மக்களிடம் நிதி கேட்க்கும் அரசு
மக்களிடம் நிதி கேட்க்கும் அரசு

மக்களிடம் நிதி கேட்க்கும் அரசு

மக்களிடம் நிதி கேட்க்கும் அரசு !!!

இன்று பிரதமர் காரோனாவில் இருந்து விடுபட நிதி தாருங்கள் என்கிறார் ஆனால் இந்த ஆட்சியாளர்கள் உண்மை முகத்தை ஊடகங்கள் காட்டுவதில்லை ஏனெனில் தனது வர்க்கத்தை காக்கதான்…
இங்குள்ள ஊடகங்கள் உண்மையை பேசுவதில்லை என எண்ணும் போது எனக்கு ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் (Confessions of a Economic Hitman) என்ற நூலின் பின்வரும் வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன.“ தவிர உங்கள் செய்தி ஏடுகள் (தொலைகாட்சி நிறுவனங்கள்) பெருமளவு எண்ணெய் நிறுவனங்களால் கட்டப்படுத்தப்படுகின்றன என்பது உண்மைதானே! என்ணெய் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் எதைக் கேட்க விரும்புகிறார்களோ அதையே ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் பேசுகிறார்கள், முதலாளிகள் எதைப் படிக்க விரும்புகிறார்களோ அதையே எழுதுகிறார்கள்”. Network 18 குழுமத்திற்கு சொந்தமாக 28 செய்தி தொலைகாட்சி அலைவரிசைகள் மட்டும் உள்ளன(22), இந்த குழுமத்தை அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களை அடுத்து ரிலையன்ஸ் நிறுவனம் தான் பெரிய அளவில் எரிபொருள் விற்பனையை கொண்டிருக்கும் தனியார் நிறுவனமாகும். மோடி ஆட்சிக்கு வந்த பொழுது 12.36% ஆக இருந்த சேவை வரி இன்று 15% ஆக உயர்ந்துள்ளது. நடுத்தர, ஏழை மக்களை பெருமளவில் பாதிக்கும் வகையில் சேவை வரியை ஒருபுறம் ஏற்றியும், நடுத்தர மக்களின் நீண்ட காலமாக வருமான வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை புறக்கணித்து வரும் மோடி அரசு மறுபுறம் கார்ப்பரேட் எனும் பெரு நிறுவனங்களுக்கான வரியை 30% லிருந்து 25% ஆக 2015-2016 நிதிநிலை(Budget) அறிக்கையில் குறைத்துள்ளது(4). அதுமட்டுமின்றி 2015-2016 நிதிநிலை அறிக்கையில் Revenue Foregone னின் (திட்டமிட்டிருந்த வருவாயில் வாரா வருவாய் என புரிந்துகொள்ளலாம்) கீழ் ஐந்து இலட்சத்தி என்னூற்றி இருபத்தி மூன்று கோடி ரூபாய் (Rs5,00,823 Crore )தள்ளுபடி செய்யப்பட்டது. கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒராண்டிற்கு கட்ட வேண்டிய வருமான வரி, சுங்க, கலால் வரியின் மூலம் வரும் என திட்டமிடப்பட்ட தொகையில் இருந்து தான் இந்த ஐந்து இலட்சம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது (2014-2015ல் திட்டமிடப்பட்ட வருவாயில் வராதது ஐந்து இலட்சம் கோடி). இது 2016-2017ற்கான நிதிநிலை அறிக்கையில் Revenue Foregone னின் கீழ் ஐந்து இலட்சத்து ஐம்பத்தோராயிரம் கோடி ரூபாயாக (Rs.5,51,000 Crore ) என்ற அளவில் உயர்ந்துள்ளது(2015-2016ல் திட்டமிடப்பட்ட வருவாயில் வராதது ஐந்து இலட்சத்தி ஐம்பாதியிரம் கோடி) (5). பெரு நிறுவனங்களுக்கு அரசு கொடுக்கும் இந்த சலுகை Revenue Foregone னின் கீழ் வெளிப்படையாக தெரிவதால் இனி மத்திய அரசு இந்த பெயரில் அறிக்கை கொடுக்காது. இது இனி “மத்திய வரித்திட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்ட சலுகைகளால் ஏற்பட்ட வருவாய் பாதிப்பு அறிக்கை “(‘The Statement of Revenue Impact of Tax Incentives under the Central Tax System’) என்ற பெயரில் கொடுக்கப்படும் என மோடி தலைமையிலான அரசு அறிவித்துள்ளது (5). இதே நிதிநிலை அறிக்கையில் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு வெறும் 35,000 கோடி ஒதுக்கப்பட்ட உடனே ஊடகங்கள் எல்லாம் இது விவசாயிகளுக்கான நிதிநிலை அறிக்கை என உண்மைக்கு மாறாக தம்பட்டம் அடிக்கின்றன. அதே நேரம் ஏழைகளுக்கு செயல்படுத்தப்படும் எல்லா நலத்திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகை கடுமையாக குறைக்கப்பட்டுள்ளது. ஏழைகளுக்கு கொடுக்கப்படும் மானியத்தை கேள்வி கேட்கும் எந்த ஒரு ஊடகமும் முதலாளிகளுக்கு கொடுக்கப்படும் இந்த மானியத்தை(வருவாய் இரத்தை) கேள்வி கேட்பதில்லை. முன்னர் கூறியுள்ள ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் நூலின் வரிகளை இங்கே நீங்கள் நினைவு கூறலாம். இவையனைத்தையும் வைத்து பார்க்கும் பொழுது மோடி தலைமையிலான அரசு பெரும் பணக்காரர்களின், முதலாளிகளின் நலன்களுக்காக மட்டுமே செயல்படுகின்றது. பெரும்பான்மையான நடுத்தர, ஏழை மக்களுக்காக அல்ல என ஒரு சாரார் கூறுவது உண்மை என்றே தோன்றுகின்றது.
இன்று காரோனா தொற்று பற்றி ஊடகங்கள் பேசுவதன் அடிப்படையில் உண்மை என்று நம்பும் பாமரனை புரியவைக்கவே இந்தப் பதிவு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *