மார்க்சியத்திலிருந்து விலகும் போக்கை அறிந்துக் கொள்ள
மார்க்சியத்திலிருந்து விலகும் போக்கை அறிந்துக் கொள்ள

மார்க்சியத்திலிருந்து விலகும் போக்கை அறிந்துக் கொள்ள

நான் அண்மைக்காலமாக ********** அவர்களின் பதிவுகளின் சாரம் ஒரு தோழரின் விவாதத்தில் கேட்டேன் அவரின் பல்வேறு கருத்தாக்கங்களை மார்க்சிய விரோத போக்குகளை தூக்கி நிறுத்தவும் மார்க்சியத்தின் பெயரில் மார்க்சியத்தையே குறைகூறி கருத்து முதல் வாதத்தை மார்க்சித்தோடு கலக்கும் பல்வேறு கருத்துகளை கொண்ட அவர்களின் பதிவை உணர்வதை தொடர் மூலம் அறிந்தேன் ஆகவே அவரின் பல்வேறு பதிவுகளை வாசித்து இப்பொழுது பதில் அளிக்க உள்ளேன் நான் இதற்கு முன் சில தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

ஒரு தத்துவத்துக்கு இரண்டு பயன்கள் உண்டு இயற்கையையும் சமூகத்தையும் விளங்கிக் கொள்வதும் அவற்றை மாற்றுவதும் என்ற இரண்டு பயன்கள் உண்டு இவை இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டதாகவும் விளங்கிக் கொள்ளுதல் என்பது மாற்றுவதற்குரிய முதற்படியாகும். இவ்வாறு விளங்கிக்கொள்ளும் நெறிமுறைகளும் அவற்றின் வழி பெறப்பட்ட அடிப்படைக் கருத்துக்களும் அக்குறிப்பிட்ட தத்துவத்தின் முறையிலாக அமைவதுண்டு .இம்முறையில் உள்ள சிற்சில கூறுகள் மாற்றம் பெற்று காலப்போக்கில் செழுமையடையும் வாய்ப்புபொருந்தும்

ஆனால் ஒரு முறையியலுக்குரிய அடிப்படை அம்சங்களே மாற்றத்திற்கு உள்ளாகிவிடின் மாறிய அம்சங்கள் பழைய முறையியலுக்கு உரித்தாக இரா . அவ்வாறு அடிப்படையில் மாறிய அம்சங்கள் புதிய தத்துவதிற்க்குரிய முறையியலாக அமையும்; பழைய தத்துவத்தின் நீட்சியாக இருக்காது. இது அனைத்து தத்துவத்திக்கும் பொருந்தும்.

மார்க்சிய புரிதல் என்பது வளர்ச்சிக்கு உட்பட்டதாகும் ஒரு நூலை ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் படித்த போதும் இப்பொழுது படிக்கும் போதும் அதை விளங்கிக் கொள்வதில் உள்ள வேறுபாடு களை நாம் அறிவோம். இதே போலவே ஒரு சமூக நிகழ்வை விளங்கிக் கொள்வதும் ஆகும்.
ஆத்திகம் என்பது இயற்கையையும் சமூகத்தையும் விலக்கிக் கொள்ளும் ஒரு நெறிமுறை ஆகும் மனித முயற்சிக்கும் செயல்திறனுக்கும் அப்பாற்பட்ட ஓர் ஆற்றல் உலகை கட்டுப்படுத்துகிறது என்பது இதன் அடிப்படைக் கருத்து ஆகும் இதை கடவுள் என்றும் தலைவி என்றும் மூல கருத்து என்றும் பல பெயர்கள் அழைப்பர் இது அதிக முறையில் ஆகும் .இதை விடுத்து விட்டு
கடவுள் இல்லை என்பதும் மனித முயற்சி முதன்மையானது என்பதும் தலைவிதி பொய்யான என்பதும் ஆத்திகத்தின் அடிப்படை அம்சங்களைக் முரண் கொண்டவை ஆகும். இவற்றை ஆத்திகத்துக்குள் அடக்க முடியாது .அப்பொழுது நமக்கு வேறு ஒரு தத்துவம் அதற்குரிய முறையில் தோன்றுகின்றன. இப்படி ஒவ்வொரு தத்துவத்திற்க்கும் அதற்குரிய அடிப்படை முறையியல் அம்சங்கள் உண்டு.
இவ்விதத்தில் மார்க்சிய முறையியலுக்கென அடிப்படை அம்சங்கள் உண்டு .இது தனக்கென உரித்தான வழியில் உலகை விளக்கிக் கொள்ளவும் மாற்றவும் முனைகின்றன. இந்த அடிப்படை அம்சங்களில் சிற்சில மாற்றங்கள் காலப்போக்கில் ஏற்பட்டுள்ளன. ஆனால் அவை அடிப்படை அம்சங்களில் தலைகீழாக்கி விடவில்லை. இந்த அடிப்படை அம்சங்கள் முற்றிலும் மாறினவெனில் அவைமார்க்சியத்தின் எல்லையை தாண்டி விடுகிறது மார்க்சியம் அற்ற கருத்து தோன்றிவிடுகிறது . இவ்விடத்தில்தான் மார்க்சியத்தையும் மார்க்சியம் அற்றதையும் பிரிக்கும் எல்லைக்கோடு தென்படுகிறது.

மார்க்சிய முறையில் என்றும் மாறாமல் கன்னித் தன்மையோடு எப்பொழுது இருக்குமா? இல்லை .இதிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன லெனின் சொன்னது போல் அறிவியலின் அடிக்கல்லை மட்டுமே மார்க்சியம் அமைத்துக் கொடுத்தது , பொதுவான வழிகாட்டும் கோட்பாடுகளையே அளித்துள்ளது. எனவே பொதுவான வழிகாட்டும் கோட்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது எந்த மாற்றங்களையும் இரண்டு கண்களும் கொண்டுவர முடியும் என காணலாம்.

1).பொருள்முதல்வாத கண்ணோட்டம் 2).கருத்துமுதல்வாத கண்ணோட்டம்.

பொருள்முதல்வாத கண்ணோட்டத்தின் வழிநின்று புரட்சிகர நடைமுறையால் பெறப்பட்ட அனுபவங்களையும் கருத்துகளையும் கொண்டு மார்க்சியத்தின் மீது கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் மார்க்சிய நெறிமுறைகளை செழுமைப்படுத்தும் மாற்றங்கள் ஆகும் .இது பொருள் முதல்வாதக் கண்ணோட்டத்தில் ஆன மாற்றம் ஆகும் அதாவது மார்க்சியத்துக்கு ஏற்பட்ட மார்க்சிய நெறியியலாகும்.

கருத்துமுதல்வாத கண்ணோட்டத்தில் மார்க்சியத்தை அணுகி அதன் அடிப்படை அம்சங்களை திரித்துரைத்தல் என்பது மார்க்சியத்துக்கு ஏற்பட்ட மார்க்சியம் அற்ற மாற்றங்களாகும்.

பொருள்முதல்வாத கண்ணோட்டத்தின் வழியே நின்று மார்க்சியத்தை செழுமைப்படுத்துவதனால் ஏற்படும் விளைவுகள் இரண்டு அவையாவன 1).முறையில் அடிப்படை அம்சங்களில் செழுமையுறல்.
2). மார்க்சிய மூலவர்கள் அவர்கள் காலத்துக்கு ஏற்ப எடுத்த முடிவுகளும் புதிய சூழலுக்கு ஏற்ப மாறுதல் பெறல்.

காரல்மார்க்ஸ் எடுத்த முடிவுகளை மாற்றி வேண்டிய சூழலை அவரே எடுத்துரைத்துள்ளார் 1848 இல் பொதுவுடமைக் கட்சியின் அறிக்கை வெளியிடப்பட்டது 1872 ல் அறிக்கைக்கு எழுதிய முன்னுரையில் சில விவரங்களில் இந்த வேலைத்திட்டம் காலம் கடந்துவிட்டது என்பது விளங்கும் என மார்க்ஸ் குறிப்பிட்டுள்ளார். இன்னொன்று காண்போம் ஏகாதிபத்திய சகாப்தத்தில் முந்திய முதலாளி உலகில் வாழ்ந்த எங்கெல்ஸ் ஒரு நாட்டில் மட்டும் சோசலிச புரட்சி சாத்தியம் என்பதற்கு இல்லை என்று மறுத்துள்ளார் ஆனால் ஏகாதிபத்திய சகாப்தத்தில் சில நிலைக்கு உட்பட்டு இவ்வாறு ஒரு நாட்டில் மட்டும் சோசலிசப் புரட்சி சாத்தியமே என லெனின் தம் நடைமுறையில் கண்டு இந்த முடிவை மாற்றினார் இவை இரண்டும் முடிவுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *