மக்களை வென்றெடுக்க -மாவோ
மக்களை வென்றெடுக்க -மாவோ

மக்களை வென்றெடுக்க -மாவோ

சீன கம்யூனிஸ்ட் கட் சியின் ஏழாவது தேசிய மாநாட்டிலான தனது முடிவுரையில் தோழர் மா சே-துங் மக்களைப் புரட்சியின் நிச்சயமான வெற்றியில் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுமாறு அறைகூவினார். புரட்சிகர மக்கள் நம்பிக்கை கொண்டிருந்து, பிற்போக்காளர்களுக்கு அஞ்சாமல், இறுதிவரை போராட்டத்தில் விடாப்பிடியாக இருக்கத் திடமும் கொண்டிருக்கும் பட்சத்தில் புரட்சி நிச்சயமாக வெற்றியடையும் என்பதைக் காண்பிக்க அவர் ‘மலைகளை அகற்றிய மூடக் கிழவன்’ என்ற புராதன சீன குட்டிக் கதையை மேற்கோள் காட்டினார்:

மாநாட்டின் நெறியைப் பிரசாரப்படுத்துவதில் எமது நோக்கம் புரட்சியின் நிச்சயமான வெற்றியில் முழுக் கட்சியினதும் சகல மக்களினதும் நம்பிக்கையை வளர்ப்பதாகும். உறுதியுடனும், தியாகத்திற்கு அஞ்சாமலும், வெற்றியை ஈட்டுவதற்காகச் சகல கஷ்டங்களையும் கடக்கக் கூடியதாக, நாம் முதலில் முன் அணியினரின் அரசியல் அறிவுணர்வை உயர்த்த வேண்டும். ஆனால் இது போதாது; முழு மக்களும் வெற்றிக்காக எம்முடன் சேர்ந்து மனமு வந்தும் சந்தோஷமாகவும் போரிடும் வகையில் நாம் முழு மக்களதும் அரசியல் விழிப்புணர்வைத் தட்டியெழுப்பவும் வேண்டும். சீனா பிற்போக்காளர்களுக்கல்ல , சீன மக்களுக்கே சொந்தம் என்ற நம்பிக்கையை நாம் சகல மக்களிடத்தும் மூட்ட வேண்டும். ‘மலைகளை அகற்றிய மூடக் கிழவன்” என்றொரு புராதன சீன பரம்பரைக் கதை உண்டு. அது மிக மிகப் பழங் காலத்தில் வட சீனா வில் வாழ்ந்த, வடக்கு மலையின் மூடக் கிழவன் என அழைக் கப்பட்ட ஒரு கிழவனைப் பற்றியது. அவனது வீடு தெற்கு முகமாக இருந்தது; அதன் வாயிலுக்கு அப்பால் வழியை அடைத்தபடி ராய் ஹாங், வாங்வூ என்ற இரு பெரும் மலைச் சிகரங்கள் இருந்தன. அவன் தன் மக்களைக் கூட்டிக் கொண்டு, அவர்களோடு மண்வெட்டிகள் சகிதம் மிகுந்த மன உறுதியுடன் இந்த மலைகளை

வெட்டத் தொடங்கினான், புத்திசாலிக் கிழவன் என்று அழைக்கப்பட்ட மற்றொரு நரைத்தாடி இவர்கள் செய்வதைக் கண்டுவிட்டு, ”நீங்கள் செய்வது எவ்வளவு முட்டாள் தனம்! நீங்கள் ஒரு சிலர் இந்த இரண்டு பிரமாண்டமான மலைகளையும் வெட்டியெடுப்பது முடியவே முடியாதது.” எனக் கிண்டலாகக் கூறினான். அதற்கு மூடக் கிழவன், ”நான் சாக எனது மக்கள் தொடர்ந்து வெட்டுவார்கள்; அவர்கள் சாக என் பேரப் பிள்ளைகள் இருப்பார்கள்; பின்னர் அவர்களின் பிள்ளைகளும் பேரப் பிள்ளைகளுமாக எல்லையின்றித் தொடர்ந்து வருவார்கள். எவ்வளவு உயரமாகத்தான் இருந்தாலும் இத்த மலைகளால் இருப்பதை விட மேலே வளர முடியாது ; நாங்கள் ஒவ்வொரு முறையும் சிறிது வெட்டியெடுக்க அவை அவ்வளவுக்குக் குறையும். ஏன் எங்களால் அவற்றை வெட்டி அகற்றிவிட முடியாது?” எனப் பதிலளித்தான். புத்தி சாலிக் கிழவனின் பிழையான கருத்தை மறுத்துவிட்டு அவன் தனது நம்பிக்கையில் சிறிதும் தளராமல் தினமும் வெட்டிக்கொண்டே இருந்தான். கடவுள் இதனால் மனமி ரங்கி இரு தேவதைகளை அனுப்ப, அவை அம்மலைகளைத் தம் முதுகுகளில் தூக்கி எடுத்துச் சென்றன. இன்று, சீன மக் கள் மீது அசையாத சுமையாக இரு பெரும் மலைகள் கிடக் கின்றன. ஒன்று ஏகாதிபத்தியம், மற்றையது நிலப்பிர புத்துவம். சீன கம்யூனிஸ்ட் கட்சி இவற்றை வெட்டி எடுத்துவிடுவதென்று நெடுங்காலத்துக்கு முன்பே தன் மனதில் திடங்கொண்டுவிட்டது. நாம் விடா முயற்சியுடன் இடையறாது வேலை செய்ய வேண்டும்; அப்போது நாமும் கடவுளின் நெஞ்சைத் தொடுவோம். எமது கடவுள் சீன வெகுஜனங்களேயன்றி வேறெவருமல்ல அவர்கள் எழுந்து. நின்று எம்மோடு சேர்ந்து வெட்டினால், இந்த இரு மலைக ளையும் ஏன் வெட்டி அகற்ற முடியாது?

1949, ஆகஸ்ட் 14-ம் தேதி ஸின் ஹுஆ செய்தி ஸ்தாபனத்திற்காகத் தான் எழுதிய பிரமைகளைக் களைவீர், போராட்டத்திற்குத் தயாராவீர் என்ற விமர்சனத்தில்தோழர் மா சே-துங்,

பிற்போக்கு சக்திகளின் வளர்ச்சியையும் மக்கள்சக்திகளின் வளர்ச்சியையும் முற்றிலும் வேறுபட்ட இரு ரகமான தர்க்கவியல்களையும் பற்றி மிக ஆழ்ந்த ஆராய்ச்சியொன்றைச் செய்தார். முற்போக்காளர்கள் பிற்போக்காளர்களுக்கு எதிரான போராட்டத்தில் சக்திகளை அணி திரட்ட வேண்டும் என்றும், அவர்கள் பிற்போக்காளர்களை முற்றாகத் தனிமைப் படுத்தக் கூடியதாக இன்னும் ஊசலாடுபவர்களும் ஈடாடுபவர்களுமான சகலருக்கும் போதனைவுட்டவும் அவர்களை ஐக்கியப்படுத்தவும் வென்றெடுக்கவும் வேண்டும் என்றும் சுட்டிக் காட்டினார்:

வளர்ச்சியையும் புபோதனை ய நியதியாகும்

ஏகாதிபத்தியவாதிகளின் தர்க்கவியல் மக்களுடையதி லிருந்து எவ்வளவு வேறுபட்டது! தொல்லை விளைவிப்பது. தோற்பது, மீண்டும் தொல்லை விளைவிப்பது, மீண்டும் தோற் பது…………இப்படியே தங்கள் நாசம் வரை செய்வது; இதுவே மக்களின் இலட்சியத்தைக் கையாள்வதில் ஏகாதிபத்திய வாதிகளினதும் உலகெங்குமுள்ள எல்லாப் பிற்போக்காளர்களினதும் தர்க்கவியல், அவர்கள் ஒரு போதும் இந்தத் தர்க்கவியலுக்கு எதிராகச் செல்லமாட்டார்கள். இது ஒரு மாக்ஸி ய நியதியாகும் . “ஏகாதிபத்தியம் மூர்க்கமானது” என நாம் கூறும் போது நாம் கருதுவது அதன் இயல்பு ஒருபோதும் மாறாது. ஏகாதிபத்தியவாதிகள் ஒருபோதும் தமது கசாப்புக் கத்திகளைக் கீழே போடமாட்டார்கள், அவர்கள் ஒருபோதும், தங்கள் நாசம் வரை, புத்தர்கள் ஆகிவிட மாட்டார்கள் என்பதே.

போரிடுவது, தோற்பது, மீண்டும் போரிடுவது, மீண்டும் தோற்பது, மீண்டும் போரிடுவது ……….. இப்படியே தங்கள் வெற்றிவரை செய்வது; இதுவே மக்களின் தர்க்கவியல், அவர்களும் ஒருபோதும் இந்தத் தர்க்கவியலுக்கு எதிராகச் செல்லமாட்டார்கள். இது மற்றுமொரு மாக்ஸி ய நியதியாகும் . ருஷ்ய மக்களின் புரட்சி இந்த நியதியைப் பின் பற்றியது, சீன மக்களின் புரட்சியும் அவ்வாறே செய்து வந்துள்ளது. ”

வர்க்கங்கள் போராடுகின்றன, சில, வர்க்கங்கள் வெற் றியடைகின்றன, மற்றவை இல்லாதொழிக்கப்படுகின்றன. வரலாறு இத்தகையதே, பல்லாயிரமாண்டுகளாக நாகரீகத்தின் வரலாறு இத்தகையதே. வரலாற்றை இந்தக் கருத்து நிலையிலிருந்து அர்த்தப்படுத்துவது வரலாற்று பொருள்முதல்வாதமாகும்; இந்தக் கருத்துநிலைக்கு எதிராக நிற்பது கருத்துமுதல்வாதமாகும்.

சுய-விமர்சன முறை மக்களின் அணிகளுக்குள் மட்டுமே பிரயோகிக்கப்பட முடியும்; ஏகாதிபத்தியவாதிகளையும் சீனப் பிற்போக்காளர்களையும் நெஞ்சில் இரக்கம் காட்டித் தங்கள் தீய வழிகளைக் கைவிடும்படி மனம் மாற்று வது அசாத்தியம் உள்ள ஒரே வழி, எமது மக்களின் விடுதலை யுத்தத்திலும் விவசாயிப் புரட்சியிலும் போல் சக்தி களை அணிதிரட்டி அவர்களுக்கு எதிராகப் போரிடுவதும், ஏகாதிபத்தியவாதிகளை அம்பலப்படுத்துவதும், அவர்களுக்கு ‘எரிச்சலூட்டுவதும், அவர்களை வீழ்த்துவதும், சட்டத்திற்கெதிரான குற்றங்களுக்காக அவர்களைத் தண் டிப்பதும், ‘அவர்களை ஒழுங்காக நடந்து கொள்ள மட்டுமே அனுமதிப்பதும் சொல்லிலோ செயலிலோ கட்டின்றியிருக்க அனுமதியாதிருப்பது ‘ ‘ மே. அப்போது மட்டுமே எகாதிபத்தியவாத அந்நிய நாடுகளுடன் சமத்துவத்தினதும் பரஸ்பர நன்மையினதும் அடிப்படையில் காரியம் பார்க்கும் நம்பிக்கை ஏதும் இருக்கும். அப்போது மட்டுமே தங்கள் ஆயுதங்களைக் கீழே போட்டுச் சரணடைந்துள்ளவர்களான நிலப்பிரபுக்களும் அதிகாரித்துவ முதலாளிகளும் பிற்போக்குக் கோமின்டான்கும்பலின் அங்கத்தினர் களும் அவர்களின் உடந்தைகளும் தீயதை நல்லதாக மாற்றப் போதனை தரப்படுவதற்கும் சாத்தியமான அளவிற்கு நல்ல மனிதர்களாக மாற்றப்படவும் நம்பிக்கை ஏதும் இருக்கும். பல சீன சுயேச்சைவாதிகள் – பழைய ரக ஜனநாயகவாத நபர்கள்,

அதாவது, ட்ரூமன், மார்ஷல், அகிஸன், லெய்டன், ஸ்டுவார்ட் இத்தியாதியினர் எவரில் நம்பிக்கை பாராட்டி வென்றெடுக்க முயன்று வந்துள்ளனரோ அந்த ‘ஜனநாயக தனிநபர்வாதத்தின் ஆதரவாளர்கள் – பல சமயம் தாம் செயலற்ற நிலையில் இருக்கக் காண்பதோடு, பல சமயம் அமெரிக்க ஆட்சியாளர்களையும் கோமின்டாங்கையும் சோவியத் யூனியனையும் சீன கம்யூனிஸ்ட் கட்சியையும் பற்றிய தமது மதிப்பீடுகளிற் தவறாகவும் இருக்கின்றனர். இதற்குக் காரணம் சரியாக அவர்கள் பிரச்சி னைகளைச் வரலாற்று பொருள்முதல்வாத நிலையிலிருந்து பார்ப்பதில்லை, அல்லது அப்படிப் பார்க்க மறுக்கின்றனர் என்பதே.

இடைப்பட்ட படிவத்தினர், நடுப்-பாதைக்காரர்கள், பல்வேறு படிவங்களையும் சேர்ந்த பின்னடைந்த நபர்கள் ஆகியோருடன், மக்கள் சீனாவிலுள்ள, இன்னும் ஊசலாடு வோரும் தயங்குவோருமான எல்லோருடனும் (இவர்கள் இன்னும் நீண்ட காலத்திற்கு ஊசலாடுவார்கள். ஒருகால் நிலைக்கு வந்த பின்னருங்கூடக் கஷ்டங்களை எதிர்ப்பட்டதுதான் தாமதம், மீண்டும் ஊசலாடுவார்கள்), ஐக்கியமுறுவதும் அவர்களுக்கு விசுவாசமான உதவி தருவதும் அவர்களின் ஊசலாடும் தன்மையை விமர்சிப்பதும் அவர்களுக்குப் போதனை ஊட்டுவதும் அவர்களை வெகுஜனங்களின் பக்கம் வென்றெடுப்பதும் அவர்களை ஏகாதிபத்தியவாதிகள் தம் பக்கம் இழுத்துக்கொள்ள விடாது தடுப்பதும், அவர் களுக்குப் பிரமைகளைக் களைந்துவிட்டுப் போராட்டத்திற்குத் தயாராகும்படி கூறுவதும் முற்போக்காளர்களின் – கம்யூ னிஸ்டுகளினதும் ஜனநாயகக் கட்சிகளின் அங்கத்தினர்களினதும் அரசியல் ரீதியில் அறிவுணர்வு பெற்ற தொழிலாளர் களினதும் மாணவ வாலிபர்களினதும் முற்போக்கான புத்திஜீவிகளினதும் – கடமையாகும். இப்போது வெற்றி ஈட்டப்பட்டுவிட்டதால், இனிச் செய்வதற்கு வேலை எதுவும் இல்லை என எவரும் நினைத்துவிட வேண்டாம். இவர்களை உண்மையாக எம் பக்கம் வென்றெடுக்க முடிவதற்கு,

முதலில் நாம் இன்னும் வேலை செய்ய வேண்டும், பெருமளவு பொறுமையான வேலை செய்ய வேண்டும். இவர்கள் நம் பக்கம் வென்றெடுக்கப்படும் போது ஏகாதிபத்தியம் முற்றாகத் தனிமைப் படுத்தப்படும், அதனால் அதன்மேலும் தன் தந்திரங்கள் எதையும் செய்ய இயலாதிருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *