மனோகரன் அவர்களே
மனோகரன் அவர்களே

மனோகரன் அவர்களே

திருவாளர் சமூக ஆர்வலர் பழனி சின்னசாமி அவர்களே….
மா.லெ அமைப்புகளின் அரசியலை விமர்சிப்பது சரி…
அமைப்பு பிரச்சினைகளில் தலையிட்டு பேசும் ஆதாரமும் அதிகாரமும் ஆணவமும் எங்கிருந்து வந்தது? வருகிறது???
எல்லை தாண்டி பேசுவது எழுதுவது சரியல்ல!!!
எல்லோருக்கும் வகுப்பு எடுக்கும் நீங்கள் யார் என்பதை உலகுக்கு அறிவியுங்கள்!

எமது அமைப்பின் தேர்தல் முழக்கத்தை தன்னியல்பு என்று பேசியுள்ளீர்கள்….
தன்னியல்பு என்றால் என்ன என்று கற்றுக் கொடுத்தவர்களுக்கே பாடம் நடத்துவதற்கு அபார திறமை வேண்டும்….
அது உங்களிடம் நிறையவே இருக்கு!

தேர்தலை புறக்கணிக்க சொல்லிவிட்டு திரை மறைவில் எதிர் கட்சிக்கு வாக்களிக்க சொல்லும் தேர்தல் புறக்கணிப்பை

விட நேரடியாக மோடி ஆட்சியை வீழ்த்த கோரும் மக்களின் கோரிக்கையை ஆதரித்து அவர்களை பாசிச எதிர்ப்பு முன்னணி அமைக்க அழைப்பு விடுப்பது எவ்வளோவோ திட்டமிட்ட நடவடிக்கை….!

இவை எல்லாம் உங்களுக்கு தெரியாதது அல்ல…
தொடருங்கள் உங்கள் பிராஜக்ட்டை…(Hidden Ajenda)

ஆனால் ஒன்று நிலைமைகள் வெகு வேகமாக மாறிவருகிறது… 
அது உங்கள் மறைமுக நோக்கத்திற்கு எதிராக…
மார்க்சியமும் லெனினியமும் மக்கள் இயக்கமும் வெல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை!!!

Top of Form

🇨🇳
🇨🇳

Mannu Natarajan சபாசு் எங்கிருந்து வந்தது சரியன கோள்வி

Thulasi Rajendran அதென்ன தோழர் அவரை சமூக ஆர்வலர் என்று குறிப்பிடுகிறீர். அதுவே சரியில்லையே. இடதுசாரிகளின் பலம் ஒன்றுபட்ட கட்சிதானே. இவ்வித அணுகுமுறை மாற்றியே ஆக வேண்டும். குறைந்தபட்சம் தோழமை அமைய வேண்டும்.கொஞ்சம் மாற்றிக்கொள்ளுங்கள் தோழர்.

Manokaran Karan முடியாது! மண்வெட்டியை மண்வெட்டி என்றுதான் சொல்ல வேண்டும்!
சமூக ஆர்வலரை புரட்சியாளர் என்று கூறும் துரோகத்தை ஒரு நாளும் செய்யமாட்டோம்!

Thulasi Rajendran Manokaran Karan உங்களோடு செயல்படும்போதும் சமூக ஆர்வலர் தானா. 
மண்வெட்டி உதாரணம் தேவையா.
தோழர்களை தோழர் என்று சொல்வது கூட முடியவில்லையா.ஏதேனும் புரட்சியார்னா புது இலக்கணம் தங்கள் அமைப்பில் ஏதேனும் உள்ளதா.

Gnana Suriyan Munisamy Manokaran Karan தோழர்! சமூக ஆர்வலர் மண்வெட்டி என்றால் புரட்சியாளர் எந்த கருவி!
தொடக்கத்தில் நிலத்தை சரிசெய்ய மண்வெட்டி தேவைப்படும்.

Manokaran Karan மண் வெட்டியை மண் வெட்டி என்று சொல்லுங்கள் அது வளைந்து உள்ளது என்று சொல்லாதீர்கள் என்று லெனின் கூறுவார். அதைத்தான் சொன்னேன்!

உதாரணத்தை பிடித்து தொங்காதீர்கள்!…See More

Gnana Suriyan Munisamy Manokaran Karan தோழர்! நானெல்லாம் புரட்சியாளனா!!அய்யய்யோ!!

Manokaran Karan Gnana Suriyan Munisamy எம் ஜி யாரும் ஜெயாவும் புரட்சியாளர்களாக இருக்கும்போது நீங்க என்ன குறைச்சலா தோழர்!

Manokaran Karan ஒருவர் தனது நிலையை அறிவித்துவிட்டு பின்னர் மற்றவர்களை பற்றி பேச வேண்டும்!
அவ்வாறில்லாமல் அனாமதேயம் எல்லாம் அரசியல் பேசினால் அது அசிங்கம்!
சம்பந்தப்பட்ட வர்கள் யோசிக்க வேண்டும்!!!

Palani Chinnasamy Manokaran Karan என்னதை அறிவிக்க வேண்டும் தோழர், நீங்களே சொல்லவும்

Palani Chinnasamy தோழர் Manokaran Karan முதற்கண் நன்றி உங்கள் கருத்துகளுக்கு, நான் யாருக்கும் சொல்லிக் கொடுக்க வரவில்லை, உண்மையை பேச மட்டுமே நினைத்தேன், நீங்கள் நினைத்தால் யாரையும் எந்த முத்திரை குத்தியும் பேச உங்களுக்கு அதிகாரம் யார் கொடுத்தார்கள், யாரை பற்றி என்ன ஆய்வு செய்து உங்கள் கருத்துகளை முன் வைக்கின்றீர்? நான் அரசியல் அற்ற வாதங்களை முன்னெடுக்க நினைக்கவில்லை தோழர், உண்மையான புரட்சியை நேசிக்கும் தோழர்களை அரவானைத்து செல்ல நினைக்கிறேன், எனக்கு யாரையும் மட்டம் தட்டி புகழ் பாட நினைக்கவில்லை

Manokaran Karan பழனி சின்னசாமி நீங்கள் யார் என்று சொல்லிவிட்டு மற்றவர்களை விமர்சிக்க வேண்டும்!
தேர்தலில் உங்கள் நிலை என்ன? என்று சொல்லிவிட்டு பின்னர் விமர்சியுங்கள்!

எமது அமைப்பு பிரச்சினைகளை பேசுவதற்கு உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை!

தெருவில் நின்றுகொண்டு மற்ற அமைப்பு விஷயங்களை பேசுவது அறாஜகம்! விஷமம்! உள் நோக்கம் கொண்டது!
அதாவது ஹிட்டன் அஜெண்டா!!!

Palani Chinnasamy Manokaran Karan தோழர் மக்களுக்கு கேட்கும் உரிமை இல்லை என்று சொன்னது சர்வாதிகார இட்லர் மட்டுமே, மக்களுக்காக மட்டுமே பாடுபடும் ஒரு கட்சியில் உள்ள நீங்கள் செய்வதை கேட்க்க அதிகாரம் இல்லை எனில் உங்கள் புரட்சிப் பணி யாருக்கானது தோழர்

Manokaran Karan எதை சொல்ல வேண்டும் என்பதை நான் கேட்டுவிட்டேன்…
அவ்வளவுதான்…!!!

Manokaran Karan முறை இல்லாமல் விமர்சனம் செய்வதுதான் உங்கள் நாகரிகமா?

Palani Chinnasamy Manokaran Karan என்ன முறையற்ற விமர்சனம் தோழர்

Bottom of Form

Palani Chinnasamy தோழர் மனோகரன் அவர்களே எனது கருத்தை நீங்கள் அங்கே களமாடியிருந்தால் நான் பதிலளிக்க பயனுள்ளதாக இருந்திருக்கும், பரவாயில்லை நட்பு முரண் பகை முரண் அறியா நிலையில் உள்ளவர்கள், தங்களின் நிலையை தக்க வைக்க அடுத்தவரை குற்றவாளியாக்கினால் மட்டுமே தனது புனித தன்மை காக்கப்படும் என்பது அறிந்தே பேசும் நிலபிரபுத்துவ கருத்து இவைதானே, பெண்ணின் எதிர் பேச்சிற்க்கு பதில் தர முடியாத ஆணாதிக்க வாதி அவளை” தேவடியா” என்ற ஒற்றை வார்த்தையால் கட்டிப் போடுவது போல் தங்களுக்கு எதிர் கருத்து தெரிவிக்கும் எல்லோரும் என்.ஜி.ஓ, கலைப்புவாதி இதி்தியாதி இத்தியாதி…. உங்களின் புரட்சி பணியை பட்டியலிட முடியுமா? முகநூலில் வேண்டாம் நேரிலே ஆவணங்கள் கொடுக்க முடியுமா? அடுத்தவரை முத்திரை குத்தும் முன் உங்கள் உண்மை முகத்தை அரசியல் நிலையை சமுக பங்களிப்பை கருத்தில் கொளல் நன்றே.

Murugesan Jayaraman //அமைப்பு பிரச்சினைகளில் தலையிட்டு பேசும் ஆதாரமும் அதிகாரமும் ஆணவமும் எங்கிருந்து வந்தது? வருகிறது?//

கட்சி அல்லது அமைப்பு என்பது பொதுமக்களிடம் நிதி வசூல் செய்து கட்டப்பட்டு செயல்படுகிறது. மேலும், பொதுமக்களின் அரசியல் பொருளாதாரம், பண்பாடு குறித்து விவாதித்து முடிவெடுக்கிறது. அதனால் கட்சியின் அரசியல், அமைப்பு பிரச்சினைகளை தெரிந்து கொண்டு விமர்சிக்க பழனி சின்னசாமி உள்பட அனைவருக்கும் உரிமை உண்டு.

கட்சி அல்லது அமைப்பில் இருப்பவர்கள், அரசியல் பொருளாதாரம், பண்பாடு போன்றவற்றை விவாதிக்காமலும், பொதுமக்களிடம் நிதி வசூல் செய்யாமலும் இருந்து, காலையில் மீன் குழம்பு ஊற்றி சாதம் சாப்பிடுவதா அல்லது வத்தக்குழம்பு ஊற்றி சாதம் சாப்பிடுவதா என்று விவாதித்தால் அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை. அது அந்த அமைப்பின் அல்லது கட்சியின் தனிப்பட்ட உரிமையாகும்.

வெளிப்படையான கட்சி கட்ட, நிலவுகின்ற அரசு அனுமதிக்காமல் இருக்கும்போது ரகசிய கட்சி கட்டுவது ஒரு ரகம். எதேசச்சதிகாரத்தை மறைப்பதற்காக ரகசியமாக கட்சி கட்டுவது மற்றொரு ரகம். தற்போது எவர் கட்சி கட்டினாலும் ரகசியமாகத்தான் அது செயல்பட வேண்டும் என்று ஒரு பொதுப் புத்தி கட்டமைக்கப்பட்டிருக்கிறது. 

அ0தனால் ரகசியத்தின் மூலம் எதேச்சதிகாரமாக கட்டப்பட்ட கட்சி ஆட்சிக்கு வந்த பின்பு பாசிச செயலில் ஈடுபடுகிறது. இந்த பாசிச செயலுக்கு ரகசிய கட்சி முறைதான் முதன்மையான காரணமாக இருக்கிறது. தற்போது பா.ஜ.க. அரசு கட்சிகளுக்கு கொடுக்கும் நன்கொடை கூட ரகசியமாகத்தான் இருக்க வேண்டும் என்று சட்டம் இயற்றுகிறது. 

பா.ஜ.க.வும், காங்கிரசும் பாசிச போக்கில் செயல்படுவதற்கு கட்சி ரகசியமாகக் கட்டப்பட்டதுதான் முதன்மை காரணம். கட்சிதான் அரசை வழிநடத்துகிறது. அரசு பாசிசமாக செயல்பட்டால் அதற்கு கட்சி வடிவதம்தான் முதன்மை காரணம். அதனால் கட்சி அல்லது அமைப்பு பிரச்சினைகளில் பொதுமக்கள் தலையிடுவது தவிர்க்க முடியாத ஒன்றாகும். 

துவக்கத்தில் ரகசிய முறையில் கட்சி கட்டுவது வளர்ச்சிக்கு உதவாது. ரஷ்யாவில் கூட துவக்கத்தில் தொழிலாளர் விடுதலைக்குழு வெளிப்படையாக கட்டப்பட்டு அதன் மூலம் நாடு முழுவதும் தொடர்புகள் உருவாக்கப்பட்டதாக தெரிகிறது. 

இந்த தொடர்பு மூலம் தங்களை வளர்த்துக் கொண்டவர்கள்தான், பிறகு சூழ்நிலையைப் பொறுத்து கட்சியை முழுமையான ரகசியம் -& முழுமையான வெளிப்படை அல்லது ஒரு பகுதி ரகசியம் மற்றொரு பகுதி வெளிப்படை என்று இயங்கி இருக்க முடியும். இதுதான் இயக்கவியல் போக்காகும்.

எப்படி இருந்தாலும் துவக்கத்தில் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு வெளிப்படையான அமைப்பு முறை, அதன் விதிகளை கடைபிடித்தல் அவசியமானதாகும். அதன் பிறகு அரசியல் நெருக்கடி ஏற்பட்டு, அமைப்பை ரகசியமாக மாற்றும் சூழ்நிலை ஏற்பட்டால் அதன்படி செயல்பட வேண்டி இருக்கும். அரசியல் அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு மீண்டும் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன்தான் செயல்பட வேண்டும். தற்போது இந்தியாவில் ரகசிய கட்சி கட்ட வேண்டிய தேவை இருப்பதாக நான் கருதவில்லை. 

தற்போதைய சூழ்நிலையில் ரகசிய கட்சி வடிவம் சரி என்பவர்கள் பா.ஜ.க.வையும், காங்கிரசையும் பாசிஸ்ட் என்று விமர்சிக்க தார்மீக உரிமை கிடையாது.

Manokaran Karan நீங்கள் விரும்புவது போல் எத்தகைய அமைப்பை கட்டிக் கொள்ள வேண்டுமோ கட்டிக் கொள்ளுங்கள்!
அல்லது கலையுங்கள் 
அது உங்கள் விருப்பம்!
எமது அமைப்பு விஷயத்தில் தலையிடுவதற்கு உங்களுக்கு எந்தவித உரிமையும் இல்லை!

லெனினும் மாவோவும் எப்படி கட்சி கட்ட சொன்னார்களோ அப்படிதான் கம்யூனிஸ்டுகள் கட்சி கட்டுவார்கள்!
எதை எப்படி கட்ட வேண்டும் என்று எங்களுக்குச் சொல்ல நீங்கள் யார் பழனி அவர்களே!!!

இத்துடன் விவாதத்தை நிறுத்திக் கொள்கிறேன்!!!

அரசியல் விமர்சனம் செய்யும் போது உமது நிலைப்பாட்டை சொல்லிவிட்டு அடுத்தவர் நிலைப்பாட்டை விமரையுங்கள்!!!

இந்த பண்பாடு கூட புரியாமல் பொது வெளியில் ஊடகத்தில் விவாதிக்க வந்துவிட்டீர்!!!

அய்யகோ இது பொல்லாத காலம் மக்களுக்கு!!!

என்ன செய்ய! ஆடுங்கள் உங்கள் சதிராட்டத்தை!!!

Palani Chinnasamy Manokaran Karan உங்கள் விருப்பம் போல் எழுதுவதை கேட்க அடிமைகளை மட்டுமே வளர்க்க நினைக்கும் தோழரே, நான் கேள்வி கேட்கும் தகுதி உடையவன் நீங்கள் பதில் சொல்ல கடமை பட்டவர் ஆகவே ஒரு பொதுவுடமை வாதியாக விவதியுங்கள் தோழர், உங்கள் கேள்வி சரியான தளத்தில் இட வேண்டியது அடுத்தவர் அறிந்து கொள்ளவே இங்கே நீங்கள் போடும் பதிவை நான் பார்க்கவில்லை, நன்றி மீண்டும் சந்திப்போம் தோழரே

Manokaran Karan முருகேசன் ஜெயராமன் உங்கள் சுதந்திரம் எனது அடுப்படிவரை நீள்வது ஆக்கிரமிப்பு!
ஊடுருவல்…!
அமெரிக்கா காரன் சுதந்திரத்ததின் பேரால் ஆப்கன், ஈராக்,நாடுகளிலும் இன்று வடகொரியா வெனிசுலாவில் தலையிடுவது போல!

Manokaran Karan பழனி சின்னசாமி
முத்திரை குத்துவதற்கு
உங்களுக்கு மட்டும்தான்
உரிமையா?

பணம் கொடுப்பவன் எல்லாம் கட்சி விஷயத்தில் தலையிட உரிமை கோருவதுதான் ஊடுலுவல்!
நீங்க ஊடுருவல்காரர்என்பதை கோட்பாடு அடிப்படையில் முன் வைத்து வாக்கு மூலம் கொடுத்ததற்கு எனது நன்றியை தெரிவிக்கிறேன்!!!

உங்களுடனான விவாதத்தையும் முடித்துக் கொள்கிறேன்!!!

Manokaran Karan உழைக்கும் மக்களுக்கு பதில் சொல்ல கடமைபட்டுள்ளோம்…..
ஆனால் உங்களை போல ஊடுருவல்காரனுக்கு 
பதில் சொல்லமட்டோம்!!!

Palani Chinnasamy Manokaran Karan நீங்கள் உழைக்கும் மக்களுக்கு பதில் சொல்ல கடமை பட்டவரா?!!?
தனது அமைபிற்க்கே பதில் சொல்ல முடியாத நீங்கள்?

Vijayakumar R உனது நிலைபாட்டைச் சொல்
நீ எந்தக் கட்சி சொல் பிறகு பேசு என்பது அராஜகவாதமே

யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம்
விவாதிக்கலாம்
தவறில்லை

2

Manokaran Karan விஜயகுமாரு குழந்தை
அவர் எங்களை மட்டும் கேட்கவில்லை மக்கள் அதிகாரத்தையுமதான் கேட்கிறார்!
எம் எல் அமைப்புகளை மிச்சம் மீதி உள்ளதை அழிக்க கேள்வி கேட்கிறார்!
வேண்டுமானால் அழைத்துச் சென்று மக்கள் அதிகார மையக்குருவில் வைத்து விருந்து வை!
நாங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை!!

ஆனால் ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன்!
எம் எல் அமைப்பு புறம்போக்குகளுக்கு 
அனாமதேயங்களுக்கு
பதில் சொல்லாது!

Vijayakumar R மக்கள் அதிகாரத்தையும் கேள்வி கேட்கலாம்
Palani Chinnasamy அவர்கள் சொல்வதில் எந்தத் தவறுமில்லை

90ஆண்டுகளாக மக்கள் ஏமாற்றும் கம்யூனிஸ்ட்டுகள் இனியாவது திருந்துங்கள்

புதிய அத்தியாயத்திலிருந்து தொடங்குங்கள் என்கிறார் இதிலென்ன தவறு

Manokaran Karan Vijayakumar R இவர் யார் என்று முதலில் சொல்லட்டும்

Vijayakumar R நான் குழந்தைதான்
உங்களைப் போன்று பழந்தின்று கொட்டை போட்ட பெருச்சாளியல்ல

ஜாதிஒழிப்பு பற்றி வாய்கிழிய வாய் சவடால் அடிப்பது
வேஸ்ட் பீஸ் AMKஏதோ ஜாதி ஒழிப்புக்கு மந்திரம் கண்டுபிடித்ததாக பில்டப் கொடுப்பது

ஆனால் உங்கள் மகன் ஜாதி விட்டு திருமணம் செய்த போது நீங்கள் செய்ததென்ன
மணப்பெண்ணின் அம்மாவை தேவிடியா விபச்சாரி இது ஒத்துவராது என போலீசில் புகார் கொடுக்கவில்லையா

உங்களுக்கு வந்தா ரத்தம்
மத்தவனுக்கு தக்காளி சட்னியா

மார்க்சியத்தை வறட்டுத்தனமாக மனப்பாடம் செய்து வைத்து உளறும் நீங்கள்தான் குழந்தைகள்

Manokaran Karan Vijayakumar R எவனாவது எதையாவது சொன்னதை வைத்து விவாதித்தால் எவரையும் எந்த குற்றமும் சாட்டலாம்!

உங்கள் பணியை நீங்கள் செய்யுங்கள்! உங்களை பற்றியும் உங்களுக்கு தகவல் சொன்ன உங்கள் நண்பர் பற்றியும் பேசினால் நாறி போகும்!

தனி நபர் பிரச்சினைகளை பேசுவதால் உங்களுக்கும் எந்த பயனும் இல்லை!
நேரத்துக்கு பிடித்த கேடு!

ஆனால் ஏ எம் கே பற்றி பேச உங்களுக்கு எந்த ஒரு அறுகதையுமில்லை!

அரசியலற்ற வாதங்கள் பயனற்றது!

இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன் உங்களுடன் விவாதத்தை!

Bottom of Form

Vijayakumar R Manokaran KaranManokaran//
நான் குழந்தைதான்
உங்களைப் போன்று பழந்தின்று கொட்டை போட்ட பெருச்சாளியல்ல

ஜாதிஒழிப்பு பற்றி வாய்கிழிய வாய் சவடால் அடிப்பது
வேஸ்ட் பீஸ் AMKஏதோ ஜாதி ஒழிப்புக்கு மந்திரம் கண்டுபிடித்ததாக பில்டப் கொடுப்பது

ஆனால் உங்கள் மகன் ஜாதி விட்டு திருமணம் செய்த போது நீங்கள் செய்ததென்ன
மணப்பெண்ணின் அம்மாவை தேவிடியா விபச்சாரி இது ஒத்துவராது என போலீசில் புகார் கொடுக்கவில்லையா

உங்களுக்கு வந்தா ரத்தம்
மத்தவனுக்கு தக்காளி சட்னியா

மார்க்சியத்தை வறட்டுத்தனமாக மனப்பாடம் செய்து வைத்து உளறும் நீங்கள்தான் குழந்தைகள்

Ravindran தான் என்ற அகம்பாவம் கொண்டவர்களுக்கு தான் மட்டுமே அறிவாளி என்றும் மற்றவர்கள் எல்லாம் தற்குறிகளாகவும் மண்வெட்டியாகவும் தெரிகிறார்கள். இது சித்தாந்த ரீதியாக அகநிலைவாத கண்ணோட்டமாகும். இந்த பண்பு மக்களின் சொந்த வாழ்நிலையிலிருந்து வருகிறது. ஆனால் கம்யூனிஸ்ட்டுகள் சொந்த வாழ்நிலையை கம்யூனிச வாழ்நிலையாக மாற்றிக்கொண்டு கம்யூனிச பண்பாளர்களாக தங்களை மாற்றிக்கொள்கிறார்கள். மார்க்ஸ் லெனின் போன்ற நமது ஆசான்களிடமிருந்து அவர்களது சித்தாந்த அரசியலை மட்டும் எடுத்துக்கொண்டால் போதாது அவர்களது வாழ்நிலை மற்றும் பண்பையும் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். அது அவ்வளவு எளிய விசயம் அல்ல. அதற்காக நாம் போராட வேண்டும். தோழர் மனேகரன் அவர்களிடமுள்ள அதிகாரவர்க்க ஆணவப் பண்பை மாற்றிக்கொள்ளாதவரை அவரால் மக்களுக்கு மட்டுமல்ல அவரை ஆதரிப்பவர்களுக்கும் எந்த பயனும் இல்லை. அவர் திருந்துவாரா?

Manokaran Karan நானோ அல்லது எமது அமைப்பு தலைவராக ஏற்றுக் கொண்ட தோழர் ஏ எம் கே வோ, எமது அமைப்போ இந்த நாட்டில் புரட்சி நடத்த தயாரானவர்களை தடுத்து நிறுத்தவும் இல்லை!
தடையாகவும் இல்லை! அப்படி யாராவது வந்தால் அவர்களை தலைவராக ஏற்று செயல்பட தயாராக உள்ளோம்!

தன் மீது நம்பிக்கை உள்ளவர் எவரும் தனி நபர் மீது தாக்குதல் நடத்த மாட்டார்கள்! 

எமது அமைப்பை விமர்சித்தவர் மீது நான் கருத்துரைக்கும்போது பிறர் எல்லை மீறி தாக்குதல் நடத்துவதைவிட உலகில் அதிகாரத்துவ போக்கு ஏதாவது உண்டா?

உலகத்தோரிடம் விட்டுவிடுகிறேன் இந்த வழக்கை!!!

Ravindran அகம்பாவம் கொண்டவர்களின் தவறுகளை யாராவது சுட்டிக்காட்டினால் அதனை பரிசீலிக்க மாட்டார்கள். மாறாக தவறுகளை சுட்டிக்காட்டியவர்கள் மீது அவதூறு பரப்பி அவர்களை ஒழித்துக்கட்ட முயலுவார்கள். இப்படிப்பட்டவர்கள் திருந்துவதற்கான வாய்ப்பு குறைவே.

Chitrarasu Arasu தோழர் Palani Chinnasamyஅவர்களே நீங்கள் யாரென்று கேட்கிறாரே சொல்லுங்களேன்

Palani Chinnasamy Chitrarasu Arasu அமைப்பு தோழர்களிடம் கேளுங்கள் தோழர் வீட்டு விலாசம் கொடுப்பார்கள் வாருங்கள் விவாதிக்க?
என்னுடைய விலாசம் தெரியாமல் இதுவரை தொடர்பில் இருந்து முத்திரை குத்தினாரா? நான் என்னுடைய தோழர் பாலன் பற்றிய கேள்வியுடன் கடிதம் இணைத்து கொடுத்துள்ளேன் அதில் உள்ளது எனது அடையாளம், எங்கள் அருமை தோழன் பாலன் பற்றிய ஒரு நூலாவது வெளியிட்டீர்களா என்றேன் அப்போது எனக்கு அமைப்பு அரசியல் தெரியாது வரும் வரும் என்று என்னை அறிமுகப்படுத்திய தோழர் சொன்னார் ஆனால் இறுதிவரை வரவேயில்லை, வந்ததென்னவோ மாவோஸ்ட் அமைப்பின் மூலமாக அவை என்னவென்று தெரியாமல் வாங்கி படிக்க சொல்ல நினைத்த நான் என்ன? தோழர் பாலனின் பல செயல்களை இளமை காலம் முதல் கேள்விபட்டு வளர்ந்த நான் அந்த நூல் வாங்கியது அமைப்பு விரோத செயல், நல்ல இருக்கு அளவீடு இதனை பற்றியும் என்னை அடையாளப்படுத்தியும் உங்களுக்கு தேவையெனில் திறந்த மடல் அனுப்புகிறேன் விருப்பம் தெரிவித்தால் தோழரே

Palani Chinnasamy Chitrarasu Arasu அமைப்பு தோழர்களிடம் கேளுங்கள் தோழர் வீட்டு விலாசம் கொடுப்பார்கள் வாருங்கள் விவாதிக்க?
என்னுடைய விலாசம் தெரியாமல் இதுவரை தொடர்பில் இருந்து முத்திரை குத்தினாரா? நான் என்னுடைய தோழர் பாலன் பற்றிய கேள்வியுடன் கடிதம் இணைத்து கொடுத்துள்ளேன் அ…See More

Tamilselvantamilmsmedu திருமனோகரன் அவர்கள் வடையை திங்கச்சொன்னால் பொத்தலை எண்ணுகிறார்.தோழர் 
பழனிசின்னச்சாமிமஜ இகவில்செயல்பட்டவர்.
அவரிடம் இருந்து பலனை அனுபவித்தது
மஜ இக.இதுமனோகரனுக்கு
தெரியும்.தெரிந்தும் யார்
எனகேட்பது என்னஞாயம்.
ஒருவீட்டுக்குள் பேயை
பார்த்து பயந்து அடுத்த
வீட்டுக்கு போனால்அங்கே நாலு
பேய் நிற்பதைபோல
இடது குழுக்களின்
நிலமை உள்ளது.அவர்
இருக்கின்ற குழுக்களை
ஆய்வுசெய்யும் பணியில்இருக்கிறார்.
அதன்படிதனது கருத்து
களைமுன்வைத்துவரு
கிறார்.குழுக்கள் எவ்வாறு மாலெத்தை
விட்டு விலகி செல்கின்
றன என சுட்டிக்காட்டி
வருகிறார்.அவரது கருத்துகள் கவனிக்க
தக்கது.புரட்சியைநடத்த
வேண்டும்எனநினைப்பவர்கள்அவரது கருத்து
களை பரிசீலிப்பர்.புரட்சி
காரர்களாக நடிப்பவர்களுக்கு எதை
பற்றியும் அக்கரை
இல்லை.தன்னிடம்படித்த மாணவன் நல்ல
டாக்டராக ஆனதை பெருமையுடன் சொல்லிக்கொள்வார்
வயதான ஆசிரியர்.அந்த
மனப்பான்மை கூட
மனோகரனுக்குஇல்லை.
எங்கிட்ட படிச்சுட்டு
என்னையே கேள்வி கேட்கிறாயா என்ற
குட்டி முதலாளிய மனப்
பான்மையேஅவரிடம்
உள்ளது.குடும்பசண்டை
வீட்டுக்குள் இருந்தால்
யார்கேட்க போகிறார்கள்.
அதுவீதிக்கு வந்தால்
பலரும் பலகருத்துக்களை
சொல்லத்தான் செய்வார்கள்.
மஜ இகவின் நால்வர்
அணி அய்வர்அணி கதை
பலருக்கும் தெரிந்த
விஷயம்தான்.
போனதேர்தலில் அது
மக்கள் ஜனநாயக முன்
ணணியை முன்வைத்தது
தற்போது பாஎமு முன்
வைக்கிறது.பாஎமுன்னணிஎன்றவெடியை அவ்
வப்போது கொளுத்திப்
போட்டுவருகிறது.தன்
குழுவை அய்க்கியபடுத்த முடியாதவர்கள் பாசிச
எதிர்ப்புமுன்னணிகட்ட
போறாங்களாம்.கூரை
ஏரிகோழிபிடிக்காதவன்
வானம்ஏறிவைகுண்டம்
போவானாம்.
அவதூறுஅரசியலை
முறியடித்து
அரசியலை ஆணையில்
வைப்போம்.

Ravindran மனோகரனிடம் உள்ள குறையாக இதனை பார்க்கக்கூடாது. இவரைப்போன்ற எதேச்சிகாரப் போக்கு கொண்டவர்களை கட்டுப்படுத்தவும், ஒழுங்குபடுத்தவும் அமைப்பில் ஜனநாயக மத்தியத்துவ கோட்பாட்டின் அடிப்படையில் வழிமுறை இல்லை என்றால் அதிகாரவர்க்கப் போக்கையோ அதைத் தொடர்ந்து வரும் குறுங்குழு வாதத்தையோ பிளவுவாதம் மற்றும் அமைப்புத்துறை கலைப்புவாதத்தையோ வீழ்த்த முடியாது. 
ஆனால் மனோகரன் வைக்கும் வாதம் அதிகாரவர்க்க போக்கு நீண்டகாலத்திற்கு நீடிக்குமாம் லெனின் சொல்லியிருக்கிறாராம். தனது எதேச்சிகாரப் போக்கை எப்படி நியாயப்படுத்துகிறார் பாருங்கள். இவர் பாதிரியாரிடம் பாவமன்னிப்பு கேட்பது போல அவரது எதேச்சிகார நடவடிக்கைக்கு சுயவிமர்சனமாக வருவதாக சொல்வார் மறுகனமே அவரது எதேச்சிகார செயலை தொடர்வார். அமைப்பிலுள்ள தோழர்களை இவர் மதிப்பதே இல்லை. ஒரு தோழரைப் பார்த்து இவர் சொன்னது அவருக்கு தகவல் சேகரிக்கத் தெரியும், தகவல் சேகரிப்பவர்கள் எல்லாம் தத்துவாதி ஆகிவிட முடியுமா? என்றார். ஆனால் நமது நாட்டில் ஒரு பழமொழி உண்டு சிறுதுரும்பும் பல்குத்த உதவும். அதன்படி கல்வியறிவு இல்லாத ஏழைகள்தான் செம்படையில் சேர்ந்து போராடி நமக்கு விடுதலை வாங்கித்தருவார்கள் என்ற உணர்வில்லாமல் இவர் இல்லாமல் புரட்சி நடக்காது என்பது போல் சிந்திப்பார்.
பெயரளவில் ஜனநாயகம் நிலவும் கட்சியால் அதிகாரவர்க்கப் போக்கையும் அராஜகத்தையும் ஒழிக்க முடியாது என்கிறார் லெனின். இந்த உண்மையை இவர்கள் உணர மறுக்கிறார்கள். இவர்களது சிந்தனை முறை குட்டிமுதலாளித்துவம் அல்ல பண்ணையார்தனமாகும் இதனை மாற்றாதவரை இவர்களால் ஒரு அடிகூட முன்னேற முடியாது. இதனை ஏற்றுக்கொள்வதும் மறுப்பதும் அவர்களது விருப்பம்.

Ravindran பல ஆயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், அறிவாளிகள் இரத்தம் சிந்தி தியாகம் செய்து உருவாக்கப்பட்ட மா.லெ இயக்கம் முன்னேறாமல் தொடர்ந்து பிளவுபட்டு வருவதற்கு என்ன காரணம்? அமைப்பிற்குள் நிலவும் அந்நிய வர்க்க சிந்தனைகளை களையாமல் இருப்பதுதான். இதனை களைய வேண்டுமானால் நமது நாட்டின் புரட்சி பற்றிய விஞ்ஞானப்பூர்வமான திட்டம் உருவாக்கப்பட்டு அதன் அடிப்படையில் உறுப்பினர்களிடத்தில் சித்தாந்த ஒற்றுமையை சாதித்து ஒரு சீர்செய் இயக்கத்தின் மூலம் அந்நியவர்க்க சிந்தனைகளை முறியடிக்க வேண்டும். இதனை சாதிப்பதற்கான அமைப்புதான் இன்றைய நமது தேவையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *