயாரிப்பும் தோழர் கவின்மொழி அவர்களின் நீண்ட வரலாற்று புரிதலோடு பேசியது மிக சிறப்பாக இருந்தது.
அதற்கான லிங்க் கீழே உள்ளன.
மேலே கேட்கப் பட்டதற்கான பதில் குடும்பம் தனிசொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் நூலின் முன்னுரையில் எங்கெல்ஸ் மிகத் தெளிவாக குறிபிட்டிருப்பார், “முதலாளித்துவ உற்பத்திமுறை ஒழித்துக் கட்டினால்தான் பெண்களுக்கான விடுதலை கிடைக்கும்” என்றார். அவைதானே சோசலிச நாடுகள் சாதித்துக் காட்டின.

R. Chandra Sekaran

சோசலிச புரட்சி என்றால் என்ன அது எங்கே நடந்தது?
R. Chandra Sekaran உங்களை போன்றோர் மார்க்சியதை படிக்காமலே மார்க்சிய மேதையாக வலம் வரும் பொழுது. உங்களுக்கு ஜனநாயகம், சோசலிசம் பற்றி என்னே அக்கரை? அதனை பற்றி தெரிந்துள்ளவர்கள் புரிந்துகொள்ள வேண்டியவர்கள் புரிந்து கொள்வர். உங்களை போன்ற மார்க்சியத்தையே கொச்சை படுத்தும் மார்க்சிய விரோதிகளுக்கு அவை தெரியாதா என்னே?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *