மாபெரும் சிந்தனையாளன் கார்ல் மார்க்ஸ் – வாழ்க்கைக் குறிப்பு
மாபெரும் சிந்தனையாளன் கார்ல் மார்க்ஸ் – வாழ்க்கைக் குறிப்பு

மாபெரும் சிந்தனையாளன் கார்ல் மார்க்ஸ் – வாழ்க்கைக் குறிப்பு

கார்ல் மார்க்ஸ் 1818மே 5ஆம் தேதி ஜெர்மனியில் பிறந்தார். தந்தை ஒரு வக்கீல்; புரட்டஸ்டன் மதத்தைச் சார்ந்த யூத இனத்தவர், மார்க்ஸ் பட்டப்படிப்பு முடிந்தபின் பெர்லின் நகரபல்கலைக் கழகங் களில் சட்டம், வரலாறு, சித்தாந்தம் ஆகிய பாடங்களைக் கற்றார், 1841இல் எப்புகூரியஷ என்ற கிரேக்கரின் சித்தாந்தம் பற்றிய டாக்டர் பட்டத்திற்குரிய தன் ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்தார். ஆரம்பகாலத்தில் ஹேகால் இடதுசாரி குழுவில் இருந்தார்.

1942இல் பத்திரிகை ஆசிரியரானர். மார்க்ஸ் எழுத்துக்களைக் கொண்ட இப் பத்திரிகை அரசின் தணிக்கைக்கு உட்பட்டு பின்னர் தடை செய்யப்பட்டது.

1843இல் நீண்டகாலமாகப் பழகிய ஜென்னியைத் திருமணம் செய்து பாரிஸ் சென்றார். 1944இல் ஏங்கெல்ஸ் பாரிசுக்கு வந்தபோது சில நாட்கள் பழகி பின் நெருங்கிய நண்பரானர். அக்காலத்திலேயே பாட்டாளியின் சோஷலிசம் பற்றிய கருத்துக்கள் பற்றி கற்று எழுதத் தொடங்கினர். 1845இல் அங்கிருந்தும் புரட்சியாளன் என விரட்டப் பட்டு புருசல்ஸ் நகரம் சென்றார்.

1847இல் மார்க்சும் ஏங்கெல்சும் “கம்யூனிஸ்டு லீக்” என்ற இரகசிய பிரச்சார சங்கத்தில் சேர்ந்தனர். அதன் இரண்டாவது காங்கிரஸ் 1847 நவம்பரில் கூடியவேளை இருவரும் கம்யூனிஸ்டு கட்சியின் அறிக் கையை தயாரித்தனர். இதுவே 1848 பிப்ரவரியில் வெளிவந்தது. பொருள் முதல் வாதத்தை முன்வைத்து புதிய உலகைச் சிருஷ்டிக்ரும் திறமையும் சிறப்பும் கொண்டது இவ் அறிக்கை, சமூக வாழ்வு, இயக்க வியல், வர்க்கப் போராட்டம், பாட்டாளியின் உலகளாவிய புரட்சி, புதிய கம்யூனிஸ்டு சமுதாய சிருஷ்டி, யாவையும் இச்சிறிய அறிக்கை உள்ளடக்கியது.

1848 பிப்ரவரியில் புரட்சி ஏற்பட, பெல்ஜியத்திலிருந்து பாரிஸ் சென்றார். அங்கு ஏற்பட்ட மார்ச்சுப் புரட்சியின் பின் மீண்டும் ஜெர்மனிக்குச் சென்றார், ஒராண்டு காலம் பத்திரிகை ஆசிரியராகப் பணி புரிந்தார். பின்னர் அங்கிருந்து விரட்டப்பட்டு பாரிஸ் சென்றார் அங் கிருந்தும் பின்னர் விரட்டப்பட் லண்டன் சென்றார். இறக்கும்வரை அங்கேயே வாழ்ந்தார்.

நாடுகளிலிருந்து விட்டப்பட்ட காலத்து மார்க்சின் வாழ்க்கை மிகவும் கொடியதாகும். குடும்பம் வறுமையில் வாடியது. ஏங்கெல்சின் உதவி இல்லாதிருப்பின் மூலதனம் என்ற உலகைப் புரட்டத்தக்க சிறந்த ஆராய்ச்சி நூல் வெளிவந்திருக்காது.

1864இல் முதலாவது சர்வதேசியம் நிறுவப்பட்டது. மார்க்சே இதன் முன்னோடியாக உழைத்தார். 1871இல் பாரிஸ் கம்யூன் வீழ்ச்சி யடைந்தபோது அது பற்றிய சரியான ஆய்வை மார்க்சே முன்வைத் தார்.

வறுமை, அயராத உழைப்பு, இயக்கப் பணிகள், மூலதனம் நூல் வேலைகள் அவரை நோயாளியாக்கியது. இரு குழந்தைகளை நோயினலும் வறுமையினலும் பறிகொடுத்தார். மனைவியை 1881இல் இழந்தார். 1883 மார்ச் 14ஆம் நாள் மாலை 2.45க்கு “உயிர்வாழ்ந்த மாபெரும் சிந்தனையாளன் சிந்திப்பதை நிறுத்திக்கொண்டான்.”

(லெனின் எழுதிய வாழ்க்கை வரலாற்றின் சுருக்கம்.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *