மதம் குறித்து- சந்திரசேகர்
மதம் குறித்து- சந்திரசேகர்

மதம் குறித்து- சந்திரசேகர்

தோழர்களே கடவுள் எனும் கருத்து குறித்த 33வது பக்க பதிவு

மதம் என்பது அடிமை சமுகத்தில் நிறுவனப்படுத்தப்பட்டு நிலவுடைமை சமூகத்தில் அதன் உச்சத்தை தொட்டது

நிலவுடமை காலத்திலும் அதற்கு முன்பும் மதமே அரசாக மாறிய நிகழ்வுகளும் மிக அதிகம்

ஐரோப்பா முழுவதுமே ரோமன் கத்தோலிக்க மதத்தின் கட்டுப்பாட்டில் சிலுவை போருக்கு பின்பு மாறியது கிபி 1500களுக்கு பின்பு முதலாளிய பொருளாதார உற்பத்தி முறை செல்வாக்கு செலுத்த ஆரம்பித்த பிறகுதான் ஐரோப்பா முழுவதும் ரோமன் கத்தோலிக்க போப்பின் சர்வாதிகாரத்தை எதிர்த்து பிரதேச நிலவுடமை அரசர்களின் அரசுகள் தங்களை சுதந்திர அரசுகளாக பிரகடனம் செய்தனர் இதற்கு புரோட்டஸ்டாண் என்ற மத முகமூடி தேவை பட்டது மார்ட்டின் கிங் லூதரும் பயன்பட்டார்

அதுபோல் ஐரோப்பாவில் பிரெஞ்சு முதலாளீய புரட்சி மதத்தை கையாளும் விதத்தை கற்றுக்கொடுத்தது

இருப்பினும் ஐரோப்பிய ஆளும் வர்க்கம் மதத்தை பாதுகாக்க ஆனாதிக்க குடும்பத்தை கட்டிக்காக்க எவ்வளவோ முயன்றார்கள் ஆனால் முதலாளிய பொருளியல் வளர்ச்சி அனைத்தையும் உடைத்து நொறுக்கி வருகிறது

சர்ச்சில் பாதிரியார் திருமணம் நடத்தி வைப்பார் மனிதன் பிரிக்க கூடாது என்பார் ஆனால் முதலாளிய கோர் டு விவாகரத்து வழங்கி விடும்

ஆணாதிக்க குடும்பங்கள் ஒழிந்து முதலாளிய அராஜகவாத நிலையற்ற குடும்பங்கள் தான் எதார்த்தத்தில் நீடிக்கிறது

இந்தியாவில் நிலவுடமை பண்பாட்டை எதிர்த்த மதத்தை ஜனநாயகப்படுத்தும் போராட்டங்களோ சமுக சிந்தனைபோக்கோ வளர வில்லை

இங்கு நிலவுடமை அரசுகளை எதிர்த்து முதலாளிகள் யாரும் மக்களை திரட்டி போராட வில்லை மாறாக அவர்களுடன் ஐக்கியப்பட்டார்கள்

மதத்தின் பிற்போக்கு தனத்துக்கு தொன்மையான உயர்ந்த நாகரீகம் என புகழ்ந்தனர்

காட்டுமிராண்டி தனத்தை தங்களின் பாரம்பரியம் என பெருமை கொண்டாடினார்கள்

மனுதர்மத்தை கொளுத்துவதற்கு பதிலாக அதில் உள்ள சரத்துக்களை இந்திய சட்டங்களில் இணைத்தனர் மனுவின் சிலையையே நீதிமன்றங்கலில் நிறுவினர்

சமூகத்தில் இருந்த சாதிபிரிவுகளை உடைத்து நொறுக்காமல் அந்த சமூக படி நிலைகளை அரசமைப்பிலும் கொண்டு வந்தார்கள்

நிலவுடமை சமூகத்தில் பார்பணர்கள் எவ்வளவு உயரத்தில் இருந்தார்களோ அதே உயரத்தில் இந்திய முதலாளிகளும் பிரிட்டிசும் உருவாக்கிய அரசு எந்திரத்தின் உச்சத்தில் அவர்கள் வைக்கப்பட்டார்கள்

நிலவுடமை பொருளாதாரம் பாதுகாக்கப்பட்டது அதன்பண்பாடும் பாதுகாக்கப்பட்டது

இந்த போக்கு வளர்ச்சி குன்றிய நாடுகளில் ஒரே தன்மை கொண்டதாகவே இருக்கிறது

மத்திய ஆசிய ஈரான், ஈராக்,எகிப்து ,சிரியா, ஆப்கன்,அல்ஜீரியா, மொராக்கோ, இந்தியா என்று உலகம் முழுவதும் இப்படித்தான் இருக்கிறது

மதங்களின் பெயர்கள் வெவ்வேறு ஆனால் அவற்றின் செயல்கள் ஒன்றுதான்

நிலவுடமை பொருளாதாரத்தை ,பண்பாட்டை , ஆணாதிக்க குடும்ப உறவுகளை , சமுக ஏற்றதாழ்வுகளை பிறப்பின் மூலம் நிலை நிறுத்துவது சாதிக்கு சந்தனம் பூசுவது என்பது மதத்தின் வேலையாகும்

இப்படிபிற்போக்குதனத்தின் கோட்டயாக மூட்டையாக பின் தங்கிய நாடுகள் நீடிக்க காரணம் அங்கு நிலவுடமை பொருளாதாரம் நீடிக்கிறது பண்பாடு நீடிக்கிறது சாதிய ஏற்றதாழ்வுகள் நீடிக்கிறது

பொதுவாக வட இந்தியாவில் நிலவுடமை முறையின் கோரம் சிற்சில சிதைவுகளுடன் அப்படியே நீடிக்கிறது

அங்கு நிலபிரபுக்கள் சமூகங்களை கட்டுப்படுத்த மதத்தையும் சாதியையும் பயன்படுத்துகிறார்கள் நிலவுடமை குடும்ப ஆதிக்கத்திலுள்ள ஆண் தனது குடும்பத்தில் தனது சர்வாதிகாரத்தை நிலை நிறுத்துகிறான்

அவனுக்கு ஆணாதிக்கத்தை நியாயப்படுத்தும் மத்தத்தின் உதவி தேவை எனவே பிஜேபின் சமூக அடித்தளமாக நிலவுடமை பிற்போக்கு தனமும் அவற்றின் அரசியல் பொருளாதார அடித்தளமாக பன்னாட்டு இன்னாட்டு கார்பரேட்டுகளாகவும் இருக்கிறார்கள்

நிலவுடமை முறையை எதிர்த்து அதன் சாதிய பண்பாட்டை எதிர்த்து மக்களை ஜனநாயக வழியில் வழி நடத்தி இந்திய கட்டமைப்பு உருவாக்கப்படவில்லை

மாறாக நிலவுகின்ற அமைப்பில் எந்த மாறுதலும் செய்யாமல் அதை அப்படியே உள்வாங்கி உருவானதுதான் இந்திய அரசியல் அமைப்பு

அது கொண்டுவந்த இட ஒதுக்கீடு கூட நகர் புறத்தில் உடைந்த சாதிக்கட்டுமானத்தை மீண்டும் பலப்படுத்துவதாகவே இருக்கிறது

சாதியை ஒழிக்கவில்லை சாதிய ஒழிப்புக்கான அடிப்படையும் அதில் இல்லை

அம்பேத்கரும் பெரியாரும் கூடநிலவுடமை முறையை நிலவுடமைபண்பாட்டை எதிர்த்துபோராடாமல் பார்பணர்களையே இலக்காக கொண்டனர்

அம்பேத்கர் இந்து மதத்தை இலக்காக கொண்டார் இந்து மதம் வாழ்வதற்கு சமூக அடிப்படையாக விளங்கிய நிலவுடமை முறையை எதிர்க்கவில்லை

இந்த நிழல் யுத்தம்தான் இன்று மக்கள் அதிகாரம் , மர்றும் தலித்திய பெரியாரிய அமைப்புகளின் வேலையாக இருக்கிறது

சமூகத்தில் இருக்கும் நிலவுடமை முரையின் மீத மிச்சங்கள் ஒழியாமல் சாதிஒழியாது சாதிய சமூகம் ஒழியாமல் பார்பணியம் ஒழியாது

இவைஒழிக்கப்படவேண்டுமானால் இந்திய சமூகமே தலை கீழாக புரட்டப்பட வேண்டும் ஜனநாயகமர்ற சமூகம் மட்டுமல்லாது இந்தஅரசும் முற்றிலும் வேறுவகையாக உழக்கும் மக்களின் அரசாக ஜனநாயகவாதிகளின் அரசாக பாட்டாளிவர்க்கத்தின் அரசாக ஒரு புரட்சியின் மூலம் மாற்றி அமைக்கவேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *