மார்க்சியத்தை குழப்பவாதிகள்-2
மார்க்சியத்தை குழப்பவாதிகள்-2

மார்க்சியத்தை குழப்பவாதிகள்-2

 மார்க்சியத்தை தங்களின் எண்ணம்போல் எழுதிக் கொண்டே அதை விமர்சனம் செய்வோரை நீங்கள் பேசுவது மார்க்சியமல்ல என்று பொய்யான தகவல்களை தங்களின் எண்ணம்போன்ற போக்கில் நான் பேசுவதுதான் மார்க்சியம் என்று பேசும் மார்க்சியமில்லாத போக்கை அம்பலப் படுத்தும் நோக்கில் இந்தப் பதிவு எழுதுகிறேன் தோழர்களே.

கீழே

மார்க்சியத்தை புரிந்து கொள்வது என்பது கடினம் ஒன்றும் இல்லை. அது கற்பனைகளில் இருந்து விலகி உண்மைகளை நேருக்கு நேர் சந்திப்பதாகும்.-

R. Chandra Sekaran

பதிலாக

முதலாளித்துவ ஜனநாயகம் மற்றும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் பற்றிய லெனின் ஆய்வுவுரைகள்பகுதியில் இருந்து சில கருத்துக்கள் …
++++++++++++
சில நாட்களாக முகநூல் பகுதியில் ஒருவர் எழுதிக் கொண்டுள்ளார் எந்த நாட்டில் சோசலிச புரட்சி நடந்து விட்டது என்றும் பொதுவாக ஜனநாயகம் ஜனநாயகம் என்றும் அவர் போடும் கூப்பாடுகளுக்கு அர்த்தமில்லாமல் இல்லை. அவை மிகத் தெளிவாக நமது ஆசானின் எழுத்தில் இருந்து புரிந்து கொள்ள விரிவாகப் பின்னர் எழுதுவேன். தற்பொழுது அவரை அம்பலப்படுத்த மட்டுமே.
…………………………………………………………………………..,……,……….
ஒவ்வொரு நாட்டிலும் பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர இயக்கம் வளர்ச்சி அடைந்து வருவதை கண்டு முதலாளித்துவ வர்க்கத்தினரும் தொழிலாளர் அமைப்புகளில் இருக்கும் அவர்களது கை ஆட்களும் சுரண்டலாலர்களின் ஆதிக்கத்தை தாங்கி ஆதரிப்பதற்கான சித்தாந்த மற்றும் அரசியல் வாதங்களை தேடி பெற மூர்க்கமான முயற்சிகள் செய்து வருகின்றனர்.
பொதுவான ஜனநாயகத்தை ஆதரிப்பதும் பொதுவாக சர்வாதிகாரத்தை பற்றி பேசுவதும் வர்க்க சார்பில்லாத வர்க்கத்துக்கு மேலானதாக சோசலிசத்தின் ஆதாரத் தத்துவத்தை கேலி வர்ணனை செய்வதும் இவர்களின் போக்காக உள்ளது. லெனின் கூறியவைதான் இவை.
மேலும்

சந்திரசேகர் தன் முக நூல்பதிவில் கூறியவை

  · 
விவசாய வர்க்கம் குறித்த 22ம்பதிவு.
இந்தியா 1917 ரசியாவை விடவும் ,1949,ன் சீனத்தை விடவும் மிகவும், வளர்ந்த நாடு.
ரசியாவில் 1917ல் வேளாண்மையில் 80% விவசாயிகள் வேளாண்மையில் ஈடுபட்டு இருந்தனர்,
சீனத்தில் 1949ல் 90% விவசாயிகள் வேளாண்மையில் ஈடுபட்டு இருந்தார்கள்.
ஆனால் இந்தியாவில் இந்த தொகை பாதியாக குறைந்து இருக்கிறது இந்தியாவில் விவசாயிகளின் தொகை 49% அதாவது 65 கோடி பேர்.
அதுபோல் சிறு வெல்டிங் பட்டரைகளும் சிறிய ஆலைகளும் கோடிக்கணக்கில் இருக்கிறது.
இந்த பட்டரைகளிலும் ஆலைகளிலும் ஆலைமுதலாளியே தொழிலாளியாகவும் இருக்கிறார் இப்படிபட்ட ஆலைகளும் பட்டரைகளும் ஒருவர் இருவரை கொண்டு இயங்குவதாகும்.
அதுபோல் கோடிக்கணக்கான மளிகை கடைகள் இருக்கின்றன.இந்த கடைகளிலும் முதலாளியே தொழிலாளியாகவும் இருக்கிறார்.
சரி நமது தோழர்கள் சொல்வது போல் சோசலிச புரட்சி செய்வதாக வைத்துக்கொள்வோம் , புரட்சி நடந்ததும் இத்தனை கோடி பேருக்கும் உடனே அரசு வேலை வழங்கி விட முடியுமா?
அல்லது இந்த கடைகளைகளையும் பட்டறைகளையும் அரசுடமை ஆக்கி அதிலேயே அவர்களை தொழிலாளியாக அமர வைக்கலாமா?
இரண்டுமே சிக்கல் முதலில் சிறு சொத்துடமையாளர்கள் தங்கள் சொத்தை அரசுக்கு வழங்க மாட்டார்கள்.
அப்படியே வழங்கினாலும் இவ்வளவு காலம் முதலாளிய திருட்டுத்தன சிந்தனைகளால் உருவான அவர்களின் மனநிலை நேர்மையாக வேலை செய்யாது அனைத்தையும் சுருட்டவும் வேலை செய்யாமல் ஏமாற்றவும் செய்து அரசுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்துவார்கள்.
இப்படிப்பட்ட சிறு சொத்துடமையை அரசுடமை ஆக்க முடியாது . அது நியாய்மும் இல்லை அதேவேளை அவற்றை நிர்வாகமும் செய்ய முடியாது.
இந்த சிறுவீத உற்பத்திமுறைக்கு மாறாக நவீன பெருவீத உற்பத்தி முறையை உருவாக்க வேண்டும் , சிறு வீத உற்பத்தியாளர்களின் வாரிசுகளுக்கு இந்த பெருவீத உற்பத்தி நிலையங்களில் வேலை வாய்ப்புகளையும் அதற்கான கல்வியையும் அளிக்கப்பட்டபின் சிறுவீத உற்பத்தியில் இருந்து அதன் உற்பத்தியாளர்களை கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்ற வேண்டும்.
இப்படித்தான் சிறுவீத உற்பத்தியையும் , விவசாயிகளின் கூட்டுபண்ணைகளையும் சோசலிச சொத்துடமையாக மாற்ற முடியும்.
கம்யூனிஸ்டுகள் அதிகாரத்தை கை பற்றியதும் அனைத்தும் மாறிவிடும் என்பதும் ஒரு சட்டம் கொண்டு வந்து அனைத்தையும் மாற்றி விடலாம் என்பது எல்லாம் கருத்து முதல்வாதிகளின் கற்பனையே.,.
ரசியாவில் கூட்டுபண்ணைகள் அமைக்கும் முயற்சியே பெருவாரியாக 1940களில்தான் நிறைவுபெற்றது கூட்டுபண்ணை முறை என்பது சாரத்தில் முதலாளிய உற்பத்தி முறையாகும் என்பதை கடந்த பதிவில் விளக்கி இருப்பேன்.
உண்மை இப்படி இருக்க ரசியாவில் சோசலிச புரட்சி நடந்ததாக நம் மாயாவாத கம்யூனிஸ்டுகள் கதை அளக்கிறார்கள்.
இந்தியாவில் சிறுவீத உற்பத்தியும் , கூட்டுபண்ணைகளும் முதலாளிய உற்பத்தி முறைசார்ந்ததாகவும் அது கூட்டு உழைப்பு கூட்டு செயல்பாடு என்ற வகையில் சோசலிச கூறுகளை கொண்டதாகவும் இருக்கும் இந்த உற்பத்தி முறைக்கு மாவோ வைத்த பெயர் புதிய ஜனநாயக புரட்சி.
நாட்டின் பெரும்பாண்மை மக்கள் சிறுவீத சொத்துடமையை கொண்டிருப்பதால் இதை உடனே அரசுடமையாகவோ சோசலிச உற்பத்திமுறையாகவோ மாற்ற முடியாது அதை மக்கள் அங்கிகரிக்க மாட்டார்கள்.
.பெரும்பாண்மை மக்களுக்கு சோசலிசத்தின் மேல் நம்பிக்கை ஏற்படுத்துவதின் வாயிலாக சோசலிச கூறுகளை தொடர்ந்து வளர்த்து செல்வதன் வாயிலாகவே மக்களுக்கு நம்பிக்கை அளித்து அவர்களின் சொத்துக்களை அரசுடமை ஆக்க முடியும்.
இந்த நடவடிக்கை ஐம்பது ஆண்டுகள் கால அளவு தேவைபடும் நடவடிக்கையாகும்.
அதுபோல் பெருமுதலாளிகளின் சொத்துக்கள் மத நிறுவனங்களின் சொத்துக்கள் ஆகியவை சமூக வளர்ச்சிக்கு எதிராக இருப்பதாலும் சமூக வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருப்பதாலும் இவை அரசுடமை ஆக்கப்பட்டு சோசலிச உற்பத்தி முறையாக மாற்றி அமைக்கப்படும்.
சாரத்தில் ப்ரமாண்டமாக வளர்ந்த தனி முதலாளிகள் உற்பத்தியாளர்களாக இல்லாத மாபெரும் நிறுவனங்கள் சமுதாய சொத்தாக அதாவது அரசுடமையாக மாற்றப்படும்.
எனவே இந்திய புரட்சி இரண்டு போக்குகளை கொண்டதாக இருக்கும்,
சிறுவீத சொத்துக்கள் மக்கள் சொத்தாகவே இருக்கும் இதுபடிப்படியாக மக்கள் விருப்பத்தின் பேரில் அர்சுடமையாக அதாவது சமுதாய சொத்துடமையாக மாற்றி அமைக்கப்படும்.
ஆனால் பெரும் முதலாளிகளின் சொத்துக்கள் உடனடியாக அரசுடமையாக மாற்றி அமைக்கப்படும்.
பெருவீத உற்பத்தி முறை சோசலிச உற்பத்தி முறையாக மாற்றி அமைக்கப்படும்.
சிறுவீத உற்பத்தி முறை தனி உடமையாக இருக்கும்.அதேவேளை சமூக உடமையாக மாற்றும் போக்கு நோக்கிய செயல்பாடு இருக்கும்.
சாரத்தில் இது ரசியா சீனாவை விட மிக உயர்ந்த சோசலிச கூறுகளை கொண்ட புரட்சியாக இருக்குமே தவிர முழு சோசலிச புரட்சியாக இருக்காது ,
சாரத்தில் சிறுவீத தனி சொத்துடமையை கொண்ட மக்களின் பெருவீத எண்ணிக்கை காரணமாக இது புதிய ஜனநாயக வழியிலான சமுதாய புரட்சியாகவே இருக்கும்.
மக்கள் தொகையில் மிகு நிலை பெற்ற வர்க்கம் விவசாய வர்க்கம் என்பதாலும் , அதேவேளை சமூகத்தில் சிறுவீத சொத்துடமையை கொண்ட மக்கள் கூட்டமே மிக அதிகமாக இருப்பதாலும் இது புதிய ஜனநாயக வழியிலான புரட்சியாகவே இருக்கும் .
கருத்துக்களை வலியுறுத்த மீண்டும் மீண்டும் சொன்னதையே சொல்வதாக தோன்றும் அளவுக்கு பதிவுகள் இருக்கும் பொருத்துக்கொள்க .
தொடரும்
  · 
ஏகா*திபத்தியங்கள் நினைத்ததை எல்லாம் இச்சமூகத்தில் செய்து விட முடியாது.
ஒவ்வொரு நாட்டின் ஆ*ளும் வர்*க்கத்தின் வளர்ச்சியைக்கொண்டுதான் ஏகாதிபத்தியங்கள் அந்நாட்டை அணுகும்.
மிகவும் பின்தங்கி பெரிதாக தொழில்துறை வளராத நாட்டு ஆளும் வர்க்கங்கள் எடுத்துக்காட்டிற்கு இலங்கை போல உள்ள நாடுகளை எளிதாக ஏகாதிபத்தியங்களால் வளைத்து விட முடியும்.
ஆனால் இந்தியா போன்ற ஓரளவு முதலாளித்துவம் வளர்ச்சி அடைந்த நாடுகளில் ஏகாதிபத்தியங்களின் செயல்பாடுகள் சற்று அடக்கி வாசிக்கும் போக்குடன் தான் இருக்கும்.
இதை நமது M*L அமைப்புகளின் தோழர்கள் புரிந்து கொள்வதில்லை.அமெரிக்காவின் காலனியாக இந்தியா இருப்பதாகவும் அமெரிக்காவின் ஏஜெண்ட்களாக இந்திய பெருமுதலாளிகள் இருப்பதாகவும் கற்பனை செய்து கொள்கிறார்கள்.இந்திய பெருமூலதனம் ஏகாதிபத்தியங்களுடன் இணைக்கப்பட்டிருப்பதாகவும் கூறுகிறார்கள்.( அதற்கான ஆதாரங்களாக இவர்கள் கா*ட், டங்*கல் போன்ற ஒப்பந்தங்களை காட்டுகிறார்கள்)
அது ஒப்பந்தங்கள்.ஐரோப்பிய யூனியனில் உள்ள பல நாடுகள் அமெரிக்காவுடன் ஏற்ற இறக்கமான பல ஒப்பந்தங்களை போட்டுள்ளன அதற்காக அவை அமெரிக்காவின் காலனிகள் என்று கூற முடியாது.
ஏகா*திபத்தியங்களிடையே இப்படி ஏற்ற இறக்கமான ஒப்பந்தங்கள் போடப்படும் போது இந்திய முதலாளிகள் போன்று வளர்ந்து வரும் சக்திகளுடன் போடப்படும் ஒப்பந்தத்தில் பல விசயங்களில் விட்டுதரவேண்டி வரலாம் ஆனால் இறுதியாக இதனால் லாபம் குறைவாக வரும் என்று இவர்களுக்கு தோன்றினால் அந்த ஒப்பந்தங்களை முறித்துக் கொண்டு ரஷ்யா ஐரோப்பிய யூனியன் போன்ற நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளும் வாய்ப்பையும் பெற்றிருக்கிறார்கள்.
தற்கால சூழ்நிலையில் இந்தியா இந்த நாட்டிற்கு மட்டும் தான் சார்பாக உள்ளது என்று குறிப்பிட முடியாத அளவிற்கு இந்திய பெருமுதலாளிகளின் செயல்பாடு உள்ளது.
அமெரிக்கா பேச்சை மீறி ரஷ்*யாவிடம் எண்ணெய் வாங்கியது ஆயுத தயாரிப்பு ஒப்பந்தங்களை ஐரோப்பிய யூனியனுடனும் அமெரிக்காவுடனும் போட்டுக்கொண்டது.
துருக்கிக்கு நிதி உதவி செய்தது என்று உலக அரசியலில் ஒரு சக்தியாக தன்னை நிலைநிறுத்திகொள்ள முயற்சித்து கொண்டுள்ளது.சில இடங்களில் வெற்றியும் அடைந்துள்ளது.
பிற*கு ஏன் இந்*திய மக்கள் பொருளாதார ரீதி*யாக வள*ர்ச்சி அடைய*வில்லை என்று கேட்*டால் அதற்கும் இந்திய பெரு மூல*தனம் தான் காரணம்.இப்படி தன்னை உலகில் ஒரு சக்தியாக நிலைநிறுத்திக் கொள்ள அவர்கள் செலவிடும் பணம் நம்மிடமிருந்து தான் பறிக்கப்படுகிறது.
பழைய பழமொழி ஒன்று கூறுவார்கள் கடைதேங்காயை எடுத்து வழிபிள்ளையாருக்கு உடைக்காதே என்று அது போல் இவர்கள் வள்ளல் போலவும் வலிமையான வர்கள் போலவும் காட்டிக் கொள்வதற்கு அவர்கள் நமது பாக்கெட்டில் தான் கை வைக்கிறார்கள்.பிறகு எப்படி மக்கள் பொருளாதார ரீதியாக முன்னேறுவது.
சிறிது நீங்கள் பூட்டிக்கொண்டு அமர்ந்திருக்கும் அறையை விட்டு வெளியே வாருங்கள் எதார்த்தத்தை பாருங்கள் M*L தோழர்களே.
==============================================================
தோழர்களே மார்க்சியம் என்பது ஒட்டுமொத்த மனித குல அறிவியல் கண்டு பிடிப்புகளின் சாரம் எனலாம்.
மார்க்சியம் மதத்தைபோல் தன்னை என்றும் அழியாத மாறாத தத்துவமாக கருதுவது இல்லை அதன் அடிப்படையே அனைத்தும் மாறும் . மாற்றம் ஒன்றே மாறாதது என்பதே.
மார்க்சியம் விமர்சனத்தை கண்டு அஞ்சுவது இல்லை அதற்கும் மேலாக அது தன்னையும் தன் சிந்தாந்தத்தை ஏற்றுக்கொண்டோரையும் இடைவிடாமல் தங்களை தாங்களே பரிசீலிக்க சொல்கிறது அதற்கு சுய விமர்சனம் என்று பெயர்.
மார்க்சியம் மனிதகுலம் தனது சிக்கல்களை தீர்க்கும் வரை அது அவர்களுடன் பயணிக்கும் அதுகாலம் கடந்த கருத்துக்களை கைவிடக்கோறுகிறது காலம் கடந்த கருத்துக்களை தூக்கி சுமப்பது பிணத்தை தூக்கி சுமப்பதற்கு ஒப்பாகும்.
அது கடந்து போனதை கைவிடுகிறது புதிய அம்சங்களை எப்போதும் அரவணைத்துக்கொள்கிறது எனவே அது வளர்கிறது .
அதன் வளர்ச்சிக்கான நெகிழ்வும் தன்னை காலத்துக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கும் பண்பும் இயல்பான மார்க்சியத்தின் உள்ளீடாக இருப்பதால் அது வளரும் ஒரு தத்துவமாகும்.
இந்த தத்துவத்தின் அடிப்படைகளை இன்று நம்மால் எளிதாக விளக்கி விட முடியும் ஆனால் இதை உருவாக்க ஆரம்பகால மேதைகள் அனுபவித்த சிரமங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல .
அவர்கள் 19ம் நூற்றாண்டின் அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தை பற்றியும் அறிவு பெற வேண்டி இருந்தது.
ரசாயன துறையில் மட்டும் அல்ல அன்று அறிவியல் எதை எல்லாம் ஆய்வு செய்ததோ அவை அனைத்துக்கும் மார்க்சியம் விளக்கம் சொல்ல வேண்டி இருந்தது .
இயற்கையின் இயக்கம் , மனிதனின் சிந்தனை முறை குறித்த தெளிவு , உயிரியலில் தெளிவு ,டார்வினின் பரிணாம விதியில் தெளிவு நவீன இயந்திர உற்பத்தியின் உச்சகட்ட வளர்ச்சி அது கொண்டு வந்த சிக்கல்கள் அனைத்துக்கும் பதில் அளிக்கவேண்டிய கட்டாயம் மார்க்சிய மூலவர்களுக்கு இருந்தது.
மனிதர்கள் 19ம் நூற்றாண்டில் சந்தித்த நெருக்கடிக்கு தீர்வு தேட மனிதகுலம் ஆரம்பகாலத்தில் இருந்து எப்படி உற்பத்தி செய்தார்கள் அதை எப்படி தங்களுக்குள் பங்கிட்டுக்கொண்டார்கள் என்பதை எல்லாம் கண்டுபிடிக்க வேண்டி இருந்தது.
மார்கன் அமெரிக்க பழங்குடிகளிடம் செய்த ஆய்வு ஏங்கல்சுக்கு பெரும் உதவியாக இருந்தது. அதேவேளை ஏங்கல்சும் கிரேக்க இந்திய பழங்குடி சமூகங்களை குறித்து ஆய்வு செய்து மார்கனின் முடிவை ஒத்த கருத்துக்கு வந்தார் .
இப்படி தத்துவ துறையில் ஆழ்ந்து கற்கவும் பழைய உலகின் பிற்போக்கான தத்துவங்களை மோதி வீழ்த்தவும் கடும்போராட்டங்களை சந்தித்த அதேவேளையில் ஐரோப்பாவெங்கும் பற்றி படர்ந்த பெரும் போராட்டங்களுக்கு நடைமுறை வழிகாட்டல் வழங்கவும் அப்போராட்டங்களில் பங்கு கொள்ளவும் வேண்டிய கட்டாயம் மார்க்சிய மூலவர்களுக்கு இருந்தது ,
இபோராட்டங்களில் இருந்தெல்லாம் புடம்போட்ட தங்கமாக வெளிவந்ததுதான் மார்க்சியம் அது மார்க்சால் தொகுத்தளிக்கப்பட்டதால் மார்க்சின் பெயரை தாங்கி மார்க்சியமாக நமக்கு அறிமுகம் ஆனது .
மார்க்சியம் மார்க்ஸ் என்ற தனிமனிதனின் மூளையில் உதித்த ஒரு தத்துவம் இல்லை அது மனிதகுலம் இதுவரை கடந்து வந்த பாதைகளின் வரலாறைபற்றிய ஆய்வும் அந்த சிக்கல்களை தீர்பதற்கான வழிமுறைகள் குறித்த ஆய்வும் ஆகும் .
மன்னர்களின் வரலாறை அல்ல., மக்கள் எப்படிப்பட்ட கருவிகளை கொண்டு பொருட்களை உற்பத்தி செய்தார்கள் , அதை தங்களுக்குள் எப்படி பங்கிட்டுக்கொண்டார்கள் என்பதை ஆய்வு செய்கிறது.
மனிதகுல வளர்ச்சியின் சாரமாக அதன் மையபொருளாக மனிதர்களின் உற்பத்தியும் மறு உற்பத்தியும் அதன் வினியோகமுமே இருக்கிறது இருந்து இருக்கிறது என்ற கண்டுபிடிப்புதான் மார்க்சியத்தின் மைய பொருளும் அதன் புகழ்வாய்ந்த முத்தாய்ப்பும் ஆகும்
மனிதர்கள் எப்படிப்பட்ட கருவிகளை கொண்டு உற்பத்தியில் ஈடுபட்டார்களோ அந்த கருவிகளின் வளர்ச்சிக்கு ஏற்ப மனிதர்களின் வினியோக உறவில் மாற்றம் ஏற்பட்டது இவை மனிதனின் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் நடந்த மனிதனே அறியாத மாற்றமாகும்.
மேற்கண்ட இந்த கண்டுபிடிப்பும் அதன் அடிப்படயிலான எதிர்காலம் குறித்த அணுமானமுமே மார்க்சியத்தின் மாபெரும் புகழுக்கு அடிப்படையை அமைத்து தருகிறது ஆம் இன்று அகழ்வாய்வுகளில் ஈடுபடும் முதலாளிய அறிஞர்கள் ஒரு மக்களின் வாழ்க்கை நிலையை தெரிந்து கொள்ள அவர்கள் பயன்படுத்திய கருவிகளை ஆய்வு செய்ய ஆரம்பித்து இருக்கிறார்கள்.
இந்த ஆய்வு முறை மார்க்சியம் உலகுக்கு அளித்த மாபெரும் பங்களிப்பாகும்.
இன்று ஒரு இடம் அகழ்வு செய்யப்படும் போது அங்கு கண்டு பிடிக்கப்படும் கற்கருவிகள் , செம்பு இரும்பு போன்ற உலோக கருவிகளையும் கொண்டு அந்த மக்கள் எப்படி வாழ்ந்தார்கள் தங்களுக்குள் என்ன வினியோக உறவுகளை கொண்டிருந்தார்கள் என்பதை வெகு எளிதாக கூறிவிட முடியும் .
அந்த கருவிகளை வைத்து அது புராதன பொதுவுடமை சமூகமா? அடிமை உடமை சமூகமா. ? என்பதை நாம் எளிதில் தீர்மானித்து விடலாம்
இந்த கருவிகளை ஆய்வதன் மூலம் மக்களின் வாழ்வை ஆயும் முறை மார்க்சியம் உலகுக்கு அளித்த மாபெரும் பங்களிப்பு ஆகும்.
மார்க்சியத்தின் உற்பத்திக்கருவிகள் உற்பத்தி முறை குறித்து தெளிவு பெறாத எந்த முதலாளிய வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தும் முழுமை பெற்ற கருத்தாக இருக்காது .
தமது ஆய்வுகளில் இந்த உண்மையை அறிந்து கொண்ட காரணத்தால் தான் RSசர்மா போன்ற ஆய்வாளர்கள் படிப்படியாக மார்க்சிய நோக்கில் தங்கள் பார்வையை மாற்றிக்கொண்டார்கள்,
அதேவேளை குவாண்டம் விதியின் அங்கமான நிகழ்தகவு கோட்பாட்டை மனித குல வரலாற்று ஆய்வின் போது முறையாக பயன்படுத்தாத காரணத்தால் வரலாற்றின் சில முக்கிய பகுதிகளை கற்பனையாக உருவாக்கி விட்டார்கள்.
அது ஆரியர்கள் பூர்வீக இந்திய மக்களை வென்று பல்வேறு பிரதேச அரசுகளை இந்தியாவில் உருவாக்கினார்கள் என்ற கருத்து.
ஆனால் இந்திய அகழாய்வு சான்றுகளும் ஆழமாக பரிசீலிக்கப்பட்ட ரிக்வேத சான்றுகளும் மேற்கண்ட RS சர்மா டி டி கோசாம்பி போன்ற எண்ணற்ற இந்திய வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் கருத்துக்களை முற்றிலும் மறுத்து விட்டது.
இந்த ஆரிய கட்டுக்கதைகள் மார்க்சிய மூலவர்களில் இருந்து உலகின் எண்ணற்ற வரலாற்று ஆய்வாளர்களையும் குழப்ப்பியே இருக்கிறது.
காரணம் மார்க்ஸ் ஏங்கல்ஸ் காலத்தில் இந்தியாவில் போதுமான அகழாய்வுகள் செய்யப்பட்டு இருக்கவில்லை , இருந்த போதிலும் அவர்கள் எந்த இனத்தையும் உயர்வு தாழ்வு மனநிலையில் பார்க்க வில்லை.
ஜெர்மானிய ஆரியர்கள் மிக உயர்ந்தவர்கள் என்ற ஜெர்மானியர்களின் இனவெறி வாதத்துக்கு மிக சரியாகவே பதில் அளித்தார்கள் ஜெர்மானிய இனத்தின் சமத்துவ போக்கிற்கு ஜெர்மானிய இனத்தின் உயர்ந்த பண்பு காரணம் இல்லை அந்த உயர்ந்த பண்புக்கு காரணம் அவர்களின் உயர்ந்த வர்க்க பேதமற்ற குல சமூக வாழ்க்கை என்றார்கள்.
அதாவது மனிதனின் வாழ்வே அவன் சிந்தனையை தீர்மானிக்கிறது என்றார்கள். ஒரு மக்கள் கூட்டம் என்ன முறையில் உற்பத்தி செய்கிறதோ அதற்கேற்றவாறு அது முற்போக்கானதாகவோ பிற்போக்கானதாகவோ இருக்கிறது என்பதே இதன் சாரம் ஆகும்.
இது அவர்களின் வரலாற்றியல் பொருள்முதல்வாத பார்வையின் தெளிவை காட்டுகிறது.
ஆனால் ஜெர்மானியருக்கும் ஆரியருக்கும் எவ்வித உறவும் இல்லை ஐரோப்பியர்கள் மொழியியல் தொடர்பு மற்றும் போதுமான அளவில் ஆய்வு செய்யப்படாத ரிக்வேத கருத்துக்களின் அடிப்படையில் கட்டி அமைத்த ஒரு மாபெரும் கற்பணை காவியமே ஐரோப்பியர்கள் ஆரியர்கள் என்ற கட்டுக்கதை.
கீழே உள்ள புகைப்படம் ஜெர்மானிய பழங்குடிகள் ரோமை கிபி 410ல் ஆக்கிரமிப்பு செய்ததை விளக்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *