சமுதாயத்திலிருந்தே கவிதை உட்பட பிற கலைகள் அனைத்தும் தோன்றின. ஆதிமனிதன் சுதந்திரமாக வாழ்ந்தான்; கவிதைகள் பாடினன். அவன் அடிமைப் படுத்தப்பட்டதும் சுதந்திரமாகப் பாடமுடியவில்லை. நிலப்பிரபுவையும் மன்னர்களையும் புகழ்ந்து பாடி புலவர் வயிறு வளர்த்தனர். கற்பனைத் தெய்வங்களைப்பாடி மக்களைத் திசை திருப்பினர் முதலாளித்துவத்தில் ஆளும் வர்க்க நலன் பேணும் கவிதைகளே அங்கீகரிக்கப்பட்டன. கவிதை வியாபாரப் பண்டமாக்கி லாபத்திற்காக விற்பனை செய்யப் பட்டது. இவ்வாறாக மனித சுதந்திரத்தின் கீதமாக இருந்த கவிதை மனிதன் அடிமையாக்கப்பட்டதோடு அதன் சுதந்திரத்தையும் பூரணத் துவத்தையும் இழந்தது.இழந்த கதந்திரத்தை மீண்டும் பெற மார்க்ஸ், லெனின், மாவோ வழிகாட்டினர். விஞ்ஞான வரலாற்று ரீதியாக மனித வரலாற்றை ஆராய்ந்துகாட்டி இயக்கவியல், பொருள்முதல் வாத சித்தாந்தத்தை நடைமுறைப்படுத்தினர். விடுதலையடையாத பாட்டாளி விலங்கறுக்க இச்சித்தாந்தைக் கிரகித்துக் கொள்கிறான். கவிதையிலே குரலெழுப்புகிறான். அவர்கள் நோக்கும் சோஷலிசம், கம்யூனிசத்தில்தான் மனிதன் மீண்டும் இழந்த சுதந்திரத்தைப் பெறப் போகிறான்; பூரண சுதந்திரமான கவிதையை மீண்டுப் பாடப் போகிறான். கவிதை மட்டுமல்ல பிற கலைகள் அனைத்துமே மனித சுதந்திரத்திலிருந்து அச்சமுதாயத்தில் தான் மீண்டும் உயிர் பெறப் போகின்றன.