இன்று அமைப்புக்குள் ஏற்படும் சிக்கல்களை தீர்க்க முடியாத தலைமை பற்றியதே இந்தப் பதிவு.
தலைமை எப்படி அதிகாரத்துவப் போக்குள்ள தலைவர்களாக மாறினார்கள் என்று ஆராய்ந்து பார்ப்போமானால் இவர்கள் சாதாரண அணிகளாக இருந்த காலத்திலும் சரி, தலைவர்களாக மாறிய காலத்திலும் சரி கட்சிக்குள் கட்சித் கருத்து முரண்பாடுகளை மறுக்கும் இயக்க மறுப்பியல் சிந்தனைப் போக்கை பயிற்றுவிக்கப்பட்டு, அந்த சிந்தனை முறையிலேயே வளர்ந்த கட்சி ஊழியர்களாகவும், பிறகு தலைவர்களாகவும் மாறி வந்திருப்பதே காரணமாகும்.
நக்சல்பாரி இயக்கத்துக்கு தற்போது வயது 50. இந்த அரை நூற்றாண்டு காலத்தில் இந்திய அரசியலில் பாரதூரமான மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன. அவற்றின்தாக்கத்தில் இருந்து மார்க்சிய லெனினிய இயகங்கள் தப்பிக்க இயலவில்லைSOC, TNML ஆகிய இரு அமைப்பும் ஒரு கொடியில் பூத்த இரு மலர்கள். 1970களில் கோட்டயம் வேணு முன்வைத்த MASS LINEஐ ஏற்றுக் கொண்டு செயல்பட்டவை இவை இரண்டுக்கும் நக்சல்பாரிப் பாரம்பரியம் என்னும் ஆயுதப் போராட்டப்பாதையை ஏற்காதவர்கள். எனவே இன்று இவர்களின் பல்வேறு நிலைபாடுகளோடு தேர்தல் பங்கேற்பு அல்லது அவர்களை தூக்கி நிறுத்தும் செயல் என்பது சமாதான சகவாழ்வை நோக்கி இவர்கள் விரைவது இயற்கை.
மாநில அமைப்புக் கமிட்டியானது திமுகவுக்கு நெருக்கமாக இருந்து கடந்த 2016 தேர்தலில் திமுகவுக்கு வாக்களிக்கும்
மனநிலையை வாக்காளரிடம் ஏற்படுத்தும் நோக்கில், ரயில் பயணத்தில் ஒரு உரையாடல் என்ற வடிவிலான, அநேகமாக தோழர் மருதையன் எழுதிய ஒரு கட்டுரை பு.ஜ.வில் வெளியானது. தொடர்ந்து பழ கருப்பையா போன்ற திமுக தலைவர்கள் மாநில அமைப்புக் கமிட்டியின் மக்கள் திரள் அமைப்புகளின் மேடைகளில் பெரும் கெளரவத்தைப் பெற்றார்கள்.
மேற்கூறிய நிகழ்வுகளின் தர்க்கரீதியான முடிவாக அமைந்து, திமுகவுடனான நெருக்கத்தை அதிகாரபூர்வமாகப் பிரகடனம் செய்துள்ளது. இதன் மூலம் திமுகவை நேசசக்தியாக அங்கீகரிப்பதும், ரசிக மனநிலையுடன் கலைஞரை மகத்தான ஆளுமையாகப் போற்றுவதுமான நிலைபாட்டுக்கு ஒரு சட்டபூர்வ அந்தஸ்தை வழங்கி உள்ளது மாநில அமைப்புக் கமிட்டி.
புருதோனும் ஒரு சோஷலிஸ்ட் தானே என்று மார்க்ஸ் அவருடன் ஐக்கியம் பேணவில்லை. மாறாக ஈவு இரக்கமின்றி அவரின் கற்பனாவாத குட்டி முதலாளிய
சோஷலிசத்தை தாக்கித் தகர்த்தார். அதே போல,இந்திய மார்க்சிஸ்டுகள் இந்திய புருதோன்களை தாக்கித் தகர்த்து வீசி எறியாமல் இங்கே மார்க்சியத்திற்கு
வாழ்வில்லை. இந்த ஒளிவீசும் உண்மையை உணர்ந்து புரட்சிகர நடைமுறையை மேற்கொள்ளவில்லை என்பதே SOC யின் மீதான விமர்சனம்
இன்னும் பல …. யார் ஏறபர்?