Rchandrasekaran Rchandrasekaran

மார்க்சியம் குறித்த 42ம் பதிவு .மார்க்சின் உபரிமதிப்பு கோட்பாடு முதலாளியத்துக்கு மட்டும் பொருந்துவது இல்லை மனித சமூக வளர்ச்சியின் அனைத்து நிலைகளுக்கும் பொருந்தும் .மனிதர்கள் உபரியை உற்பத்தி செய்ய முடியாதவர்களாக இருந்து இருந்தால் இன்றும் வேட்டையாடிகளாக நாடோடிகளாக காய்கனிகளை சேமிப்போராக வாழ்ந்து கொண்டு இருந்து இருப்பார்கள்.ஆனால் மற்ற சமூகங்களில் உபரி வலுக்கட்டாயமாக மக்களிடம் இருந்து பறிக்கப்பட்டது அதற்கு மதம் உறுதுணையாக இருந்தது.ஆனால் முதலாளிய சமூகத்தில் தொழிலாளியின் உபரி மறைமுகமாக பறிக்கப்படுகிறது, உனக்கு பேசப்பட்ட கூலி கொடுக்கப்பட்டு விட்டது இந்த பொருளை அதிக விலைக்கு விற்பது எனது திறமை என்கிறான் முதலாளி.ஆனால் உண்மையில் லாபம் வருவதுமுதலாளியின் திறமையினாலா?அல்லது தொழிலாளியின் உழைப்பினாலா?ஒரு முதலாளி ஒரு காரை தயாரித்து விற்பனை செய்கிறான் மற்ற முதலாளிகள் அவனுக்கு போட்டியாக வரும் வரை அவன் சொன்னதே அந்த காரின் விலையாக இருக்கும்,மற்ற முதலாளிகள் அதுபோன்ற கார்களை உற்பத்தி செய்து விற்பனைக்கு கொண்டு வந்ததும் போட்டி ஆரம்பித்து விடுகிறது.இந்த போட்டி கார் முதலாளி தனது காரை குறைந்த வில்லைக்கு விற்க முயல்வான் ஏனெனில் ஏற்கனவே வேறு கார்கள் தனக்கு போட்டியாக வந்து விட்டன எனவே தரத்தை அதிகரிக்க வேண்டும் அல்லது விலையை குறைக்க வேண்டும்.இந்த போட்டி கார்களின் விலையை சராசரி விலைக்கு விற்க வேண்டிய கட்டாயத்தை உருவாக்கி விடுகின்றன, மேலும் காரின் விலை அதிக விலைக்கு விற்கப்படும்போது அந்த காரின் இடுபொருட்கள் மற்றும் உதிரிபாகங்களும் விலை ஏறி விடுவதால் காரை அதிக விலைக்கு விற்று லாபம் பெற முடியாது.சந்தை பொருளாதாரம் இருக்கும் வரை நாம் நினைத்த விலைக்கு நமது பொருளை விற்க முடியாது சந்தையே அப்பொருளின் விலையையும் தரத்தையும் நிர்ணயம் செய்கிறது.நீங்கள் தக்காளியை கிலோ நூறு ரூபாய்க்கு விற்க விரும்பலாம், உங்கள் விருப்பம் எப்போதும் நிறைவேறாது, உங்களைபோன்ற வியாபாரிகள் தனது சரக்கை விற்று தீர்க்க விலையை குறைப்பார்கள் , போட்டிக்கு நீங்களும் விலையை குறைக்க வேண்டும் இல்லை என்றால் உங்கள் தக்காளி அழுகிவிடும்.சரி தக்காளிதானே அழுகும் இரும்பும் காரும் கப்பலும் எப்படி அழுகும் என கேட்பது புரிகிறது,முதலாளியின் தொழிற்சாலை எப்போதும் இயங்கிக்கொண்டே இருக்க வேண்டும் உற்பத்தி ஆகிக்கொண்டே இருக்கவேண்டும் விற்பனையும் ஆகிக்கொண்டே இருக்கவேண்டும் இல்லை என்றால் அந்த தொழிலே அழிந்து விடும்.ஒரு கார்தொழிற்சாலை தயாரிக்கும் கார்கள் விற்பனை ஆனாலும் ஆகாவிட்டாலும் ஊழியர்களுக்கு சம்பளம் வங்கிக்கு தவணை பணம் அனைத்தும் முறையாக செலுத்தியே ஆகவேண்டும் மற்றும் தொழிற்சாலையை தொடர்ந்து பராமரிக்க வேண்டும் உற்பத்தி நின்று விட்டால் பெரும் இழப்பை அந்நிறுவனம் சந்திக்க வேண்டி வரும்.சந்தையில் அந்த நிறுவனத்துக்கு இருந்த நல்ல பெயர் போய் கெட்ட பெயர் உருவாகி விடும் அதன் பொருட்கள் விற்பனை ஆவதில் சிக்கல் ஏற்படும் உதிரிபாகங்களுக்கு சரியாக பணம்போய் சேர வில்லை என்றால் அவர்கள் உதிரிபாக விநியோகத்தை நிறுத்தி விடுவார்கள்.வாடிக்கையாளர்கள் கைநழுவி போய் விடுவார்கள்.எனவே ஒரு முதலாளிய ஆலையில் உற்பத்தியும் விற்பனையும் சீராக நடக்க வேண்டும் பொருளை நாளை விற்கலாம் என நினைக்க முடியாது ஏனெனில் ஒவ்வொரு நொடிதேக்கமும் மூலதனத்தை இழப்பதாக முடியும்…போன பதிவில் ருஸ்ய தொழிலாளர்கள் தமது வேலை நேரத்தை 4 மணி நேரமாக குறைத்துக்கொண்டு போராடினார்கள் இது 300 பில்லியன் யுவான் நஸ்டத்தை ஹூண்டாய் நிறுவனத்துக்கு ஏற்படுத்தி விட்டது,இந்த நெருக்கடி காரணமாக சில வேளைகளில் தொழிலாளர்கள் இயந்திரத்தில் மாட்டிக்கொண்டு விட்டால்கூட இயந்திரத்தை நிறுத்த மாட்டார்கள்.இப்படி நோக்கியா ஆலையில் ஒரு பெண் இறந்த கதையும் ஸ்ரீபெரும்புதூர் ஹூண்டாய் ஆலையில் ஒரு தொழிலாளி கையை இழந்ததும் நாம் அறிந்த ஒன்று.இப்படி முதலாளிய உற்பத்தி முறைக்கே உரிய நெருக்கடி இருக்கும்போது நாளை விலை கூட்டி விற்கலாம் என எந்த முதலாளியும் நினைக்க முடியாது.எனவே எந்த முதலாளியும் தனது திறமையால் சந்தையில் அதிக விலைக்கு தனது பொருளை விற்க முயலும் முயற்சியை சந்தை பொருளாதாரம் அனுமதிக்காது.இடுபொருட்களை குறைவான விலைக்கு யாருக்கும் தெரியாத இடத்தில் வாங்கலாம் என்றால் அதுவும் விரைவில் போட்டியாளனுக்கு தெரிந்து அங்கும்போட்டிக்கு ஆள்வந்து விலையை ஏற்றிவிடுவான்.உண்மையில் தொழிலாளியின் உழப்பை உரிஞ்சுவதால் மட்டுமே முதலாளி லாபம் பெற முடியும்,எனவேதான் ஒவ்வொரு முதலாளியும் தொழிலாளியின் கூலியை குறைக்க போராடுகிறான்,தொழிற்சங்க தலைவர்களுக்கு நல்ல வசதிகள் செய்து தரப்படுகிறது அவன் வேலை செய்யாமல் அலுவலகத்துக்கே வராமல் கூட இருக்கலாம் நல்ல சம்பளம் நல்ல வீடு சலுகைகள் என்று லஞ்சத்தால் குளிப்பாட்ட படுகிறான்,காரணம் தொழிலாளர்கள் மத்தியில் அவன் நல்லவனாக நடிக்க வேண்டும் உண்மையில் முதலாளியின் தோழனாக இருக்கவேண்டும் என்பதற்காகத்தான்.எந்த அளவு தொழிலாளிக்கு குறைந்த கூலி வழங்கப்படுகிறதோ அந்த அளவு முதலாளிக்கு லாபம்.கட்டுமாணத்துறையில் இருக்கும் ஒரு பொறியியளாலர் குறைந்த கூலிக்கு நன்றாக வேலை செய்யும் தொழிலாளியையே தேர்வு செய்வார் காரணம் அவனின் உழைப்பின் உபரி மதிப்புதான் அவருக்கு லாபம்.ஒரு மேஸ்திரியும் தொழிலாளியின் உழைப்பின் உபரி மதிப்பில் ஒரு பகுதியை எடுத்துக்கொள்கிறார் தொழிலாளிக்கு ஒரு நாள் கூலி 600 ரூபாய் என்றால் மேஸ்திரி 550 ரூபாய்தான் கொடுப்பார் எத்தனை தொழிலாளிகள் அவரிடம் வேலை செய்கிறார்களோ அவ்வளவு லாபம் மேஸ்திரிக்கும் கட்டுமான பொறியாளருக்கும்.ஒரு நபருக்கு 50 ரூபாய் என்றால் 100 பேருக்கும் 5000. ரூபாய் மேஸ்திரிக்கு ஒரு நாள்வருவாயாக அமைகிறது, அப்படியானால் கட்டுமானத்துறை இஞ்ஞியருக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்.இதை நான் கற்பனையாக சொல்லவில்லை நானும் கட்டுமானத்துறையில்தான் இருக்கிறேன்60,000 தொழிலாளர்களை பணியாளர்களாக கொண்ட நிறுவனங்களுக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்?எனவே தொழிலாளிகளின் உபரி உழைப்பே முதலாளியின் மூலதனம் ,இதில் ஏகாதிபத்திய செல்வாக்கின் கீழ் சில வேறுபாடுகள் நிகழ்கின்றன அதை அடுத்த பதிவில் பார்க்கலாம்