மனோகரனின் செயல்  டிராட்ஸ்கிய கருத்துகளை அமைப்பிற்குள் பரப்பியது
மனோகரனின் செயல் டிராட்ஸ்கிய கருத்துகளை அமைப்பிற்குள் பரப்பியது

மனோகரனின் செயல் டிராட்ஸ்கிய கருத்துகளை அமைப்பிற்குள் பரப்பியது

உலக வரலாற்றில் கம்யூனிஸ்ட் கட்சியினுடையஇயக்கங்களில் உறுப்பினர்களாக இருந்தவர்கள். பிறகு அனுதாபிகளாக மாறி, இறுதியில் தங்களின் தொடர்புகளை முறித்துக் கொண்டவர்கள். பிரான்சுக் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய சிந்தனைப் போக்கின் தொடர்ச்சியாக இவர்களைக் காணலாம். பிரான்சுக் கம்யூனிஸ்ட் கட்சிதான் முதன் முதலில் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம், வர்க்கப் போராட்டம் என்கின்ற கோட்பாடுகளைக் கைவிட்ட ஐரோப்பிய பொதுவுடைமைக் கட்சி என்பதோடு இவர்களின் சிந்தனையை இணைத்துப் பார்க்க வேண்டும்.இத்தகைய கட்சிகளிலுங் கூட, இவர்கள் தொடர்ந்து இருக்க முடியாமல் தங்களுடைய சிந்தனைகளைக் கட்சிகளுக்கு வெளியில் அமைத்துக் கொண்டவர்கள். அதிலே ஃபூக்கோ, கம்யூனிஸ்டு கட்சியில் உறுப்பினராக இருக்கும் பொழுதே கூட தன்னை ஒரு நீட்சேயிச கம்யூனிஸ்டு என்று அழைத்துக் கொண் டவர். நீட்சேயிச கருத்தாக்களால் கவரப்பட்ட பொதுவுடைமையாளர் என்பது அதன் அர்த்தம், நீட்சேயின் அதிகாரம் பற்றிய கோட்பாடு, அதிகாரம் சமூகத்தில் இருக்க வேண்டிய நியாயம் போன்றவற்றின் தொடர்ச்சியாக ஃபூக்கோவின் சிந்தனைகளைக் காண வேண்டும். ஃபூக்கோ தன்னுடைய விவாதங்களின் மையமாக, “19-ஆம் நூற்றாண்டினுடைய ஐரோப்பாவிற்கும், 20ஆம் நூற்றாண்டினுடைய ஐரோப்பாவிற்கும் ஒரு வேறுபாடு இருக்கிறது. 19-ஆம் நூற்றாண்டின் ஐரோப்பாவை வறுமை வாட்டி வதைத்தது. ஆனால், 20-ஆம் நூற்றாண்டின் ஐரோப்பாவிற்கு வறுமை ஒரு பிரச்சனை இல்லை. அதிகாரம் தான் பிரச்சனையாக இருக்கிறது’ என்கிறார். இதனால் பகுத்தறிவு என்கின்ற கோட்பாட்டை முழுவதுமாக ஃபூக்கோ மறுக்கிறார்.இதை இன்றைய இந்திய ஆர் எஸ் எஸ் கோமாளிகள் தேடும் வேத கால இந்தியா போன்றதே பின் நவீனதுவ வாதிகளின் வாதம், மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாத அரசு இங்கே கருத்து முதல்வாத புதைச் சேற்றில் மக்களை அமிழ செய்வதை மார்க்சியம் செய்யவில்லை, மக்களுக்கான விடுதலை சமத்துவ சமூகத்தை கட்டி எழுப்பினர்.ஒரு சிலர் மட்டுமே உண்டு கொழுத்ததை முடிவுக்கு கொண்டு வந்தனர். எல்லா மக்களும் வாழ வழிவகை செய்தனர், ஏழை எளிய மக்களும் பாதுகாப்புடன் வாழ விழைந்ததை சுரண்டி கொழுத்த ஏகாதிபத்தியம் விடுமா? பொதுவுடமை சமூகம் உலகில் எங்குமே மலரா வண்ணம் அவர்களின் கம்யூனிச விரோத போக்குகளே மார்க்சியத்தின் பெயரால் மார்க்சியத்தை எதிர்ப்பது இன்றைய தேவையாக உள்ளது இந்தியா போன்ற பெரும் சந்தையை இழக்க நினைக்குமா ஏகாதிபத்தியம்….அதில் இது போன்ற பலியாடுகள் காணவே செய்யும் என்ன செய்ய இவர்களைஇனி……….இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) (மக்கள் யுத்தம் – போல்ஷ்விக்)பத்திரிகை செய்திமார்க்சிய ஆசான் ஏ.எம்.கே.வின் பெயரில் ஏ.எம்.கே.வின் காலனிய இனவியல் பற்றிய நிலைப்பாட்டை திருத்தி வெளியிட்டுள்ள டிராட்ஸ்கியவாதி மனோகரனின் துரோகத்தை முறியடிப்போம்!ஏற்கெனவே ஏ.எம்.கே. உயிருடன் இருந்தபோது அவரது வழிகாட்டலில் எழுதப்பட்டு, எமது அமைப்பில் இன்னும் விவாதத்தில் இருக்கின்ற ‘காலனிய இனவியல்: ஆரிய-திராவிட இனவியல் கோட்பாடுகளும் பாட்டாளி வர்க்க நிலைப்பாடும்’ எனும் வரைவு அறிக்கையின் தலைப்பை ‘காலனிய இனவியல்: ஆரிய-திராவிட இனவியல் கோட்பாடுகளும் பாட்டாளி வர்க்க தேசிய கோட்பாடுகளும்’ என திருத்தி (உள்ளடக்கத்தையும் திருத்தியுள்ளதாக முன்னுரையில் கூறுகிறார்), அதை (பாட்டாளி வர்க்க சமரன் அணி) சமரன் வெளியீட்டகத்தின் பெயரில் வெளியிடுவதாக டிராட்ஸ்கியவாதி மனோகரன் அறிவித்திருப்பது அப்பட்டமான சந்தர்ப்பவாத, மோசடியான மார்க்சிய விரோத செயல் ஆகும்.முன்பு முகநூலில் “ஆரிய இனக் குழுக்கள் இல்லை என்றோ, திராவிட இனக் குழுக்கள் இல்லை என்றோ சமரன் எங்குமே கூறவில்லை” என ஏ.எம்.கே. நிலைப்பாட்டிற்கு எதிராக எழுதியவர்தான் மனோகரன். ஆரிய இனக்குழு, திராவிட இனக் குழு இருக்கிறது என்று கூறுவதால் இவரும் ஒரு இனவாதி ஆவார். காலனிய இனவியல் பற்றிய ஏ.எம்.கே.வின் நிலைப்பாட்டில் உடன்பாடில்லை என அமைப்பிலும் பொதுவெளியிலும் பேசிய மனோகரன், இன்று டிராட்ஸ்கியவாதத்தால் அம்பலப்பட்டுப் போனதை மூடி மறைக்கவும், மார்க்சியவாதி வேடம் பூணவும் இந்த நூலை சந்தர்ப்பவாதமாக திருத்தி கொண்டுவருகிறார். கோட்பாடற்ற போலியான ஐக்கியம் பேசுகிறார்.ஆரிய இனக் குழுக்கள் – திராவிட இனக் குழுக்கள் உண்டு என்று கூறுவதே ஐரோப்பிய காலனியவாதிகளின் கற்பிதம் என்பதுதான் ஏ.எம்.கே. நிலைப்பாடு ஆகும். இந்த இனவாதத்தில் இருந்து உதித்துள்ள பார்ப்பனிய பாசிசம், கார்ப்பரேட் காவி பாசிசம், பார்ப்பன-பனியா-பார்சி பாசிசம் எனும் தரகு முதலாளிய நிலைப்பாடுகளை எழுதியும் பேசியும் வரும் இனவாதி மனோகரனின் சந்தர்ப்பவாதத்தை இனம் காண்போம் தோழர்களே!ஆசிய உற்பத்தி முறை, மாறா நிலை சமூகம் என்று ஆசான் மார்க்ஸ் கூறியதாலேயே அவரை இயக்க மறுப்பியல்வாதி என மனோகரன் எழுதியுள்ளார். மார்க்ஸ் இயக்க மறுப்பியல்வாதி என்பது ஏ.எம்.கே.வின் கருத்தல்ல. மார்க்ஸ் மீதான இந்த அவதூறை நாங்கள் மிகவும் வன்மையாக கண்டிக்கிறோம். ஆசிய உற்பத்தி முறை என்பது பிரிட்டன் பாராளுமன்ற குறிப்புகளிலிருந்து மார்க்ஸ் வந்தடைந்த கருத்தாகும். 1931ல் லெனின் கிராடில் ஸ்டாலின் தலைமையில் கூட்டப்பட்ட அகிலத்தில் ஆசிய உற்பத்தி முறைக்கு வரலாற்றில் எந்த இடமும் இல்லை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1939ஆம் ஆண்டு தனது சீனப் புரட்சியும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் என்ற நூலில் மாவோ பின்வருமாறு கூறுகிறார்: “உலகின் பிற தேசங்கள் பலவற்றை போலவே அதே வழியில் வளர்ந்துகொண்டிருக்கும் சீன மக்கள் (இங்கு நாம் முதன்மையாக ஹான் தேசிய இனத்தை குறிப்பிடுகிறோம்) வர்க்கமற்ற தொல்குடி பொதுவுடமைகளில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் ஊடாக சென்றனர். இத்தொல்குடி சமூகம் அழிந்து வர்க்க சமூகமாக மாற்றம் பெற்றது முதல் இன்றுவரை ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகள் சென்றுவிட்டன. இச் சீன சமூகம் முதலில் அடிமை சமூக வடிவத்தையும், பின்னர் நிலவுடமை சமூகத்தின் வடிவத்தையும் மேற்கொண்டது” என்று கூறுகிறார். இதன் மூலம் மாவோ ஆசிய உற்பத்தி முறையை மறுத்துள்ளார் என அறியலாம். ஆசிய உற்பத்தி முறையை மறுப்பது என்பது மார்க்சியத்தை மறுப்பதாகாது. மார்க்ஸ் கூறிய வரலாற்று பொருள்முதல்வாத வளர்ச்சிக் கட்டங்களை போலவே இந்திய சமூகமும் வளர்ந்து வந்துள்ளது என்று ஏ.எம்.கே. கூறுகிறார். ஆசிய உற்பத்தி முறை என்ற கருத்தை மட்டும் வைத்துக்கொண்டு மார்க்சிய ஆசான்கள் யாரும் மார்க்ஸை இயக்க மறுப்பியல்வாதி என்று கூறவில்லை. ஆனால் மனோகரன் இந்த ஆசிய உற்பத்தி முறை என்ற கருத்தை மட்டும் வைத்துக்கொண்டு மார்க்ஸை இயக்க மறுப்பாளர் என்று கூறி மார்க்ஸ் மீதும் மார்க்சியத்தின் மீதும் தாக்குதல் தொடுக்கிறார். ஏற்கெனவே மனோகரன், ஸ்டாலின் குறுங்குழுவாதி எனவும்; ஸ்டாலின், மாவோ அகிலத்தை கலைத்த கலைப்புவாதிகள் எனவும் கூறியதோடு; லெனினின் சோசலிச கட்டுமானம் பற்றிய நிலைப்பாட்டிற்கு எதிராக ஸ்டாலின் செயல்பட்டார் என்று கூறி லெனினுக்கு எதிராக ஸ்டாலினை நிறுத்தினார்; சீனப் புரட்சிக்கு ஸ்டாலின் தடையாக இருந்தார் என மாவோ கூறியதாக சொல்லி ஸ்டாலினுக்கு எதிராக மாவோவை நிறுத்தினார்; மாவோவால்தான் இந்தியாவில் புரட்சி நடக்கவில்லை என்றார்; இறுதியில் தனி ஒரு நாட்டில் புரட்சி சாத்தியமில்லை என லெனினையே தாக்கினார்; ஏ.எம்.கே. தத்துவ தலைமை இல்லை, நிரூபிக்கப்பட்ட தலைமை இல்லை, அவர் எண்ண முதல்வாத அடிப்படையில் சிறப்புக் கூட்ட அறிக்கையை எழுதினார் என்றெல்லாம் ஏ.எம்.கே.வை தாக்குதல் நடத்தியவர், இப்போது ஏ.எம்.கே.வின் பெயரால் “மார்க்ஸ் இயக்க மறுப்பியல்வாதி”என மார்க்ஸை தாக்குகிறார். மார்க்ஸை மார்க்சியத்துக்கு எதிராக நிறுத்துகிறார். மார்க்சிய ஆசான்களுக்கு எதிராக இன்னொரு மார்க்சிய ஆசான்களை எதிராக நிறுத்துவதையே தனது செயல்தந்திரமாக வைத்திருப்பவர்தான் மனோகரன். இது டிராட்ஸ்கிய வாதிகளின் சந்தர்ப்பவாத, சதித்தனமான அணுகுமுறையாகும்.காலனிய இனவியல் பற்றிய ஆவணம் ஏ.எம்.கே.வின் வரலாற்று சிறப்புமிக்க ஆய்வாகும். ஏ.எம்.கே.வின் இந்த ஆவணத்தை வெளியிடுவதற்கான அறிவிப்பை ஏ.எம்.கே.வின் சமரன் பத்திரிகையில் ஏற்கெனவே அறிவித்து இருந்தோம். அவ்வாறிருக்க இந்த ஆவணத்தை சந்தர்ப்பவாதமாக வெளியிடும் மனோகரனின் செயல் சதித்தனமான செயலே ஆகும். மேலும் இந்த ஆவணத்தில் வரலாற்று பகுதியை ஒழுங்குபடுத்தி, செழுமைப்படுத்த வேண்டியும். அதே போல் மொழி பகுதியில் கூடுதலான கருத்துகளை சேர்க்கவும் ஏ.எம்.கே. வழிகாட்டியிருந்தார். அவரின் இறுதி காலத்தில் உட்கட்சி போராட்டத்தில் இருந்ததாலும், அவர் மறைந்த முதல் ஓராண்டு முழுவதும் மனோகரனின் டிராட்ஸ்கியவாதத்தை எதிர்த்த போராட்டமாக இருந்தது. இந்த ஆண்டோ கொரோனாவில் கடந்துவிட்டது. ஆகவே, ஏ.எம்.கே. கூறிய திருத்தங்களை திருத்தி வெளியிடலாம் என திட்டமிட்டே சமரனில் அறிவிப்பு வெளிவந்தது. அதன் பிறகும், அதை தனது அமைப்பு பெயரில் வெளியிடும் மனோகரனின் செயல் ஏ.எம்.கே.விற்கு செய்யும் துரோகம் ஆகும். டிராட்ஸ்கிய கருத்துகளை அமைப்பிற்குள் பரப்பியதாலும், அமைப்பை பிளவுபடுத்தியதாலும் அவரும் அவரை ஆதரித்த சிலரும் அமைப்பில் இருந்து அமைப்பின் பெரும்பான்மையினரால் வெளியேற்றப்பட்டனர். இந்த ஆவணத்தின் படைப்பாளி ஏ.எம்.கே.வோ, அவரது நேரடி வழிகாட்டுதலில் எழுதிய தோழரோ திருத்துவதற்கு முன்பே, அதற்கு சம்பந்தமில்லாத, எமது அமைப்பிற்கு யாதொரு தொடர்புமில்லாத டிராட்ஸ்கியவாதி மனோகரன், விவாதத்தில் இருக்கின்ற எமது அமைப்பின் ஆவணத்தை திருத்துவதற்கும், வெளியிடுவதற்கும் அவருக்கு எவ்வித தார்மீக உரிமையும் இல்லை. அவ்வாறு திருத்தியது கடுமையாக கண்டிக்கப்பட வேண்டிய செயல் ஆகும்.ஆகவே, மார்க்சிய ஆய்வாளர்களும், புரட்சிகர ஜனநாயக சக்திகளும், டிராட்ஸ்கி மனோகரனின் இந்த அரசியல் ஓட்டாண்டிதனத்தை, மார்க்சிய விரோதமான சதித்தனானமான இந்த செயலை கண்டிக்க வேண்டுகிறோம். மார்க்சிய ஆசான்களின் மீது தாக்குதல் தொடுக்கும் தனிமைப்பட்டுபோன மனோகரனை மார்க்சிய லெனினியத்தை நேசிக்கும் அனைவரையும் அவரின் சதித்தனத்தையும், சந்தர்ப்பவாதத்தையும் இனங்காணுமாறு கோருகிறோம்.இங்கணம்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) (மக்கள் யுத்தம் – போல்ஷ்விக்)16.11.2020

4Dharmar Dharmarr, மா.செ. சரவணன் and 2 others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *