இன்று ஒரு முதிய தோழருடன் உறையாடல் அவரின் மார்க்சிய அறிவு மற்றும் நடைமுறை தலைமையின் வழிகாட்டுதலால் கட்சி பணி பின் அரசின் அடக்குமுறை பலரின் தியாகம் மக்கள் புரட்சிகர அமைப்பின் மீதான பாசம் உற்சாகம் ஒத்துழைப்பு இப்படியிருந்த புரட்சிகர அமைப்புகள் இன்று நிலை அந்தோ பரிதாபம் என்று கூறிய அவர் அவருடன் அண்மையில் ஒரு தோழருடன் நடந்த விவதத்தையும் கூறினார் அதனை பற்றி பின் பார்ப்போம்… முதற்கண் தோழரின் அனுபவமும் இங்கு நடந்த அரசியல் போராட்டமும் எப்படி பட்டவை என்பதனை தெரிந்து கொள்ள மாவோவிடம் செல்வோம்……..
ஒரு நாட்டில் புரட்சிக்கான சூழ்நிலை இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, அச்சூழ்நிலை பக்குவப்பட் டிருந்தாலும் சரி, பக்குவப்படாதிருந்தாலும் சரி, அதாவது, ஒரு நாட்டு மக்கள் புரட்சிக்கு தயாராய் இருக்கிருர்களா இல்லையா என்பதை பாராமல், மக்களுக்குத் தலைமை தாங்க ஒரு புரட்சிகரக் கட்சி இல்லாமல், மனோதிடம் கொண்ட ஒரு சில புரட்சிவாதிகளால் அந்த நாட்டு அரசாங்க யந்திரத்தை தூக்கி எறிய முடியும், அதிகாரத்தைக் கைப்பற்றமுடியும், அதன்பின்னர் மக்களைத் தம்பக்கம் வென்றெடுக்க முடியும் என்ற கருத்தை இந்த சேகுவேவரா தத்துவம் ஜனரஞ்சமாக்க முயல்கின்றது.
வெகுஜன ஆதரவில்லாமல் ஒரு சில தனிநபர்கள் எடுக்கக் கூடிய நடவடிக்கைகளை, பாட்டாளி வர்க்க வெகுஜனங்களின் ஆதரவைப் பெருமல் எதிரிக்கு நஷ்டம் விளைவிக்கக்கூடிய நடவடிக்கைகளை இத்தத்துவம் ஆதரிக்கின்றது. “இதுதான் குட்டி பூர்ஜ”வாக்கள் பிரியப்படக்கூடிய ஒரு ரகப் போராட்டமாகும். இது அவர்களுடைய தனிநபர்வாத இயல்பையும், பாட்டாளி வர்க்கம் போராட்டத்தில் பங்குபற்றி அவர்கள் கொண்டுள்ள தவறான கண்ணோட்டத்தை பிரதிபலிக்கின்றது.”.
இந்தத் தத்துவத்துக்கும், பொதுமக்களைப் முழுமையாகச் சார்ந்திருப்பதை அடிப்படையாகக் கொண்ட மக்கள் யுத்தம் பற்றிய் தோழர் மாசேதுங் அவர்களின் தத்துவத்துக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. மாசேதுங் அவர்களின் மக்கள்
யுத்தம் பற்றிய தத்துவம் வெகுஜனங்கள் மத்தியில், சிறப்பாக விவசாயிகள் மத்தியில் சென்று வேலை செய்யும்படி புரட்சிவாதி களைத் தூண்டுகின்றது. வெகுஜனங்களுடன் ஒன்றிணைந்து போராட்டங்களை முன்னிற்று நடத்துவது மற்றும் தோழர் மாசேதுங் அவர்கள், ‘புரட்சி யுத்தம் என்பது பொதுமக்களின் யுத்தம். பொதுமக்களைத் தட்டியெழுப்பி, அவர்களைச் சார்ந்திருந்தால்தான் இந்த யுத்தத்தை நடத்த முடியும்’ என்று தெட்டத் தெளிவாகக் கூறியுள்ளார். இவ்வாறு, மக்கள் யுத்தம் பற்றிய தத்துவம் ஒரு மார்க்சிய-லெனினியக் கட்சியின் தலைமையில், பொதுமக்களைப் புரட்சிகரமான முறையில் தட்டியெழுப்புவதை அடிப்படையாகக் கொண்ட, அதிகாரத்தைக் கைப்பற்றுவதைக் குறிக்கோளாகக் கொண்ட ஒரு தத்துவமாகும். இத்தத்துவம் மக்களைத் தட்டியெழுப்புவதை விரும்பு கின்றது. அவர்களை ஸ்தாபனப்படுத்தி, அணிதிரட்ட உதவு கின்றது. ஆரம்பத்தில் வெகு பலம்வாய்ந்த எதிரியுடன் துணிந்து போராடவும், அப்போராட்டத்தின் போக்கில் எதிரியை தீர்க்கமாகத் தோற்கடிக்கக் கூடிய பல மேம்பாடு பெறும்வரை தமது படைகளை வளர்க்கவும் போதனை அளிக்கின்றது.
தோழர் மாசேதுங் அவர்களின் இத் தத்துவத்துக்கும், தொழிலாளர் வர்க்கக் கட்சியின் பாத்திரத்தையும் பொது மக்களின் பாத்திரத்தையும் நிராகரித்து, ஒரு சில தனி நபர்கள் மீது அல்லது ஒரு சில தனிநபர்க் கும்பல்கள் மீது நம்பிக்கை வைக்கும் கியூபன் மார்க்கத்துக்கும் சம்பந்தா சம்பந்தமே கிடையாது.
இடது அதி தீவிரவாத பாதையில் பயணித்து தனது பலத்தை இழந்து நிற்க்கும் மாலெ அமைப்புகள் புரிந்துக் கொள்ள மேலும் அந்த முதுப் பெரும் தோழரின் வர்க்க போராட்டம் சரியான பாதையை கண்டெடுத்து பயணிக்க விழைகிறேன்.