மகத்தான தெலுங்கானா விவசாயிகளின் ஆயுதப்பாேராட்டமும், அதன் பெருமதிப்பு
மகத்தான தெலுங்கானா விவசாயிகளின் ஆயுதப்பாேராட்டமும், அதன் பெருமதிப்பு

மகத்தான தெலுங்கானா விவசாயிகளின் ஆயுதப்பாேராட்டமும், அதன் பெருமதிப்பு

மகத்தான தெலுங்கானா விவசாயிகளின் ஆயுதப்பாேராட்டமும், அதன் பெருமதிப்பு வாய்ந்த அனுபவங்களும் -விஸ்வம்- /The Glorious Telangana Peasant Armed Struggle It’s Valuable Experiences-Com.Viswam/(தமிழில்:- தோழர்.கோவை ஈஸ்வரன்) பகுதி-1.(3)

1946 ஜூலை 4: #காடிவெண்டி_தொட்டி_குமரையாவின்_மாவீரத்_தியாகமும்_அதன்_விளைவுகளும்
உழைப்பைச் சுரண்டுவது, கொத்தடிமை உழைப்பு, லஞ்சம், பரிசு, காணிக்கை போன்ற வடிவங்களின் மூலம் விவசாயிகளைச் சுரண்டுகிற ஜமீன்தார்கள், தேஷ்முக்குகள் படேல்கள், பட்வாரிஸ்கள் ஆகியாேரின் கொடுஞ் சுரண்டலை ஆதாரமாகக் கொண்ட நிஜாமின் நிலப்பிரபுத்துவ அமைப்பின் படுமோசமான சுரண்டலுக்கு தெலுங்கானாவின் ஒடுக்கப்பட்ட மக்கள் பலிகடாக்களாக ஆக்கப்பட்டிருந்தனர்.

துணிவெளுப்பவர்கள், முடி திருத்துபவர்கள், குயவர்கள், குர்மிகள், மாலா, மாதிகா, இந்து, முஸ்லீம் ஆகிய அனைத்து உழைக்கும் மக்களும் பாகுபாடு எதுவுமின்றி விழிப்புணர்வு பெற்று வந்த நாட்களே அன்றைய நாட்களாகும்.

எனவேதான் 1946-ம் ஆண்டின் போது ஆந்திர மகாசபையின் உறுப்பினர் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டதாக ஆனது.
முண்ட்ராய், பாலகுர்தி ஆகிய இடங்களில் ஏற்பட்ட மக்கள் எதிர்ப்பு, மற்றுோர்க்குணமுள்ள நடவடிக்கைகள் ஆகியவற்றுக்குப் பிறகு விஸ்னூர் ராமச்சந்திரா ரெட்டி அவரது குடும்பம், அவரது தாயார் ஜானகம்மா ஆகி ாேரால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் நிலப்பிரபுத்துவச் சக்திகளுக்குப்  பைத்தியமே பிடித்து விட்டது.

அவர்கள் வெறிபிடித்த நாய்களாக மாறினர்.

அவர்கள் சங்கத்தை உடைக்க சூழ்ச்சிகளைச் செய்தனர்.

அவர்கள் சிறந்த முறையில் அமைப்பாக்கப்பட்டிருந்த ஜானகான் தாலுக்காவிலிருந்த காடிவெண்டி கிராமத்தின் சங்கம் அவர்களின் தாக்குதல்களுக்கு இலக்காக ஆனது.

மறைவான இடங்களில் இருந்து காெண்டு சங்கத் தலைவர்களின் வீடுகள் மீது சரமாரியாக கற்களை வீசித் தாக்குமாறும், வாய்ப்பான தருணங்களில் சங்கத் தலைவர்களை வழிமறித்துத் தாக்குமாறும், அவர்கள் குண்டர்களைக் கேட்டுக்காெண்டனர்.

தேஷ்முக்குகளின் மிருகத்தனமான இந்தத் தாக்குதல்களை எதிர்காெள்ளச் சங்கம் தீர்மானித்தது.

ஒரு நாள் மக்கள் கம்புகள், தடிகள், கல்லெறியும் கவண்கள் ஆகியவற்றுடன் ஊர்வலமாகச் செல்லத் ொடங்கி, அந்த ஊர்வலம் தேஷ்முக்கினுடைய காடி என்றழைக்கப்படும் பண்ணை வீட்டிற்கு அருகில் சென்றவுடன் மறைவிடங்களில் காத்திருந்த குண்டர்கள் ஊர்வலத்தின் மீது துப்பாக்கிக்  காெண்டு சுடத்   தாெடங்கினர்.

அந்த ஊர்வலத்தில் முன்னணியில் சென்று   காெண்டிருந்த  தாெட்டி காெமரய்யா அந்த இடத்திலேயே மரணமடைந்தார்.

தாெட்டி மல்லையா, தாெட்டி காெண்டையா ஆகியாேரும் மற்றும் பலரும் காயமுற்றனர்.

இருப்பினும்கூட மக்கள் திரளினரின் ஊர்வலம் அலையெனச் சீறிப்பாய்ந்து முன்னாேக்கிச் சென்று நிலப்பிரபுவின் வீட்டை முற்றுகையிட்டது.

அவர்கள் தாக்குதல்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் காெண்ட அதே  நேரத்தில் நிலப்பிரபுவின் காேட்டை வீட்டை தீயிட்டுக் காெளுத்த முயன்றனர்.

இதைக் கண்ட தேஷ்முக் அண்டையிலுள்ள நிலப்பிரபுக்களுக்குச் செய்தியை அனுப்பி தனக்கு ஆதரவளிக்கும் வகையில் இன்னும் அதிகமான குண்டர்களைத் திரட்டினர்.
சங்கமும் ஆதரவு காேரி ராமண்ணாப்பேட் பாேன்ற அருகாமையிலிருந்த தாலுக்காக்களுக்குச் செய்தியை அனுப்பியது.

மக்களும் கம்புகள், காேடாலிகள், கவண்கள், தடிகள் பாேன்ற தங்களால் திரட்ட முடிந்த எல்லாவிதமான ஆயுதங்களுடனும் அலையெனப் பாய்ந்து வந்தனர்.

காடிவெண்டி கிராமமே பாேர்க்களமாக மாறியது.

நிலப்பிரபுத்துவ குண்டர்களின் துப்பாக்கிகளை கவண்களும், கற்களும் எதிரிட்டன.

மக்களின் சக்தி அணுகுண்டின் சக்தியைவிட வலிமையானது என்ற உண்மையை இது நிரூபித்தது.

குண்டர் கும்பல்களால் மக்களின் எதிர்ப்பை எதிரிட்டு நிற்க முடியவில்லை.

மக்களின் காேப வெறிக்குத் தேஷ்முக்குகளின் சாெத்துக்களும், தாேட்டங்களும் தாக்குதலுக்கு இலக்காயின.

தேஷ்முக்கினது குண்டர்களுக்குப் பாதுகாப்பளிக்க ஆயுதமேந்திய காவற்படை விரைந்து வந்தது.

அவர்கள் மக்களால் பிடித்து வைக்கப்பட்டிருந்த குண்டர்களை மீட்டு தேஷ்முக்குகளிடம் ஒப்படைத்தனர்.

மக்களுக்கு எதிராகப் பாெய் வழக்குகளைத் தாெடுத்தனர்.
இந்த நிகழ்வு இடிமுழக்கமாக வெடித்தெழுந்தது.

ஆயிரக்கணக்கான மக்கள் காெமரய்யாவின் உடலைத் தாங்கிய வண்ணம் ஊர்வலமாகச் சென்று அவருக்கு இறுதிச் சடங்குகளைச் செய்தனர்.

சங்கத்திற்காக தங்கள் உயிரையே தியாகம் செய்ய அவர்கள் சபதமேற்றனர்.

அவர்கள் தங்களின் முஷ்டியை உயர்த்தி இறுக்கிப் பிடித்தனர்.

புலியெனக் கர்ஜித்து இடியாேசையை கிளப்பினர்.

காெமரய்யாவின் மாவீரத் தியாகம் தெலுங்கானாவின் விடுதலைக்குப் பாதையை அமைத்துத் தந்தது.

இது புரட்சிக்கான பாதையைக் காட்டியது.

காெமரய்யா சிந்திய ஒவ்வாெரு துளி இரத்தமும் ஓராயிரம் காெமரய்யாக்களை உயிரத்தெழச் செய்தது.

காெமரய்யா, ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்திலிருந்து தாேன்றியவராவார்.

அவர் மார்க்சிய லெனினிய வெளிச்சத்தில் மக்களின் விடுதலைக்கான இயக்கத்தின் படிப்பினைகளை உள்வாங்கிக் காெண்டிருந்தார்.

அவர் நிலப்பிரபுத்துவச் சக்திகளை அழித்தாெழிக்க உறுதி பூண்டிருந்தார்.

உழுபவனுக்கே நிலத்தை உடமையாக்க வேண்டும் என்ற உணர்வை அவர் நிரம்பப் பெற்றிருந்தார்.

இந்த உணர்வே ஊர்வலத்தில் தலைமை ஏற்று அவரை அணிவகுக்கச் செய்தது.

குண்டர்கள் நேரடியாக அவரை மாேதியபாேது அவர் புலியைப் பாேலத் திடீரெனப் பாய்ந்து குண்டர்களைத் தாக்கினார்.

ஆனால் அந்தக் காேழைகளாே மறைவிடத்திலிருந்து அவரைச் சுடுகின்ற முறையைத் தேர்ந்தெடுத்தனர்.

சுரண்டலாளர்கள் இன்று பாேலவே அன்றும் என்றும் காேழைகளாவர்.

மக்களின் அமைப்பாக்கப்பட்ட வலிமையை எதிர்காெள்ளும் பாேது அவர்கள் எப்பாேதும் காேழைகளைப் பாேன்றே செயல்படுவார்கள்.
இவ்வாறுதான் சுரண்டும் சக்திகள் 1968ம் ஆண்டில் நக்சல்பாரியில் பாபுலால் பிஸ்வகர்மாவையும், 1967ம் ஆண்டு அக்டாேபரில் சீகாகுளத்தில் காேரண்ணா, மங்கண்ணா ஆகிய தாேழர்களையும் காென்றழித்தனர்.

எப்பாேதெல்லாம் புரட்சிகர மக்கள் திரளினர், நிலத்திற்காக, உணவிற்காக, விடுதலைக்காக பாேராடுகின்றார்களாே அப்பாேதெல்லாம் சுரண்டும் வர்க்கங்கள் காெலை பாேன்ற காேழைத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

ஆனால் இந்த நடவடிக்கைகள் புரட்சிகர மக்களின் இயக்கத்தை மேலும் கூர்மையடையவே செய்கிறது.
காடிவெண்டி கிராம மக்களின் எதிர்ப்பும் காெமரய்யாவின் மாவீரத் தியாகமும் தெலுங்கானா மக்களின் புரட்சிகர இயக்கத்தில் ஒரு புதிய திருப்பு முனையை ஏற்படுத்தியது.

குடுபாலா அதாவது தடியேந்திய சங்கங்கள் ஒவ்வாெரு கிராமத்திலும் அமைக்கப்பட்டன. பெண்களும் குழைந்தைகளும் அமைப்பாக்கப்பட்டனர்.

எதிர்ப்பதற்கான முறைகள் ஒவ்வாெருவருக்கும் கற்பிக்கப்பட்டது.

தெலுங்கானா மக்கள் காயம்பட்ட புலிகளாகக் கர்ஜித்தனர்.

அவர்கள் புரட்சியின் பதாகையை உயர்த்திப்பிடித்தனர்.

அவர்கள் விவசாயப் புரட்சிகர இயக்கத்துக்கு ஒரு வடிவத்தைஏற்படுத்தித் தந்தனர்.

நிலப்பிரபுக்களின் ஆதிக்கத்திலிருந்து நிலங்களைப் பறித்து விநியாேகிக்க விவசாயிகள் முன்னாேக்கி வந்தனர்.

ஜனாகான், சூர்யாபெட் ஆகிய தாலுக்காக்களில் ஒரு பேரெழுச்சி ஏற்பட்டிருந்தது.

அவர்கள் நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராகக் கலகம் செய்தார்கள்.

கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான தேவுலப்பள்ளி வெங்கடேஸ்வரராவ் பாேராட்டத்தில் இத்தகைய திருப்பத்தை ஏற்படுத்த பீமிரெட்டி, நரசிம்ம ரெட்டி ஆகியாேரும் மற்றவர்களும் முக்கியமான பாத்திரத்தை வகித்தனர்.

கட்சியின் தலைமையில் கிராமப் பஞ்சாயத்துக்கள் அமைக்கப்பட்டன.

ஏழைகளால் தலைமை தாங்கப்பட்ட இந்தப் பஞ்சாயத்துக்கள் நிலத்தை விநியாேகிப்பதிலிருந்து பல்வே று பிரச்சனைகளைக் கையாண்டனர்.

நிலப்பிரபுத்துவத்தின் அதிகாரம் பின்னாேக்கித் தள்ளப்பட்டது.
எதிர்ப்பு இயக்கமானது 5 தாலுக்காக்களில் உள்ள 120 கிராமங்களுக்குப் பரவியது.

சுரண்டும் வர்க்கங்கள் காட்சிப்புலத்திற்கு இராணுவத்தை வரவழைத்தன. ஒடுக்குமுறை தீவிரப்படுத்தப்பட்டது.

20 பெண்களும் ஒரு இளைஞனும் காெல்லப்பட்டனர். எதிர்ப்பு இயக்கம் தற்காலிகமாக ஒடுக்கப்பட்டது.
1946 ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கும் டிசம்பர் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த வளர்ச்சிப் பாேக்குகள் காணப்பட்டன.

Jan31

பகுதி-1.(2)

#மோன்ட்ரை, மற்றும் பாலக்குர்தி

லம்பாடா பழங்குடியினரான விவசாயிகள் காட்டாறு ராமச்சந்திரராவ் என்பவரின் நிலத்தில் குத்தகைக்குப் பயிரிட்டு வந்தனர்.

குத்தகை காலம் முடிவடைந்துவிட்டது என்றாலும் விவசாயிகள் நிலத்தை விட்டு வெளியேறத் தயாராக இல்லை.

அவர்கள் நிலப்பிரபுவின் முயற்சிகளை எதிர்த்துத் தங்கள் நிலங்களில் குத்தகை அடிப்படையில் பயிரிடுவதற்கான தங்களின் உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ளத் தயாராயினர்.

நிலப்பிரபுக்கள் காவல்துறையினர் குண்டர்கள் ஆகியாேரைக் கொண்டு விவசாயிகளைத் தாக்கினர்.

லம்பாடா பழங்குடியினர் மரபு வழிப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு காவல்துறையினரையும் குண்டர்களையும் எதிர்த்தனர்.

அவர்கள் தடிகளைப் பயன்படுத்தி குண்டர்களைத் துரத்தியடித்தனர்.
இல்லம்மாவின் சிறிய குடும்பம் பாலக்குர்தியில் இருந்தது.

இருப்பினும் தனக்குச் சொந்தமான விளைச்சலைப் பாதுகாத்துக் கொள்ளப் போராடுவதற்கான தயார் நிலையில் அவர் இருந்தார்.

போர்க்குணமுள்ள தொண்டர் படை செயல்படத் தயார் நிலையில் இருந்ததால் கிராமத்திலுள்ள ஒட்டு மொத்த மக்களும் அந்தப் பெண்ணின் பின்னால் உறுதியாக நின்றனர்.

மக்களின் ஒன்றுபட்ட அமைப்பு வலிமையோடு கட்சி நிலப்பிரபுக்களின் குண்டர்களைப் போராடித் துரத்தியடித்தது.

விஸ்னூர் ராமச்சந்திரா ரெட்டியாரின் குண்டர்களைத் துரத்தியடித்து இல்லம்மாவின் விளைச்சலை க் கட்சி பாதுகாத்தது.

இல்லம்மா ஒரு சிறிய துண்டு நிலமான சொத்துக்காக மாவீரத்துடன் போராடினார்.

அவர் தனது குடும்பத்தின் பிற உறுப்பினர்களைக் கிளர்ந்தெழச் செய்தார்.

அவர் தனது உரிமையைப் பாதுகாத்துக் கொண்டதாேடு மட்டுமின்றி தனது போராட்டத்தின் மூலம் தெலுங்கானாவிலுள்ள அனைத்து விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்கு நடைமுறைப்படுத்த வேண்டிய பாதை இது மட்டுமே என பிரகடப்படுத்தினார்.

இந்த நிகழ்வைத் தொடர்ந்து விவசாயிகளுக்கு எதிராக வழக்குகளும், ஒடுக்குமுறைகளும் அதிகரிக்கத் தொடங்கின.

தடிகள் மற்றும் தங்கள் கைகளில் இருந்து ஒன்றிரண்டு துப்பாக்கிகளைக் கொண்டு நிலப்பிரபுக்களின் குண்டர்கள் பயங்கரவாத அச்சுறுத்தலை அவிழ்த்துவிடத் தொடங்கினர்.

மக்களின் தொண்டர் படை வெறூம் தடிகளைக்கொண்டு அவர்களின் தாக்குதல்களை முறியடித்தனர்.

இந்தக் கட்டத்தில் தடிகளே போதுமானதாக இருந்தது.

நிலப்பிரபு (தொரா) ராமச்சந்திரா ரெட்டியும் அவரது தாயார் ஜனகம்மாவும் சங்கத்தை உடைக்க உறுதி பூண்டனர்.

அவர்கள் காவல்துறையினரை அழைத்து வந்து செயல் வீரர்களைக் கைது செய்து சித்திரவதை செய்தனர்.
இந்தக் கட்டத்தில் போராட்டம் நீதிமன்றங்கள், அலுவலகங்கள் என பகுதித் தன்மை கொண்டதாக இருந்தது.

போராட்டங்களுடன் வெளிப்படையான இரகசியமான புரட்சிகர வடிவங்கள் ஒன்றிணைக்கப்பட்டன.

நிலப்பிரபுக்கள் மற்றும் அவர்களின் குண்டர்களின் தாக்குதல்களை எதிர்ப்பதற்குக் கட்சி ஊழியர்கள் மக்களின் ஒற்றுமை மற்றும் அமைப்பினது வலிமை ஆகியவற்றை மட்டுமே சார்ந்து நின்றனர்.
#போருக்கு_முந்தைய_பேரெழுச்சி

1944ம் ஆண்டு இரண்டாவது உலகப் போரில் செம்படைகளின் கரங்களில் பாசிசம் மரண அடிகளைப் பெற்ற மற்றும் பாசிச சக்திகள் பின்வாங்கிய ஆண்டாகும்.

பாசிசத்தின் தோல்வி உலக முழுவதிலுமுள்ள முற்பாேக்கான, சமாதானத்தை விரும்புகிற ஜனநாயக சக்திகளுக்குப் பெரும் உத்வேகத்தை அளித்தது.

அப்பாேது ஜனநாயகப் போராட்டங்களுக்கான பேரெழுச்சி வெடித்துக் கிளம்பியது.

அந்த நேரத்தில் போரின் காரணமாக படுமாேசமான துன்பத்திற்கும், நிலப்பிரபுக்களின் கொடுஞ் சுரண்டலால், உருவாக்கப்பட்ட பஞ்சத்தாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாசிசத்தின் தோல்வியும் உலகின் புரட்சிகர சக்திகளின் முன்னேற்றமும் மிகப் பெரிய உத்வேகத்தை அளித்தன.

இந்தியா முழுவதிலும் ஒரு மக்களின் பேரெழுச்சி ஏற்பட்டது.

இது தெலுங்கானாவில் இன்னும் தீவிரமான வடிவத்தை எடுத்தது.
நலகாெண்டா மாவட்டத்தைச் சேர்ந்த அகுனூர் மற்றும் தற்பாேதைய கர்நாடக மாநிலத்தின் குல்பர்க்கா மாவட்டத்தைச் சேர்ந்த மச்சிரெட்டிப் பள்ளி ஆகிய ஊர்களைச் சேர்ந்த விவசாயிகள் யுத்தத்திற்காகப் பிரிட்டிஷ் அரசால் லெவியாக நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்பட்ட தானியத்தைத் தர மறுத்தனர்.

லெவியைக் கட்டாயப்படுத்தி வசூலிக்க வந்த ரெவின்யூ மற்றும் காவல்துறை அதிகாரிகளை விவசாயிகள் கடுமையாக எதிர்த்ததாேடு அவர்களுக்குச் சரியான பாடத்தைக் கற்பித்தனர்.

இந்த நோக்கத்திற்காக மக்கள் தடிகளையும், துடப்பத்தையும் மட்டுமே பயன்படுத்தினர்.

சூழ்நிலைமையைச் சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்ட போது அவர்கள் மேலும் சக்தி வாய்ந்த மரபு வழிப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தினர்.

அவர்கள் ஆரம்ப நிலையில் துப்பாக்கிகளைப் பயன்படுத்தவில்லை.

இந்தப் போராட்டம் ரெவின்யூ மற்றும் காவல்துறை பொறியமைப்புக்கு எதிராக மட்டுமின்றி நிலப்பிரபுக்களுக்கு எதிராகவும் நடத்தப்பட்டதும் ஆகும்.

லெவியாக நிர்ணயிக்கப்பட்ட தானியத்தை வசூலிக்க அதிகாரிகளுக்கு நிலப்பிரபுக்கள் உதவிக் கொண்டிருந்தனர்.

ஏழைகள் மற்றும் மத்தியத்தர விவசாயிகளிடமிருந்து லெவியாக நிர்ணயிக்கப்பட்ட தானியத்தை வசூலிப்பதை அவர்கள் பார்த்துக் கொண்டனர்.

அவர்கள் லெவியைச் செலுத்தாமல் தப்பித்துக் கொண்டாேடு மட்டுமல்லாமல், இந்தப் போக்கின் மூலம் குவித்துக்கொண்ட பணம், தானியங்கள் ஆகியவற்றைக் கொண்டு தங்கள் கருவூலத்தையும், களஞ்சியத்தையும் நிரப்பிக் கொண்டனர்.

இந்தப் போராட்டத்தின் நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு அரசு எதிர்ப்புப் பண்பை கட்சி கவனத்தில் எடுத்துக் கொண்டது.

நளகாெண்டா மாவட்டக் கம்யூனிஸ்ட் குழு மக்களின் முன்முயற்சியிருந்தும் இந்த இரண்டு கிராமங்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளிலிருந்தும் படிப்பினைகளைப் பெற்றுக் கொண்டது.

கட்சி நிலப்பிரபுக்களின் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியது.

இந்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வாெரு கிராமத்திலும் தொண்டர்படைக் குழுக்கள் அமைக்க அறைகூவல் விடுத்ததாேடு ஒவ்வாெரு கிராமத்திலும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகக் கண்டனப் பேரணிகளை நடத்தியது காவல்துறைக்கு எதிரான எதிர்ப்பைக் கட்டியமைக்கக் கட்சி இந்த அனுபவங்களைப் பயன்படுத்திக்கொண்டது.

Jan31

மன்னராட்சி மாநிலமான ஹைதராபாத் 1948-ம் ஆண்டு வரை அசாப்ஹ் ஜாகி நவாப் (ASAFH JAHI NAWAB) என்பவரால் ஆளப்பட்டு வந்தது.

இவ்வரசு நிர்வாக வசதிக்காக கால்சா (KHALSA) மற்றும் கெயர்க்ஹால்சா (GAAIRK KHALSA) என்ற இரண்டு பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன.

கால்சா நவாபின் நேரடி ஆளுகைக்கு உட்பட்டிருந்த அதே நேரத்தில் கெயர்க்ஹால்சா பிரதேசமானது ஜமீன்தார்கள், ஜாகிர்தார்கள், தேஷ்முக்குகள் ஆகியாேரால் ஆளப்பட்டு வந்தது.

இதில் ஐந்து மராத்தி மொழி பேசும் மாவட்டங்கள், மூன்று கன்னட மொழி பேசும் மாவட்டங்கள் ஆகியவை உள்ளடங்கி இருந்தன.

மொத்தம் 15 மில்லியன் மக்கட் தொகையில் 10 மில்லியன் மக்கள் தெலுங்கு மொழி பேசுபவர்கள் ஆவர்.
தெலுங்கானா ஹைதராபாத் மாநிலத்திலுள்ள தெலுங்கு மாெழி பேசுவாேரைக் கொண்ட பிரதேசமாகும்.

இப்பகுதி நிலப்பிரபுத்துவ மேட்டிமை வர்க்கத்தினரால் ஆளப்பட்டு வந்தது.

ஜாகிர்தார், நேர்முக மற்றும் குத்தகை அமைப்பும் அதன் காரணமாக நிலப்பிரபுத்துவச் சுரண்டலும், ஒடுக்குமுறையும் நடப்பில் இருந்தன.

தெலுங்கானா மக்கள் அடிமைத்தனமான ஒரு வாழ்வையே நடத்தினர்.

நிலப்பிரபுக்களைக் காணும் போது “எஜமானனே இதாே இங்கே இருக்கிறேன் உங்கள் அடிமை உங்கள் கால்களை நான் தொடுவேனாக” என்று ஒவ்வாெரு சாதாரண மனிதனும் வார்த்தைகளை வெளிப்படுத்துவது அவர்களின் கேவலமான பரிதாபமான நிலைமையையும் அவர்கள் அனுபவித்து வந்த ஒடுக்குமுறை தன்மையினையும் பிரதிபலிப்பதாய் இருந்தன.

தெலுங்கானாவின் பாதிக்கும் மேற்பட்ட நிலங்கள் நிஜாம் நவாப்புக்குச் சொந்தமாக இருந்தன, அதே நேரத்தில் எஞ்சிய 50% நிலம் பெரும் நிலப்பிரபுக்களின் கைகளில் இருந்தன.

மொத்த மக்கட்தாெகையில் பணக்கார, மத்தியத்தர மற்றும் சிறு விவசாயிகளைத் தவிர எஞ்சிய 50% நிலமற்ற மக்களாவர், அவர்கள் அனுபவித்த அடிமைத்தனமானது நமது தலைமுறையினரின் கற்பனை க்குக் கூட எட்டாத ஒன்றாகும்.
ஹைதராபாத் அரசு என்பது மராத்தி, கன்னடா, மற்றும் தெலுங்கு மொழி பேசும் மக்கள் இணைந்து உருவான பிரதேசமாகும்.

நிஜாம் அதிகாரத்தின் இரும்புக் காலடியின் கீழ் இப்பிரதேச மக்கள் நசுக்கப்பட்டு இன்னலுக்கு ஆளாகிவந்தனர்.

இந்த மூன்று பிரதேசங்களிலுமே உருது மட்டுமே அதிகாரப்பூர்வமான மொழியாகும்.

தெலுங்கு, கன்னடம், மராத்தி மொழிகள் நசுக்கப்பட்டன. இந்த மொழிகளை கற்பிக்க இப்பகுதியில் பள்ளிகள் எதுவுமில்லை.
1940களுக்கு முன்னர் குறைந்தபட்ச  உரிமைகளுக்கு நிற்பது என்று பொருள் கொள்ளத்தக்க விதத்தில் மக்கள்திரள் அமைப்புகள் எதுவும் அங்கிருக்கவில்லை.

ஆங்கிலேயரால் ஆளப்பட்ட பிரதேசங்களில் இருந்ததைப் போன்ற சீர்திருத்தவாத தேசிய இயக்கம் கூட அங்கிருக்கவில்லை.

1940-ம் ஆண்டில் தெலுங்கு மொழி, கல்வி, நூல் நிலையங்கள் ஆகியவற்றை வளர்ப்பது போன்ற சீர்திருத்தவாத நோக்கங்களைக் கொண்ட ஆந்திர மகாசபா என்ற அமைப்பு இருந்தது.

நாளாவட்டத்தில் முற்பாேக்கான, தேசிய மற்றும் சோசலிசக் கருத்துக்களைக் கொண்ட சக்திகள் தெலுங்கானாவில் தோற்றம் எடுத்தன.

மாணவர்களிடமிருந்து தோன்றி எழுந்த புரட்சிகர சக்திகள் அவர்களாேடு இணைந்தனர்.

இதன் விளைவாகத் தொடக்க கால கம்யூனிஸ்ட் கிளைகள் தோன்றி எழுந்ததாேடு நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கின.
கட்சியின் மீது தடை இருந்த போதிலும், கடுமையான அடக்குமுறைச் சூழல்களுக்கு இடையிலும் கம்யூனிஸ்ட்டுகள் மக்கள் திரள் அமைப்புகள் மூலம் தங்கள் பணிகளை நடைமுறைப்படுத்தினர்.

அவர்கள் போர்க்குணமுள்ள ஒரு தொழிலாளர் இயக்கத்தினைக் கட்டியமைத்தனர்.

பல எல்லைகளுக்கு உட்பட்டு ஏற்கனவே பணியாற்றி வந்த ஆந்திர மகாசபாவின் மூலமாக விவசாயிகளிடையே வேலை செய்யத் தீர்மானித்தனர்.

அப்பாேது இந்த அமைப்பு வெறுமனே சட்டங்களை நிறைவேற்றக் கோரிக்கை விடுவது மற்றும் தெலுங்கு மொழியை வளரச் செய்வதற்கான வாய்ப்புகளை அளிக்கக் கோருவது போன்றவற்றுக்காகத் தீர்மானம் நிறைவேற்றி வேண்டுகாேள் விடுகின்ற நிலையிலேயே இருந்தது.

இந்த அமைப்பினது ஆண்டு மாநாடுகள் மூலம் முற்பாேக்குச் சக்திகளை இந்த அமைப்பு அணிதிரட்டத் தொடங்கியது.

இதனுடைய சீர்திருத்தவாத வலதுசாரி திசைவழியினாலும் இந்த அமைப்புப் பணிகளை ஆற்றுவதில் தனக்கே உரிய எல்லைகளுக்கு உட்பட்டிருந்தாலும் இவ்வமைப்பினால் தனது நோக்கங்களைப் பரந்துபட்ட மக்கள் திரளிடம் எடுத்துச் செல்ல முடியவில்லை.

கம்யூனிஸ்ட் கட்சி மாணவர்களையும், இளைஞர்களையும் திரட்டியதன் மூலம் அரசியல் நடவடிக்கைகளை விரிவுபடுத்தியது.

மேலும் செயல் வீரர்களை ஆந்திர மகா சபாவில் சேரச் செய்து ஆக்கப்பூர்வமான முறையில் பணியாற்றியது.

கம்யூனிஸ்ட்டுகள் ஆந்திர மகா சபாவில் சேர்ந்து செயல்படத் தொடங்கியதிலிருந்தே அதன் சுற்றுவட்டம், ஆழம், பொறுப்புணர்வு ஆகியவை வளர்ச்சியடைந்தன.

அதனுள் சீர்திருத்த வாதத்திற்கும் புரட்சிகர கருத்தியலுக்கும் இடையில் அதாவது காந்தியத்திற்கும் மார்க்சியத்திற்கும் இடையில் ஒரு தீவிரமான சித்தாந்த போராட்டம் நடைபெற்றது.

1944-ம் ஆண்டில் நிலப்பிரபுத்துவ பிற்பாேக்காளர்களுக்கும் முற்பாேக்கான விவசாயப் புரட்சிகர சக்திகளுக்கும் இடையில் ஒரு உறுதியான எல்லைக் கோடு வரையப்பட்டது.

மக்கள் கொத்தடிமை ஒழிப்பு (வெட்டி வேலை) குத்தகை முறை ஆகிய பிரச்சனைகள் மீதான மக்கள் திரள் போராட்டங்களில் விரிவான முறையில் அணிதிரட்டப்பட்டனர்.

ஒடுக்குமுறை நிலப்பிரபுக்களை எதிர்த்த போராட்டங்களை நடத்திய போது கூட்டங்களை நடத்துவது, ஊர்வலங்களை நடத்துவது போன்ற அவர்களின் விவசாயிகளின் அணிதிரட்டல்கள் மீது தாக்குதல்களை நடத்தியதால் அந்தப் போராட்டங்கள் இன்னமும் போர்க்குணமுள்ள வடிவங்களை எடுத்தன.
இந்தப் போக்கினூடே மக்கள் நிலம் பற்றிய பிரச்சனையை சங்கத்தின் முன்னாலும் கட்சியின் முன்னாலும் கொண்டு வந்தனர்.

மக்கள் திரளினர் நிலப்பிரபுக்களால் பறிமுதல் செய்யப்பட்ட தங்கள் நிலங்களைத் திரும்பவும் பறித்துக் கொள்வதில் ஆர்வமுடையோராகவும், விருப்பமுடையோராகவும் இருந்தனர்.

மக்கள் தங்களுக்கென சொந்தமான ஒன்றுபட்ட அமைப்புரீதியான பலத்தின் மீது இத்தகைய அளவிலான நம்பிக்கயை அடையப் பெற்றிருந்தனர்.

இவ்வாறு குறுகிய காலத்திற்குள்ளேயே பிரச்சனை முன்னுக்கு வந்த நிலையில் கட்சித் தலைமை இந்தச் சூழலை எதிரிடுவதற்கு முழுமையாகத் தயாரற்ற நிலையே அந்த நேரத்தில் இருந்தது.

அதனால் தெட்டத் தெளிவான ஒரு திட்டத்தை முன் வைக்க முடியவில்லை.

இதனை அடுத்து கம்யூனிஸ்ட் கட்சி மக்களிடையே அரசியல் உணர்வை வளர்த்தெடுப்பதில் தன்ன ஈடுபடுத்திக் கொண்டு அவர்களை ஐக்கியப்பட்ட- அமைப்பாக்கப்பட்ட சக்தியாகத் தயார்படுத்தத் தொடங்கியது.

கட்சி ஆயுதங்களை எடுக்குமாறு மக்களிடம் கோரவில்லை.

கட்சி ஆயுதக் குழுக்களை அமைக்கவும் இல்லை.

இருந்தும் மக்கள் தங்களுக்கே சொந்தமான நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு அரசியல் உணர்விலும், அமைப்பினது பலத்திலும் உறுதியாகச் சார்ந்து நின்று முன்னாேக்கி நடைபோட்டனர்.

நிலப்பிரபுக்களால் சட்ட விராேதமாகக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களைப் பறிமுதல் செய்யும் மட்டத்தை மக்களின் உணர்வு அடைந்தது.

சட்டபூர்வமான வரம்புகளைக் கடந்து புரட்சிகர வழிமுறைகளைச் செயல்படுத்தும் அளவிற்கு உணர்வு பூர்வமானவர்களாக மக்கள் ஆயினர்.

இருப்பினும் ஒரு அடிகூட முன்னேறிச் செல்வதற்கான தயார் நிலையில் கட்சி இன்னமும் இருக்கவில்லை.

அதாவது வளர்ச்சியின் போக்குக் கோருமளவிற்கான புரட்சிகரமான நடவடிக்கைகளை மேற்காெள்வதற்கான தயார் நிலையில் கட்சி இருக்கவில்லை.

              …………தொடரும்…..

முதல் பதிப்பின் முன்னுரை:-

இந்த ஆண்டு தெலுங்கானா விவசாயிகளின் ஆயுதமேந்திய போராட்டத்தின் 50வது ஆண்டாகும். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) ன் மைய அமைப்புக்குழு 50ம் ஆண்டு விழாவை சிறப்புறக் கொண்டாட அறைகூவல் விடுத்துள்ளது.இந்தப் பின்னணியில்தான்  இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

தெலுங்கானா விவசாயிகளின் ஆயுதப் போராட்டத்திற்குத் தலைமை ஏற்று நடத்திய தலைவர்கள் எழுதிய புத்தகங்களும், கட்டுரைகளும் இந்தக் கட்டுரையைத் தயாரிக்க பெரிதும் உதவின.
இந்தப் போராட்டம் தொடர்பான எண்ணற்ற விவாதத்திற்கு இடமான விடயங்கள் குறித்து ஆய்வு மேற்காெள்ளும் முயற்சியில் இக்கட்டுரை ஈடுபடவில்லை. இந்தப் போராட்டத்தின் வளர்ச்சிப் போக்கு, இந்தப் போக்கினூடே நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்கள், அவற்றின் சாதனைகள் ஆகியவற்றை விவரிப்பதாேடு இக்கட்டுரை தன்னை எல்லைக்குட்படுத்திக் கொள்கிறது.

ஆரம்பம் முதல் இறுதி வரையிலான கட்சியின் பாத்திரம், இயக்கத்தைக் கட்டியமைக்கப் பின்பற்றப்பட்ட அமைப்புரீதியான வழிமுறைகள் இவற்றால் பெறப்பட்ட அனுபவங்கள் ஆகியவை இக்கட்டுரையில் சுருக்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
தெலுங்கானா ஆயுதப் போராட்டம் என்பது வளமான அனுபவங்களின் மூலாதாரமாகும். இதன்மீது கொஞ்சம் வெளிச்சத்தைப் பாய்ச்சத் தைரியம் தேவைப்படுகிறது.

இந்தப் போராட்டத்தை நேரடியாகத் தலைமை ஏற்று நடத்திய உயர்நிலை தலைவர்கள் எழுதிய பல புத்தகங்கள், கட்டுரைகள் ஆகியவையும், அதுபாேன்றே மாவட்ட அளவிலான தலைவர்கள் எழுதியவையும் புரட்சியாளரின் இன்றைய தலைமுறையினர் இக்கடமையை நிறைவேற்றி முடித்தாக வேண்டும்.
இந்தக் கடமையை எழுதுவதற்கு தோழர் டி.வி.ராவ் எழுதிய பல கட்டுரைகள் மற்றும் அவரது புத்தகமான தெலுங்கானா மக்களின் ஆயுதமேந்தியப் போராட்டத்தின் வரலாறு, விசால ஆந்திரா இதழில் தோழர்.சந்திரராஜேஸ்வரராவ் தோழர் ரவிநாராயண ரெட்டி ஆகியாேர் எழுதிய கட்டுரைகள், தோழர்.பி.சுந்தரையா எழுதிய வரலாற்றுச் சிறப்புமிக்க தெலுங்கானாப் புரட்சிகரப் போராட்டமும் அதன் படிப்பினைகளும் என்ற புத்தகம் ஆகியவற்றிலிருந்து தகவல்கள் எடுத்தாளப்பட்டுள்ளன.

                  #தோழர்_விஸ்வம்

தேசியச் சூழல்

இந்த காலகட்டமானது ஏகாதிபத்திய  நிதி நிறுவனங்கள் கட்டளையிட்ட கொள்கைகளை தடையற்ற முறையில் நடைமுறைப் படுத்தியதற்கும், மக்களுடன் கலந்துரையாடி எடுக்கப்படும் ஜனநாயக நடவடிக்கைகள் என்பதாகச் சொல்லி மக்களை வஞ்சித்ததற்கும் சான்றாக அமைந்த காலகட்டமாகும்.

இந்தியா உலகில் சக்தி வாய்ந்த நாடாக ஆகிக்காெண்டிருக்கிறது என்றெல்லாம் பொய்யுரைகளை துணிந்து கூறிக்காெண்டு அரசியல் இராணுவம் ஆகிய இரண்டு வழிகளிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்குச் சரணடைந்ததற்கு சாட்சியமாக அமைந்த காலகட்டமாகும்.

பன்னாட்டு நிறுவனங்கள் தேசிய வளங்களைச் சூறையாடியதற்கும் இந்தியப் பெரு முதலாளிகள் அதிகார வர்க்க மூலதனத்தை பெருந்திரளாகக் குவித்துக் கொண்டதற்கும் சாட்சியாக அமைந்த காலகட்டமாகும்.

உழைக்கும் மக்கள் திரளினரின் வாழ்க்கை மற்றும் வேலைச் சூழல்கள் மேலும் சீரழிந்ததற்கும் மக்களின் எல்லாவிதமான குடிமை மற்றும் ஜனநாயக உரிமைகள் நிரந்தரமாக பறிக்கப்பட்டதற்கும் சான்று பகர்கிற காலகட்டமாகும், ஆளும் வர்க்கங்களின் சுரண்டலும் ஒடுக்குமுறையும் தீவிரமடைந்ததையும், இதற்கு எதிரான மக்களின் எதிர்ப்பையும் இக்காலகட்டத்தில் காணமுடிகிறது.

விவசாய நெருக்கடி
நெருக்கடியை விரைவுபடுத்தும் கொள்கைகள் தொடர்ந்து நடைமுறபை் படுத்தப்படுவதால் விவசாயப் பொருளாதாரத்தின் நெருக்கடி தொடர்கிறது. இந்தக் காலகட்டத்தில் விவசாயத் துறையின் வளர்ச்சி விகிதம் 1.5 சதமாக தணிந்து காணப்பட்டது.
விளைச்சலின் வளர்ச்சி விகிதமாே 1.5 சதமாக மந்த நிலையில் இருந்தது.

ஏழை மற்றும் மத்தியத்தர விவசாயிகளின் கடும் உழைப்பினால் விளைந்த பலன்கள் பன்னாட்டு நிறுவனங்களாலும் (MNC) பெரு வணிகத்தாலும் அபகரிக்கப்பட்டாலும், அவர்களின் உழைப்பின் விளைவாக பசுமைப் புரட்சியின் போது வளர்ச்சியின் விகிதம் 3 சதத்திற்குச் சற்று அதிகமாக உயர்ந்த மட்டத்தை அடைந்தது.

பசுமைப் புரட்சியின் காலகட்டத்தில் புதிய பொருளாதாரக் கொள்கையின் கீழ் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட ஆதரவுகள் படிப்படியாகத் திரும்ப பெறப்பட்டன, இதனால் விவசாயத்தைத் தொடர்வதற்கான இடுபொருட்களின் விலைகள் மிகவும் உயர்ந்தன.

இந்த விலை உயர்வு விவசாயிகளை கொடிய கந்து வட்டிக்காரர்களின் பிடியினுள் சிக்கவைத்தது. அதுவும் நிறுவன ரீதியான கடன் கிடைக்காமல் தடுக்கப்பட்டபோது இந்தச் சூழல் மேலும் தீவிரமடைந்தது.

உலக வர்த்தகக் கழகத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதால் இந்த கால கட்டத்தில் விவசாய உற்பத்திப் பொருட்களை இழப்பை ஏற்படுத்தும் விலைக்கு விற்க நேரிட்டது. இதனால் ஏழை நடுத்தர விவசாயிகள் மட்டுமல்லாமல் பணக்கார விவசாயிகளும் பாதிப்புக்கு ஆளாயினர்.

மானியங்களை திரும்பப் பெற்றதால் இடுபாெருட்களின் விலை உயர்ந்ததும், விளைபொருட்களுக்கு நியாயமான விலை மறுக்கப்பட்டதும், விவசாயிகளைக் கடன் வாங்க நிர்பந்தித்தது.

விவசாயம் பற்றிய நரசிம்மன் குழுவினது பரிந்துரையை ஏற்று அட்டவணை வங்கிகள் விவசாயத்திற்கு வழங்கி வந்த கடனின் பங்கு குறைக்கப்பட்டது.

இவ்வாறாக ஏழை விவசாயிகள் நிறுவனரீதியான கடன்களைப் பெற முடியாதபடி தடுக்கப்பட்டனர். இதனால் விவசாயிகளின் கடன் 48.7 சதம் என்ற அளவுக்கு உயர்ந்தது.

ஆந்திர பிரதேசத்தில் மிக அதிகமாக இது 82 சதமாகும். இதைத் தொடர்ந்து விவசாயிகளின் கடன் தமிழகத்தில் 74 சதமாகும், பஞ்சாப்பில் 65 சதமும், கர்நாடகத்தில் 61 சதமும், மகாராட்டிரத்தில் 50 சதமும் ஆகும்.

விவசாயத்தில் ஏற்படும் சிறிய அளவிலான தீங்கு விளைவிக்கக் கூடிய சூழல்கூட விவசாயிகளைத் தற்காெலை செய்து கொள்வதை நோக்கி விரட்டுகிறது.

முன்னர் விவசாயிகள் தற்காெலை செய்து கொள்ளும் மாநிலங்களாக அறியப்பட்ட ஆந்திரம், கர்நாடகம், மகாராட்டிரம், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களாேடு தற்பாேது பீகார், உத்திரப்பிரதேசம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களும் இணைந்து கொண்டதால் இப்பாேது இப்பட்டியல் நீள்கிறது.

இன்றைய கிராமப்புற இந்தியாவானது அச்சமூட்டும் அனுபவங்களை தருவதாக உள்ளது. விவசாயிகள் திவாலாக்கப்பட்டதால் நடுத்தர விவசாயிகள் ஏழை விவசாயிகளாகவும், பின்னர் நிலமற்ற விவசாயிகளாகவும் படிநிலையில் கீழ்நிலைப்படுத்தப்பட்டனர்.

மேலும் நிலமற்றாேர் எண்ணிக்கை அதிகரித்ததாேடு, குத்தகைக்கு விவசாயம் செய்வாேர், பங்கு பெற்றுப் பயிரிடுவாேர், கூலிக்கு விவசாயம் செய்வாேர் ஆகியாேர் எண்ணிக்கை பெருமளவுக்கு அதிகரித்தது.

அரசு நிலங்களைக் கைப்பற்றி இந்திய, வெளிநாட்டு முதலாளிகளுக்கு தாரை வார்த்தது, கிராமப்புற இந்தியாவில் நிலமற்ற விவசாயக் குடும்பங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்தது.

போதுமான அளவிற்கு முதலீடு செய்வதற்கான மூலதனம் இல்லாததே நெருக்கடிக்குக் காரணம் என்று இந்திய ஆளும் வர்க்கத்தினர் சித்தரிக்கின்றனர்.

இவ்வாறுக் கூறிக்காெண்டு விவசாயத்தில் அரசின் பொது முதலீட்டைக் குறைத்தனர். அதே சமயம் தனியார் மூலதனத்தின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் உள்கட்டுமான வசதிகளை உருவாக்குவதற்கு பொதுநிதியை ஒதுக்கீடு செய்வதை அதிகரித்து வருகின்றனர்.

விவசாய உற்பத்திப் பொருட்களை சந்தைப் படுத்துவதற்கான முற்றங்களை (APYMS) தனியார் மயமாக்குவதை அனுமதித்தது. தனியார் துறையில் இதுபாேன்ற முற்றங்களை அமைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
குளிர்ச்சியூட்டப்பட்ட சேமிப்புக் கிடங்குகளை அமைக்க நிதியுதவி அளிக்கப்பட்டது.

இந்திய உணவுக் கழகத்தின் (FCI) சேமித்து வைப்பதற்கான பரப்புகள் குத்தகைக்கு விடப்பட்டன. இவ்வாறாக இந்திய ஆளும் வர்க்கங்கள் இந்த காலகட்டத்தில் ஒப்பந்தமுறை அல்லது கார்ப்பாெரேட் பண்ணை முறை என்ற வடிவத்தில் மூலதனத்தைக் கொண்டு விவசாயிகளை மாற்றியமைத்து அந்த இடத்தை இட்டு நிரப்பும் திட்டத்தை நடைமுறைப்படுத்தினர்.

தனியார் மூலதனத்தை (பன்னாட்டு நிறுவனங்களின் மூலதனத்தை) வளர்வதற்கு உதவிகரமாக பல நடவடிக்கைகளை அரசு மேற்காெண்டது. பங்கே(BUNGE) கார்கில்(CARGIL) மற்றும் பிற பன்னாட்டு நிறுவனங்கள் உணவுதாணியச் சந்தையில் நுழைவதற்கும் விவசாய உற்பத்தி பொருட்களை ஊக வாணிபத்தில் ஈடுபடுத்துவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டது.

கரும்புக்கு விலை நிர்ணயிப்பதில் ரங்கராஜன் குழுவின் அறிக்கை நடைமுறைப் படுத்தப்பட்டது. இந்த நடவடிக்கை விவசாயிகளின் நலன்களை காவு கொடுத்து சர்க்கரை ஆலை முதலாளிகளுக்குச் சாதகமாக அமைந்தது.

அரசு மரபணு மாற்று விதைகள் பயன்பாட்டை ஊக்குவித்து வளர்த்தது. குறிப்பாக மரபணு மாற்றப் பருத்தியை (BT COTTON) உற்பத்தியை அதிகரிப்பதற்கான ஒரு முன்மாதிரியைக் காட்டி இன்னும் பல தானியங்களிலும் மரபணு மாற்று விதைகளை அனுமதிக்கத் திட்டமிட்டனர்.

பல்வேறு மக்கட் பிரிவினரிடமிருந்து எதிர்ப்பு வலுத்த போது சுற்றுச்சூழல் அமைச்சகம் இந்த முடிவைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

மக்களின் கருத்தை த் திரட்டுவது என்ற பெயரில் பல மாநிலங்களில் கூட்டங்களை நடத்தித் தங்களின் திட்டத்தை நிறைவேற்றக் கடுமையாக முயன்றனர்.

இதற்கிடையில் மரபணு உறுப்பமைவு அனுமதிக் குழுவின் (GOAC) நேர்மையான உறுப்பினர்களை வெளியேற்றிவிட்டு இந்த அமைப்பை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர். அதன்பின் எவ்வித ஆரவாரமுமின்றி “கள ஆய்வு” என்ற பெயரில் பன்னாட்டுப் பெரு நிறுவனங்கள் மரபணு மாற்று விதைகளை உற்பத்தி செய்வதற்கு அனுமதியளித்துள்ளனர்.

முந்தய ஐக்கிய முற்பாேக்குக் கூட்டணி அரசு விட்ட இடத்தில் தொடங்கி “சீர்திருத்த நடவடிக்கைகள்” என்ற பெயரில் மோடியின் அரசு சீர்திருத்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறது.
2013-ம் ஆண்டு நிலக் கையகப் படுத்தும் சட்டத்திற்கு திருத்தங்கள் கொண்டு வரும் வகையில் சட்ட வரைவு ஒன்றை கொண்டு வந்தது.

இந்த சட்ட வரைவானது பொதுமக்கள் நலன்களுக்கு என்ற பெயரில் மட்டுமின்றி அதற்கு இணையாக பொதுமக்கள் தனியார் பங்கேற்பு என்ற விளக்கமேதுமற்ற சொல்லாடலை பயன்படுத்தி விவசாயிகளின் நிலத்தைக் கையகப்படுத்துவதற்கான அதிகாரத்தை அரசாங்கத்திற்கு விரிவுபடுத்துகிறது, நிலங்களைக் கையகப்படுத்துவதால் பாதிக்கப்படும் விவசாயிகளின் எண்ணிக்கை எவ்வளவு, நிலவுடமையாளர்களைத் தவிர எத்தனை பேருக்கு நட்ட ஈடு வழங்க வேண்டும் என்பன போன்றவற்றை கண்டறிவதற்கான சமூக பாதிப்புகளை கண்டறிவதற்கான சட்டப் பிரிவை முற்றிலுமாக அகற்றிவிட்டது.

நிலத்தைக் கையகப்படுத்தும் போது நிலவும் சந்தை விலையை விட நான்கு மடங்குக்கு நட்டஈடு வழங்கப்படும் என்பதாகக் கூறிக்காெண்டு முந்தைய காங்கிரஸ் அரசாங்கம் மக்கள் மீது நடத்திய அதே வஞ்சகமான விளையாட்டைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. ஆனால் உண்மையில் விற்பனைப் பத்திரம் பதிவு செய்யப்படும் போதான விலையை விட இரண்டு மடங்கு விலை மட்டுமே இச்சட்ட வரைவின்படி விவசாயிகளுக்குக் கிடைக்கும்.

உண்மையில் விவசாயிகள் தற்காெலை செய்து கொள்வதற்கான உண்மையான காரணங்களைக் கண்டறிந்து அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதிலாக தற்காெலை செய்து கொள்ளும் குத்தகை விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கையைச் சேர்க்காமல் தற்காெலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கையை அரசாங்கம் குறைத்துக் காட்டுகிறது.

இந்த அரசால் எடுக்கப்பட்ட ஒவ்வாெரு நடவடிக்கையும் விவசாயிகளை துன்ப துயரங்களிலிருந்து மீட்பதற்காகவே என ஆடம்பரமாக கூறப்பட்டாலும் உண்மையில் கார்ப்பாெரேட் மற்றும் ஒப்பந்த பண்ணை முறைக்காக விவசாயிகளை நிலத்திலிருந்து அந்நியமாக்குவதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளே இவை.

இவ்வாறாக பெரிய நிலப்பிரபுக்கள், பெரும் முதலாளிகள் மற்றும் ஏகாதிபத்தியம் ஆகியவற்றின் கூட்டணியானது சுரண்டலுக்கான வடிவமான நிலப்பிரபுத்துவம் மற்றும் அதே போன்று முதலாளித்துவச் சந்தை ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொண்டு உபரி உழைப்பை உறிஞ்சுவதன் மூலம் விவசாயிகளை துன்பதுயரங்களில் ஆழ்த்தியும் திவாலாக்கியும் தற்காெலையை நோக்கி துரத்தியும் வருகின்றது.

தொழிற்துறையில் தேக்கம்

தற்பாேதைய கட்டத்தின் முதன்மையான அம்சம் புதிய தொழிற்சாலைகளை துவக்குவது அல்ல, மாறாக அந்நிய மூலதனத்தால் இருப்பில் உள்ள தொழிற்சாலைகளை கையகப்படுத்துவது, பெரும்பான்மை பங்குகளை வாங்குவதன் மூலம் தொழிற்சாலைகளைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது, தொழிற்சாலைகளை ஒன்றிணைப்பது ஆகியவையே ஆகும்.

வளர்ச்சி விகிதம் மிக விரைவிலேயே இரட்டை இலக்கு என்ற மட்டத்தை அடையும் என்று ஐக்கிய முற்பாேக்கு அரசு வெற்று ஆரவாரத்துடன் கூறிய போதிலும் இன்றை ய கட்டத்தில் வளர்ச்சி விகிதம் 6 அல்லது 7 சதமாக மட்டுமே உள்ளது, உற்பத்தித்துறை வேகமாக வீழ்ச்சியுற்று வருவது என்பது இதன் இன்னாெரு அம்சமாகும்

2008-ம் ஆண்டில் ஏற்பட்ட உலக முதலாளித்துவ நெருக்கடி இந்தியப் பொருளாதாரத்தின் மீது தனது தாக்கத்தைக் கொண்டுள்ளது. இதன் உடனடியான தாக்கத்தை தகவல் தொழில் நுட்பம்(IT), தகவல் தொழில் நுட்பம் சார்ந்த தொழில்துறை (ITES) ஆகிய துறைகளில் காண முடிந்தது.

ஏனெனில் இத்துறைகள் அனுப்பாணைகளைப் பெறுவதில் (ORDER) பெரிதும் அமெரிக்கா, ஐராேப்பா ஆகிய நாடுகளை நம்பியே உள்ளன. இத்துறை இப்பாேது தனது பிரகாசத்தை இழந்துள்ளது. சராசரி சமபல விகிதம் 50 சதமாகக் குறைந்துள்ளது. ஏறத்தாழ 30 சதவீத ஊழியர்கள் தங்களின் வேலையை இழந்துள்ளனர்.

ஏகாதிபத்தியப் பொருளாதாரங்கள் நெருக்கடி என்ற புதை சேற்றில் சிக்கியுள்ளதால், இந்திய ஏற்றுமதியின் மூலம் கிடைத்த வருமானங்களில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இது அந்நியச் செலாவனியைச் செலுத்தும் சூழலில் மூலதனக் கணக்கில் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் வட்டி விகிதத்தை தீவிரமாகக் குறைத்துள்ளதால் இந்தியப் பெரும் முதலாளிகள் பெரிய அளவில் கடன் வாங்கியுள்ளனர்.

இந்திய அரசு டாலர் கடன் பத்திரங்களில் முதலீடு செய்துள்ளது. இதன் விளைவாக அந்நியச் செலாவணியைச் செலுத்தும் சூழல் தற்பாேது சாதகமாக இருப்பதாகத் தோன்றினாலும் வெளித் தெரியாதிருந்த கட்டமைப்புப் பலவீனங்கள் பொருளாதாரத்தின் மீது அழிவை ஏற்படுத்தின.

ரூபாயின் மதிப்பு பலவீனமடைந்ததானது இந்தியா தனது உற்பத்திப் பொருட்களை மிகவும் மலிவான விலைக்கு ஏற்றுமதி செய்ய வேண்டியதாயிற்று, வரலாறு காணாத அளவில் உச்சமடைந்திருந்த விலையில் சுத்திகரிக்கப்படாத எண்ணெயை (குரூட் ஆயில்) இறக்குமதி செய்வதற்கு பெருமளவிலான அந்நியச் செலாவணிச் சேமிப்பைச் செலவிட நேர்ந்தது.

பல பன்னாட்டு நிறுவனங்கள் (MNCS) சட்ட பூர்வமாகவும், சட்ட விராேதமாகவும் இந்தியப் பொருளாதாரத்தை உறிஞ்சிக் கொண்டன. இந்தப் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் கொள்ளையைச் சட்டபூர்வமாக்கிக் கொள்வதற்காக கையாண்ட சட்டவிராேத வழிமுறைகளை இந்திய அரசு கண்டு கொள்ளாமல் வெறும் பார்வையாளராக இருந்ததாேடு அவர்களின் கொள்ளைக்கு உடந்தையாளராக இருந்தது (உதாரணத்திற்கு நோக்கியா, ஏர்டெல் போன்ற பன்னாட்டுக் குழுமங்கள்) இலாபங்கள், கண்டுபிடிப்புக்கான உரிமைத் தொகை (ROYALTIES), அந்நிய மேலாளர்களுக்கான சம்பளம் என்ற வடிவங்களில் மூலதனம் வெளிநாேக்கி வழிந்தாேடுவது அந்நிய மூலதனம் உள்நாேக்கிப் பாய்வதைவிட விஞ்சி இருந்தது.

மேலும் அந்நிய மூலதனத்தின் அந்நிய நிறுவனரீதியான முதலீட்டின் உட்கூறுகள் (FII) பலமடங்கு அதிகரித்து அந்நிய உள்நாட்டு முதலீட்டின் (FDI) உட்கூறுகளை இரண்டாம் நிலைக்கு கீழ்நாேக்கித் தள்ளியது.

தற்பாேதைய காலகட்டத்தில் இந்தியாவிற்கு வந்த அந்நிய மூலதனம் புதிய தொழிற்சாலைகளைத் தொடங்குவதற்காக அல்லாமல் அதிக அளவுக்கு பங்கு மாற்று வணிகத்திற்கே (STOCK EXCHANGE) வந்தடைந்தன.

2G அலைக்கற்றை மற்றும் நிலக்கரிப்படுகைகள் ஆகியவற்றை ஒதுக்கீடு செய்வதில் நிகழ்ந்தது போலவே, எவ்வாறு நமது நாட்டின் இயற்கை மூலாதாரங்களைத் தங்கத் தட்டில் வைத்து ஏகாதிபத்திய முதலைகளுக்கு முற்பாேக்கு கூட்டணி அரசினால் வழங்கப்பட்டது போன்றவை வெளிச்சத்திற்கு வந்தன.

பல கோடி ரூபாய்களை உள்ளடக்கிய ஊழல்கள் நடந்தது ஒருபுறமிருக்க இயற்கை மூலாதாரங்களை எந்தவிதத் தடையுமின்றி சுதந்திரமாகச் சூறையாட அனுமதித்ததன் மூலம் இந்த நாட்டின் எதிர்காலமே விற்கப்பட்டுவிட்டது.

இந்தச் சக்திகள் இயற்கை மூலாதாரங்களை வலிமையாக கைப்பற்றிக்கொண்ட பிறகு இந்த சக்திகள் அதன் மீதான ஏகபாேகத்தைப் பயன்படுத்தி அரசாங்க கைகளைச் சுழற்றி வீசி இந்த இயற்கை மூலாதாரங்கள் எந்த மக்களுக்குச் சொந்தமானவையோ, அந்த மக்கள் மீதே கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாத அளவுக்கான விலைகளைத் திணிக்கின்றன.

பிரிட்டிஷ் பெட்ராேலியத்தின் சார்பில் அம்பாணி கோரியவுடன் இயற்கை எரிவாயுவின் விலையை 4 டாலரிலிருந்து ஒரு பிடியு விற்கு 18 டாலராக உயர்த்திய நிகழ்வு இதற்கு ஓர் உதாரணமாகும். முன்னாள் பிரதமர் இதனைச் சூறையாடும் முதலாளித்துவம் என அழைத்தார். ஆனால் உண்மையில் இது இந்தியப் பெரும் முதலாளித்துவத்தின் அடிப்படைப் பண்பாகிய அதிகார வர்க்க முதலாளித்துவமே.

முதலில் வந்த குழுமத்திற்கு முதலாவது வாய்ப்பு, என்ற அடிப்படையில் 2ஜி அலைக்கற்றை நிலக்கரிப் படுகைகள் ஒதுக்கீடு செய்ததைத் தொடர்ந்து நடந்த ஊழல்களைக் கடுமையாக விமர்சித்த பாஜக அப்பாேது முழுமையான வெளிப்படைத் தன்மையுடன் வாங்க ஏலம் மூலம் இயற்கை மூலாதாரங்கள் ஒதுக்கீடு செய்யப்படுமெனக் கூறியது.

ஆனால் மையத்தில் ஆட்சிக்கு வந்த பின்னர் சுரங்கங்கள் மற்றும் கனிம வளங்களுக்கான சட்டத்தில் முன்னர் ஒதுக்கீடு செய்த நிலக்கரிப் படுகைகளின் ஒதுக்கீடு எந்தவித இடையூறுமின்றி அப்படியே தொடரும் எனச்சட்டதிருத்தம் கொண்டு வந்தது. இந்தச் சட்டத்திருத்தம் மாநில அரசுகளுக்குத் தங்களின் கனிம மூலாதாரங்களை விற்பனை செய்ய வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது.

மோடி உற்பத்தித் துறையை மீண்டும் உயிர் பெற்றெழச் செய்ய ஐக்கிய முற்பாேக்குக் கூட்டணி அரசுக்கு ஏற்பட்ட தோல்விக்காக அதனை க் கடுமயாகச் சாடினார். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவதற்காக இத்துறைக்கு தனது சக்தியாற்றல் முழுவதையும் செலுத்தும் என உறுதியளித்தார்.

மோடி பிரதமரானவுடன் “மேக் இன் இந்தியா” (இந்தியாவில் உற்பத்தி செய்வாேம்) என்ற அறைகூவலை விடுத்தார்.அவர் எந்த நாட்டிற்குச் சென்றாலும் அங்கெல்லாம் அந்நிய மூலதனத்திடம் “எங்கள் நாட்டிற்கு வாருங்கள், உற்பத்திக்கான தொழிற்சாலைகளை உருவாக்குங்கள், உற்பத்திப் பொருள்களை ஏற்றுமதி செய்து கொள்ளுங்கள், லாபத்தைக் குவித்துக் கொள்ளுங்கள்” என்று வேண்டிக் கொண்டார்.

அவர்களுக்கு எதுவெல்லாம் தேவையோ அவற்றையெல்லாம் உடனடியாகச் செய்து தருவாேம், தொழிலாளர்களின் எல்லா உரிமைகளையும் பறிக்கும் வகையிலும், முதலாளிகள் விருப்பம் போல் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தவும், வேலையிலிருந்து விரட்டவும், வசதிகளை ஏற்படுத்தித் தரவும் ஏற்ற வகையில் தொழிலாளர் சட்டங்களில் திருத்தம் செய்வாேம் என்றெல்லாம் திரும்பத் திரும்ப வாக்குறுதியளித்தார்.

“இந்தியாவில் உருவாக்குவது” என்ற கொள்கையின் ஒரு பகுதியாக இராணுவ உற்பத்தித் துறையின் வாசலை அந்நிய மூலதனத்திற்குத் திறந்து விட்டார். இந்தியா 70 சதம் ஆயுதங்களையும், இராணுவத் தளவாடங்களையும் இந்தியா இறக்குமதி செய்து வருவதால் அந்நிய ஆயுத உற்பத்தியாளர்கள் இங்கு உற்பத்திக்கான தொழிற்சாலைகளை அமைத்தால் இந்தியாவால் அந்நியச் செலாவனியைச் சேமிக்க முடியும், இதன் மூலம் வேலை வாய்ப்பை உருவாக்க முடியும் என்றெல்லாம் வாதிட்டார்.

இந்த வாதம் திசை திருப்பக்கூடிய வாதமாகும். ஏனெனில் நடை முறையில் இவைகள் தனித்தனியாக உதிரி பாகங்களை ஒன்றிணைக்கும் தொழிற்ச்சாலைகளாகத்தான் இருக்கும். உதாரணத்திற்கு பாஃஸ்கான் தொழிற்சாலை இந்தியாவில் இருந்த தனது கிளைகளை மூடியதன் மூலம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை வேலையிலிருந்து தூக்கி எறிந்தது.

இப்பாேது அதே நிறுவனம் ஆந்திராவில் ஒரு தொழிற்சாலையைத் தொடங்குகிறது. இங்கும் கைபேசிகளின் உதிரி பாகங்களை ஒன்றிணைக்கும் அதே பணிதான் நடைபெற இருக்கிறது.
“மேக் இன் இந்தியா” என்பது இந்தியாவின் உற்பத்தித்துறையை அந்நிய மூலதனத்தின் தொங்கு சதையாக மாற்றிவிடும். இந்நிறுவனங்கள் நிலம், நீர், மின்சாரம், கனிமங்கள், மலிவான உழைப்பு எல்லாவற்றையும் பயன்படுத்திக் கொண்டு லாபத்தை அயல்நாடுகளில் உள்ள தங்கள் தாய் நிறுவனங்களுக்குக் கடத்திவிடும்.

வேலை இன்மையும், வறுமையும்

மிகவும் தம்பட்டம் அடிக்கப்பட்ட பொருளாதார வளர்ச்சி எந்த வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தவில்லை. தற்பாேதையக் கால கட்டத்தில் ஏறத்தாழ 15 பில்லியன் மககள் வேலை தேடி கிராமங்களிலிருந்து நகரங்களை நோக்கி புலம் பெயர்ந்துள்ளனர்.

இவர்கள் உற்பத்தித் துறையில் வேலையில் அமர்த்திக் கொள்ளப்படவில்லை. இவர்கள் எந்த வேலைப் பாதுகாப்புமின்றி தினக் கூலிகளாய் மிகக் குறைந்த கூலியில் வாழ்க்கையை நடத்துகின்றனர்.

இவர்கள் ஒப்பந்க் கூலிமுறை, வெளியார்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ளல் போன்ற முறை சாரா வேலைகளில் அமர்த்துவது என்பது பொதுத்துறைத் தொழிற்சாலைகளிலும் கூட அதிகரித்து வருகிறது.

பெரு விகித உற்பத்திக்கான வசதிகளைக் கொண்டுள்ள இந்த பன்னாட்டு நிறுவனங்கள் நோடியா மனேசர், திருப்பெரும்புதூர், ஓசூர் போன்ற இடங்களில் தொழிலாளர் சேரிகளை உருவாக்கியுள்ளன.

தொழிலாளர்களின் உரிமைகளும் தொழிற்சங்கங்களை அமைப்பதும் கூட இங்கு அப்பட்டமாக மறுக்கப்படுகிறது. அரசியல் தலைமையும், அரசு இயந்திரமும் பனனாட்டு நிறுவனங்களைச் சார்ந்து நின்று மாருி சுசுகி தொழிலாளர்கள் மீது ஏவப்பட்டதைப் போன்ற மிருகத்தனமான தாக்குதல்களை தொழிலாளர்கள் மீது ஏவி வருகின்றன.

வறுமை மேலும் மேலும் அதிகமான மக்களைப் பற்றிப் படர்ந்து வருகிறது. அரிண்டம்சென் (ARINDAMSEN) என்பவர் 70 சதவீத மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்கிறார்கள் என்பதை கண்டறிந்து கூறியபின், ஐக்கிய முற்பாேக்குக் கூட்டணி அரசு புள்ளிவிவரங்களில் தில்லுமுல்லுகளைச் செய்து தனது ஆட்சிக் காலத்தில் அதிக மக்கள் வறுமைக் கோட்டைத் தாண்டிவிட்டதாகக் காட்டியது.

இருந்தும் பல தேசிய, சர்வதேசிய முகமை அமைப்புகள் 40 முதல் 60 சதவீதம் இந்திய மக்கள் கொடும் வறுமையில் உழல்வதை எடுத்துக் காட்டியுள்ளனர்.

ஏறத்தாழ 60 சதவீத மக்கள் விவசாயத்தையே சார்ந்துள்ளனர். ஐக்கிய முற்பாேக்குக் கூட்டணி அரசு நடைமுறைப்படுத்திய கொள்கைகள் விவசாயத்தின் மூலம் பெறப்படும் வருமானத்தை அழித்துவிட்டன. அவர்களுக்கு மாற்று வேலைகளுக்கான எந்த வாய்ப்பும் இல்லை.

ஐக்கிய முற்பாேக்குக் கூட்டணி அரசாங்கம் வருமானத்தை உயர்த்துதல், கட்டமைப்பு மாற்றங்களைக் கொண்டுவருதல், நிலத்தை மறுவிநியாேகம் செய்தல், பிற துறைகளில் வேலை வாய்ப்பை உருவாக்குதல் போன்றவற்றுக்கான எந்த நடவடிக்கையையும் மேற்காெள்ளவில்லை.

இந்த மக்களுக்குக் கிடைத்த வேலை வாய்ப்புகள் என்பன துன்ப கால வேலை வாய்ப்புகளே. இன்றைய காலகட்டத்தில் கிராமங்களிலிருந்து நகரங்களுக்கும் ஏன் வெளிநாடுகளுக்கும் புலம் பெயர்வது என்பது முன்னர் அறிந்திராத மாவட்டங்களை நோக்கியெல்லாம் விரிவடைகிறது.

பாஜக அரசாங்கமும் இந்தக் கொள்கைகளைத் தொடர்கிறது. அரசுக் கொள்முதல் முகமைகளைத் திரும்பப் பெறுகிறது. விவசாய சந்தைக்கான தாழ்வாரங்களைத் தனியார் மயமாக்குகிறது.

படிப்படியாக விவசாயிகளுக்கான வங்கிக் கடன்களை விவசாய வர்த்தகத்தை நோக்கித் திருப்புகிறது. விவசாயிகளுக்கு அளித்துவந்த ஆதரவுகளைத் திசை திருப்புகிறது.

மோடி அரசாங்கம் சுகாதாரம், மருத்துவம், கல்வி, உணவுப் பாதுகாப்பு போன்ற சமுகநலத் திட்டங்களுக்கான ஒதுக்கீட்டை ரூ.1.75 லட்சம் கோடிகளாகக் குறைத்துள்ளது. அதே நேரத்தில் மோடியின் அரசாங்கம் பெரும் முதலாளிகளுக்கும், அந்நிய முதலாளிகளுக்கும் ஒவ்வாெரு ஆண்டிலும் கொடுக்கும் 5 லட்சம் கோடி ரூபாய்களுக்கான வரிச்சலுகையைத் தொடர்கிறது.

வளர்ந்து வரும் வறுமை, வேலையின்மை ஆகியவற்றின் தாக்கம் அடித்தட்டு உழைக்கும் மக்கள் மீதே உள்ளது. இவர்களிடையே மிகவும் மோசமான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளவர்கள் பழங்குடி மக்களே.

அவர்கள் வாழும் பகுதிகளிலிருந்து தூக்கியெறியப் படுகின்றனர். காடு, நிலம், நீர் போன்ற அவர்களின் வாழ்வாதாரங்கள் பறிக்கப்படுகின்றன.

வளர்ச்சிக்கான திட்டங்கள் என்பதாகச் சொல்லப்படும் ஒவ்வாெரு திட்டத்திற்கும் முதலில் தங்கள் வாழ்வையும் வாழ்வாதாரங்களையும் பலிகாெடுப்பவர்கள் பழங்குடி மக்கள்தான்.

பெண்கள்

இளம் பெண்களும், ஆண்களும் சாதிக்கு வெளியே திருமணம் செய்து கொண்டால் அவர்கள் துன்புறுத்தப்படுவதாேடு, கொலையும் செய்யப்படுகின்றனர்.

பல்வேறு வடிவங்களிலான பாகுபாடுகளாலும், ஒடுக்குமுறைகளாலும் பெண்கள் துன்பப்படுகின்றனர். பணியிடங்களில் உச்ச நிலையில் சுரண்டப்படுகின்றனர். வயல்களில் சமவேலைக்கு சமக்கூலி வழங்கப்படுவதில்லை, பெண்களுக்கு அதிகாரம் வழங்குவது என்ற பெயரில் அவர்கள் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் போன்ற வியர்வைக் கூடாரங்களில் அடிமைகள் போல உழைப்பில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

நுண்மட்டத்தில் வாழும் மக்களுக்கு கடன் வழங்கும் நிறுவனங்களால் இவர்களின் உதிரம் உறிஞ்சப்படுகிறது. இலாபத்தைப் பெறுவதற்கான சந்தை விரிவாக்கத்தின் ஒரு பகுதியாகத் தயார் நிலையில் உள்ள நவீனத் தொழில்நுட்பம் பெண்களின் மீதான சுமையைக் குறைப்பதற்குப் பதிலாக பெண் குழந்தைகளைக் கருப்பையிலேயே கொல்வது போன்ற ஆணாதிக்கக் கலாச்சாரத்தைத் தொடரச் செய்கிறது.

கிராமப் புறத்தில் நிலவும் பதட்டத்தால், தலித்துகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகளும், தாக்குதல்களும் அதிகரித்து வருகின்றன. விவசாய நெருக்கடி மோசமடைவதால் கிராமப்புற ஏழைகளில் பெரும்பான்மையினராக அமைந்துள்ள தலித்துகளின் மீதான அதன் பாதிப்பு அவர்களின் வாழ்க்கையைப் படுநாசமாக்குகிறது. தலித்துகளுக்கு அதிகாரம் வழங்குவது என்றெல்லாம் உரத்துப் பேசி வருகின்ற போதிலும் அவர்களின் வேலை வாய்ப்புகள் நிரந்தரமாகச் சுருங்கி வருவதால் நகரங்களை நோக்கிப் புலம் பெயர நிர்பந்திக்கப்பட்டு படுமாேசமான வாழ்க்கைச் சூழலில் அவர்கள் தள்ளப்படுகின்றனர்.

இருப்பில் உள்ள சமூக அமைப்பினால் மிகவும் மதிப்பு வாய்ந்த மானுட உற்பத்திக்கான உடமைகள் அழிக்கப்பட்டு வருகின்றன. நமது குழந்தைகளுக்கு அடிப்படையான கல்வி மறுக்கப்பட்டு வருகிறது.

உழைப்பைத் தீவிரமான சுரண்டலுக்கு ஆட்படுத்தி வரும் அதே நேரத்தில் இன்னாெரு பிரிவினர் பகுதியளவிலாே, முழுமையாகவாே வேலை ஏதுமற்றவர்களாக வைக்கப்பட்டுள்ளனர்.

உற்பத்தியை நிலை நிறுத்தவும் வளர்ச்சியடையச் செய்யவும் ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை அளிக்கப்படும் பயிற்சிகள் நமது நாட்டு மக்களின் தேவைகளை நிறைவு செய்வதற்குப் பதிலாக ஏகபாேகங்களின் சூறையாடலுக்குப் பொருத்தமான முறையில் மாற்றியமைக்கப்படுகின்றன.

பணக்கார நாடுகளால் மக்களுக்கு வழங்கப்படும் தொழில் நுட்பத்தில் சிறந்த நேர்த்தியான மருத்துவச் சேவைக்கு மருத்துவச் சுற்றுலா என்ற பெயரால் அரசாங்கத்தால் மானியம் வழங்கப்படுகிறது.

அதே நேரத்தில் கோடிக்கணக்கான மக்கள் குறிப்பாக கருவுற்ற பெண்களும், கைக்குழந்தைகளும் அடிப்படையான மருத்துவ சேவை இல்லாததால் எளிதில் குணப்படுத்தக் கூடிய நோய்களால் ஆண்டு தோறும் செத்து மடிகின்றனர். ஏழைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வது என்ற பெயரால் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் மருத்துவமும், சுகாதாரத்துறையும் தனியார்மயமாக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் பொதுமக்களின் நிதி ‘கார்ப்பாெரேட்’ மருத்துவமனைகளை நோக்கித் திருப்பிவிடப்பட்டு மருத்துவக் காப்பீட்டுத்திட்டம் வளர்த்தெடுக்கப்படுகிறது. மருத்துவக் காப்பீட்டுத் துறையை விழுங்குவதற்கு தங்களுக்குள் போட்டியிட்டுக் கொண்டிருக்கிற அந்நியக் காப்பீட்டுக்கழக பகாசூரர்களுக்கு இத்துறை லாபம் கொழிக்கும் துறையாக மாற்றப்பட்டுள்ளது.

அந்நியச் செலாவணியை சம்பாதித்துவிட வேண்டும் என்ற வெறியாேடு அந்நிய மருத்துவ உற்பத்திக் குழுமங்கள் தங்களின் மருந்துகளைப் பரிசீலித்துப் பார்ப்பதற்காக குனியா பன்றிகளாக ஏழை மக்களைப் பயன்படுத்தி வருவதற்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளது.

இவ்வாறு நடத்தப்படும் மருத்துவ ரீதியான பரிசாேதனைகளால் ஏழை மக்களுக்கு ஏற்படும் பாதகமான விளைவுகளைப் பற்றி அவர்கள் சிறிதும் கவலைப்படுவதில்லை. பன்னாட்டு பெரும் நிறுவனங்களுக்கு அரசாங்கம் தங்களது முழு ஆதரவைத் தந்து வருகிறது.

இருப்பில் உள்ள சமூக அமைப்பு மனித உற்பத்திச் சக்திகளை அழிப்பது மட்டுமல்லாமல் இயற்கையை அழித்து வருகிறது. காடுகளை அழிப்பதால் ஏற்படும் மண் அரிப்பு அழிவுதரத்தக்க வெள்ளப் பெருக்குகளை ஏற்படுத்துகின்றது.

மண்வளம் குறைந்து வருகிறது. நிலத்தடி நீரின் மட்டம் அச்சுறுத்தும் வகையில் குறைந்து வருகிறது. புதிய பிரதேசங்கள் வறட்சிப் பிரதேசங்களாக மாறி அச்சுறுத்துகின்றன. கெள்ளை லாபத்தை பெறவேண்டும் என்ற தடையில்லாப் பேராசை பெருவெறியானது காற்றையும் நீரையும் மாசுபடுத்தி மனித உடல் ஆராேக்கியத்திற்கு பெரும் தீங்கை ஏற்படுத்துகின்றன.

இனிக்கப் பேசுவதும் தடி கொண்டு தாக்குவதும்:(ARROT AND STICK)

சீரழிந்துவரும் வாழ்க்கை மற்றும் பணிச்சூழல்கள் மக்களிடையே கலக்கத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி வருகின்றன. அரசால் நிலம் பறிக்கப்படுவதை எதிர்த்த கிராமப்புற மக்களின் போராட்டங்களை இக்கால கட்டத்தில் காண முடிகிறது.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், மின் உற்பத்தி நிலையங்கள், அணு உலைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், ஆகியவற்றுக்கு எதிரான முதன்மையான எதிர்ப்பு வளர்ச்சிக்கான திட்டங்கள் என்பதாகச் சொல்லப்படும் திட்டங்களால் மக்களின் வாழ்வும், வாழ்வாதாரங்களும் பேரழிவுக்கு உள்ளாவதாலேயே எழுகின்றன.

பலாத்காரமாக நிலங்களை ப் பறிப்பதை எதிர்த்து மக்கள் எழுந்த போதெல்லாம் ஐக்கிய முற்பாேக்கு கூட்டணி அரசாங்கம் அவர்கள் போராட்டங்கள் மீது மிருகத்தனமான அடக்குமுறையை ஏவியது. இருந்தும் மக்களின் போராட்ங்கள் பல பகுதிக்கும் பரவின, உத்திரப்பிரதேசத்திலிருந்து மகாராட்டிரத்துக்கும், ஆந்திரத்திலிருந்து தமிழ்நாடு, மேற்கு வங்காளத்திலிருந்து ஒரிசா, ஜார்கண்டிலிருந்து மத்தியப்பிரதேசம் மற்றும் குஜராத் எனப்பரவின.

உடன் நிகழ்வாக காங்கிரஸ் கட்சி மக்களைப் போராட்டப் பாதையிலிருந்து திசைத்திருப்பி வஞ்சிப்பதற்காகப் பிறவழிகளை நடைமுறைப்படுத்தியது. அவற்றுள் ஒன்றுதான் பிரச்சனைகளுக்கு “உரிமையுடன் கூடிய அணுகுமுறை” என்பது காங்கிரசின் தலைமையிலான ஐக்கிய முற்பாேக்குக் கூட்டணி அரசாங்கம் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மூலம் மக்களுக்கான அடிப்படையான தேவைகளையும், சேவைகளையும் அங்கீகரிப்பதாகப் பிரகடனப் படுத்தியது.

தகவல் அறியும் உரிமைச் சட்டம், கல்வி உரிமைச் சட்டம், வேலை உத்தரவாதச் சட்டம், உணவுப் பாதுகாப்புச் சட்டம், பழங்குடியினரின் மரபுரிமைகளை மறு உறுதி செய்வதற்கான சட்டம் போன்றவற்றை பிறப்பித்தது.

இந்த உரிமைச் சட்டங்களை நடைமுறைப் படுத்தாதது அந்த ஆட்சியின் துராேகத்தனமான விளையாட்டின் ஒரு பகுதியே ஆகும். இந்தச் சட்டங்கள் பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்தே அவற்றை நீர்த்துப் போகச் செய்ய ஐமுகூ அரசு வஞ்சகமான வழிமுறைகளைக் கையாண்டது.

ஆதிவாசிகள் பற்றிப் பிற்பித்த சட்டத்திலும், உணவுப் பாதுகாப்புச் சட்டத்திலும் இவ்வரசின் வஞ்சகம் எடுப்பாகத் தெரிந்தது. மத்திய அரசு பிறப்பித்த செயலாட்சி ஆணையின் மூலம் பழங்குடி மக்களின் அடைய வேண்டியப் பயன்களைப் பெற முடியாதபடி தடுத்தது.

நடைமுறைப்படுத்த மாநில அரசுகளாே இந்த உரிமைச் சட்டங்களை நடைமுறைப்படுத்தி தேவையான சட்டத்திட்ட விதிகளை உருவாக்காமல் தங்களின் பொறுப்பைப் புறக்கணித்தன. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பதிவு செய்தாேரில் பாதிப் பேர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர்களுக்கும் கூட நிர்ணயிக்கப்பட்ட கூலியை விட குறை வான கூலியே கொடுக்கப்பட்டுள்ளது என்று அரசாங்க முகமைகளே கருத்துத் தெரிவித்துள்ளன.

பாஜக அரசாங்கமும் கூட “பிரதம மந்திரி தன் ஜன் யோஜனா”, “பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா”, “பிரதம மந்திரி சுரக்ஷ பீமா யோஜனா”, அதுல் பென்ஷன் யோஜனா”, என்ற பெயர்களில் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் என்பதாகச் சொல்லி சில திட்டங்களை அறிவித்துள்ளது. பாஜக அரசாங்கம் சமூகத் துறைகள் மீது தொடுக்கும் கொடும் தாக்குதல்களிலிருந்து மக்களைத் திசைதிருப்பவே இத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

பல்வேறு திட்டங்களில் பலன் பெற வேண்டியவர்களின் எண்ணிக்கையை மேலும் குறைத்துக் காட்டும் நோக்கத்துடன் மோடியின் அரசாங்கம் 2011-ம் ஆண்டு பொருளாதார மற்றும் சமூக மக்கட் தொகைக் கணக்கெடுப்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட, சில பகுதிகளை மட்டுமே வெளியிட்டுள்ளது, அறிவுக்கும் நடைமுறைக்கும் ஏற்றவாறு மாற்றம் செய்வது என்ற பெயரால் தேஜகூ அரசாங்கம் பல திட்டங்களை ஒன்றாக இணைத்துப் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பொறுப்பை மாநில அரசுகளுக்குச் சுமத்தியுள்ளது.

பயனாளிக்கு சேர வேண்டிய பணத்தை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்துவது என்பது ஏமாற்றுவதற்கான இன்னாெரு வழிமுறையாகும். இந்த முறையானது மானியத்தைக் குறைப்பதற்கும், அல்லது விருப்பம் போல் நிதியை ஒதுக்குவதற்கும் அரசுக்கு ஆற்றலைத் தருகிறது. இந்த முயற்சிகளை மோடியின் அரசாங்கம் விடாப்பிடியாக செயல்படுத்தி வருகிறது.

மக்களின் எந்தவாெரு பிரச்சனையையும் கூட தீர்க்க முடியாத ஆளும் வர்க்கங்கள் மக்கள் மீது மிருகத்தனமான அடக்குமுறைகளை அவிழ்த்துவிட்டு வருகிறது. முந்தய ஐமுகூ அரசின் அடியாெற்றி தேஜகூ அரசு ஜெய்தாப்பூர், கூடங்குளம் ஆகிய இடங்களில் அணுமின் நிலையங்களுக்கு எதிராக நடைபெறும் மக்கள் போராட்டங்களைத் தொடர்ந்து மிருகத்தனமாக ஒடுக்கி வருகிறது. விவசாய நிலங்களில் அனல் மின் நிலையங்களை அமைப்பதற்கு எதிராகப் போராடும் விவசாயிகளையும் சுட்டுக் கொல்லும் வேலையில் இறங்கியுள்ளது.

பிரித்தாளும் சூழ்ச்சி

ஆளும் வர்க்கங்கள் துராேகத்தனமான பிரித்தாளும் கொள்கைகளை ஒரு வழிமுறையாகப் பயன்படுத்தி மக்களைப் பிளவுப்படுத்தி ஒடுக்கி வருகிறது. அவர்கள் பிரதேசரீதியான, சாதி மற்றும் மத வகைப்பட்ட வேறுபாடுகளைப் பயன்படுத்தி பகைமையை மூட்டிவிட்டு மக்களைப் பிளவுப்படுத்தி ஒற்றுமையைச் சிதைத்து வருகின்றன.

ஆளும் வர்க்க கும்பல் ஒரு தலைமுறைக் காலமாக தெலுங்கு மொழி பேசும் மக்களிடையே பிரதேச உணர்வுகளைக் கிளப்பிவிட்டு அவற்றைப் பயன்படுத்தி உண்மையான பிரச்சனைகளிலிருந்தும், போராட்டங்களிலிருந்தும் அவர்களை திசை திருப்பி வருகின்றனர். ஏதேனும் ஒரு ஆளும் வர்க்கக் கும்பலைப் பின்பற்றவைப்பதற்கான நோக்கத்துடன் தலித் சாதிகளிடையே சாதி உணர்வைத் தூண்டி வருகின்றனர்.

பல்வேறு மதங்களைச் சார்ந்த மக்களிடையே வகுப்புவாத பகைத்தீயை மூட்டிவிடும் அருவறுக்கத்தக்க நடவடிக்கைகளில் ஆளும் வர்க்கங்கள் ஈடுபட்டுள்ளன.

மதவெறியைத் தூண்டி விடுவதில் பாஜக நிர்வாணமான, வெளிப்படையான வழிமுறைகளை நடைமுறைப்படுத்திவரும் அதே நேரத்தில் காங்கிரசானது மூடி மறைக்கப்பட்ட மென்மை யான வழிமுறைகளைப் பயன்படுத்தி வருகிறது.

குஜராத் படுகாெலைகள் மூலம் தைரியம் பெற்ற பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் கும்பல் வதந்திகளையும், பொய்களையும் பரப்பி முஸ்லீம் மதத்தினருக்கு எதிரான உணர்வுகளையும், பகைமையையும் கிளறிவிட்டு வருகின்றனர்.

இதன் மூலம் அதிகார பீடத்தைப் பற்றிக்கொண்டுவிடலாம் என்ற அவர்களின் முயற்சிக்கு முசாபர்பூர் கலவரம் ஒரு சாட்சியமாகும். பாஜக, ஆர்எஸ்எஸ் கும்பல் ஆட்சிக்கு வந்த பிறகு தங்களின் அரசியல் விவாதங்களின் ஒரு பகுதியாக மதவெறியைப் பரப்புரை செய்து வருகின்றனர். இருந்தும் மதவழிப்பட்டு ஒற்றுமையுடன் பல நூற்றாண்டு காலமாக வாழ்ந்து வரும் இந்திய உழைக்கும் மக்கள் மதவாத சக்திகள் தங்கள் வாழ்வை ஒழிப்பதை ஒருபோதும் அனுமதிக்கமாட்டாேம் என்பதை மீண்டும், மீண்டும் நிரூபித்து வருகின்றனர்.

ஒரு ஜனநாயக அமைப்பின் நியதிப்படி அரசு விவகாரங்களுக்கு வெளியே மதத்தை வைப்பதற்குப் பதிலாக வகுப்புவாத வழியில் சமூகத்தைத் திசைவழிப்படுத்த ஆளும் வர்க்கங்கள் தங்களால் ஆன அனைத்தையும் செய்கின்றன.

பாஜக அரசாங்கத்தின் பாதுகாப்பின் கீழ் ஆர்எஸ்எஸ் பரிவாரங்கள் நின்றுகாெண்டு மதவெறி பரப்புரைகளை மேற்காெண்டு வருகின்றன. ஆக்ராவில் நடந்தது போல இந்து மதத்தைச் சாராத இந்துக்கள் அல்லாதாேரை அச்சுறுத்தி மதமாற்றம் செய்வதை நியாயப்படுத்தும் வகையில் “கர்வபாசி” (வீடு திரும்பல்) பரப்புரையை மேற்காெண்டது போன்று இந்துக்கள் அல்லாதாேர் மீது பகைமையைக் கக்குவது நாளார்ந்த நடப்பாகி விட்டது.

இராமனை பின்பற்றாதவர்கள் முறைதவறிப் பிறந்தவர்கள், மதரசாக்கள் பயங்கரவாத முகாம்கள், முஸ்லீம்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதால் இந்துப் பெண்கள் நான்கு குழைந்தைகளைப் பெற்றுக் கொள்ளவேண்டும், மாட்டுக்கறி உண்பவர்கள் வாழ்வதற்குப் பாகிஸ்தானுக்கு செல்லவேண்டும் என்றெல்லாம் அரசியல் சட்டத்தின் புனிதத்தைக் காப்பவர்களாகச் சொல்லப்படும் உயர்ந்த அதிகாரப் பொறுப்பிலுள்ளவர்கள் அறிக்கைகளை மக்கள் முன் விடுத்து வருகின்றனர்.

பாஜக ஆட்சியதிகாரத்தைப் பயன்படுத்தி கல்விக்கான பாடத்திட்டத்தை மாற்றியமைத்து இளந் தலைமுறையினரின் சிந்தனைகளை நச்சுப்படுத்தவும், வகுப்புவாத மயமாக்கவும் முயற்சிகளை மேற்காெண்டு வருகின்றனர்.

மறுபுறத்தில் ஏகாதிபத்தியச் சூறையாடலுக்கும் அதன் நலன்களுக்கும் சேவகம் புரியும் வகையில் இந்திய தொழில் நுட்பப் பயிலகம் (IIT) மற்றும் மருத்துவக் கல்வி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களை உருச்சிதைத்து வருகின்றனர்.

அதற்கேற்ற வகையில் நமது இளைஞர்களை நாட்டினது தேவைக்கேற்ப தொழில் நுட்பங்களை உருவாக்குபவர்களாக அல்லாமல் வெறும் கற்பாேராக மாற்றி வருகின்றனர். அதாே டு இந்திய வரலாற்று ஆய்வுக் கழகம்(ICHR) இந்திய சமூக விஞ்ஞான ஆய்வுக் கழகம்(ICSSR) போன்ற உயர் கல்வி மையங்களுக்குள் தங்களின் வகுப்புவாத மதவெறி நிகழ்ச்சி நிரலை கள்ளத்தனமாகக் கடத்தி வருகின்றனர்.

இவ்வாறு வேண்டுமென்றே வகுப்புவாத மயப்படுத்துவது முனைப்புடன் கலாச்சாரக் காவலர்கள் என்ற பாத்திரத்தை வகிக்கும் நகர்ப்புற கீழ்த்தட்டு மத்தியத்தர வர்க்கம், கிராமப்புற மேட்டிமை வர்க்கம் ஆகியவற்றைச் சேர்ந்த இளைஞர்கள் மீது செல்வாக்குச் செலுத்துகிறது.

இவர்கள்தான் முற்பாேக்கு எழுத்தாளர்கள் மீது தாக்குதலைத் தொடுக்கின்றனர். பெண்கள் எவ்வாறு உடையணிய வேண்டும் என்றெல்லாம் கட்டளை பிறப்பிப்பாேராகச் செயல்படுகின்றனர். பிரதமரே மனித உரிமைச் செயல்பாட்டாளர்களை ஐந்து நட்சத்திரக் களப்பணியாளர்கள் என்று கீழ்த்தரமாக அழைத்ததன் மூலம் ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் பரிவாரங்களுக்கு குரல் எழுப்பவும், செயல்படவும் களத்தை அமைத்துக் கொடுத்துள்ளார்.

தொடர்ந்து முஸ்லீம்கள் மீதான தாக்குதல்களாேடு, கிறித்துவ மதத்தினர் மீதான தாக்குதல்களும் அதிகரித்து வருகின்றன. டெல்லி, மேற்கு வங்கம், மகாராட்டிரம், அரியானா, கர்நாடகம், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 2014-ம் ஆண்டு டிசம்பர் வரை 11 தாக்குதல் நிகழ்வுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

உள்ளூர்மட்ட அளவிலான இந்தத் தாக்குதல்களின் தாக்கங்கள் மத சகிப்புத்தன்மை இன்மையைப் பரப்புகிறது. சமூகப் பகைமையை வளர்க்கிறது. சிறுபான்மையினரின் வலிமையை இழக்கச் செய்கிறது. ஜனநாயகக் குரல்களின் கழுத்தை நெறிக்கிறது.

அரசியல் சூழல்

பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடிக்கு கொண்டு விடுகிறது. ஆளும் வர்க்கங்களுக்கு இடையேயான முரண்பாடுகளும் கூர்மையடைந்து வருகின்றன. இதன் விளைவாக ஆளும் மேட்டிமை வர்க்கத்தின் ஊழல்களும், லஞ்ச லாவண்யங்களும் வெளிச்சத்திற்கு வருகின்றன.

ஆளும் வர்க்கங்கள் தங்களின் அடையாளம் சாதி, மதம், பிரதேசம், குடும்பம் ஆகியவற்றைத் தங்களின் நிதிநிலையைப் பாதுகாத்துக் கொள்ளவே பயன்படுத்துகின்றனர்.

இந்தப் போக்கின் வழியாக ஆளும் வர்க்கங்கள் மக்களின் அடையாளம் பற்றிய கோட்பாடுகளை முன்னாேக்கித் தள்ளுகின்றனர், இதன் எதிர்மறையான விளைவுகளை சில அடித்தட்டு மக்கள் பிரிவினரிடையே கூடக் காண முடிகிறது, ஆளும் வர்க்கக் கட்சிகளால் மத நம்பிக்கைகளும், மதச்சடங்குகளும் வளர்த்தெடுக்கப்படுகின்றன. தேர்தல் காலங்களில் மதத்தை அடிப்படையாகக் கொண்டு சில கட்சிகள் புதிதாக முளைக்கின்றன.

2014-ம் ஆண்டு தேர்தலின் போது பாஜக இந்தப் பின்னணியில்தான் தனது மூலயுக்தியை வகுத்துக் கொண்டது. மக்களிடம் கொதித்தெழுந்து வரும் அதிருப்தியைப் பயன்படுத்தி தேர்தலில் வெற்றிபெற விரும்பியது.

சூழலைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னரேயே தனது வழிமுறைகள் அனைத்தையும் நடைமுறைப்படுத்தத் தொடங்கியுள்ளது.

டெல்லியில் நடைபெற்ற நிர்பயா வல்லுறவு நிகழ்வு போன்ற எரியும் பிரச்சனைகளைப் பயன்படுத்தி அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் கருத்துக்களைத் திரட்ட விரைந்து செயல்பட்டது.

தேர்லில் வெற்றியை அறுவடை செய்வதற்காக மக்களை ஏமாற்றுவதிலும், திசை திருப்புவதிலும் வெற்றி அடைந்தது.

நிலவுகின்ற சூழலில் புதிய தாராளவாதக் கொள்கைகளை விரைவாகச் செயல்படுத்த உதவும் என்ற நம்பிக்கையில் மோடியைத் தலைமைக்குக் கொண்டு வருவதன் மூலம் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வருவது என்ற பாஜக வின் முடிவுக்கு இந்தியப் பெருமுதலாளிகளும், ஏகாதிபத்திய நாடுகளும் தங்கள் ஆதரவை அளித்தன.

பாஜக “வளர்ச்சி” முன்னேற்றம், மதம் என்ற முழக்கங்களை முன்வைத்தது. வளர்ச்சிக்கும், தீர்மாணகரமாகச் செயல்படுத்துவதிலும் மோடியை கவர்ச்சி மிக்க கதாநாயகனாக முன்னிறுத்தியது.

தனிநபர் வழிபாட்டையும், நேருவின் குடும்பத்தையும் எதிர்ப்பது போல நாடகமாடியது. ஆனால் உண்மையில் தனிநபர் வழிபாடு என்கிற பறவையின் சிறகுகளில் அமர்த்தப்பட்டே அவர் அரசியல் வானில் பறக்கவிடப்பட்டார். 16-ம் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அழிவுதரத்தக்க தோல்வியையும், பாஜக மிகப்பெரிய வெற்றியையும் பெற்றது.

மக்களின் வாழ்வை படுநாசப்படுத்திய விலைவாசி ஏற்றம், பணவீக்கம், பரவலான ஊழல்கள், அடுத்தடுத்து நடைபெற்ற லஞ்ச லாவண்யங்கள் ஆகியவற்றால் எழுந்த கடுங்காேபத்தை தேர்தல் முடிவுகள் பிரதிபலித்தன.

மக்களுக்கும் நாட்டிற்கும் அழிவை ஏற்படுத்தும் வகையில் ஏகாதிபத்தியங்கள், பெரும் முதலாளிகள், பெரும் நிலவுடமையாளர்கள் ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் ஆதிக்கக் கும்பல்கள் ஆகியாேருக்குச் சாதகமாக காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ அரசு செயல்படுத்திய கொள்கைகள் மீதான மக்களின் கடும் சீற்றத்தை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தின.

தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து இருந்து வரும் மக்களின் பெருவிருப்பை அதாவது தங்களின் வாழ்வு மற்றும் வேலைச் சூழலில் மேம்பாடு அடையவேண்டும் என்ற விருப்பார்வத்தை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துவதாக அமைந்தது.

காங்கிரஸ் கட்சி

ஆளும் வர்க்கக் கட்சிகளிடையே நீண்ட வரலாற்றை உடையது காங்கிரஸ் கட்சியாகும். மத்தியிலும் பல மாநிலங்களிலும் ஆடசி புரிந்ததன் மூலம் நிபுணத்துவத்தைப் பெற்ற கட்சியாகும், இப்பாேது மத்தியிலும் பல மாநிலங்களிலும் எதிர்க்கட்சியாக உள்ளது.

சில மாநிலங்களில் அதன் பலம் முற்றிலுமாகக் குறைந்துள்ளது. பெரும் முதலாளிகளுக்கும், பெரும் நிலப்பிரபுக்களுக்கும், ஏகாதிபத்தியங்களுக்கும் சேகம் புரிவதில் நிபுணத்துவம் பெற்றது.

அக்கட்சி அதே நேரத்தில் நலவாழ்வுக்கான முழக்கங்களை முன்வைத்து விவசாயத் தொழிலாளர்களிலிருந்து சிறு முதலாளிகள் வரை பிற வர்க்கங்களை அணிதிரட்டவும் அக்கட்சியால் முடிந்தது.

நேரு முதல் இந்திரா வரை, ராஜீவ் முதல் நரசிம்மராவ் மற்றும் மன்மாேகன்சிங் காலம் வரை ஏகாதிபத்தியங்களின் காலடிகளைப் பின்பற்றி ஆட்சி புரிந்த கட்சியாகும், 1981-ல் ஏகாதிபத்திய நிறுவனங்களினால் கட்டளையிடப்பட்ட பொருளாதாரக் கொள்கைகள் என்ற விதைகளை விதைத்தக் கட்சியே இது.

1991-ல் மீண்டும் புதிய பொருளாதாரக் கொள்கை என்ற பெயரில் விதைகளை விதைத்ததும் இக்கட்சியேதான். மதச்சார்பின்மை என்கிற முகத்திரையை அணிந்து கொண்டாலும் ஒவ்வாெரு பிரதேசத்திலும் திருட்டுத்தனமான வழிகளில் மதவாத சக்திகளைப் பயன்படுத்திக் கொண்ட கட்சியும் இதுதான்.

ஏற்கெனவே இக்கட்சியால் பகுதியளவில் பயன்படுத்திய அதே கொள்கைகளை, இப்பாேது பாஜக அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தும் கொள்கைகளை எதிர்ப்பதாகக் கூறிக் கொண்டு “ஏழைகளின் கட்சி” என்பதாக தோற்றப்படுத்திக் காட்ட இக்கட்சி பாராளுமன்றத்தைப் பயன்படுத்தி வருகிறது.

பாரதிய ஜனதாக் கட்சி

வர்க்கத் தன்மையைப் பொறுத்த மட்டில் இந்தக் கட்சி காங்கிரஸ் கட்சியிலிருந்து எந்த விதத்திலும் மாறுபட்டதல்ல.ஐமுகூ அரசின் தலைமுறைக்கால ஆட்சிக்கு எதிராக உச்சத்திலிருந்த மக்களின் கோபத்தின் மீது சவாரி செய்து மையத்தில் இக்கட்சி ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டது.

ஏகாதிபத்திய நிறுவனங்களால் ஆணையிடப்படும் கொள்கைகளை முழு மூச்சுடன் இக்கட்சி இப்பாேது நடைமுறைப்படுத்தி வருகிறது. ஐமுகூ அரசாங்கத்தின் காலணிகளுக்குள் தங்கள் கால்களை நுழைத்துக் கொண்ட அரசாங்கமே மோடியின் அரசாங்கம்.

நிறுவனங்களில் விபத்து ஏற்படும் போது நட்டஈட்டை வழங்க வேண்டிய பொறுப்பிலிருந்து அமெரிக்க நிறுவனங்களை விடுவிக்கும் வகையில் அணுமின் உற்பத்தி நிலையங்கள் மீதான அமெரிக்க நிபந்தனைகளை மோடியின் அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான மூலயுக்தி ரீதியான ஒப்பந்தம் காலாவதியாகிவிட்ட நிலையில் மீண்டும் அவ்வாெப்பந்தத்தில் மறு கையெழுத்திட்டு அதனை முன்னெடுத்துச் செல்ல உறுதியான முறையில் மோடி தன்னை ஒப்படைத்துக் கொண்டுள்ளார்.

இவ்வாறாக ஆசியப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கான திட்டங்களுக்கு அடிமை த்தனத்தாேடு கூடிய பங்காளியாக இந்தியா ஆக்கப்பட்டுள்ளது.

மத வெறியையும், பாசிசப் பேக்குகளையும் வளர்த்தெடுக்கும் கட்சிதான் இது என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. வகுப்பு வாத வழியில் மக்களை திசைவழிப்படுத்தும் விதத்தில் ஒவ்வாெரு பிரச்சனையையும் பயன்படுத்தியது-பயன்படுத்தி வருகிறது.

இதன் முன்னாேடியான ஜனசங்கம் பல தலைமுறைகளாக அரசியல் அரங்கத்தில் ஒரு அடையாளத்தையும் பதிவு செய்ய முடியவில்லை. புதியப் பொருதாரக் கொள்கையை நடை முறைப்படுத்தியதன் மூலமும், பாபர் மசூதியை இடித்தப் பின்னரும், பாஜக எழுச்சி பெறத்தொடங்கியது.

பாபர் மசூதியை இடித்தது ஏதாே விபத்தானதாே அல்லது அது எதிர்பாராத நிகழ்வாே அல்ல, தாராளவாதக் கொள்கைகளை எதிர்ப்பின்றி நிறைவேற்றும் நோக்கத்திற்காக மக்களைப்பிளவுப் படுத்த ஆளும் வர்க்கங்கள் திட்டமிட்டு நடத்தியதே அந்நிகழ்வு.

ஆளும் வர்க்கங்களின் இந்த மூல யுக்தியின் ஒரு பகுதியாக பாஜக ஆட்சி அதிகாரத்திற்குக் கொண்டு வரப்பட்டது. தனது ஓராண்டு ஆட்சிக் காலத்தில் ஆளும் வர்க்கங்களின் நம்பத் தகுந்த சேவகனாகத் தன்னை நிரூபித்துக் கொண்டுள்ளது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்டும்)

சீர்திருத்தவாத சமூக ஜனநாயகக் கட்சிகளான CPI, CPI(M) ஆகிய இருக் கட்சிகளுமே ஆளும் வர்க்கத்தின் தொடர் வண்டி நிற்கும் போது அதை முன்னாேக்கித் தள்ளுவதும், நிற்கும் போது குற்றம் சாட்டுவதாகச் செயல்படுகின்றனர்.

தோழர் நாகி அவர்கள், இவ்விரு கட்சிகளும் ஏதேனும் ஒரு ஆளும் வர்க்கக் கட்சியின் ஊதுகுழலாக மாறிவிட்டனர் என்று கூறியதை விடவும் இப்பாேது மேலும் சீரழிவுக்குள்ளாகியுள்ளனர்.

இவ்விருக் கட்சிகளுமே மார்க்சிய லெனினிய அடிப்படையில் செயல்படுவதாகக் கூறுகின்றனர். அவர்கள் மாறும் சூழலுக்கேற்ப மார்க்சிய லெனினியம் மாற்றப்பட வேண்டும் என்று வெளிப்படையாகவும், சில நேரங்களில் அவ்வளவு வெளிப்படையாக இல்லாமலும் கூறிவருகின்றனர், அவர்கள் முதலாளித்துவக் கட்சி எதிரிடும் போது வெறுமனே வாயளவில் கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படைக் கோட்பாடுகளை கிளிப்பிள்ளைப் போலப் பேசிக் கொண்டே முதலாளித்துவக் கட்சிகளின் நடைமுறையையே பின்பற்றி வருகின்றனர்.

தேர்தல்களிலும், முதலாளித்துவக் கட்சிகளின் பாலான அவர்களின் நடைமுறையாக இருந்து வருகிறது. முதலாளித்துவக் கட்சியின் வழிமுறையின் ஒரு பகுதியாக அவர்களின் அமைச்சரவை களில் பங்கேற்பது வரை இவர்களின் நடைமுறை விரிவடைகிறது.

புதிய தாராளவாத ஆட்சி முறையின் பொருதாரச் சீர்திருத்தங்களை எதிர்ப்பதாக அவர்கள் கூறிவருகின்றனர். ஆயினும் சீர்திருத்தங்களின் எல்லா அம்சங்களையும் எதிர்க்கவில்லை அதை நடைமுறைப்படுத்தும் வழிமுறை யை த்தான் எதிர்க்கிறாே ம் எனக்கூறி அவர்கள் ஆட்சி புரிந்த மாநிலங்களில் அதே சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தினர்.

அவர்கள் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் என்ற ஒட்டு மொத்தப் பிரச்சனையை உயர் மட்டத்திலுள்ள ஊழல்கள் என்ற மட்டத்திற்குக் குறுக்கினர். சீர்திருத்தங்களை மக்கள் எதிர்த்த போது மக்களை ஒடுக்க மிருகத்தனமான வழிமுறைகளைப் பயன்படுத்த அவர்கள் தயங்கியதில்லை.

இவ்வாறு இவர்கள் சுரண்டும் வர்க்கங்களின் நலன்களுக்குச் சேவகம் புரிவதில் தகுதியானவர்கள் என தங்களை நிரூபித்துக் கொள்ள முயற்சிக்கின்றனர்.

மக்களிடையே நிலவும் கோபத்தையும், பதட்டத்தையும் மட்டுப்படுத்துவதற்கான சேப்டி வால்வுகளாகச் (பாதுகாப்பு வளையம்) செயல்படுகின்றனர். மக்களின் போராட்டங்களை அரசாங்கத்திடமிருந்து சில சலுகைகளைப் பெறுவது என்ற அளவில் எல்லைக்குட்படுத்துகின்றனர்.

பூர்ஷ்வாக் கட்சிகளுடன் நல்லுறவைப் பேணிக்கொண்டே மார்க்சிய-லெனினியத்தை நடைமுறைப்படுத்த முடியும் என்ற பிரமை களை அணிகளிடையே விதைக்கின்றனர், தங்களின் திட்டத்தைக் கொண்டாே, சொந்த பலத்தை ஆதாரமாகக் கொண்டாே அவர்கள் செயல்படுவதில்லை.

முதலாளித்துவக் கட்சிகளுடன் அவர்கள் கூடி மகிழ்வதற்கும் ஏகாதிபத்திய பெருமுதலாளித்துவ நிலப்பிரபுத்துவ எதிர்ப்புத் திட்டத்திற்கும் எந்த உறவும் கிடையாது. இதன் விளைவாக அவர்களின் செயல்பாடுகள் மார்க்சியம், லெனினியத்திலிருந்து வெகுதூரம் விலகியதாக உள்ளது.

மாநிலக் கட்சிகள்

பல்வேறு மாநிங்களில் பல்வேறு கட்சிகள் தோற்றமெடுத்துள்ளன. அவற்றில் பல ஆட்சி அதிகாரத்திற்கும் வந்துள்ளன.

தமிழகத்தில் திமுக-அதிமுக; ஆந்திரத்திலும்,தெலுங்கானாவிலும் பிடிபி-டிஆர்எஸ்; அஸ்ஸாமில் ஏஜிபி போன்றவை இவற்றுல் சில. இக்கட்சிகள் பிரதே ச அல்லது மக்களின் உண்மையான தேசிய மற்றும் ஜனநாயகப் பெரு விருப்பங்களையும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற பயன்படுத்திக் கொண்டன.

ஒருமுறை பதவிப் பீடத்தைக் கைப்பற்றிக் கொண்டதும், மக்களை திசை திருப்ப பிரதேச ரீதியான பேரினவாதத்தைக் கிளப்ப பாசிச வழிமுறை களைப் பின்பற்றுகின்றனர். மக்களை ஒடுக்க மிருகத்தனமான ஒடுக்குமுறைகளை ஏவுகின்றனர்.

அவர்கள் இந்திய ஆளும் வர்க்கங்களுக்கும், ஏகாதிபத்தியங்களுக்கும் தொண்டூழியம் புரிகின்றனர். அதே நேரத்தில் தங்கள் மாநிலங்களில் உள்ள நிலப்பிரபுத்துவச் சக்திகளுக்கும், ஒப்பந்தக்காரர்களுக்கும் சுரண்டிக் கொடுக்க துணை போகின்றனர்.

மேற்கு வங்கத்தில் திருனாமூல் காங்கிரஸ், பீகாரில் ராஷ்ட்ரீய ஜனதாதளம், ஜனதாதளம் (U), உத்திரப்பிரதேசத்தில் சமாஜ்வாதிக் கட்சி போன்ற பிற மாநலக் கட்சிகள் ஆளும் வர்க்கக் கட்சிகளிலிருந்து கிளைவிட்டவை ஆகும்.

தாங்கள் ஆளும் மாநிலங்களில் ஆளும் வர்க்கங்கள் நிலப்பிரபுத்துவத்துடன் கூட ஏகாதிபத்தியம் ஆகியவற்றின் நலன்களுக்குச் சேவகம் புரிகின்றனர்.

இக்கட்சிகள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு சாதிகள் ஒன்றிணைவதும், பிரிவதுமாக எப்பாேதும் மாறிக் கொண்டே இருக்கும்.

சாதியத்தில் மூழ்குண்டுள்ள சமூகத்தை மட்டுமே அடித்தளமாகக் கொண்டுள்ளன, இந்தப் போக்கின் வழியாக மக்களிடையே சாதிப் பிளவை தொடரச் செய்வதாேடு சாதிப் பகைமையை மூட்டிவிட்டு மக்களின் ஒற்றுமையைச் சிதைக்கின்றன.

சிபிஐ (மாவாேயிஸ்ட்) புரட்சிகர இயக்கத்தின் வளர்ச்சிக்கு தீங்கிழைக்கின்ற இடது அதிதீவிரப் பாதையை நடைமுறைப்படுத்துகிறது.

சிபிஐ (எம்எல்) (லிபரே ஷன்) வலது விலகல் பாதையை நடைமுறைப்படுத்துகிறது. சிஆர்சிபிசி என்ற எம்எல் அமைப்பு குறுங்குழு வாதத்தை நடைமுறைப்படுத்துகிறது.

சிபிஐ எம்எல் ரெட்ஸ்டார் வலது திசை விலகலைக் கொண்டுள்ளதாேடு சிபிஎம் கட்சியின் வலது திசை விலகலைச் சென்றடை ந்துள்ளது.

இந்தியாவிலும் உலகிலும் எப்பாேதுமாக ஆழப்பட்டுக் கொண்டிருக்கும் பொருளாதார அரசியல் நெருக்கடி கம்யூனிஸ்ட் புரட்சியாளர்களுக்கு ஒரு புரட்சிகர இயக்கத்தைக் கட்டுவதற்கும் நாம் மனதார நேசிக்கிற இந்தியாவின் புதிய ஜனநாயகப் புரட்சி என்கிற இலட்சியத்தை அடையப் பெறுவதற்கும் புரட்சிகரப் போராட்டங்களை இன்னும் தீர்மாணகரமான முறையில் தலைமை ஏற்று நடத்தவும் நல்ல வாய்ப்புகளை வழங்குகிறது.

புரட்சிகர இயக்கம் தானாகவே வந்துவிடாது. அதற்கான தயாரிப்புகள் செய்யப்பட வேண்டும் என்பதாேடு கட்டியமைக்கப்படவும் வேண்டும்.

ஒரு வலிமையான பாட்டாளி வர்க்கப் புரட்சிகரக் கட்சியால் மட்டுமே தயாரிப்புகளைச் செய்ய முடியும் வெற்றியை ஈட்டிப்பெற முடியும்.

அத்தகை ய ஒரு கட்சி இல்லாதது இன்றை க்கும் கூட ஒரு தீவிரமான பலவீனமாகத் தொடர்கிறது.

எல்லா உண்மையான புரட்சியாளர்களையும் ஐக்கியப்படுத்தி பாட்டளி வர்க்கப் புரட்சிகரக் கட்சியைக் கட்டியமைக்க வேண்டியது நமது கடமையாகும்.

“உழுபவனுக்கே நிலம் சொந்தம்” என்ற முழக்கத்துடன் விவசாயப் புரட்சிகர இயக்கத்தை கட்டியமைக்க வேண்டியது மிக முக்கியமான கடமையாகும்.

இக்கடமை ஏகாதிபத்திய நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் போராட்டங்களைக் கட்டியமைப்பது என்ற பிற முன்மையான கடமையுடன் ஒன்றிணைக்கப்பட வேண்டும்.

கீழ்வரும் உடனடிக் கோரிக்கைகளை முன் வைத்துப் பின்வரும் அடிப்படைக் கடமை களை அடைவதற்கான மக்கள் போராட்டங்களைக் கட்டியமைப்பதற்கு மக்களை விழிப்படையச் செய்யவேண்டும்.

அடிப்படைக் கடமைகள்

1) “உழுபவனுக்கே நிலம்” என்பதை மைய முழக்கமாகக் கொண்டு புரட்சிகர நிலச்சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த எல்லா கிராமப்புற ஏழைகளும் போராடவேண்டும்.

2) 2016-தமிழக சட்டமன்ற தேர்தல்

தேர்தல் ஆணையத்தின் அத்துமீறல்!

சட்டம் ஒழுங்கையும், தேர்தல் முறைகேட்டையும் தடுப்பதன் பேரால் தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளின் பிரச்சார உரிமையையும், கூட்டம் மற்றும் ஊர்வலம் நடத்தும் உரிமையையும் பறிக்கிறது.

கருத்துக்களை தெரிந்து கொள்ளவும், விவாதிக்கவும் மக்களுக்குள்ள உரிமையை பறிக்கும் விதமாக தேர்தல் ஆணையம் நடந்து வருகிறது.

இரவு 10 மணிக்கு மேல் கூட்டம் போடக்கூடாது, மக்கள் கூடும் இடங்களில் கூட்டம் நடத்தக் கூடாது, தட்டி வைப்பது, போஸ்டர் ஒட்டுவது, சுவர் விளம்பரம் செய்வது என்பதையெல்லாம் கட்டுப்பாடு என்ற பேரில் தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகள் மீது மட்டுமல்ல மக்கள் மீதும் ஜனநாயகத்தை மறுக்கும் விதமாக அதிகாரத்துவ வழிகளில் திணிக்கிறது.

தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதை தடுப்பதாகக் கூறி தேர்தல் ஆணையம் செய்யும் அத்தனைக் கெடுபிடிகளும் மக்களுக்கு எதிராகத்தான் திருப்பப் படுகிறது.

பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் ஆளும் வர்க்க கட்சிகளிடமாே, பணம் வாங்கிக் கொண்டு வாக்களிக்கும் மக்களிடமாே இந்த அதிகாரத்துவ முறைகளால் எவ்வித மாற்றமும் வந்துவிடப் போவதில்லை.

அதே போல் பதற்றமான வாக்குச் சாவடிகள், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு, தேர்தல் முறைகேட்டை தடுப்பது, துணை ராணுவ பாதுகாப்பு, தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி செய்திகளையும், முறைகேடுகளையும் தெரிந்து கொள்ளும் வசதி இவையனைத்துமே மக்களால் விரும்பி ஏற்கப்படும் ஜனநாயக தேர்தல் இதுவல்ல என்பதுடன் மக்களின் மீது ஆளும் வர்க்கங்களும், அரசும் திணித்துள்ள போலி ஜனநாயக தேர்தல் என்பதை மேலும், மேலும் அதிகமாக நிரூபித்து வருகிறது.

போலி ஜனநாயகம்

தேர்தல் மீதும் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மீதும், போட்டியிடுகின்ற குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள் மீதும், சாதி-மத பின்னணியுடன் களமிறங்கும் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் மீதும் இவர்களாேடு மாறி மாறி கூட்டு வைத்து சாயம் வெளுத்துள்ள கட்சிகள் மற்றும் ஜனநாயக சக்திகள் மீதும்கூட நம்பிக்கை இழந்த மக்களை வாக்குச் சாவடிக்கு இழுத்து வந்து ஓட்டு போட வைக்க தேர்தல் ஆணையமே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.

இதற்காக பிரபல சினிமா நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள், நடிகைகள் என்ற பட்டாளத்தை கூலிக்கமர்த்தி தேர்தல் ஆணையம் பிரச்சாரம் செய்து வருகிறது.

வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களிக்க நினைத்தவன் இந்த தேர்தலில் நிற்பது
திருடர்கள்,
கொலைக்காரர்கள்,
சாதி-மத வெறியர்கள்,
ஊழல் பெருச்சாளிகள்,
அந்நிய நாட்டு கைக்கூலிகள்,
என அறிந்ததால் ஓட்ட போடாமலே இருந்து விடக்கூடாது என்பதற்காக நோட்டாவுக்கு(Nota) வாக்களித்து உங்கள் எதிர்ப்பை காட்டலாம் என்று தேர்தல் ஆணையம் “தேர்தல் பிரச்சாரம்” செய்கிறது.

வாக்கு சதவீதத்தை உயர்த்திக் காட்ட முயலும் தேர்தல் ஆணைய முயற்சிகளால் இந்த தேர்தலின் போலி ஜனநாயகத் தன்மையை மாற்ற முடியாது.

பேச்சுரிமை, எழுத்துரிமை, வாக்குரிமை கேட்டு போராடிய மக்கள் மன்னர் ஆட்சியை புரட்சியால் வீழ்த்தி மக்களாட்சியை கொண்டு வந்தனர்.

வாக்குரிமையை உயிரினும் மேலானதாகக் கருதி போராடிப் பெற்றனர். நமது நாட்டில் அத்தகைய வாக்குரிமையா மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின் கீழ் இருநூறு ஆண்டுகள் அடிமைப்பட்டிருந்த மக்கள் போராடிய போராட்டமெல்லாம் இந்தியாவில் ஏகாதிபத்திய ஏஜன்டுகளாக மாற்றப்பட்ட தரகு முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ வர்க்கங்களுக்கு சாதகமாக ஆட்சியதிகாரம் மாறுவதற்கு மட்டுமே பயன்பட்டதே தவிர நாட்டு மக்களுக்கு கிடைத்தது பெயரளவு சுதந்திரமும் போலி ஜனநாயகமுமே.

இவ்வாறு பெறப்பட்ட பெயரளவு சுதந்திரத்தின் மீதும் போலி ஜனநாயகத்தின் மீதும் மக்கள் வைத்திருந்த நம்பிக்கை கடந்த 67 ஆண்டுகளில் நடந்த தேர்கள் மூலம் வீனாகிப் போனதே மக்களுக்கு கிடைத்த அனுபவ உண்மை.

இந்த உண்மையை மறைக்கவே தேர்தல் ஆணையமும், ஆளும் வர்க்கங்களும் பல்வேறு யுக்திகளை கடைபிடித்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.#

திருப்பியழைக்கும் உரிமையற்ற தேர்தல்முறை

இந்திய குடிமகன்கள் யாராயிருந்தாலும் தேர்தலில் நிற்கவும் ஜெயிக்கவும் உரிமைப் பெற்று எல்லாேரும் இந்நாட்டு மன்னராகலாம் எனவும் என்னதான் கூறினாலும் இந்திய ஆளும் வர்க்கங்களும், அவர்களின் கட்சிகளும், பணமும், அதிகாரமும், சாதியும், மதமும், போலி தேசியமும், போலி மதச்சார்பின்மையும், சினிமாக் கவர்ச்சியும், குற்றப் பின்னணியுமே தேர்தலில் நிற்கவும், ஜெயிக்கவும் முக்கியம் என ஆயிரம் வழிகளில் நிரூபித்து வருகின்றன.

இத்தகைய கேடுகெட்ட, ஜனநாயமற்ற, நிலைமையில் கோடான கோடி உழைக்கும் மக்கள் தங்கள் வாக்குரிமையை சுதந்திரமாக பயன்படுத்த முடியும் என்ற தப்பெண்ணங்கள் யாரால் எப்படி பரப்பப் பட்டாலும் அதன் மீது எத்தகைய நம்பிக்கையையும் புரட்சிகர மக்களும், இயக்கமும், ஜனநாயக வாதிகளும் உருவாக்க மாட்டார்கள்.

1917-ல் ருஷ்யாவிலும்
1949-ல் சீனத்திலும்
உழைக்கும் மக்களின் சோவியத் ஆட்சி வடிவம் எப்பாேது நடைமுறைக்கு வந்ததாே அப்பாேதே வயது வந்தாேருக்கான வாக்குரிமையை உள்ளடக்கிய இந்த முதலாளித்துவ நாடாளுமன்ற ஆட்சி வடிவம் வரலாற்று ரீதியில் காலாவதியாகிவிட்டது.

ஏனென்றால் முதலாளித்துவ நாடாளுமன்ற ஆட்சி முறையை விட சோவியத் ஆட்சிமுறை வயது வந்தாேருக்கு வாக்குரிமை என்பதாேடு, சட்டம் போட மட்டுமின்றி சட்டத்தை நிறைவேற்றவும் மக்களுக்கு அதிகாரத்தை அளித்தது, மேலும் தேர்வு செய்யப்படும் பிரதிநிதி யாராயிருந்தாலும் தவறு செய்தால் உடனடியாக திருப்பி அழைக்கவும் மக்களுக்கு உரிமை வழங்குகிறது.

எனினும் முதலாளித்துவ நாடாளுமன்ற முறையின் மீதும் அதன் மீதான மக்களின் நம்பிக்கையும் அரசியல் வழியில் காலாவதியாக்கப் படவில்லை.

பாட்டாளி வர்க்க புரட்சிகர இயக்கங்களாகிய நாம் தற்பாேதும் கூட இந்தியாவின் மேற்கண்ட கடமையை எதிர்காெண்டுள்ளாேம்.

மேலும் சோவியத் ஆட்சி முறையில் இருந்த சோசலிச நாடுகளின் முதலாளிய மீட்சிக்குப் பிறகு கால் நூற்றாண்டை கடந்துவிட்ட நாம் ஆட்சி வடிவம் என்ற முறையில் நாடாளுமன்ற ஆட்சிமுறையை பின்பற்றும் இந்தியா போன்ற அரைக்காலனிய-அரை நிலப்பிரபுத்துவ நாடுகளின் மக்களிடையே அரசியல் ரீதியில் காலாவதியாக செய்வதற்கு பல்வேறு உத்திகளைக் கடைபிடிக்க வேண்டியுள்ளது.

தேர்தலை ப் புறக்கணிக்கும் செயலுத்தி மட்டுமின்றி தேர்தலில் பங்கே ற்பதும் கூட செயலுத்தி ரீதியாகப் பின்பற்றப்படுவது அவசியமாகும்

திரிபுவாதிகள் பின்பற்றும் பாராளுமன்ற் பாதைக்கும் இதற்கும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது.

இத்தகைய ஒரு காரணத்திற்காகவே முதலாளித்துவ வாக்குரிமை மீது எழுந்துள்ள மக்களின் அவநம்பிக்கையைப் பயன்படுத்தி முதலாளித்துவ நாடாளுமன்ற வடிவத்தைக் கொண்ட இந்த ஆட்சி முறையை அரசியல்ரீதியாக காலாவதியாக்கும் பொருட்டும், புரட்சிகர சோவியத் ஆட்சி வடிவத்தை மக்களிடை யே பிரச்சாரம் செய்யும் பொருட்டும் வருகின்ற மே-16 ல் நடை பெறும் தமிழக சட்டமன்ற தேர்தலில் பங்கேற்பது செயலுத்தி ரீதியில் சரியானதாகும்.

தமிழக சூழல்

தமிழக ஆளும் கட்சியான அதிமுக வின் ஜெயா அரசு பின்பற்றிய கொள்கைகள் மாநிலப் பொருளாதாரத்தை மிகப்பெரும் நெருக்கடிக்கு தள்ளியுள்ளன.

திமுக ஆட்சியின் போது இருந்த தமிழக அரசின் கடன் ரூ1,25,000 கோடி அதிமுக வின் 5 ஆண்டுகால ஆட்சிக்குப் பின்னர் 2,50,000 கோடியாக இந்த கடன் அதிகரித்துள்ளது.

இதை திமுக சொல்வது போல் அரசின் நிர்வாக திறமையின்மையால் வந்த நெருக்கடி மட்டுமல்ல,
இவ்வரசு பின்பற்றிய அரசியல் பொருளாதார கொள்கைகளின் நெருக்கடிகளால் வந்ததாகும்.

தமிழகத்தில் அருதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்த அதிமுக முந்தய திமுக அரசை காரணம் காட்டி தனக்கு ஓட்டுப் பாேட்ட தமிழக மக்களின் வயிற்றில் அடிக்கும் விதமாக பால், பேருந்து,மின்சாரம் என அனைத்துக் கட்டணங்களையும் ஜெயா அரசு உயர்த்தியது.உலக வங்கியின் உத்தரவுக்கு அடிபணிந்து ஜெயா அரசு செய்த முதல் காரியம் இது.

மூன்று அரசுத்துறை நிறுவனங்களும் திமுக ஆட்சியால் நஷ்டப்படுத்தப் பட்டுள்ளதாகவும் நஷ்டத்திலிருந்து மீட்பது எனக் கூறி மேற்கண்ட கட்டணங்களை ஜெயா அரசு உயர்த்தியது.

ஆனால் ஜெயாவின் இந்த 5 ஆண்டுகளுக்குள்ளேயே இந்த மூன்று அரசுத்துறை நிறுவனங்களும் திவால் நிலையைத்தான் அடைந்துள்ளன.

மருத்துவத் துறையிலும், சுகாதாரத் துறையிலும் ஜெயா அரசு மேற்கண்ட கொள்கைகளைத்தான் பின்பற்றியது.

மருந்தில்லா மருத்துவமனை, மருத்துவரில்லாத மருத்துவமனை தமிழகத்தில் அதிகரித்தது. உயிர் காக்கும் மருந்துகளும், குழந்தைகளுக்கான தடுப்பூசிகளும் போதிய அளவு இல்லாமல் தனியாரிடம் பெறப்பட்ட தரமற்ற தடுப்பூசிகளைப் போட்டதாலும் சேலம், தருமபுரி மாவட்ட தலைமை மருத்துவ மனைகளில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் இறந்தனர்.

பொது சுகாதாரத் துறையை தனியார்மயப் படுத்தியதாலும், நோய் தடுப்பு முறைகள் கைவிடப்பட்டதாலும் டெங்கு காய்ச்சல் போன்ற மர்ம காய்ச்சல்களால் மக்கள் மடிய நேரிட்டது

கல்வித்துறையில் உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் கொண்டுவரப்பட்ட திமுக-வின் சமச்சீர் கல்வித் திட்டத்தை தடுத்து நிறுத்தியது. சமஸ்கிருத திணிப்பையும், ஆங்கில மொழித் திணிப்பையும் ஆரம்பப் பள்ளியிலேயே துவக்கிய ஜெயா அரசு அரைகுறையான தாய் மொழி கல்விக்கும் வேட்டு வைத்தது.

தரமான நவீனக் கல்வி, 100 விழுக்காடு தேர்ச்சி என்ற பெயரில் தனியார் கல்வி கல்வி நிறுவனங்கள் ஏழை மாணவர்களை பள்ளியில் சேர்ப்பதில்லை, பள்ளியில் நூறு சதவீத தேர்ச்சிக்காக
அதிக கவனம் தரவேண்டிய, மதிப்பெண்கள் குறைவாக உள்ள மாணவர்களை சேர்ப்பதில்லை, சேர்த்தாலும் தேர்வு எழுத அனுமதி மறுப்பது என்ற வழிமுறையை தனியார் கல்வி நிறுவனங்கள் கடைபிடித்தன.

தொடக்கக் கல்வியிலும் தனியார் கல்வி நிறுவனங்கள் புற்றீசல் போல துவங்கவும் கொள்ளை லாபம் அடிக்கவும் இருந்த தரத்திற்கான அளவு கோலை ஜெயா அரசு அரசாங்க பள்ளிகளிலும் அமுலாக்கியது. பட்டுக்காே ட்டை அரசு மேல்நிலை ஆண்கள் பள்ளியில் 16 மாணவர்கள் பரீட்சை எழுதுவதற்கு மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தின் ஒப்புதலாே டு தேர்வெ ழுத அனுமதிக்கப் படாதது பத்திரிக்கை யில் வந்த சமீபத்திய உதாரணமாகும்.

உயர் கல்வியையும், தொழில்நுட்ப கல்வியையும் தனியார் மயமாக்கி வணிகமயமாக்குவதில் முந்தய திமுக ஆட்சியாேடு போட்டியிட்டது ஜெயா அரசு.

எஸ்விஎஸ் கல்லூரி மாணவிகள் 3 பேர் தற்காெலை என்பது மேற்கண்ட தனியார்மய வணிகமயத்தின் விளைவும் தொடர்ச்சியுமாகும்

ஜெயா ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் தேவர் ஜெயந்தியை அரசு விழாவாக நடத்தியது. இமானுவேல் சேகரனின் நினைவு நாளை கடைபிடித்த தாழ்த்தப்பட்ட மக்கள் மீது பரமக்குடியில் துப்பாக்கி சூடு நடத்தி 5 பேரை படுகாெலை செய்தது ஜெயாவின் காவல்துறை.

தாழ்தப்பட்டாேருக்கு எதிரான வன்காெடுமைகள் தொடர்ந்தன. தருமபுரி இளவரசன்-திவ்யா, பொறியாளர் கோகுல்ராஜ்-பிரியா இப்பாேது நடந்த சங்கர்-கவுசல்யா, காதல் ஜோடிகள் மீது சாதி வெறி அமை ப்புகள் நடத்திய படுகாெலைகள் இதற்கு உதாரணமாகும்.

அண்ணா நகர், நத்தம், கொண்டம்பட்டி ஆகிய மூன்று தாழ்த்தப்பட்ட கிராமங்கள் காவல்துறை ஆதரவாேடு சாதிவெறி அமை ப்புகளால் சூறையாடப்பட்டது. இதற்கு மேலும் உதாரணமாகும்.

விசாரணை அதிகாரியான டிஎஸ்பி விஷ்ணுப்பிரியாவை தற்கொலைக்குத் தள்ளியது மூலம் சாதிவெறி பிடித்த கொலையாளிகளை மூடி மறைத்தது. ஜெயா அரசின் காவல்துறையிலும் கூட சாதிவெறி தலைவிரித்தாடுவதும் தாழ்த்தப்பட்டாேருக்கு எதிரான வன் கொடுமைகளுக்கு மற்றுமாெரு உதாரணமாகும்.

ஊழல் வழக்கில் தண்டனை பெற்றபின் இந்துத்துவ கும்பலுடனும் முன்பு கடைபிடித்த மோதல் போக்கை மாற்றிக் கொண்டு மோடி அரசுடன் சமரசம் செய்து கொண்டது ஜெயா அரசு. அதனால் சங்கராச்சாரியை சங்கரராமன் கொலை வழக்கிலிருந்து விடுவிக்க துணை போனது. சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தை இந்து அறநிலையத்துறையிடமிருந்து (அரசிடமிருந்து) மீண்டும் தீட்சிதர்களுக்குத் திருப்பித் தந்தது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தை உச்ச நீதிமன்றம் மூலம் நீக்குவதற்கு உதவி செய்த ஜெயா ஆட்சி இந்துத்துவ கும்பலுடன் சமரசம் செய்து கொண்டு தன் மீதான ஊழல் வழக்கிலிருந்து விடுதலை பெற இவற்றையெல்லாம் பயன்படுத்திக் கொண்டது.

சட்டமன்றத்திலேயும், மக்கள் மன்றத்திலேயும் அரசியல் கட்சிகள் மீதும், மக்களின் மீதும் எதேச்சதிகார போக்கை கடைபிடித்தது. அரசை விமர்சிப்பாேர் மீது அவதூறு சட்டங்களைப் போட்டு அலைகழித்தது, ஒரு பாட்டுக்காக 124-ஏ சட்டத்தால் கைது செய்தது இவ்வரசின் எதேச்சதிகார தன்மைக்கு எடுப்பான சான்றாகும்.

மக்கள் விராேத மதுக்காெள்கையை கடைபிடித்த ஜெயா அரசு அந்நிய உள்நாட்டு சாராய முதலாளிகள் கொள்ளை லாபமடிக்க வகை செய்வதற்காக அரசு ஏகபாேக டாஸ்மாக் நிறுவனம் பனிரெ ண்டாயிரம் கடைகளை சட்டப்படியும்/சட்ட விராேதமாகவும் திறந்து நடத்தி வருகிறது.

மக்களிடமிருந்து ஒரு லட்சம் கோடியை சாராய முதலாளிகள் கொள்ளையடிக்க அனுமதித்ததுடன் தமிழக ஜெயா அரசு முப்பதாயிரம் கோடியை விற்பனை வரி என்ற பெயரில் மக்களை கொள்ளையடிக்கிறது.

ஆற்றுமணல், தாதுமணல், கிரானைட் கொள்ளை, தண்ணீர் வணிகம் போன்றவற்றின் மூலமாக தமிழக இயற்கை வளங்களை அந்நிய நாட்டு முதலாளிகள் சட்டப்படியும்/சட்ட விராேதமாகவும் சூறையாடுவதற்கு ஜெயா அரசு துணை நிற்கிறது. உயர்நீதிமன்ற தலையீட்டுக்கு பின்பே கலெக்டர் சகாயம் மூலம் ஆய்வு செய்ய ஜெயா அரசு அனுமதித்தது. மேலும் அதனை முழுமையாக விசாரிக்க பல்வேறு தடங்கல்களை உருவாக்கியது.

நீர்ப்பாசனம் மற்றும் மராமத்துப் பணிகளை செய்யாமலும், ஆறு, ஏரி, குளங்களை முறையாக தூர்வாராமலும் அதன் மீது ரியல் எஸ்டேட் முதலாளிகள் ஆக்கிரமிப்பு செய்ய ஜெயா அரசு துணை போனது. சென்னை யில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் ஆயிரக்கணக்கானாே ர் உயிரிழக்கவும், லட்சக்கணக்கானாேர் உடமையிழக்கவும் காரணமாக ஜெயா அரசு செயல்பட்டது.

மேலும் வெள்ள நிவாரண பணிகளையும் செய்யாமல் நிவாரண பொருட்களை பாரபட்சத்துடன் வழங்கியும், தொண்டு நிறுவனங்கள் அளித்த பொருட்களை பிடுங்கி ஸ்டிக்கர் ஒட்டி தாங்கள் அளிப்பது போல் நாடகமாடி ஏமாற்ற முயன்ற இழிசெயலாலும் ஜெயா அரசு மீது கடும் கண்டனங்கள் எழுந்து அசிங்கப்பட்டது.

போக்குவரத்து தொழிலாளர்கள், சர்க்கரை ஆலை ஊழியர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சத்துணவு,அங்கன்வாடி மற்றும் மக்கள் நலப் பணியாளர்கள் உள்ளிட்ட ஊழியர்களின் நியாமான எந்தவாெரு கோரிக்கையையும் நிறைவேற்றாது அவர்களை பிரித்தாளும் முறைகளை கடைப்பிடித்து போலீசை க் கொண்டு மூர்க்கமாக ஒடுக்கியது ஜெயா அரசு. மேலும் சென்னை ஐஐடி-ல் அம்பேத்கார் படிப்பு வட்ட மாணவர்களின் கருத்துரிமையை பறித்த இந்துத்துவ மோடி அரசின் ஒடுக்குமுறைகளில் கள்ள மவுனம் சாதித்து துராேகமிழைத்தது.

கடந்த ஐந்தாண்டு காலமும் மத்திய அரசின் தனியாரமய, தாராளமய கொள்கைகளை நடைமுறைப்படுத்தியது மட்டுமின்றி இந்துத்துவ பாசிச கும்பலுடன் கள்ளக் கூட்டணியை கடைபிடித்து மக்கள் விராேத ஊழலாட்சியை ஜெயா அரசு நடத்தியது

தற்பாேது நடக்க இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக கட்சியிலும்- ஆட்சியிலும் ஊழல் மற்றும் முறைகேடுகளுக்காக மந்திரிகளின் “பதவிப் பறிப்பு” நாடகம் நடத்தி மக்களை ஏய்க்கப் பார்க்கிறது.

இந்துத்துவ கும்பலுடனும், மோடி அரசுடனும் ஏற்படுத்திக் கொண்ட கள்ளக் கூட்டணியை மறைக்க தமிழக அரசு மீனவர் பிரச்சனை, காவேரிப் பிரச்சனை, ஈழப் பிரச்சனை, பெட்ராேல்-டீசல் விலை ஏற்றப் பிரச்சனை, கச்சத் தீவுப் பிரச்சனை உள்ளிட்டவற்றில் கண்டன அறிக்கை மற்றும் கடிதம் எழுதுதல் என்ற சட்டப் போராட்டம் நடத்தி மத்திய அரசுக்கு எதிராக வெற்றி கண்டதாக பீற்றிக் கொள்வதும் கூட தமிழ் மக்களின் பிரதிநிதியாக தன்னை முன்னிறுத்தச் செய்யும் ஜெயாவின் நாடகமே தவிர வேறல்ல.

அவ்வப்பாேது மாநில உரிமைக்கும், அதிகாரத்திற்கும் போராடுவது, நிலம் கையகப் படுத்துதல் சட்டம், சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் சட்டம் ஆகியவற்றில் ஜெயா அரசு காட்டிய எதிர்ப்பை உதாரணமாகக் கூறலாம்.

இதிலும் கூட இச்சட்டங்களின் மக்கள் விராேத புதிய காலனிய ஆதிக்க தன்மையை எதிர்க்காமல் சிறப்புப் பொருளாதார மண்டலம், நிலக் கையகப்படுத்துதல், தனியார் மின் நிலையங்கள், மீத்தேன் ஆய்வு ஆகியவற்றில் இந்துத்துவ கும்பலின் விவசாயிகள் விராேதப் போக்கை அதிமுக ஆட்சியும் பின்பற்றியது.

தொகுத்துக் கூறினால் பெரும்பான்மை பலம் கொண்ட ஜெயாவின் ஐந்தாண்டு கால ஆட்சி முந்தய மைனாரிட்டி திமுக ஆட்சியைப் போன்றதுதான்.அல்லது அதைவிடவும் மோசமானதுதான்.

கீழ்க்கண்ட மூன்று முக்கியப் பிரச்சனைகளை ஜெயா அரசு தீர்வு கண்ட விதத்தின் மூலம் இதனை நாம் தெரிந்து கொள்ளலாம்.

1) சட்டசபையில் அவசரக் கால பயன்பாட்டுக்குரிய விதி 110ஐ 1000-க்கும் மேல் எவ்விதக் காரணமுமின்றி சட்டமன்ற விவாதமுமின்றி, எதிர்க் கட்சிகளின் ஒப்புதலுமின்றி எதேச்சதிகாரமாக அனைத்துத் துறை சட்ட திட்டங்களை அறிவிப்பதற்காகவே விதி 110ஐ பயன்படுத்தியது.

2) மின் வெட்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காண மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியது. கண்ணை விற்று சித்திரம் வாங்கியது போல் ஜெயா அரசு மின்வாரியத்தையே விற்று தனியார்களிடம் மின்சாரத்தை கூடுதல் விலைக்கு வாங்கி மின்வெட்டுப் பிரச்சனைக்கு தீர்வு கண்டது.This entry was posted on January 8, 2017.Leave a comment

சர்வதேச-தேசிய சூழலும் நமது கடமைகளும்♦ இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ)யின் அகில இந்திய மாநாட்டு அரசியல் தீர்மாணம்!(வரைவு)

Jan8

1.இந்தியப் புரட்சியை வெற்றிகரமாக முழுமையடையச் செய்ய, சர்வதேசிய – தேசிய சூழல்களை மீளாய்வு செய்வதும், மதிப்பீடு செய்வதும் அவசியமாகும். இதன் மூலம் மட்டுமே நாட்டினுள் நடைபெறும் வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சி மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஒடுக்கப்பட்ட தேசங்களும் மக்களும், மெய்யான சூழலில் எதிரிடும் போராட்டங்கள் ஆகியவற்றைச் சரியான கண்ணாே ட்டத்துடன் பரிசீலித்து அடைய வேண்டிய குறிக்காேளை நோக்கி வழிநடத்த முடியும்.

2.#சர்வதேச சூழல்:-

நமது பரிசீலனைக்கு அடிப்படையாக, நமது அடிப்படை ஆவணமான கட்சித் திட்டத்தில் வகுத்தளிக்கப்பட்டுள்ள சர்வதேச அரங்கில் காணப்படும் அடிப்படை முரண்பாடுகளையும், அவை எவ்வாறு செயல்படுகின்றன என்பதையும் முதலில் காண்பாேம்.

1.ஏகாதிபத்தியங்களுக்கும் உலகின் ஒடுக்கப்பட்ட தேசங்கள் மற்றும் மக்களுக்கும் இடையேயான முரண்பாடு.

2.ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையேயும், ஏகபாேகக் குழுக்களுக்கும் இடையேயும் உள்ள முரண்பாடுகள்.

3.மூலதனத்திற்கும் உழைப்பிற்கும் இடையேயான முரண்பாடு.

4. ஏகாதிபத்தியத்திற்கும் சோஷலிசத்திற்கும் இடையேயான முரண்பாடு.

3.இங்கு நான்காவது முரண்பாடாக ஏகாதிபத்தியத்திற்கும் சோஷலிச முகாமிற்கும் இடையிலான முரண்பாடு என நாம் முன்னர் குறிப்பிட்டதன் பொருள் மகத்தான சோஷலிச நாடுகளாக இருந்த சோவியத் சோஷலிச ஒன்றியம், சீனம் ஆகியவற்றால் தலைமை தாங்கப்பட்ட சோஷலிச சக்திகளுக்கும், ஏகாதிபத்தியத்திற்கும் இடையேயான முரண்பாடு என்பதே பொருளாகும்.
4.நமது ஆய்வின் முதன்மையான நோக்கம், உலகைச் சுற்றிலும் நடைபெறும் வளர்ச்சிப் போக்குகளை காண்பதாேடு மேற்குறிப்பிட்டுள்ள முரண்பாடுகள் எவ்வாறு முனைப்புடன் செயல்படுகின்றன என்பதைக் கண்டறிவதாகும்.
5.புறநிலையில் ஏகாதிபத்திய சக்திகள் பிளவுண்டு இருப்பதாேடு மட்டுமின்றி, ஒன்றன் பின் ஒன்றாக நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றன.
உலகமயமாதலின் மூலம் ஒடுக்கப்பட்ட தேசங்கள், நாடுகள், ஆகியவற்றின் நலன்களைப் பலி கொடுத்துத் தங்களுக்கிடையேயான மோதுதலை தவிர்க்க விரும்புகின்றனர்.

அதே நேரத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்தப் போக்கின் வழியாக தனது மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ள முயல்கிறது.

ஆனால் நிகழ்வுகள் அவர்கள் எதிர்பார்ப்பது போல நடைபெறுவதாக இல்லை.

2008-ம் ஆண்டு நெருக்கடியிலிருந்து மீண்டுவிட்டதாக அவர்கள் உலகை நம்ப வைக்க முயன்றாலும் அவர்களால் ஒரு போதும் முழுமையாக நெருக்கடியிலிருந்து மீள முடியவில்லை.

நெருக்கடிகள் தொடரும் நிலையில் ஐராேப்பாவில் வளர்ந்துள்ள அச்சந்தரக்கூடிய சூழலும், சீனத்தில் யுவானின் (சீன நாணயம் -மொ.ர்) மதிப்புக் குறைக்கப்பட்டதும் சிற்றலைகளாகத் தோற்றமெடுத்து உலகளாவிய பேரலையாக சுழன்றடிக்கும் வகையில் வடிவெடுத்துள்ளன.இது உலகமயமாதலை தொடர்ந்த நிகழ்வு என்றே கருத இயலும்.

6.இதன் விளைவாக ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையேயான முரண்பாடும், ஏகாதிபத்திய நாடுகளுக்கும் உலகின் ஒடுக்கப்பட்ட தேசங்கள் மற்றும் மக்களுக்கும் இடையிலான முரண்பாடும் தீவிரமடைந்து வருகின்றன.
7.முன்னர் அமெரிக்க ஏகாதிபத்தியம் மத்திய கிழக்கு நாடுகளின் எண்ணை வளத்தைச் சூறையாடுவதை நோக்கமாகக் கொண்டு நேட்டாே படைகளை அணிதிரட்டியும், வழி நடத்தியும் வருவதாேடு அதன் மூலம் தலையீடும் செய்தது.ஈரான் மீதும் ஆப்கானிஸ்தான் மீதும் போர் தொடுத்தது.

இவ்விரு நாடுகளும் கிழக்கத்திய மற்றும் மத்திய கிழக்கு ஆசியாவின் நுழை வாயில் என்பதாேடு சீனத்தின் எல்லையோரத்தில் அமைந்துள்ள மூலயுக்தி ரீதியில் முக்கியத்துவமுள்ள நாடுகளும் ஆகும்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் ஈராக் மீதான ஐக்கிய நாடுகள் அவையின் தீர்மாணத்தை காலடியில் போட்டு மிதித்து ஈராக்கை ஆக்கிரமித்த போது இது போன்ற நடவடிக்கைகளில் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஈடுபடுவதை எதிர்க்கும் வகையில் ரஷ்யாவும், சீனமும் முனைப்பான பாத்திரம் எதையும் வகிக்கவில்லை.

அமெரிக்க ஏகாதிபத்தியம் நேட்டாே நாடுகளுடன் கூடிக்காெண்டு லிபியா, எகிப்து, சோமாலியா, யேமன் போன்ற நாடுகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் தலையீடு செய்து ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்தின.

2008-ம் ஆண்டு நெருக்கடிக்கும் பின்னர் நிலைமைகளில் மாற்றம் ஏற்பட்டன.

மேலும் ஈராக் ஆப்கானிஸ்தான் மற்றும் பிற இடங்களில் கைப்பாவை அரசுகளை நிறுவியதன் முலம் நம்பிக்கை கொண்டிருந்த நாடுகளில் தொடர்ந்து எதிர்ப்பு போராட்டங்கள் தொடர்வதால் கொள்ளையைப் பங்கிட்டுக் கொள்வதில் மேற்கு ஐராேப்பிய நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் முரண்பாடுகள் வளர்ச்சியடைந்தன.

அதே நேரத்தில் ரஷ்யாவும் சீனமும் இலங்கையைப் போன்ற சில மத்திய ஆசிய நாடுகளுடன் கூட்டிணைவு கொண்டன.

எனவே அமெரிக்கா, ஈரான் மற்றும் சிரியா ஆகிய நாடுகளின் நிலைத்தன்மையை குலைக்க முயன்ற போது சில ஏகாதிபத்திய நாடுகளிடமிருந்தே எதிர்ப்புக் கிளம்பியது.
8.ஜெர்மனியினால் தலைமை தாங்கப்படும் ஐராேப்பிய ஒன்றியம் பொருளாதார ரீதியிலும் புவிசார் அரசியல் ரீதியிலும் பலமடைந்து வருகின்றன.

உலக வர்த்தகத்தில் யூராே (EURO) (ஐராே ப்பிய ஒன்றிய நாணயம்) டாலருக்கு எதிரான போட்டியாளனாக உருவெடுத்துள்ளது.

இன்னமும் ராணுவ உள்ள ரஷ்யாவுக்கும், சீனத்திற்கும் இடையிலான கூட்டானது தங்களின் புவிசார் அரசியல் நலனுக்கேற்ப பிற நாடுகளை தங்களுடன் பொருத்திக் கொள்ளும் முயற்சியாக இரண்டு வகை பொருளாதார கூட்டமைப்புகளை கட்டியமைத்து வருகின்றன.

ஷாங்காய் ஒத்துழைப்பு (SOE) அமைப்பு (BRICS) பிரிக்ஸ் ஆகியவையே இவை. இதில் இவற்றுள் ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் அமைப்பு என்பது இதன் உறுப்பு நாடுகள் வர்த்தகத்தை இணைந்து நடத்துவதற்கான அமைப்பாகும்.

அண்மையில் பாகிஸ்தானும் இந்தியாவும் இதன் முழு உறுப்பினர்களாக ஆகியுள்ளனர்.

ஈரானுடன் கூட இலங்கை மற்றும் பல மத்திய ஆசிய நாடுகளுடன் ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் அமைப்பானது அமெரிக்காவுடன் போட்டியிடுவதற்கான வலிமையான பொருளாதார வர்த்தக அமைப்பாக உருவெடுத்துள்ளது.

அதே நேரத்தில் “பிரிக்ஸ்” (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தெற்கு ஆப்ரிகா) கூட்டமைப்பு நாடுகள் அன்மைக் காலமாக பொருளாதார ரீதியிலும் அரசியல் ரீதியிலும் முக்கியத்துவமுள்ள நாடுகளாக ஆகியுள்ளன.
9.இந்த கூட்டமைப்புகளும் கூட ஒரே சீரான தன்மை கொண்டவை அல்ல. நெருக்கடி ஆழப்பட்டு வரும் நிலையில் இவர்களுக்குள்ளான முரண்பாடுகளும் வளர்ச்சியடைந்து வருகின்றன.

இதன் விளைவாக ஐராேப்பிய ஒன்றியத்தினுள் ஜெர்மனி தனது மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ள முயலும் போது இங்கிலாந்தின் ஆளும் வர்க்கங்களிடையே கடுமையான எதிர்ப்பு தோன்றியுள்ளது.

பிரான்சிலும் கூட ஐராேப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது.

மக்களின் வாழ்வின் மீது அழிவு தரத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் ஐராேப்பிய ஒன்றியத்திற்கும் அதன் உடும்புப் பிடிக்கும் எதிராக ஐராேப்பிய ஒன்றிய உருப்பு நாடுகளைச் சேர்ந்த மக்கள் எழுச்சியடைந்து வருகின்றனர்.
10.இவ்வாறாக உலக மேலாதிக்கத்தை நிறுவும் அமெரிக்காவின் நோக்கமானது மக்களிடமிருந்து மட்டுமல்லாமல் பிற ஏகாதிபத்திய நாடுகளின் தடையையும் எதிரிட்டு நிற்கிறது.

ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையேயான முரண்பாடுகளும் கூர்மையடைந்து வருகின்றன.

ஏகாதிபத்திய நாடுகளிடையே மோதுதலும் குலாவலும் இருந்து வருகின்றன.

அவர்கள் சில காலங்களுக்கு குலாவிக் கொண்டாலும் மோதுதலே முன்னுக்கு வந்து கொண்டிருக்கிறது.
11.இத்தகைய பின்னணியில் இந்தியாவின் நிலை என்ன? உலகம் முழுவதிலுமுள்ள எண்ணெய் மூலாதாரங்களையும், வழித்தடங்களையும் கட்டுப்படுத்தும் அமெரிக்க மூல யுத்திக்கு எதிராக சீனம் தனது நிறத்தைை மாற்றிக்காெண்ட பிறகு சீனா ஒரு சக்திவாய்ந்த நாடாக, குறைந்தபட்சம் ஆசியாவில் ஒரு வாய்ந்த நாடாக ஆகும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாேடு அதற்காக தனக்கே சொந்தமான மூல யுக்திகளை வளர்த்தெடுத்து வருகிறது.

சீனம் தெற்கு சீனக் கடற்பகுதியை தனது மூலயுக்தி முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமாக பிரகடனப்படுத்தியுள்ளது.

தெற்கு சீனக் கடற்பகுதி என்பது இந்து மகா சமுத்திரத்தையும் பசிபிக் பெருங்கடலையும் இணைக்கும் முக்கியமான கடல்வழித்தடமாகும்.

மேலும் சீனம் தனது உறவை இலங்கை,பாகிஸ்தானம்,பங்களாதேஷ் ஆகிய நாடுகளுடன் வளர்த்துக்காெண்டுள்ளது.

இந்நாடுகளில் துறைமுகங்களையும், கடற்படை வசதிகளையும் வளர்ச்சியடையச் செய்து வருகிறது.

தென்கிழக்கு ஆசியாவில் மியான்மர்,தாய்லாந்து,லாவாேஸ்,கம்பூச்சியா ஆகிய நாடுகளுடன் தனது நல்லுறவை வளர்த்தெடுத்து வருகிறது.

இத்தகைய சூழலில் அமெரிக்கா ஆசிய-பசிபிக் பிரதேசத்தில் தனது மூலயுக்தியை விரிவடையச் செய்ய முயற்சித்து வருகிறது.

அது அன்சூஸ் (ANZUS) அதாவது ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைக் கொண்ட கூட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நாடுகள் ஜப்பான், பிலிப்பைன்ஸ், இந்தியா ஆகிய நாடுகளையும் இக்கூட்டமைப்பில் இணைத்து விரிவடையச் செய்து வருகின்றனர்.

இந்தியா குறிப்பாக நரேந்திரமோடி ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகு விருப்பார்வத்துடன் இக் கூட்டமைப்பில் சேர்ந்துள்ளது.

மேலே குறிப்பிட்டுள்ள நாடுகளுடன் நட்புறவை வளர்த்து வருவது மட்டுமல்லாமல் இராணுவப் பரிமாற்றங்களையும் வளர்த்தெடுத்து வருகிறது.

அண்மையில் பசுபிக் தீவுகளின் கூட்டத்தினைக் கூட்டி செசல்ஸாேடு (SECHELLS) சிறப்பு நல்லுறவுஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

தனது மேலாதிக்க்தை நிலை நிறுத்திக் கொள்வதற்கான அமெரிக்காவின் உலகளாவிய திட்டத்திற்கு இந்தியா மூலயுக்தி ரீதியான ஒரு பங்காளியாக ஆகியுள்ளது.
12.ஆனால் இந்த அரைக்காலனிய ஆட்சிமுறையின் கீழ் இந்திய ஆளும் வர்க்கங்களாே, அல்லது ஏகாதிபத்திய எசமானர்களுக்கு இந்திய ஆளும் வர்க்கங்கள் தொண்டூழியம் புரியும் நிலையில் அந்த ஏகாதிபத்திய எசமானர்களாே ஒத்தக் கருத்துடையோராக இல்லை.

குறிப்பாக 1960-களின் இறுதியில் ரஷ்யா இந்த நாட்டின் அரசியல் ராணுவ விவகாரங்களில் அழுத்தமான செல்வாக்கை கொண்டு திகழ்ந்தது. பொருளாதார செல்வாக்கு தாழ்நிலையில் இருந்தது.

ஆனால் அந்நாடு இப்பாேது மீண்டும் எழுச்சி பெற்று வருகிறது. எனவே இந்தியா ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் அமைப்பில் (SOE) உறுப்பு நாடாக சேர்கிறது.

அமெரிக்கா, ஜப்பான் மற்றும் பிற நாடுகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களையும் போன்றே இந்தியா ரஷ்யாவுடன் அணு தொழில் நுட்பத்தை அமைதிப்பூர்வமாக பயன்படுத்தும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. முன்னர் அமெரிக்க நிர்பந்தத்தால் தடை செய்யப்பட்டிருந்த ஈரானிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை கொண்டுவரும் திட்டத்திற்கு ரஷ்யாவின் மத்தியஸ்தம் மூலம் வாசலைத் திறந்துவிட விரும்புகிறது.
13.இவையெல்லாம் பல்வேறு ஏகாதிபத்திய நாடுகளின் உலகளாவிய மூலயுக்திகளில் இந்தியா முக்கியமான புவிசார் அரசியல் நிலைகளில் வைக்கப்பட்டிருப்பதை காட்டுகின்றன.

மோடியின் நடவடிக்கைகளை, ஒபாமா வெளிப்படையாகப் புகழ்ந்ததற்கு காரணங்கள் இல்லாமலிருக்க முடியாது. அதே நேரத்தில் அமெரிக்கா இப்பாேதைக்கு ஒரு யுத்தத்தை நடத்தத் தயாராக இல்லாமல் இருப்பதாலும், அரசியல் சதுரங்க விளையாட்டில் ஈடுபட்டிருப்பதாலும், இந்தியா ஊசலாட்டத்தில் உள்ளது.

பிற நாடுகளும் அமெரிக்காவின் ராணுவத்தை எதிரிடும் தைரியம் கொண்டனவாக இல்லை. அண்மையில் உக்ரைன் பிரச்சனையில் அமெரிக்காவிற்கும் அதன் நேட்டாே கூட்டாளிகளுக்கும் எதிரான நிலையை எடுத்தது. அங்கும் கூட நேட்டாே நாடுகள் ஐக்கியப்பட்டு இருக்கவில்லை.
14.இத்தகைய சூழலில் இந்தியா ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நிலவும் நிலைமையைக் கருத்தில் கொண்டும், அரசியல் சதுரங்கப் பலகையில் நிலவும் சக்திகளுக்கிடையேயான சமநிலைக்கு ஏற்பவும், அண்டை நாடுகளுடன் நட்பை வளர்த்து வருகிறது.

சீனம், பாக்கிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளுடனான உறவில் (கடுமையான நிலை, மென்மையான நிலை) ஊசலாட்டத்தனமான நிலையை எடுத்து வருவதைக் காண்கிறாேம். சீனத்திடமிருந்து இலங்கையை விலகச் செய்ய இந்தியா முயற்சிகளை மேற்காெண்டு வருகிறது.

பங்களாதேஷ் விஷயத்திலும் இதுவே உண்மையாகும். இந்த அம்சத்தில் நேபாளம் ஒரு குறிப்பான போக்கை வெளிப்படுத்துவதாக உள்ளது. அதனைப் பின்னர் விவாதிப்பாேம்.
15.இதுவரை ஒரு குறிப்பிட்ட முரண்பாட்டை விவாதித்து வந்தாேம், பிற முரண்பாடுகளும் உள்ளன.

ஏகாதிபத்தியத்திற்கும், ஒடுக்கப்பட்ட நாடுகள் மற்றும் மக்களுக்கிடையேயான முரண்பாடு வளர்ந்து வருவதாேடு, அடிக்கடி ஆயுதம் தாங்கிய மோதுதல் என்ற வடிவத்தை எடுத்து வருகின்றன.

ஈராக்கிலிருந்தும், ஆப்கானிஸ்தானிலிருந்தும் அமெரிக்கா தனது இராணுவப் படைகளை முழுமையாக திரும்பப் பெறும் நிலையில் இல்லை.

அண்மையில் அமெரிக்கா 500 இராணுவ அதிகாரிகளை இலங்கைக்கு அனுப்பியுள்ளது. ஒடுக்கப்பட்ட தேசங்களின் மக்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றனர்.

ஈரானுடன் அமெரிக்கா ஒரு சமரசத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதாயிற்று. சிரியா ஏகாதிபத்தியத்தின் தொண்டையில் உள்ள ஒரு முள்ளாகவே இருந்து வருகிறது.

லத்தீன் அமெரிக்காவில் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் வெனிசூலாவின் சாவேஸ் போன்ற தேசியவாத சக்திகளின் சவாலை எதிரிட வேண்டியுள்ளது.

இச்சக்திகளால் புரட்சிகர மாற்றத்தைக் கொண்டுவர முடியாதென்பதும் அடிக்கடி அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் சமரசம் செய்து கொள்ளவும் நேரிடுகிறது.

ஆனால் அமெரிக்க ஏகாதிபத்தியம் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்கிறது. இந்தப் பிரதேசத்தின் ஒடுக்கப்பட்ட தேசங்கள் மற்றும் மக்களின் எதிர்ப்பின் விளைவாக பல தலைமுறைகளுக்குப்பின் அமெரிக்கா கியூபாவுடன் சமரசத்திற்கு வர நேரிட்டுள்ளது என்பதாேடு பொருளாதாரத் தடையையும் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.
16.இந்தப் பின்னணியில் முஸ்லீம் நாடுகளாக உள்ள நாடுகளை இலக்காகக் கொண்டே அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு தன்மை கொண்ட மூர்க்கத்தனமான தாக்குதல்கள் தொடுக்கப்படுகின்றன.

இந்த நாடுகளில் கடுமையான எதிர்ப்பு வலுத்து வருகிறது. முன்னர் ஆப்கானிஸ்தானில் சோவியத் சோசலிச ஒன்றியத்தின் (USSR) ஆக்கிரமிப்பை எதிர்த்து அமெரிக்க ஏகாதிபத்தியம் தாலிபான்களுக்கு மட்டுமல்லாமல் அல்காெய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவியதாேடு, அவர்களின் பயங்கரவாத செயல்களுக்கு உடந்தையாகவும் இருந்தது, இத்தருவாயில் 9/11 நிகழ்வானது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைகளுக்கு ஒரு ஆயுதத்தை அளித்தது.

அவர்கள் எல்லா எதிர்ப்பு இயக்கங்களையும் பயங்கரவாத நடவடிக்கைகள் என அழைத்து “பயங்கரவாதத்திற்கு எதிரான உலகப் போர்” என்ற பெயரில் ஒரு போரைப் பிரகடனப்படுத்தினர். பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடுவது என்ற பெயரில் அவர்கள் பிற எல்லா நாடுகளையும் அணிதிரட்டத் தொடங்கினர்.
17.ஆனால் அவர்கள் பாலஸ்தீனத்தில் நூற்றுக் கணக்கான குழந்தைகள் கொல்லப்பட்ட போது, அவர்கள் அதனைக் கண்ணிருந்தும் காணாத குருடர்களாக இருந்தனர். பாலஸ்த்தீனியர்கள் இஸ்ரேலுக்கு எதிராக ஒரு நீண்ட கால யுத்தத்தை நடத்தி வருவதாேடு மட்டுமல்லாமல் அமெரிக்காவின் சதிகளையும் எதிர்த்துப் போராடி வருகின்றனர்.

18.நேபாளத்தில் பத்தாண்டு கால உள்நாட்டு யுத்தத்திற்குப் பின்னர் ஒரு அரசியலமைப்புச் சட்டத்தை தயாரிக்க ஒரு அரசியல் நிர்ணய சபை தேர்ந்தெடுக்கப் பட்டது.

முதல் அரசியல் நிர்ணய சபையால் இரண்டு ஆண்டுகளுக்குள் அரசியல் அமைப்புச் சட்டத்தை இறுதி செய்ய முடியவில்லை.

பின்னர் இன்னாெரு அரசியல் நிர்ணய சபை தேர்ந்தெ டுக்கப்பட்டது, தற்பாேது மன்னராட்சியை அகற்றியும் நேபாளத்தை ஒரு ஜனநாயக குடியரசு என அறிவித்தும், ஓர் அரசியல் அமைப்புச் சட்டம் அதிகாரப்பூர்வமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அரசியல் அமை ப்புச் சட்டம் நேபாளத்தை ஒரு இந்து இராஜ்யம் என்பதற்குப் பதிலாக ஒரு மதச்சார்பற்ற அரசாக அறிவித்துள்ளது.

ஆனால் நேபாளத்தை ஏழு பிரதேசங்களாக பிரித்தது தராய் பிரதேச மக்களிடம் மாதேசி மற்றும் தாரா சமூகத்தினரிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தெராய் பிரதேசத்தில் சுயாட்சிக்கான கிளர்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

சீனம் இந்தியா என்ற இரு பெரும் நாடுகளிடையே சிக்கியிருக்கும் விரும்பத்தக்கதல்லாத நிலையிலுள்ள ஒரு நாடு என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த இரு நாடுகளுமே நேபாளத்தை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர விரும்பும் நாடுகளாகும்.

19.ஒடுக்கப்பட்ட தேசங்களும், நாடுகளும் மட்டுமல்லாமல் கிரீஸ் (Greece) போன்ற குறை வளர்ச்சியுள்ள நாட்டு மக்களையும் பொருளாதார நெருக்கடி போராட்டப் பாதையில் அணிதிரளச் செய்துள்ளது.

இந்தப் போராட்டங்கள் ஏகாதிபத்திய சக்திகளுக்கும், சூழ்ச்சிகளுக்கும் எதிரான பிரதிபலிப்பே ஆகும்.

கிரீஸ் மக்கள் “No” அதாவது ஏற்க முடியாது என மறுப்புத் தெரிவித்து வாக்களித்ததன் மூலம் உலக நிதியம் (IMF ) ஐராேப்பிய மத்திய வங்கி ECB ஐராே ப்பிய ஆணையம் European Commission ஆகிய மும்மூர்த்திகளின் Teolka திட்டங்களுக்கு எதிராக எந்த சூழலையும் எதிரிட்டுப் போராடத் தயாராகவுள்ளாேம் என உரத்துக் குரலெழுப்பி தெளிவான சமிக்ஞையைக் காட்டியுள்ளனர்.

20.”No” என மறுப்புத் தெரிவித்து வாக்களித்த பின்னரும் கூட சைன்சா Synza வின் தலைவரும் பிரதம அமைச்சருமான திப்ராஸ் Tsipras உள்ளிட்ட கிரீசின் தலைவர்கள் ஜெர்மனியினால் வழி நடத்தப்படும் மும்மூர்த்திகளின் Teolka அழுத்தத்திற்கு அடிபணிந்தனர்.

ஆனால் மக்களாே தெருக்களில் இறங்கிப் போராடினர்.

திப்ராசின் அமைச்சரவையிலிருந்து பல அமைச்சர்கள் விலகி “யூராே மண்டல சர்வாதிகாரத்தை உடைத்தெறிவாேம்” என்ற அறை கூவலை முன் வைத்து “பாப்புலர் யூனிட்டி பார்ட்டி” என்ற கட்சியைத் தொடங்கியுள்ளனர்.

கிரீசில் போராட்டம் முன்னேறிக் கொண்டிருக்கிறது.
21.எனவே ஏகாதிபத்தியத்திற்கும் ஒடுக்கப்பட்ட தேசங்கள் மற்றும் மக்களுக்கும் இடையிலான முரண்பாடு வளர்ந்து வருவதாேடு மட்டுமல்லாமல் அதுவே முதன்மை முரண்பாடாக தொடர்ந்து வருகிறது என்று தெளிவாகக் கூறலாம்.

இதன் இருத்தலும் வளர்ச்சியும் ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையிலான முரண்பாடு உள்ளிட்ட பிற முரண்பாடுகளின் இருத்தலையும் வளர்ச்சியையும் பாதிக்கச் செய்வதால் இதுவே #முதன்மையான முரண்பாடு ஆகும்.
22.உலகந் தழுவிய நெருக்கடியானது மூலதனத்திற்கும் உழைப்பிற்கும் இடையிலான முரண்பாட்டை வளர்ச்சியடையச் செய்யும் ஒரு சூழலை உருவாக்கியுள்ளது என்பது தெளிவாகும்.

இதற்கான முக்கியமான எடுத்துக்காட்டு “வால் தெருவைக் கைப்பற்றுவாேம்” என்ற இயக்கமாகும்.

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பல பகுதிகளில் இருந்தும், பிற நாடுகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு நாட்கணக்கில் முகாமிட்டு உலகமயமாக்குதலுக்கும் அதன் விளைவுகளுக்கும் எதிராகக் கடும் கண்டனத்தைத் தெரிவித்தனர்.

தொடர்வண்டித் தொழிலாளர்கள், ஐராேப்பாவின் சுரங்கத் தொழிலாளர்கள் ஆகியாேர் தெருவில் இறங்கி கொடுஞ் சீற்றத்துடன் போராடினர்.

23. உலக மக்களின் போராட்டமானது உலக முதலாளித்துவத்தின் அறைகூவலான “நாகரிகத்தின் முடிவு” என்ற முழக்கம் மோசடியானது மட்டுமின்றி அப்பட்டமான பொய் என்பதையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

எதிர்காலம் முதலாளித்துவமல்ல, எதிர்காலம் சோசலிசத்திலும், கம்யூனிசத்திலுமே உள்ளடங்கியுள்ளது.

24.இத்தகைய சூழலில் கம்யூனிஸ்ட்டுகள் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மக்களை அணிதிரட்டுவதில் முதன்மையான பாத்திரத்தை வகிக்க வேண்டும்.

ஆனால் சோவியத் ஒன்றியம் முதலாளித்துவப் பாதையை மேற்காெண்ட பிறகு சிதறுண்டு போனது.

மக்கள் சோசலிச சீனத்தின் மீது நம்பிக்கை கொண்டிருந்தனர்.
ஆனால் சீனமும் கூட முதலாளித்துவப் பாதையையே மேற்காெண்டது, ஆனால் சீனம் பிற ஏகாதிபத்திய நாடுகளுடன் போட்டியிட்டு தனது செல்வாக்கு மண்டலத்தை நிறுவி சக்தி வாய்ந்த ஆசிய நாடாகவதற்கு கடுமையாக முயற்சித்துக் கொண்டிருக்கிறது.
இது இரண்டு வகைப்பட்ட பிரச்சனைகளை உருவாக்கியுள்ளது.
ஒன்று ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஒரு சோசலிச முகாம் இல்லை என்பதாகும், சோசலிச நாட்டின் உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையின்றி கம்யூனிஸ்ட் கட்சிகள் தாங்களாகவே போராடியாக வேண்டும்.
இரண்டாவதாக மிக முக்கியமானது யாதெனில் உலக முழுவதிலுமுள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்நாட்டளவிலும், வெளிநாட்டளவிலும் பிளவுண்ட நிலையில் உள்ளன.
இதற்கான பொருள் அவர்களிடையே கருத்தியல்-அரசியல் ஐக்கியம் இல்லாமலிருக்கிறது என்பதே ஆகும்
உலகத்திலுள்ள மக்கள் எவ்வாறு சோவியத் சோசலிச ஒன்றியமும் சீனமும் முதலாளித்துவப் பாதைக்குத் திரும்பின என்பது பற்றியக் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இது போன்ற வினாக்களுக்கு கம்யூனிஸ்ட்டுகள் தெளிவான விடையளிக்க முன்வர வேண்டும்.
பல்வே று நாடுகளில் உள்ள கம்யூனிச இயக்கத்தின் சூழல்களை ஆய்வதற்கான கடமையை நாம் மேற்காெண்டாக வேண்டும்.
25.எனவே கம்யூனிஸ்ட்டுகள் சவால் மிக்க கடமையை எதிரிட்டு நிற்கின்றனர்.
ஒரு புறத்தில் மக்களின் போராட்டங்களை நடத்திக் கொண்டே மறுபுறத்தில் சோசலிசத்தை நோக்கி கருத்தியல், அரசியல் தளங்களில் தங்களையும் மக்களையும் ஆயத்தப்படுத்த வேண்டும்.
இதில் தோல்வி ஏற்படுமானால் மக்கள் போராட்டங்கள் வழி விலகிச் செல்லும்.
ஏற்கெனவே அமரெிக்க ஏகாதிபத்தியத்தின் தாக்குதல்களும், அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளால் கிளப்பிவிடப்படும் இஸ்லாமிய பீதியும் இஸ்லாமிய மூலாதாரத்தைக் கொண்ட இளைஞர்களையும், தேசபக்தர்களையும் “ஜிகாத்” என்ற பெயரில் பயங்கரவாதப் பாதையை மேற்காெள்ளச் செய்வதைக் காண முடிகிறது.
இது போன்ற பாதையை மேற்காெள்ளச் செய்வதற்கு சில காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
என்றாலும் இது போன்ற பாதை சந்தேகத்திற்கு இடமின்றி தவறான பாதையில் வழி விலகச் செய்யும்.
குருட்டுத்தனமாக குறுகிய பாதையில் இழுத்துச் செல்லும்.
இறுதியில் அவர்களுக்குத் தோல்வியையே ஏற்படுத்தும்.
மார்க்சிய லெனினியத்தை அடிப்படையாகக் கொண்ட மக்களின் போராட்டங்கள் மட்டுமே ஏகாதிபத்தியங்களுக்கு எதிரான வெற்றியை ஏற்படுத்தும் என்பதை யும் புரிந்து கொண்டாக வேண்டும்.
கம்யூனிஸ்ட்டுகள் தெளிவான விடையளிக்க முன்வர வேண்டும். பல்வேறு நாடுகளில் உள்ள கம்யூனிச இயக்கத்தின் சூழல்களை ஆய்வதற்கான கடமையை நாம் மேற்காெண்டாக வேண்டும்.
26. எனவே கம்யூனிஸ்ட்டுகள் சவால் மிக்க கடமையை எதிரிட்டு நிற்கின்றனர்.
ஒரு புறத்தில் மக்களின் போராட்டங்களை நடத்திக் கொண்டே மறுபுறத்தில் சோசலிசத்தை நோக்கி கருத்தியல், அரசியல் தளங்களில் தங்களையும் மக்களையும் ஆயத்தப்படுத்த வேண்டும்.
இதில் தோல்வி ஏற்படுமானால் மக்கள் போராட்டங்கள் வழி விலகிச் செல்லும்.
ஏற்கெனவே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தாக்குதல்களும், அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளால் கிளப்பிவிடப்படும் இஸ்லாமிய பீதியும், இஸ்லாமிய மூலாதாரத்தைக் கொண்ட இளைஞர்களையும், தேச பக்தர்களையும் “ஜிகாத்” என்ற பெயரில் பயங்கரவாதப் பாதையை மேற்காெள்ளச் செய்வதைக் காணமுடிகிறது.
இது போன்ற பாதையை மேற்காெள்ளச் செய்வதற்கு சில காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
என்றாலும் இது போன்ற பாதை சந்தேகத்திற்கு இடமின்றி தவறான பாதையில் வழிவிலகச் செய்யும்.
குருட்டுத்தனமாக குறுகிய பாதையில் இழுத்துச் செல்லும்.
இறுதியில் அவர்களுக்குத் தோல்வியையே ஏற்படுத்தும்.
மார்க்சிய லெனினியத்தை அடிப்படையாகக் கொண்ட மக்களின் போராட்டங்கள் மட்டுமே ஏகாதிபத்தியங்களுக்கு எதிரான வெற்றியை ஏற்படுத்தும் என்பதைப் புரிந்து கொண்டாக வேண்டும்.
கம்யூனிஸ்ட்டுகள் இதற்கான பொறுப்பைத் தோள்களில் சுமக்க முழு வீச்சுடன் விரைந்து செயல்பட வேண்டும்.

வெறும் சொல்லாடல்கள் எந்தவிதத்திலும் பயனளிக்காது.

மார்க்சியத்தையும் லெனினியத்தையும் செயலுக்கான வழிகாட்டியாகக் கொண்டு ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போரிடுவதற்கு கருத்தியல், அரசியல், பண்பாடு ஆகிய அனத்து அம்சங்களிலும் நம்மை நாமே வளர்த்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
27. இந்தப் பின்னணியில் உலகமயமாக்கல் போக்கானது கம்யூனிஸ்ட்டுகளின் முன்னால் ஒரு முக்கியமான கடமையை முன்நிறுத்தியுள்ளது.

இந்த உலகமயமானது உலக முழுவதையும் ஆள்வதற்கு ஏற்ற வகையில் ஒருங்கிணைக்கப்பட்ட நிதிமூலதன ஆட்சி முறையை வளர்த்தெடுப்பதை நோக்கமாக கொண்டதாகும், மேலும் எந்த ஒரு தனி நாடும் அதன் உடும்புப் பிடியிலிருந்து தப்ப முடியாதபடியான சூழலை உருவாக்கி அனைத்துப் பொருளாதாரங்களையும் தளைப்படுத்தக் கூடியதாகும்.

இந்தப் போக்கின் வழியாக எந்த ஒரு ஒடுக்கப்பட்ட நாடும் இதன் உடும்புப் பிடியிலிருந்து மீண்டு சுதந்திரமாக வளர்ச்சியடைவதற்கு மேற்காெள்ளும் எந்த ஒரு முயற்சியையும் தடுத்துவிட முடியுமென்று ஏகாதிபத்தியவாதிகள் கருதுகின்றனர்.

ஆனால் ஏற்கெனவே உலக முழுவதிலுமுள்ள மக்கள் இந்த சதிக்கு எதிராகப் போராடி வருகின்றனர்.

ஒடுக்கப்பட்ட நாடுகளினது மக்கள் ஏகாதிபத்திய நுகத்தடியை உடைத்தெறியப் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

தங்கள் நாடுகளின் விடுதலைக்குப் போராடும் அதே நேரத்தில் ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய மேலாதிக்கத்திற்கான திட்டங்களுக்கு எதிராக உலக முழுவதிலுமுள்ள ஒடுக்கப்பட்ட மக்களுடன் ஒன்றுபட்டு நின்றால் மட்டுமே அவர்களின் போராட்டங்கள் வலுவடையும்.

உலக முழுவதிலுமுள்ள கம்யூனிஸ்ட்டுகள், உலக முழுவதிலுமுள்ள ஒடுக்கப்பட்ட மக்களை ஒன்றுபடுத்துவதற்கு தங்களது நடவடிக்கைகளை வேகத்துடன் தட்டி விட வேண்டும்.

பின் வரும் முழக்கம் நமது வீர முழக்கமாக இருக்கட்டும்.

“பல்வேறு நாடுகளைச் சேர்ந்த உழைக்கும் வர்க்கங்கள் உலக முழுவதிலுமுள்ள ஒடுக்கப்பட்ட தேசங்கள் மற்றும் மக்களுடன் ஐக்கியப்பட்டு தற்பாேதைய ஏகாதிபத்திய உலகமயமாதலைத் தூக்கியெறிந்து சோசலிச உலக அமைப்பை நிறுவப் போராடுவாேம்.

#கடமைகள்:-

1)ஏகாதிபத்தியங்களின் உலகமயமாதல் மூல உத்தியை எதிர்த்துப் போராடுவது!

2)நமது நாட்டிலிருந்து ஏகாதிபத்தியத்தையும் அதன் அடிவருடிகளையும் தூக்கியெறியப் போராடுவது. ஏகாதிபத்தியத்திற்கு எதிரான அவர்களின் போராட்டத்தில் உலக முழுவதிலுமுள்ள மக்களின் போராட்டங்களுக்கு ஆதரவளிப்பது!

3)உலக முழுவதிலும் பல்வேறு நாடுகளிலுள்ள கம்யூனிச இயக்கங்கள் பற்றியும், அவர்கள் எதிரிட்ட பிரச்சனைகள் குறித்தும் ஆய்வு செய்தல். ஒருமித்த கருத்துக் கொண்ட கட்சிகளுடன் நல்லுறவை வளர்த்தெடுத்தல்!

#தேசியச் சூழல்:-
இந்த காலகட்டமானது ஏகாதிபத்திய நிதி நிறுவனங்கள் கட்டளையிட்ட கொள்கைகளை தடையற்ற முறையில் நடைமுறைப் படுத்தியதற்கும், மக்களுடன் கலந்துரையாடி எடுக்கப்படும் ஜனநாயக நடவடிக்கைகள் என்பதாகச் சொல்லி மக்களை வஞ்சித்ததற்கும் சான்றாக அமைந்த காலகட்டமாகும்.
இந்தியா உலகில் சக்தி வாய்ந்த நாடாக ஆகிக்காெண்டிருக்கிறது என்றெல்லாம் பொய்யுரைகளை துணிந்து கூறிக்காெண்டு அரசியல் இராணுவம் ஆகிய இரண்டு வழிகளிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்குச் சரணடைந்ததற்கு சாட்சியமாக அமைந்த காலகட்டமாகும்.
பன்னாட்டு நிறுவனங்கள் தேசிய வளங்களைச் சூறையாடியதற்கும் இந்தியப் பெரு முதலாளிகள் அதிகார வர்க்க மூலதனத்தை பெருந்திரளாகக் குவித்துக் கொண்டதற்கும் சாட்சியாக அமைந்த காலகட்டமாகும்.
உழைக்கும் மக்கள் திரளினரின் வாழ்க்கை மற்றும் வேலைச் சூழல்கள் மேலும் சீரழிந்ததற்கும் மக்களின் எல்லாவிதமான குடிமை மற்றும் ஜனநாயக உரிமைகள் நிரந்தரமாக பறிக்கப்பட்டதற்கும் சான்று பகர்கிற காலகட்டமாகும், ஆளும் வர்க்கங்களின் சுரண்டலும் ஒடுக்குமுறையும் தீவிரமடைந்ததையும், இதற்கு எதிரான மக்களின் எதிர்ப்பையும் இக்காலகட்டத்தில் காணமுடிகிறது.

#விவசாய நெருக்கடி:-

1.நெருக்கடியை விரைவுபடுத்தும் கொள்கைகள் தொடர்ந்து நடைமுறபை் படுத்தப்படுவதால் விவசாயப் பொருளாதாரத்தின் நெருக்கடி தொடர்கிறது. இந்தக் காலகட்டத்தில் விவசாயத் துறையின் வளர்ச்சி விகிதம் 1.5 சதமாக தணிந்து காணப்பட்டது.

விளைச்சலின் வளர்ச்சி விகிதமாே 1.5 சதமாக மந்த நிலையில் இருந்தது.
ஏழை மற்றும் மத்தியத்தர விவசாயிகளின் கடும் உழைப்பினால் விளைந்த பலன்கள் பன்னாட்டு நிறுவனங்களாலும் (MNC) பெரு வணிகத்தாலும் அபகரிக்கப்பட்டாலும், அவர்களின் உழைப்பின் விளைவாக பசுமைப் புரட்சியின் போது வளர்ச்சியின் விகிதம் 3 சதத்திற்குச் சற்று அதிகமாக உயர்ந்த மட்டத்தை அடைந்தது.
பசுமைப் புரட்சியின் காலகட்டத்தில் புதிய பொருளாதாரக் கொள்கையின் கீழ் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட ஆதரவுகள் படிப்படியாகத் திரும்ப பெறப்பட்டன, இதனால் விவசாயத்தைத் தொடர்வதற்கான இடுபொருட்களின் விலைகள் மிகவும் உயர்ந்தன.
இந்த விலை உயர்வு விவசாயிகளை கொடிய கந்து வட்டிக்காரர்களின் பிடியினுள் சிக்கவைத்தது.

அதுவும் நிறுவன ரீதியான கடன் கிடைக்காமல் தடுக்கப்பட்டபோது இந்தச் சூழல் மேலும் தீவிரமடைந்தது.
2.உலக வர்த்தகக் கழகத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதால் இந்த கால கட்டத்தில் விவசாய உற்பத்திப் பொருட்களை இழப்பை ஏற்படுத்தும் விலைக்கு விற்க நேரிட்டது.

இதனால் ஏழை நடுத்தர விவசாயிகள் மட்டுமல்லாமல் பணக்கார விவசாயிகளும் பாதிப்புக்கு ஆளாயினர்.
3.மானியங்களை திரும்பப் பெற்றதால் இடுபாெருட்களின் விலை உயர்ந்ததும், விளைபொருட்களுக்கு நியாயமான விலை மறுக்கப்பட்டதும், விவசாயிகளைக் கடன் வாங்க நிர்பந்தித்தது.
விவசாயம் பற்றிய நரசிம்மன் குழுவினது பரிந்துரையை ஏற்று அட்டவணை வங்கிகள் விவசாயத்திற்கு வழங்கி வந்த கடனின் பங்கு குறைக்கப்பட்டது.
இவ்வாறாக ஏழை விவசாயிகள் நிறுவனரீதியான கடன்களைப் பெற முடியாதபடி தடுக்கப்பட்டனர்.

இதனால் விவசாயிகளின் கடன் 48.7 சதம் என்ற அளவுக்கு உயர்ந்தது.
ஆந்திர பிரதேசத்தில் மிக அதிகமாக இது 82 சதமாகும். இதைத் தொடர்ந்து விவசாயிகளின் கடன் தமிழகத்தில் 74 சதமாகும், பஞ்சாப்பில் 65 சதமும், கர்நாடகத்தில் 61 சதமும், மகாராட்டிரத்தில் 50 சதமும் ஆகும்.
4.விவசாயத்தில் ஏற்படும் சிறிய அளவிலான தீங்கு விளைவிக்கக் கூடிய சூழல்கூட விவசாயிகளைத் தற்காெலை செய்து கொள்வதை நோக்கி விரட்டுகிறது.
முன்னர் விவசாயிகள் தற்காெலை செய்து கொள்ளும் மாநிலங்களாக அறியப்பட்ட ஆந்திரம், கர்நாடகம், மகாராட்டிரம், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களாேடு தற்பாேது பீகார், உத்திரப்பிரதேசம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களும் இணைந்து கொண்டதால் இப்பாேது இப்பட்டியல் நீள்கிறது.
5.இந்த காலகட்டத்தில் கிராமப்புற இந்தியாவானது அச்சமூட்டும் அனுபவங்களை தருவதாக உள்ளது.

விவசாயிகள் திவாலாக்கப்பட்டதால் நடுத்தர விவசாயிகள் ஏழை விவசாயிகளாகவும், பின்னர் நிலமற்ற விவசாயிகளாகவும் படிநிலையில் கீழ்நிலைப்படுத்தப்பட்டனர்.
மேலும் நிலமற்றாேர் எண்ணிக்கை அதிகரித்ததாேடு, குத்தகைக்கு விவசாயம் செய்வாேர், பங்கு பெற்றுப் பயிரிடுவாேர், கூலிக்கு விவசாயம் செய்வாேர் ஆகியாேர் எண்ணிக்கை பெருமளவுக்கு அதிகரித்தது.
அரசு நிலங்களைக் கைப்பற்றி இந்திய, வெளிநாட்டு முதலாளிகளுக்கு தாரை வார்த்தது, கிராமப்புற இந்தியாவில் நிலமற்ற விவசாயக் குடும்பங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்தது.
6.போதுமான அளவிற்கு முதலீடு செய்வதற்கான மூலதனம் இல்லாததே நெருக்கடிக்குக் காரணம் என்று இந்திய ஆளும் வர்க்கத்தினர் சித்தரிக்கின்றனர்.
இவ்வாறுக் கூறிக்காெண்டு விவசாயத்தில் அரசின் பொது முதலீட்டைக் குறைத்தனர்.

அதே சமயம் தனியார் மூலதனத்தின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் உள்கட்டுமான வசதிகளை உருவாக்குவதற்கு பொதுநிதியை ஒதுக்கீடு செய்வதை அதிகரித்து வருகின்றனர்.
விவசாய உற்பத்திப் பொருட்களை சந்தைப் படுத்துவதற்கான முற்றங்களை (APYMS) தனியார் மயமாக்குவதை அனுமதித்தது.

தனியார் துறையில் இதுபாேன்ற முற்றங்களை அமைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

குளிர்ச்சியூட்டப்பட்ட சேமிப்புக் கிடங்குகளை அமைக்க நிதியுதவி அளிக்கப்பட்டது.
இந்திய உணவுக் கழகத்தின் (FCI) சேமித்து வைப்பதற்கான பரப்புகள் குத்தகைக்கு விடப்பட்டன.

இவ்வாறாக இந்திய ஆளும் வர்க்கங்கள் இந்த காலகட்டத்தில் ஒப்பந்தமுறை அல்லது கார்ப்பாெரேட் பண்ணை முறை என்ற வடிவத்தில் மூலதனத்தைக் கொண்டு விவசாயிகளை மாற்றியமைத்து அந்த இடத்தை இட்டு நிரப்பும் திட்டத்தை நடைமுறைப்படுத்தினர்.
தனியார் மூலதனத்தை (பன்னாட்டு நிறுவனங்களின் மூலதனத்தை) வளர்வதற்கு உதவிகரமாக பல நடவடிக்கைகளை அரசு மேற்காெண்டது.

பங்கே(BUNGE) கார்கில்(CARGIL) மற்றும் பிற பன்னாட்டு நிறுவனங்கள் உணவுதாணியச் சந்தையில் நுழைவதற்கும் விவசாய உற்பத்தி பொருட்களை ஊக வாணிபத்தில் ஈடுபடுத்துவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டது.
கரும்புக்கு விலை நிர்ணயிப்பதில் ரங்கராஜன் குழுவின் அறிக்கை நடைமுறைப் படுத்தப்பட்டது.

இந்த நடவடிக்கை விவசாயிகளின் நலன்களை காவு கொடுத்து சர்க்கரை ஆலை முதலாளிகளுக்குச் சாதகமாக அமைந்தது.
அரசு மரபணு மாற்று விதைகள் பயன்பாட்டை ஊக்குவித்து வளர்த்தது. குறிப்பாக மரபணு மாற்றப் பருத்தியை (BT COTTON) உற்பத்தியை அதிகரிப்பதற்கான ஒரு முன்மாதிரியைக் காட்டி இன்னும் பல தானியங்களிலும் மரபணு மாற்று விதைகளை அனுமதிக்கத் திட்டமிட்டனர்.
பல்வேறு மக்கட் பிரிவினரிடமிருந்து எதிர்ப்பு வலுத்த போது சுற்றுச்சூழல் அமைச்சகம் இந்த முடிவைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.
மக்களின் கருத்தை த் திரட்டுவது என்ற பெயரில் பல மாநிலங்களில் கூட்டங்களை நடத்தித் தங்களின் திட்டத்தை நிறைவேற்றக் கடுமையாக முயன்றனர்.
இதற்கிடையில் மரபணு உறுப்பமைவு அனுமதிக் குழுவின் (GOAC) நேர்மையான உறுப்பினர்களை வெளியேற்றிவிட்டு இந்த அமைப்பை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர்.

அதன்பின் எவ்வித ஆரவாரமுமின்றி “கள ஆய்வு” என்ற பெயரில் பன்னாட்டுப் பெரு நிறுவனங்கள் மரபணு மாற்று விதைகளை உற்பத்தி செய்வதற்கு அனுமதியளித்துள்ளனர்.
7.முந்தய ஐக்கிய முற்பாேக்குக் கூட்டணி அரசு விட்ட இடத்தில் தொடங்கி “சீர்திருத்த நடவடிக்கைகள்” என்ற பெயரில் மோடியின் அரசு சீர்திருத்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறது.

2013-ம் ஆண்டு நிலக் கையகப் படுத்தும் சட்டத்திற்கு திருத்தங்கள் கொண்டு வரும் வகையில் சட்ட வரைவு ஒன்றை கொண்டு வந்தது.
இந்த சட்ட வரைவானது பொதுமக்கள் நலன்களுக்கு என்ற பெயரில் மட்டுமின்றி அதற்கு இணையாக பொதுமக்கள் தனியார் பங்கேற்பு என்ற விளக்கமேதுமற்ற சொல்லாடலை பயன்படுத்தி விவசாயிகளின் நிலத்தைக் கையகப்படுத்துவதற்கான அதிகாரத்தை அரசாங்கத்திற்கு விரிவுபடுத்துகிறது, நிலங்களைக் கையகப்படுத்துவதால் பாதிக்கப்படும் விவசாயிகளின் எண்ணிக்கை எவ்வளவு, நிலவுடமையாளர்களைத் தவிர எத்தனை பேருக்கு நட்ட ஈடு வழங்க வேண்டும் என்பன போன்றவற்றை கண்டறிவதற்கான சமூக பாதிப்புகளை கண்டறிவதற்கான சட்டப் பிரிவை முற்றிலுமாக அகற்றிவிட்டது.
நிலத்தைக் கையகப்படுத்தும் போது நிலவும் சந்தை விலையை விட நான்கு மடங்குக்கு நட்டஈடு வழங்கப்படும் என்பதாகக் கூறிக்காெண்டு முந்தைய காங்கிரஸ் அரசாங்கம் மக்கள் மீது நடத்திய அதே வஞ்சகமான விளையாட்டைத் தொடர்ந்து நடத்தி வருகிறது.

ஆனால் உண்மையில் விற்பனைப் பத்திரம் பதிவு செய்யப்படும் போதான விலையை விட இரண்டு மடங்கு விலை மட்டுமே இச்சட்ட வரைவின்படி விவசாயிகளுக்குக் கிடைக்கும்.
8.உண்மையில் விவசாயிகள் தற்காெலை செய்து கொள்வதற்கான உண்மையான காரணங்களைக் கண்டறிந்து அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதிலாக தற்காெலை செய்து கொள்ளும் குத்தகை விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கையைச் சேர்க்காமல் தற்காெலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கையை அரசாங்கம் குறைத்துக் காட்டுகிறது.
9.இந்த கால கட்டத்தில் எடுக்கப்பட்ட ஒவ்வாெரு நடவடிக்கையும் விவசாயிகளை துன்ப துயரங்களிலிருந்து மீட்பதற்காகவே என ஆடம்பரமாக கூறப்பட்டாலும் உண்மையில் கார்ப்பாெரேட் மற்றும் ஒப்பந்த பண்ணை முறைக்காக விவசாயிகளை நிலத்திலிருந்து அந்நியமாக்குவதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளே இவை.
10.இவ்வாறாக பெரிய நிலப்பிரபுக்கள், பெரும் முதலாளிகள் மற்றும் ஏகாதிபத்தியம் ஆகியவற்றின் கூட்டணியானது சுரண்டலுக்கான வடிவமான நிலப்பிரபுத்துவம் மற்றும் அதே போன்று முதலாளித்துவச் சந்தை ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொண்டு உபரி உழைப்பை உறிஞ்சுவதன் மூலம் விவசாயிகளை துன்பதுயரங்களில் ஆழ்த்தியும் திவாலாக்கியும் தற்காெலையை நோக்கி துரத்தியும் வருகின்றது.
#தொழிற்துறையில் தேக்கம்:-

1.தற்பாேதைய கட்டத்தின் முதன்மையான அம்சம் புதிய தொழிற்சாலைகளை துவக்குவது அல்ல, மாறாக அந்நிய மூலதனத்தால் இருப்பில் உள்ள தொழிற்சாலைகளை கையகப்படுத்துவது, பெரும்பான்மை பங்குகளை வாங்குவதன் மூலம் தொழிற்சாலைகளைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது, தொழிற்சாலைகளை ஒன்றிணைப்பது ஆகியவையே ஆகும்.
வளர்ச்சி விகிதம் மிக விரைவிலேயே இரட்டை இலக்கு என்ற மட்டத்தை அடையும் என்று ஐக்கிய முற்பாேக்கு அரசு வெற்று ஆரவாரத்துடன் கூறிய போதிலும் இன்றைய கட்டத்தில் வளர்ச்சி விகிதம் 6 அல்லது 7 சதமாக மட்டுமே உள்ளது, உற்பத்தித்துறை வேகமாக வீழ்ச்சியுற்று வருவது என்பது இதன் இன்னாெரு அம்சமாகும்.
2) 2008-ம் ஆண்டில் ஏற்பட்ட உலக முதலாளித்துவ நெருக்கடி இந்தியப் பொருளாதாரத்தின் மீது தனது தாக்கத்தைக் கொண்டுள்ளது.

இதன் உடனடியான தாக்கத்தை தகவல் தொழில் நுட்பம்(IT), தகவல் தொழில் நுட்பம் சார்ந்த தொழில்துறை (ITES) ஆகிய துறைகளில் காண முடிந்தது.
ஏனெனில் இத்துறைகள் அனுப்பாணைகளைப் பெறுவதில் (ORDER) பெரிதும் அமெரிக்கா, ஐராேப்பா ஆகிய நாடுகளை நம்பியே உள்ளன.

இத்துறை இப்பாேது தனது பிரகாசத்தை இழந்துள்ளது. சராசரி சமபல விகிதம் 50 சதமாகக் குறைந்துள்ளது.

ஏறத்தாழ 30 சதவீத ஊழியர்கள் தங்களின் வேலையை இழந்துள்ளனர்.
3.ஏகாதிபத்தியப் பொருளாதாரங்கள் நெருக்கடி என்ற புதை சேற்றில் சிக்கியுள்ளதால், இந்திய ஏற்றுமதியின் மூலம் கிடைத்த வருமானங்களில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இது அந்நியச் செலாவனியைச் செலுத்தும் சூழலில் மூலதனக் கணக்கில் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் வட்டி விகிதத்தை தீவிரமாகக் குறைத்துள்ளதால் இந்தியப் பெரும் முதலாளிகள் பெரிய அளவில் கடன் வாங்கியுள்ளனர்.
இந்திய அரசு டாலர் கடன் பத்திரங்களில் முதலீடு செய்துள்ளது.

இதன் விளைவாக அந்நியச் செலாவணியைச் செலுத்தும் சூழல் தற்பாேது சாதகமாக இருப்பதாகத் தோன்றினாலும் வெளித் தெரியாதிருந்த கட்டமைப்புப் பலவீனங்கள் பொருளாதாரத்தின் மீது அழிவை ஏற்படுத்தின.
ரூபாயின் மதிப்பு பலவீனமடைந்ததானது இந்தியா தனது உற்பத்திப் பொருட்களை மிகவும் மலிவான விலைக்கு ஏற்றுமதி செய்ய வேண்டியதாயிற்று, வரலாறு காணாத அளவில் உச்சமடைந்திருந்த விலையில் சுத்திகரிக்கப்படாத எண்ணெயை (குரூட் ஆயில்) இறக்குமதி செய்வதற்கு பெருமளவிலான அந்நியச் செலாவணிச் சேமிப்பைச் செலவிட நேர்ந்தது.
4.பல பன்னாட்டு நிறுவனங்கள் (MNCS) சட்ட பூர்வமாகவும், சட்ட விராேதமாகவும் இந்தியப் பொருளாதாரத்தை உறிஞ்சிக் கொண்டன.

இந்தப் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் கொள்ளையைச் சட்டபூர்வமாக்கிக் கொள்வதற்காக கையாண்ட சட்டவிராேத வழிமுறைகளை இந்திய அரசு கண்டு கொள்ளாமல் வெறும் பார்வையாளராக இருந்ததாேடு அவர்களின் கொள்ளைக்கு உடந்தையாளராக இருந்தது (உதாரணத்திற்கு நோக்கியா, ஏர்டெல் போன்ற பன்னாட்டுக் குழுமங்கள்) இலாபங்கள், கண்டுபிடிப்புக்கான உரிமைத் தொகை (ROYALTIES), அந்நிய மேலாளர்களுக்கான சம்பளம் என்ற வடிவங்களில் மூலதனம் வெளிநாேக்கி வழிந்தாேடுவது அந்நிய மூலதனம் உள்நாேக்கிப் பாய்வதைவிட விஞ்சி இருந்தது.
மேலும் அந்நிய மூலதனத்தின் அந்நிய நிறுவனரீதியான முதலீட்டின் உட்கூறுகள் (FII) பலமடங்கு அதிகரித்து அந்நிய உள்நாட்டு முதலீட்டின் (FDI) உட்கூறுகளை இரண்டாம் நிலைக்கு கீழ்நாேக்கித் தள்ளியது.
தற்பாேதைய காலகட்டத்தில் இந்தியாவிற்கு வந்த அந்நிய மூலதனம் புதிய தொழிற்சாலைகளைத் தொடங்குவதற்காக அல்லாமல் அதிக அளவுக்கு பங்கு மாற்று வணிகத்திற்கே (STOCK EXCHANGE) வந்தடைந்தன.
2G அலைக்கற்றை மற்றும் நிலக்கரிப்படுகைகள் ஆகியவற்றை ஒதுக்கீடு செய்வதில் நிகழ்ந்தது போலவே, எவ்வாறு நமது நாட்டின் இயற்கை மூலாதாரங்களைத் தங்கத் தட்டில் வைத்து ஏகாதிபத்திய முதலைகளுக்கு முற்பாேக்கு கூட்டணி அரசினால் வழங்கப்பட்டது போன்றவை வெளிச்சத்திற்கு வந்தன.
பல கோடி ரூபாய்களை உள்ளடக்கிய ஊழல்கள் நடந்தது ஒருபுறமிருக்க இயற்கை மூலாதாரங்களை எந்தவிதத் தடையுமின்றி சுதந்திரமாகச் சூறையாட அனுமதித்ததன் மூலம் இந்த நாட்டின் எதிர்காலமே விற்கப்பட்டுவிட்டது.
இந்தச் சக்திகள் இயற்கை மூலாதாரங்களை வலிமையாக கைப்பற்றிக்கொண்ட பிறகு இந்த சக்திகள் அதன் மீதான ஏகபாேகத்தைப் பயன்படுத்தி அரசாங்க கைகளைச் சுழற்றி வீசி இந்த இயற்கை மூலாதாரங்கள் எந்த மக்களுக்குச் சொந்தமானவையோ, அந்த மக்கள் மீதே கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாத அளவுக்கான விலைகளைத் திணிக்கின்றன.
பிரிட்டிஷ் பெட்ராேலியத்தின் சார்பில் அம்பாணி கோரியவுடன் இயற்கை எரிவாயுவின் விலையை 4 டாலரிலிருந்து ஒரு பிடியு விற்கு 18 டாலராக உயர்த்திய நிகழ்வு இதற்கு ஓர் உதாரணமாகும்.

முன்னாள் பிரதமர் இதனைச் சூறையாடும் முதலாளித்துவம் என அழைத்தார்.

ஆனால் உண்மையில் இது இந்தியப் பெரும் முதலாளித்துவத்தின் அடிப்படைப் பண்பாகிய அதிகார வர்க்க முதலாளித்துவமே.
5.முதலில் வந்த குழுமத்திற்கு முதலாவது வாய்ப்பு, என்ற அடிப்படையில் 2ஜி அலைக்கற்றை நிலக்கரிப் படுகைகள் ஒதுக்கீடு செய்ததைத் தொடர்ந்து நடந்த ஊழல்களைக் கடுமையாக விமர்சித்த பாஜக அப்பாேது முழுமையான வெளிப்படைத் தன்மையுடன் வாங்க ஏலம் மூலம் இயற்கை மூலாதாரங்கள் ஒதுக்கீடு செய்யப்படுமெனக் கூறியது.

ஆனால் மையத்தில் ஆட்சிக்கு வந்த பின்னர் சுரங்கங்கள் மற்றும் கனிம வளங்களுக்கான சட்டத்தில் முன்னர் ஒதுக்கீடு செய்த நிலக்கரிப் படுகைகளின் ஒதுக்கீடு எந்தவித இடையூறுமின்றி அப்படியே தொடரும் எனச்சட்டதிருத்தம் கொண்டு வந்தது.

இந்தச் சட்டத்திருத்தம் மாநில அரசுகளுக்குத் தங்களின் கனிம மூலாதாரங்களை விற்பனை செய்ய வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது.
6.மோடி உற்பத்தித் துறையை மீண்டும் உயிர் பெற்றெழச் செய்ய ஐக்கிய முற்பாேக்குக் கூட்டணி அரசுக்கு ஏற்பட்ட தோல்விக்காக அதனைக் கடுமயாகச் சாடினார்.

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவதற்காக இத்துறைக்கு தனது சக்தியாற்றல் முழுவதையும் செலுத்தும் என உறுதியளித்தார்.
மோடி பிரதமரானவுடன் “மேக் இன் இந்தியா” (இந்தியாவில் உற்பத்தி செய்வாேம்) என்ற அறைகூவலை விடுத்தார்.

அவர் எந்த நாட்டிற்குச் சென்றாலும் அங்கெல்லாம் அந்நிய மூலதனத்திடம் “எங்கள் நாட்டிற்கு வாருங்கள், உற்பத்திக்கான தொழிற்சாலைகளை உருவாக்குங்கள், உற்பத்திப் பொருள்களை ஏற்றுமதி செய்து கொள்ளுங்கள், லாபத்தைக் குவித்துக் கொள்ளுங்கள்” என்று வேண்டிக் கொண்டார்.
அவர்களுக்கு எதுவெல்லாம் தேவையோ அவற்றையெல்லாம் உடனடியாகச் செய்து தருவாேம், தொழிலாளர்களின் எல்லா உரிமைகளையும் பறிக்கும் வகையிலும், முதலாளிகள் விருப்பம் போல் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தவும், வேலையிலிருந்து விரட்டவும், வசதிகளை ஏற்படுத்தித் தரவும் ஏற்ற வகையில் தொழிலாளர் சட்டங்களில் திருத்தம் செய்வாேம் என்றெல்லாம் திரும்பத் திரும்ப வாக்குறுதியளித்தார்.

“இந்தியாவில் உருவாக்குவது” என்ற கொள்கையின் ஒரு பகுதியாக இராணுவ உற்பத்தித் துறையின் வாசலை அந்நிய மூலதனத்திற்குத் திறந்து விட்டார். இந்தியா 70 சதம் ஆயுதங்களையும், இராணுவத் தளவாடங்களையும் இந்தியா இறக்குமதி செய்து வருவதால் அந்நிய ஆயுத உற்பத்தியாளர்கள் இங்கு உற்பத்திக்கான தொழிற்சாலைகளை அமைத்தால் இந்தியாவால் அந்நியச் செலாவனியைச் சேமிக்க முடியும், இதன் மூலம் வேலை வாய்ப்பை உருவாக்க முடியும் என்றெல்லாம் வாதிட்டார்.
இந்த வாதம் திசை திருப்பக்கூடிய வாதமாகும். ஏனெனில் நடை முறையில் இவைகள் தனித்தனியாக உதிரி பாகங்களை ஒன்றிணைக்கும் தொழிற்ச்சாலைகளாகத்தான் இருக்கும்.

உதாரணத்திற்கு பாஃஸ்கான் தொழிற்சாலை இந்தியாவில் இருந்த தனது கிளைகளை மூடியதன் மூலம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை வேலையிலிருந்து தூக்கி எறிந்தது.
இப்பாேது அதே நிறுவனம் ஆந்திராவில் ஒரு தொழிற்சாலையைத் தொடங்குகிறது.

இங்கும் கைபேசிகளின் உதிரி பாகங்களை ஒன்றிணைக்கும் அதே பணிதான் நடைபெற இருக்கிறது.

“மேக் இன் இந்தியா” என்பது இந்தியாவின் உற்பத்தித்துறையை அந்நிய மூலதனத்தின் தொங்கு சதையாக மாற்றிவிடும்.

இந்நிறுவனங்கள் நிலம், நீர், மின்சாரம், கனிமங்கள், மலிவான உழைப்பு எல்லாவற்றையும் பயன்படுத்திக் கொண்டு லாபத்தை அயல்நாடுகளில் உள்ள தங்கள் தாய் நிறுவனங்களுக்குக் கடத்திவிடும்.
#வேலை இன்மையும், வறுமையும்:-
1.மிகவும் தம்பட்டம் அடிக்கப்பட்ட பொருளாதார வளர்ச்சி எந்த வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தவில்லை.

தற்பாேதையக் கால கட்டத்தில் ஏறத்தாழ 15 பில்லியன் மககள் வேலை தேடி கிராமங்களிலிருந்து நகரங்களை நோக்கி புலம் பெயர்ந்துள்ளனர்.
இவர்கள் உற்பத்தித் துறையில் வேலையில் அமர்த்திக் கொள்ளப்படவில்லை.

இவர்கள் எந்த வேலைப் பாதுகாப்புமின்றி தினக் கூலிகளாய் மிகக் குறைந்த கூலியில் வாழ்க்கையை நடத்துகின்றனர்.
இவர்கள் ஒப்பந்க் கூலிமுறை, வெளியார்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ளல் போன்ற முறை சாரா வேலைகளில் அமர்த்துவது என்பது பொதுத்துறைத் தொழிற்சாலைகளிலும் கூட அதிகரித்து வருகிறது.
பெரு விகித உற்பத்திக்கான வசதிகளைக் கொண்டுள்ள இந்த பன்னாட்டு நிறுவனங்கள் நோடியா மனேசர், திருப்பெரும்புதூர், ஓசூர் போன்ற இடங்களில் தொழிலாளர் சேரிகளை உருவாக்கியுள்ளன.
தொழிலாளர்களின் உரிமைகளும் தொழிற்சங்கங்களை அமைப்பதும் கூட இங்கு அப்பட்டமாக மறுக்கப்படுகிறது.

அரசியல் தலைமையும், அரசு இயந்திரமும் பனனாட்டு நிறுவனங்களைச் சார்ந்து நின்று மாருி சுசுகி தொழிலாளர்கள் மீது ஏவப்பட்டதைப் போன்ற மிருகத்தனமான தாக்குதல்களை தொழிலாளர்கள் மீது ஏவி வருகின்றன.
2.வறுமை மேலும் மேலும் அதிகமான மக்களைப் பற்றிப் படர்ந்து வருகிறது.

அரிண்டம்சென் (ARINDAMSEN) என்பவர் 70 சதவீத மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்கிறார்கள் என்பதை கண்டறிந்து கூறியபின், ஐக்கிய முற்பாேக்குக் கூட்டணி அரசு புள்ளிவிவரங்களில் தில்லுமுல்லுகளைச் செய்து தனது ஆட்சிக் காலத்தில் அதிக மக்கள் வறுமைக் கோட்டைத் தாண்டிவிட்டதாகக் காட்டியது.
இருந்தும் பல தேசிய, சர்வதேசிய முகமை அமைப்புகள் 40 முதல் 60 சதவீதம் இந்திய மக்கள் கொடும் வறுமையில் உழல்வதை எடுத்துக் காட்டியுள்ளனர்.
3.ஏறத்தாழ 60 சதவீத மக்கள் விவசாயத்தையே சார்ந்துள்ளனர்.

ஐக்கிய முற்பாேக்குக் கூட்டணி அரசு நடைமுறைப்படுத்திய கொள்கைகள் விவசாயத்தின் மூலம் பெறப்படும் வருமானத்தை அழித்துவிட்டன.

அவர்களுக்கு மாற்று வேலைகளுக்கான எந்த வாய்ப்பும் இல்லை.
ஐக்கிய முற்பாேக்குக் கூட்டணி அரசாங்கம் வருமானத்தை உயர்த்துதல், கட்டமைப்பு மாற்றங்களைக் கொண்டுவருதல், நிலத்தை மறுவிநியாேகம் செய்தல், பிற துறைகளில் வேலை வாய்ப்பை உருவாக்குதல் போன்றவற்றுக்கான எந்த நடவடிக்கையையும் மேற்காெள்ளவில்லை.
இந்த மக்களுக்குக் கிடைத்த வேலை வாய்ப்புகள் என்பன துன்ப கால வேலை வாய்ப்புகளே.

இன்றைய காலகட்டத்தில் கிராமங்களிலிருந்து நகரங்களுக்கும் ஏன் வெளிநாடுகளுக்கும் புலம் பெயர்வது என்பது முன்னர் அறிந்திராத மாவட்டங்களை நோக்கியெல்லாம் விரிவடைகிறது.
4.பாஜக அரசாங்கமும் இந்தக் கொள்கைகளைத் தொடர்கிறது. அரசுக் கொள்முதல் முகமைகளைத் திரும்பப் பெறுகிறது.

விவசாய சந்தைக்கான தாழ்வாரங்களைத் தனியார் மயமாக்குகிறது.
படிப்படியாக விவசாயிகளுக்கான வங்கிக் கடன்களை விவசாய வர்த்தகத்தை நோக்கித் திருப்புகிறது.

விவசாயிகளுக்கு அளித்துவந்த ஆதரவுகளைத் திசை திருப்புகிறது.
மோடி அரசாங்கம் சுகாதாரம், மருத்துவம், கல்வி, உணவுப் பாதுகாப்பு போன்ற சமுகநலத் திட்டங்களுக்கான ஒதுக்கீட்டை ரூ.1.75 லட்சம் கோடிகளாகக் குறைத்துள்ளது.

அதே நேரத்தில் மோடியின் அரசாங்கம் பெரும் முதலாளிகளுக்கும், அந்நிய முதலாளிகளுக்கும் ஒவ்வாெரு ஆண்டிலும் கொடுக்கும் 5 லட்சம் கோடி ரூபாய்களுக்கான வரிச்சலுகையைத் தொடர்கிறது.
5.வளர்ந்து வரும் வறுமை, வேலையின்மை ஆகியவற்றின் தாக்கம் அடித்தட்டு உழைக்கும் மக்கள் மீதே உள்ளது.

இவர்களிடையே மிகவும் மோசமான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளவர்கள் பழங்குடி மக்களே.
அவர்கள் வாழும் பகுதிகளிலிருந்து தூக்கியெறியப்படுகின்றனர்.

காடு, நிலம், நீர் போன்ற அவர்களின் வாழ்வாதாரங்கள் பறிக்கப்படுகின்றன.
வளர்ச்சிக்கான திட்டங்கள் என்பதாகச் சொல்லப்படும் ஒவ்வாெரு திட்டத்திற்கும் முதலில் தங்கள் வாழ்வையும் வாழ்வாதாரங்களையும் பலிகாெடுப்பவர்கள் பழங்குடி மக்கள்தான்.
6.இளம் பெண்களும், ஆண்களும் சாதிக்கு வெளியே திருமணம் செய்து கொண்டால் அவர்கள் துன்புறுத்தப்படுவதாேடு, கொலையும் செய்யப்படுகின்றனர்.
பல்வேறு வடிவங்களிலான பாகுபாடுகளாலும், ஒடுக்குமுறைகளாலும் பெண்கள் துன்பப்படுகின்றனர்.

பணியிடங்களில் உச்ச நிலையில் சுரண்டப்படுகின்றனர். வயல்களில் சமவேலைக்கு சமக்கூலி வழங்கப்படுவதில்லை, பெண்களுக்கு அதிகாரம் வழங்குவது என்ற பெயரில் அவர்கள் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் போன்ற வியர்வைக் கூடாரங்களில் அடிமைகள் போல உழைப்பில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
நுண்மட்டத்தில் வாழும் மக்களுக்கு கடன் வழங்கும் நிறுவனங்களால் இவர்களின் உதிரம் உறிஞ்சப்படுகிறது.

இலாபத்தைப் பெறுவதற்கான சந்தை விரிவாக்கத்தின் ஒரு பகுதியாகத் தயார் நிலையில் உள்ள நவீனத் தொழில்நுட்பம் பெண்களின் மீதான சுமையைக் குறைப்பதற்குப் பதிலாக பெண் குழந்தைகளைக் கருப்பையிலேயே கொல்வது போன்ற ஆணாதிக்கக் கலாச்சாரத்தைத் தொடரச் செய்கிறது.
7.கிராமப் புறத்தில் நிலவும் பதட்டத்தால், தலித்துகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகளும், தாக்குதல்களும் அதிகரித்து வருகின்றன.

விவசாய நெருக்கடி மோசமடைவதால் கிராமப்புற ஏழைகளில் பெரும்பான்மையினராக அமைந்துள்ள தலித்துகளின் மீதான அதன் பாதிப்பு அவர்களின் வாழ்க்கையைப் படுநாசமாக்குகிறது.

தலித்துகளுக்கு அதிகாரம் வழங்குவது என்றெல்லாம் உரத்துப் பேசி வருகின்ற போதிலும் அவர்களின் வேலை வாய்ப்புகள் நிரந்தரமாகச் சுருங்கி வருவதால் நகரங்களை நோக்கிப் புலம் பெயர நிர்பந்திக்கப்பட்டு படுமாேசமான வாழ்க்கைச் சூழலில் அவர்கள் தள்ளப்படுகின்றனர்.
இருப்பில் உள்ள சமூக அமைப்பினால் மிகவும் மதிப்பு வாய்ந்த மானுட உற்பத்திக்கான உடமைகள் அழிக்கப்பட்டு வருகின்றன.

நமது குழந்தைகளுக்கு அடிப்படையான கல்வி மறுக்கப்பட்டு வருகிறது.
உழைப்பைத் தீவிரமான சுரண்டலுக்கு ஆட்படுத்தி வரும் அதே நேரத்தில் இன்னாெரு பிரிவினர் பகுதியளவிலாே, முழுமையாகவாே வேலை ஏதுமற்றவர்களாக வைக்கப்பட்டுள்ளனர்.
உற்பத்தியை நிலை நிறுத்தவும் வளர்ச்சியடையச் செய்யவும் ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை அளிக்கப்படும் பயிற்சிகள் நமது நாட்டு மக்களின் தேவைகளை நிறைவு செய்வதற்குப் பதிலாக ஏகபாேகங்களின் சூறையாடலுக்குப் பொருத்தமான முறையில் மாற்றியமைக்கப்படுகின்றன.

8.பணக்கார நாடுகளால் மக்களுக்கு வழங்கப்படும் தொழில் நுட்பத்தில் சிறந்த நேர்த்தியான மருத்துவச் சேவைக்கு மருத்துவச் சுற்றுலா என்ற பெயரால் அரசாங்கத்தால் மானியம் வழங்கப்படுகிறது.
அதே நேரத்தில் கோடிக்கணக்கான மக்கள் குறிப்பாக கருவுற்ற பெண்களும், கைக்குழந்தைகளும் அடிப்படையான மருத்துவ சேவை இல்லாததால் எளிதில் குணப்படுத்தக் கூடிய நோய்களால் ஆண்டு தோறும் செத்து மடிகின்றனர்.

ஏழைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வது என்ற பெயரால் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் மருத்துவமும், சுகாதாரத்துறையும் தனியார்மயமாக்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் பொதுமக்களின் நிதி ‘கார்ப்பாெரேட்’ மருத்துவமனைகளை நோக்கித் திருப்பிவிடப்பட்டு மருத்துவக் காப்பீட்டுத்திட்டம் வளர்த்தெடுக்கப்படுகிறது.

மருத்துவக் காப்பீட்டுத் துறையை விழுங்குவதற்கு தங்களுக்குள் போட்டியிட்டுக் கொண்டிருக்கிற அந்நியக் காப்பீட்டுக்கழக பகாசூரர்களுக்கு இத்துறை லாபம் கொழிக்கும் துறையாக மாற்றப்பட்டுள்ளது.
அந்நியச் செலாவணியை சம்பாதித்துவிட வேண்டும் என்ற வெறியாேடு அந்நிய மருத்துவ உற்பத்திக் குழுமங்கள் தங்களின் மருந்துகளைப் பரிசீலித்துப் பார்ப்பதற்காக குனியா பன்றிகளாக ஏழை மக்களைப் பயன்படுத்தி வருவதற்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளது.
இவ்வாறு நடத்தப்படும் மருத்துவ ரீதியான பரிசாேதனைகளால் ஏழை மக்களுக்கு ஏற்படும் பாதகமான விளைவுகளைப் பற்றி அவர்கள் சிறிதும் கவலைப்படுவதில்லை.

பன்னாட்டு பெரும் நிறுவனங்களுக்கு அரசாங்கம் தங்களது முழு ஆதரவைத் தந்து வருகிறது.

9. (???)
10.இருப்பில் உள்ள சமூக அமைப்பு மனித உற்பத்திச் சக்திகளை அழிப்பது மட்டுமல்லாமல் இயற்கையை அழித்து வருகிறது.

காடுகளை அழிப்பதால் ஏற்படும் மண் அரிப்பு அழிவுதரத்தக்க வெள்ளப் பெருக்குகளை ஏற்படுத்துகின்றது.
மண்வளம் குறைந்து வருகிறது. நிலத்தடி நீரின் மட்டம் அச்சுறுத்தும் வகையில் குறைந்து வருகிறது.

புதிய பிரதேசங்கள் வறட்சிப் பிரதேசங்களாக மாறி அச்சுறுத்துகின்றன.

கெள்ளை லாபத்தை பெறவேண்டும் என்ற தடையில்லாப் பேராசை பெருவெறியானது காற்றையும் நீரையும் மாசுபடுத்தி மனித உடல் ஆராேக்கியத்திற்கு பெரும் தீங்கை ஏற்படுத்துகின்றன.
#இனிக்கப் பேசுவதும் தடி கொண்டு தாக்குவதும்:(ARROT AND STICK)
1.சீரழிந்துவரும் வாழ்க்கை மற்றும் பணிச்சூழல்கள் மக்களிடையே கலக்கத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி வருகின்றன.

அரசால் நிலம் பறிக்கப்படுவதை எதிர்த்த கிராமப்புற மக்களின் போராட்டங்களை இக்கால கட்டத்தில் காண முடிகிறது.
சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், மின் உற்பத்தி நிலையங்கள், அணு உலைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், ஆகியவற்றுக்கு எதிரான முதன்மையான எதிர்ப்பு வளர்ச்சிக்கான திட்டங்கள் என்பதாகச் சொல்லப்படும் திட்டங்களால் மக்களின் வாழ்வும், வாழ்வாதாரங்களும் பேரழிவுக்கு உள்ளாவதாலேயே எழுகின்றன.
2.பலாத்காரமாக நிலங்களைப் பறிப்பதை எதிர்த்து மக்கள் எழுந்த போதெல்லாம் ஐக்கிய முற்பாேக்கு கூட்டணி அரசாங்கம் அவர்கள் போராட்டங்கள் மீது மிருகத்தனமான அடக்குமுறையை ஏவியது.

இருந்தும் மக்களின் போராட்ங்கள் பல பகுதிக்கும் பரவின, உத்திரப்பிரதேசத்திலிருந்து மகாராட்டிரத்துக்கும், ஆந்திரத்திலிருந்து தமிழ்நாடு, மேற்கு வங்காளத்திலிருந்து ஒரிசா, ஜார்கண்டிலிருந்து மத்தியப்பிரதேசம் மற்றும் குஜராத் எனப்பரவின.
உடன் நிகழ்வாக காங்கிரஸ் கட்சி மக்களைப் போராட்டப் பாதையிலிருந்து திசைத்திருப்பி வஞ்சிப்பதற்காகப் பிறவழிகளை நடைமுறைப்படுத்தியது. அவற்றுள் ஒன்றுதான் பிரச்சனைகளுக்கு “உரிமையுடன் கூடிய அணுகுமுறை” என்பது காங்கிரசின் தலைமையிலான ஐக்கிய முற்பாேக்குக் கூட்டணி அரசாங்கம் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மூலம் மக்களுக்கான அடிப்படையான தேவைகளையும், சேவைகளையும் அங்கீகரிப்பதாகப் பிரகடனப் படுத்தியது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம், கல்வி உரிமைச் சட்டம், வேலை உத்தரவாதச் சட்டம், உணவுப் பாதுகாப்புச் சட்டம், பழங்குடியினரின் மரபுரிமைகளை மறு உறுதி செய்வதற்கான சட்டம் போன்றவற்றை பிறப்பித்தது.

3.இந்த உரிமைச் சட்டங்களை நடைமுறைப்படுத்தாதது அந்த ஆட்சியின் துராேகத்தனமான விளையாட்டின் ஒரு பகுதியே ஆகும்.

இந்தச் சட்டங்கள் பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்தே அவற்றை நீர்த்துப் போகச் செய்ய ஐமுகூ அரசு வஞ்சகமான வழிமுறைகளைக் கையாண்டது.
ஆதிவாசிகள் பற்றிப் பிற்பித்த சட்டத்திலும், உணவுப் பாதுகாப்புச் சட்டத்திலும் இவ்வரசின் வஞ்சகம் எடுப்பாகத் தெரிந்தது.

மத்திய அரசு பிறப்பித்த செயலாட்சி ஆணையின் மூலம் பழங்குடி மக்களின் அடைய வேண்டியப் பயன்களைப் பெற முடியாதபடி தடுத்தது.
நடைமுறைப்படுத்த மாநில அரசுகளாே இந்த உரிமைச் சட்டங்களை நடைமுறைப்படுத்தி தேவையான சட்டத்திட்ட விதிகளை உருவாக்காமல் தங்களின் பொறுப்பைப் புறக்கணித்தன.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பதிவு செய்தாேரில் பாதிப் பேர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர்களுக்கும் கூட நிர்ணயிக்கப்பட்ட கூலியை விட குறை வான கூலியே கொடுக்கப்பட்டுள்ளது என்று அரசாங்க முகமைகளே கருத்துத் தெரிவித்துள்ளன.

4.பாஜக அரசாங்கமும் கூட “பிரதம மந்திரி தன் ஜன் யோஜனா”, “பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா”, “பிரதம மந்திரி சுரக்ஷ பீமா யோஜனா”, அதுல் பென்ஷன் யோஜனா”, என்ற பெயர்களில் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் என்பதாகச் சொல்லி சில திட்டங்களை அறிவித்துள்ளது.

பாஜக அரசாங்கம் சமூகத் துறைகள் மீது தொடுக்கும் கொடும் தாக்குதல்களிலிருந்து மக்களைத் திசைதிருப்பவே இத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
5.பல்வேறு திட்டங்களில் பலன் பெற வேண்டியவர்களின் எண்ணிக்கையை மேலும் குறைத்துக் காட்டும் நோக்கத்துடன் மோடியின் அரசாங்கம் 2011-ம் ஆண்டு பொருளாதார மற்றும் சமூக மக்கட் தொகைக் கணக்கெடுப்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட, சில பகுதிகளை மட்டுமே வெளியிட்டுள்ளது, அறிவுக்கும் நடைமுறைக்கும் ஏற்றவாறு மாற்றம் செய்வது என்ற பெயரால் தேஜகூ அரசாங்கம் பல திட்டங்களை ஒன்றாக இணைத்துப் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பொறுப்பை மாநில அரசுகளுக்குச் சுமத்தியுள்ளது.

பயனாளிக்கு சேர வேண்டிய பணத்தை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்துவது என்பது ஏமாற்றுவதற்கான இன்னாெரு வழிமுறையாகும். இந்த முறையானது மானியத்தைக் குறைப்பதற்கும், அல்லது விருப்பம் போல் நிதியை ஒதுக்குவதற்கும் அரசுக்கு ஆற்றலைத் தருகிறது.

இந்த முயற்சிகளை மோடியின் அரசாங்கம் விடாப்பிடியாக செயல்படுத்தி வருகிறது.
6.மக்களின் எந்தவாெரு பிரச்சனையையும் கூட தீர்க்க முடியாத ஆளும் வர்க்கங்கள் மக்கள் மீது மிருகத்தனமான அடக்குமுறைகளை அவிழ்த்துவிட்டு வருகிறது.

முந்தய ஐமுகூ அரசின் அடியாெற்றி தேஜகூ அரசு ஜெய்தாப்பூர், கூடங்குளம் ஆகிய இடங்களில் அணுமின் நிலையங்களுக்கு எதிராக நடைபெறும் மக்கள் போராட்டங்களைத் தொடர்ந்து மிருகத்தனமாக ஒடுக்கி வருகிறது.

விவசாய நிலங்களில் அனல் மின் நிலையங்களை அமைப்பதற்கு எதிராகப் போராடும் விவசாயிகளையும் சுட்டுக் கொல்லும் வேலையில் இறங்கியுள்ளது.
#பிரித்தாளும் சூழ்ச்சி:-
1.ஆளும் வர்க்கங்கள் துராேகத்தனமான பிரித்தாளும் கொள்கைகளை ஒரு வழிமுறையாகப் பயன்படுத்தி மக்களைப் பிளவுப்படுத்தி ஒடுக்கி வருகிறது.

அவர்கள் பிரதேசரீதியான, சாதி மற்றும் மத வகைப்பட்ட வேறுபாடுகளைப் பயன்படுத்தி பகைமையை மூட்டிவிட்டு மக்களைப் பிளவுப்படுத்தி ஒற்றுமையைச் சிதைத்து வருகின்றன.
ஆளும் வர்க்க கும்பல் ஒரு தலைமுறைக் காலமாக தெலுங்கு மொழி பேசும் மக்களிடையே பிரதேச உணர்வுகளைக் கிளப்பிவிட்டு அவற்றைப் பயன்படுத்தி உண்மையான பிரச்சனைகளிலிருந்தும், போராட்டங்களிலிருந்தும் அவர்களை திசை திருப்பி வருகின்றனர்.

ஏதேனும் ஒரு ஆளும் வர்க்கக் கும்பலைப் பின்பற்றவைப்பதற்கான நோக்கத்துடன் தலித் சாதிகளிடையே சாதி உணர்வைத் தூண்டி வருகின்றனர்.
2.பல்வேறு மதங்களைச் சார்ந்த மக்களிடையே வகுப்புவாத பகைத்தீயை மூட்டிவிடும் அருவறுக்கத்தக்க நடவடிக்கைகளில் ஆளும் வர்க்கங்கள் ஈடுபட்டுள்ளன.

மதவெறியைத் தூண்டி விடுவதில் பாஜக நிர்வாணமான, வெளிப்படையான வழிமுறைகளை நடைமுறைப்படுத்திவரும் அதே நேரத்தில் காங்கிரசானது மூடி மறைக்கப்பட்ட மென்மை யான வழிமுறைகளைப் பயன்படுத்தி வருகிறது.
குஜராத் படுகாெலைகள் மூலம் தைரியம் பெற்ற பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் கும்பல் வதந்திகளையும், பொய்களையும் பரப்பி முஸ்லீம் மதத்தினருக்கு எதிரான உணர்வுகளையும், பகைமையையும் கிளறிவிட்டு வருகின்றனர்.
இதன் மூலம் அதிகார பீடத்தைப் பற்றிக்கொண்டுவிடலாம் என்ற அவர்களின் முயற்சிக்கு முசாபர்பூர் கலவரம் ஒரு சாட்சியமாகும்.

பாஜக, ஆர்எஸ்எஸ் கும்பல் ஆட்சிக்கு வந்த பிறகு தங்களின் அரசியல் விவாதங்களின் ஒரு பகுதியாக மதவெறியைப் பரப்புரை செய்து வருகின்றனர்.

இருந்தும் மதவழிப்பட்டு ஒற்றுமையுடன் பல நூற்றாண்டு காலமாக வாழ்ந்து வரும் இந்திய உழைக்கும் மக்கள் மதவாத சக்திகள் தங்கள் வாழ்வை ஒழிப்பதை ஒருபோதும் அனுமதிக்கமாட்டாேம் என்பதை மீண்டும், மீண்டும் நிரூபித்து வருகின்றனர்.
3.ஒரு ஜனநாயக அமைப்பின் நியதிப்படி அரசு விவகாரங்களுக்கு வெளியே மதத்தை வைப்பதற்குப் பதிலாக வகுப்புவாத வழியில் சமூகத்தைத் திசைவழிப்படுத்த ஆளும் வர்க்கங்கள் தங்களால் ஆன அனைத்தையும் செய்கின்றன.
பாஜக அரசாங்கத்தின் பாதுகாப்பின் கீழ் ஆர்எஸ்எஸ் பரிவாரங்கள் நின்றுகாெண்டு மதவெறி பரப்புரைகளை மேற்காெண்டு வருகின்றன. ஆக்ராவில் நடந்தது போல இந்து மதத்தைச் சாராத இந்துக்கள் அல்லாதாேரை அச்சுறுத்தி மதமாற்றம் செய்வதை நியாயப்படுத்தும் வகையில் “கர்வபாசி” (வீடு திரும்பல்) பரப்புரையை மேற்காெண்டது போன்று இந்துக்கள் அல்லாதாேர் மீது பகைமையைக் கக்குவது நாளார்ந்த நடப்பாகி விட்டது.

இராமனை பின்பற்றாதவர்கள் முறைதவறிப் பிறந்தவர்கள், மதரசாக்கள் பயங்கரவாத முகாம்கள், முஸ்லீம்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதால் இந்துப் பெண்கள் நான்கு குழைந்தைகளைப் பெற்றுக் கொள்ளவேண்டும், மாட்டுக்கறி உண்பவர்கள் வாழ்வதற்குப் பாகிஸ்தானுக்கு செல்லவேண்டும் என்றெல்லாம் அரசியல் சட்டத்தின் புனிதத்தைக் காப்பவர்களாகச் சொல்லப்படும் உயர்ந்த அதிகாரப் பொறுப்பிலுள்ளவர்கள் அறிக்கைகளை மக்கள் முன் விடுத்து வருகின்றனர்.
பாஜக ஆட்சியதிகாரத்தைப் பயன்படுத்தி கல்விக்கான பாடத்திட்டத்தை மாற்றியமைத்து இளந் தலைமுறையினரின் சிந்தனைகளை நச்சுப்படுத்தவும், வகுப்புவாத மயமாக்கவும் முயற்சிகளை மேற்காெண்டு வருகின்றனர்.

மறுபுறத்தில் ஏகாதிபத்தியச் சூறையாடலுக்கும் அதன் நலன்களுக்கும் சேவகம் புரியும் வகையில் இந்திய தொழில் நுட்பப் பயிலகம் (IIT) மற்றும் மருத்துவக் கல்வி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களை உருச்சிதைத்து வருகின்றனர்.

அதற்கேற்ற வகையில் நமது இளைஞர்களை நாட்டினது தேவைக்கேற்ப தொழில் நுட்பங்களை உருவாக்குபவர்களாக அல்லாமல் வெறும் கற்பாேராக மாற்றி வருகின்றனர்.

அதாேடு இந்திய வரலாற்று ஆய்வுக் கழகம்(ICHR) இந்திய சமூக விஞ்ஞான ஆய்வுக் கழகம்(ICSSR) போன்ற உயர் கல்வி மையங்களுக்குள் தங்களின் வகுப்புவாத மதவெறி நிகழ்ச்சி நிரலை கள்ளத்தனமாகக் கடத்தி வருகின்றனர்.
4.இவ்வாறு வேண்டுமென்றே வகுப்புவாத மயப்படுத்துவது முனைப்புடன் கலாச்சாரக் காவலர்கள் என்ற பாத்திரத்தை வகிக்கும் நகர்ப்புற கீழ்த்தட்டு மத்தியத்தர வர்க்கம், கிராமப்புற மேட்டிமை வர்க்கம் ஆகியவற்றைச் சேர்ந்த இளைஞர்கள் மீது செல்வாக்குச் செலுத்துகிறது.

இவர்கள்தான் முற்பாேக்கு எழுத்தாளர்கள் மீது தாக்குதலைத் தொடுக்கின்றனர்.

பெண்கள் எவ்வாறு உடையணிய வேண்டும் என்றெல்லாம் கட்டளை பிறப்பிப்பாேராகச் செயல்படுகின்றனர்.

பிரதமரே மனித உரிமைச் செயல்பாட்டாளர்களை ஐந்து நட்சத்திரக் களப்பணியாளர்கள் என்று கீழ்த்தரமாக அழைத்ததன் மூலம் ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் பரிவாரங்களுக்கு குரல் எழுப்பவும், செயல்படவும் களத்தை அமைத்துக் கொடுத்துள்ளார்.
5.தொடர்ந்து முஸ்லீம்கள் மீதான தாக்குதல்களாேடு, கிறித்துவ மதத்தினர் மீதான தாக்குதல்களும் அதிகரித்து வருகின்றன.

டெல்லி, மேற்கு வங்கம், மகாராட்டிரம், அரியானா, கர்நாடகம், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 2014-ம் ஆண்டு டிசம்பர் வரை 11 தாக்குதல் நிகழ்வுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

உள்ளூர்மட்ட அளவிலான இந்தத் தாக்குதல்களின் தாக்கங்கள் மத சகிப்புத்தன்மை இன்மையைப் பரப்புகிறது. சமூகப் பகைமையை வளர்க்கிறது.

சிறுபான்மையினரின் வலிமையை இழக்கச் செய்கிறது.

ஜனநாயகக் குரல்களின் கழுத்தை நெறிக்கிறது.
#அரசியல் சூழல்:-
1.பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடிக்கு கொண்டு விடுகிறது.

ஆளும் வர்க்கங்களுக்கு இடையேயான முரண்பாடுகளும் கூர்மையடைந்து வருகின்றன.

இதன் விளைவாக ஆளும் மேட்டிமை வர்க்கத்தின் ஊழல்களும், லஞ்ச லாவண்யங்களும் வெளிச்சத்திற்கு வருகின்றன.

ஆளும் வர்க்கங்கள் தங்களின் அடையாளம் சாதி, மதம், பிரதேசம், குடும்பம் ஆகியவற்றைத் தங்களின் நிதிநிலையைப் பாதுகாத்துக் கொள்ளவே பயன்படுத்துகின்றனர்.
இந்தப் போக்கின் வழியாக ஆளும் வர்க்கங்கள் மக்களின் அடையாளம் பற்றிய கோட்பாடுகளை முன்னாேக்கித் தள்ளுகின்றனர், இதன் எதிர்மறையான விளைவுகளை சில அடித்தட்டு மக்கள் பிரிவினரிடையே கூடக் காண முடிகிறது, ஆளும் வர்க்கக் கட்சிகளால் மத நம்பிக்கைகளும், மதச்சடங்குகளும் வளர்த்தெடுக்கப்படுகின்றன.

தேர்தல் காலங்களில் மதத்தை அடிப்படையாகக் கொண்டு சில கட்சிகள் புதிதாக முளைக்கின்றன.
2) 2014-ம் ஆண்டு தேர்தலின் போது பாஜக இந்தப் பின்னணியில்தான் தனது மூலயுக்தியை வகுத்துக் கொண்டது.

மக்களிடம் கொதித்தெழுந்து வரும் அதிருப்தியைப் பயன்படுத்தி தேர்தலில் வெற்றிபெற விரும்பியது.
சூழலைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னரேயே தனது வழிமுறைகள் அனைத்தையும் நடைமுறைப்படுத்தத் தொடங்கியுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற நிர்பயா வல்லுறவு நிகழ்வு போன்ற எரியும் பிரச்சனைகளைப் பயன்படுத்தி அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் கருத்துக்களைத் திரட்ட விரைந்து செயல்பட்டது.
தேர்லில் வெற்றியை அறுவடை செய்வதற்காக மக்களை ஏமாற்றுவதிலும், திசை திருப்புவதிலும் வெற்றி அடைந்தது.
நிலவுகின்ற சூழலில் புதிய தாராளவாதக் கொள்கைகளை விரைவாகச் செயல்படுத்த உதவும் என்ற நம்பிக்கையில் மோடியைத் தலைமைக்குக் கொண்டு வருவதன் மூலம் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வருவது என்ற பாஜக வின் முடிவுக்கு இந்தியப் பெருமுதலாளிகளும், ஏகாதிபத்திய நாடுகளும் தங்கள் ஆதரவை அளித்தன.
பாஜக “வளர்ச்சி” முன்னேற்றம், மதம் என்ற முழக்கங்களை முன்வைத்தது. வளர்ச்சிக்கும், தீர்மாணகரமாகச் செயல்படுத்துவதிலும் மோடியை கவர்ச்சி மிக்க கதாநாயகனாக முன்னிறுத்தியது.
தனிநபர் வழிபாட்டையும், நேருவின் குடும்பத்தையும் எதிர்ப்பது போல நாடகமாடியது.

ஆனால் உண்மையில் தனிநபர் வழிபாடு என்கிற பறவையின் சிறகுகளில் அமர்த்தப்பட்டே அவர் அரசியல் வானில் பறக்கவிடப்பட்டார்.

16-ம் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அழிவுதரத்தக்க தோல்வியையும், பாஜக மிகப்பெரிய வெற்றியையும் பெற்றது.
3. மக்களின் வாழ்வை படுநாசப்படுத்திய விலைவாசி ஏற்றம், பணவீக்கம், பரவலான ஊழல்கள், அடுத்தடுத்து நடைபெற்ற லஞ்ச லாவண்யங்கள் ஆகியவற்றால் எழுந்த கடுங்காேபத்தை தேர்தல் முடிவுகள் பிரதிபலித்தன.
மக்களுக்கும் நாட்டிற்கும் அழிவை ஏற்படுத்தும் வகையில் ஏகாதிபத்தியங்கள், பெரும் முதலாளிகள், பெரும் நிலவுடமையாளர்கள் ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் ஆதிக்கக் கும்பல்கள் ஆகியாேருக்குச் சாதகமாக காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ அரசு செயல்படுத்திய கொள்கைகள் மீதான மக்களின் கடும் சீற்றத்தை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தின.
தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து இருந்து வரும் மக்களின் பெருவிருப்பை அதாவது தங்களின் வாழ்வு மற்றும் வேலைச் சூழலில் மேம்பாடு அடையவேண்டும் என்ற விருப்பார்வத்தை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துவதாக அமைந்தது.
#காங்கிரஸ் கட்சி:-
ஆளும் வர்க்கக் கட்சிகளிடையே நீண்ட வரலாற்றை உடையது காங்கிரஸ் கட்சியாகும். மத்தியிலும் பல மாநிலங்களிலும் ஆடசி புரிந்ததன் மூலம் நிபுணத்துவத்தைப் பெற்ற கட்சியாகும், இப்பாேது மத்தியிலும் பல மாநிலங்களிலும் எதிர்க்கட்சியாக உள்ளது.
சில மாநிலங்களில் அதன் பலம் முற்றிலுமாகக் குறைந்துள்ளது.

பெரும் முதலாளிகளுக்கும், பெரும் நிலப்பிரபுக்களுக்கும், ஏகாதிபத்தியங்களுக்கும் சேகம் புரிவதில் நிபுணத்துவம் பெற்றது.
அக்கட்சி அதே நேரத்தில் நலவாழ்வுக்கான முழக்கங்களை முன்வைத்து விவசாயத் தொழிலாளர்களிலிருந்து சிறு முதலாளிகள் வரை பிற வர்க்கங்களை அணிதிரட்டவும் அக்கட்சியால் முடிந்தது.
நேரு முதல் இந்திரா வரை, ராஜீவ் முதல் நரசிம்மராவ் மற்றும் மன்மாேகன்சிங் காலம் வரை ஏகாதிபத்தியங்களின் காலடிகளைப் பின்பற்றி ஆட்சி புரிந்த கட்சியாகும், 1981-ல் ஏகாதிபத்திய நிறுவனங்களினால் கட்டளையிடப்பட்ட பொருளாதாரக் கொள்கைகள் என்ற விதைகளை விதைத்தக் கட்சியே இது.
1991-ல் மீண்டும் புதிய பொருளாதாரக் கொள்கை என்ற பெயரில் விதைகளை விதைத்ததும் இக்கட்சியேதான்.

மதச்சார்பின்மை என்கிற முகத்திரையை அணிந்து கொண்டாலும் ஒவ்வாெரு பிரதேசத்திலும் திருட்டுத்தனமான வழிகளில் மதவாத சக்திகளைப் பயன்படுத்திக் கொண்ட கட்சியும் இதுதான்.
ஏற்கெனவே இக்கட்சியால் பகுதியளவில் பயன்படுத்திய அதே கொள்கைகளை, இப்பாேது பாஜக அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தும் கொள்கைகளை எதிர்ப்பதாகக் கூறிக் கொண்டு “ஏழைகளின் கட்சி” என்பதாக தோற்றப்படுத்திக் காட்ட இக்கட்சி பாராளுமன்றத்தைப் பயன்படுத்தி வருகிறது.
#பாரதிய ஜனதாக் கட்சி:-
வர்க்கத் தன்மையைப் பொறுத்த மட்டில் இந்தக் கட்சி காங்கிரஸ் கட்சியிலிருந்து எந்த விதத்திலும் மாறுபட்டதல்ல.

ஐமுகூ அரசின் தலைமுறைக்கால ஆட்சிக்கு எதிராக உச்சத்திலிருந்த மக்களின் கோபத்தின் மீது சவாரி செய்து மையத்தில் இக்கட்சி ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டது.
ஏகாதிபத்திய நிறுவனங்களால் ஆணையிடப்படும் கொள்கைகளை முழு மூச்சுடன் இக்கட்சி இப்பாேது நடைமுறைப்படுத்தி வருகிறது.

ஐமுகூ அரசாங்கத்தின் காலணிகளுக்குள் தங்கள் கால்களை நுழைத்துக் கொண்ட அரசாங்கமே மோடியின் அரசாங்கம்.
நிறுவனங்களில் விபத்து ஏற்படும் போது நட்டஈட்டை வழங்க வேண்டிய பொறுப்பிலிருந்து அமெரிக்க நிறுவனங்களை விடுவிக்கும் வகையில் அணுமின் உற்பத்தி நிலையங்கள் மீதான அமெரிக்க நிபந்தனைகளை மோடியின் அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.
அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான மூலயுக்தி ரீதியான ஒப்பந்தம் காலாவதியாகிவிட்ட நிலையில் மீண்டும் அவ்வாெப்பந்தத்தில் மறு கையெழுத்திட்டு அதனை முன்னெடுத்துச் செல்ல உறுதியான முறையில் மோடி தன்னை ஒப்படைத்துக் கொண்டுள்ளார்.
இவ்வாறாக ஆசியப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கான திட்டங்களுக்கு அடிமை த்தனத்தாேடு கூடிய பங்காளியாக இந்தியா ஆக்கப்பட்டுள்ளது.
மத வெறியையும், பாசிசப் பேக்குகளையும் வளர்த்தெடுக்கும் கட்சிதான் இது என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது.

வகுப்பு வாத வழியில் மக்களை திசைவழிப்படுத்தும் விதத்தில் ஒவ்வாெரு பிரச்சனையையும் பயன்படுத்தியது-பயன்படுத்தி வருகிறது.
இதன் முன்னாேடியான ஜனசங்கம் பல தலைமுறைகளாக அரசியல் அரங்கத்தில் ஒரு அடையாளத்தையும் பதிவு செய்ய முடியவில்லை.

புதியப் பொருதாரக் கொள்கையை நடை முறைப்படுத்தியதன் மூலமும், பாபர் மசூதியை இடித்தப் பின்னரும், பாஜக எழுச்சி பெறத்தொடங்கியது.
பாபர் மசூதியை இடித்தது ஏதாே விபத்தானதாே அல்லது அது எதிர்பாராத நிகழ்வாே அல்ல, தாராளவாதக் கொள்கைகளை எதிர்ப்பின்றி நிறைவேற்றும் நோக்கத்திற்காக மக்களைப்பிளவுப் படுத்த ஆளும் வர்க்கங்கள் திட்டமிட்டு நடத்தியதே அந்நிகழ்வு.
ஆளும் வர்க்கங்களின் இந்த மூல யுக்தியின் ஒரு பகுதியாக பாஜக ஆட்சி அதிகாரத்திற்குக் கொண்டு வரப்பட்டது.

தனது ஓராண்டு ஆட்சிக் காலத்தில் ஆளும் வர்க்கங்களின் நம்பத் தகுந்த சேவகனாகத் தன்னை நிரூபித்துக் கொண்டுள்ளது.
#இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்டும்):-
1. சீர்திருத்தவாத சமூக ஜனநாயகக் கட்சிகளான CPI, CPI(M) ஆகிய இருக் கட்சிகளுமே ஆளும் வர்க்கத்தின் தொடர் வண்டி நிற்கும் போது அதை முன்னாேக்கித் தள்ளுவதும், நிற்கும் போது குற்றம் சாட்டுவதாகச் செயல்படுகின்றனர்.
தோழர் நாகி அவர்கள், இவ்விரு கட்சிகளும் ஏதேனும் ஒரு ஆளும் வர்க்கக் கட்சியின் ஊதுகுழலாக மாறிவிட்டனர் என்று கூறியதை விடவும் இப்பாேது மேலும் சீரழிவுக்குள்ளாகியுள்ளனர்.
2. இவ்விருக் கட்சிகளுமே மார்க்சிய லெனினிய அடிப்படையில் செயல்படுவதாகக் கூறுகின்றனர்.

அவர்கள் மாறும் சூழலுக்கேற்ப மார்க்சிய லெனினியம் மாற்றப்பட வேண்டும் என்று வெளிப்படையாகவும், சில நேரங்களில் அவ்வளவு வெளிப்படையாக இல்லாமலும் கூறிவருகின்றனர், அவர்கள் முதலாளித்துவக் கட்சி எதிரிடும் போது வெறுமனே வாயளவில் கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படைக் கோட்பாடுகளை கிளிப்பிள்ளைப் போலப் பேசிக் கொண்டே முதலாளித்துவக் கட்சிகளின் நடைமுறையையே பின்பற்றி வருகின்றனர்.
தேர்தல்களிலும், முதலாளித்துவக் கட்சிகளின் பாலான அவர்களின் நடைமுறையாக இருந்து வருகிறது. முதலாளித்துவக் கட்சியின் வழிமுறையின் ஒரு பகுதியாக அவர்களின் அமைச்சரவைகளில் பங்கேற்பது வரை இவர்களின் நடைமுறை விரிவடைகிறது.
3. புதிய தாராளவாத ஆட்சி முறையின் பொருதாரச் சீர்திருத்தங்களை எதிர்ப்பதாக அவர்கள் கூறிவருகின்றனர்.

ஆயினும் சீர்திருத்தங்களின் எல்லா அம்சங்களையும் எதிர்க்கவில்லை அதை நடைமுறைப்படுத்தும் வழிமுறையைத்தான் எதிர்க்கிறாேம் எனக்கூறி அவர்கள் ஆட்சி புரிந்த மாநிலங்களில் அதே சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தினர்.
அவர்கள் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் என்ற ஒட்டு மொத்தப் பிரச்சனையை உயர் மட்டத்திலுள்ள ஊழல்கள் என்ற மட்டத்திற்குக் குறுக்கினர்.

சீர்திருத்தங்களை மக்கள் எதிர்த்த போது மக்களை ஒடுக்க மிருகத்தனமான வழிமுறைகளைப் பயன்படுத்த அவர்கள் தயங்கியதில்லை.
இவ்வாறு இவர்கள் சுரண்டும் வர்க்கங்களின் நலன்களுக்குச் சேவகம் புரிவதில் தகுதியானவர்கள் என தங்களை நிரூபித்துக் கொள்ள முயற்சிக்கின்றனர்.

4. மக்களிடையே நிலவும் கோபத்தையும், பதட்டத்தையும் மட்டுப்படுத்துவதற்கான சேப்டி வால்வுகளாகச் (பாதுகாப்பு வளையம்) செயல்படுகின்றனர்.

மக்களின் போராட்டங்களை அரசாங்கத்திடமிருந்து சில சலுகைகளைப் பெறுவது என்ற அளவில் எல்லைக்குட்படுத்துகின்றனர்.

5. பூர்ஷ்வாக் கட்சிகளுடன் நல்லுறவைப் பேணிக்கொண்டே மார்க்சிய-லெனினியத்தை நடைமுறைப்படுத்த முடியும் என்ற பிரமைகளை அணிகளிடையே விதைக்கின்றனர், தங்களின் திட்டத்தைக் கொண்டாே, சொந்த பலத்தை ஆதாரமாகக் கொண்டாே அவர்கள் செயல்படுவதில்லை.
முதலாளித்துவக் கட்சிகளுடன் அவர்கள் கூடி மகிழ்வதற்கும் ஏகாதிபத்திய பெருமுதலாளித்துவ நிலப்பிரபுத்துவ எதிர்ப்புத் திட்டத்திற்கும் எந்த உறவும் கிடையாது.

இதன் விளைவாக அவர்களின் செயல்பாடுகள் மார்க்சியம், லெனினியத்திலிருந்து வெகுதூரம் விலகியதாக உள்ளது.
#மாநிலக் கட்சிகள்:-
1. பல்வேறு மாநிங்களில் பல்வேறு கட்சிகள் தோற்றமெடுத்துள்ளன.

அவற்றில் பல ஆட்சி அதிகாரத்திற்கும் வந்துள்ளன.
2. தமிழகத்தில் திமுக-அதிமுக; ஆந்திரத்திலும், தெலுங்கானாவிலும் பிடிபி-டிஆர்எஸ்; அஸ்ஸாமில் ஏஜிபி போன்றவை இவற்றுல் சில.

இக்கட்சிகள் பிரதேச அல்லது மக்களின் உண்மையான தேசிய மற்றும் ஜனநாயகப் பெரு விருப்பங்களையும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற பயன்படுத்திக் கொண்டன.
ஒருமுறை பதவிப் பீடத்தைக் கைப்பற்றிக் கொண்டதும், மக்களை திசை திருப்ப பிரதேச ரீதியான பேரினவாதத்தைக் கிளப்ப பாசிச வழிமுறைகளைப் பின்பற்றுகின்றனர்.

மக்களை ஒடுக்க மிருகத்தனமான ஒடுக்குமுறைகளை ஏவுகின்றனர்.
அவர்கள் இந்திய ஆளும் வர்க்கங்களுக்கும், ஏகாதிபத்தியங்களுக்கும் தொண்டூழியம் புரிகின்றனர்.

அதே நேரத்தில் தங்கள் மாநிலங்களில் உள்ள நிலப்பிரபுத்துவச் சக்திகளுக்கும், ஒப்பந்தக்காரர்களுக்கும் சுரண்டிக் கொடுக்க துணை போகின்றனர்.
3. மேற்கு வங்கத்தில் திருனாமூல் காங்கிரஸ், பீகாரில் ராஷ்ட்ரீய ஜனதாதளம், ஜனதாதளம் (U), உத்திரப்பிரதேசத்தில் சமாஜ்வாதிக் கட்சி போன்ற பிற மாநலக் கட்சிகள் ஆளும் வர்க்கக் கட்சிகளிலிருந்து கிளைவிட்டவை ஆகும்.
தாங்கள் ஆளும் மாநிலங்களில் ஆளும் வர்க்கங்கள் நிலப்பிரபுத்துவத்துடன் கூட ஏகாதிபத்தியம் ஆகியவற்றின் நலன்களுக்குச் சேவகம் புரிகின்றனர்.
இக்கட்சிகள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு சாதிகள் ஒன்றிணைவதும், பிரிவதுமாக எப்பாேதும் மாறிக் கொண்டே இருக்கும்.
சாதியத்தில் மூழ்குண்டுள்ள சமூகத்தை மட்டுமே அடித்தளமாகக் கொண்டுள்ளன, இந்தப் போக்கின் வழியாக மக்களிடையே சாதிப் பிளவை தொடரச் செய்வதாேடு சாதிப் பகைமையை மூட்டிவிட்டு மக்களின் ஒற்றுமையைச் சிதைக்கின்றன.
4. சிபிஐ (மாவாேயிஸ்ட்) புரட்சிகர இயக்கத்தின் வளர்ச்சிக்கு தீங்கிழைக்கின்ற இடது அதிதீவிரப் பாதையை நடைமுறைப்படுத்துகிறது.
சிபிஐ (எம்எல்) (லிபரே ஷன்) வலது விலகல் பாதையை நடைமுறைப்படுத்துகிறது.

சிஆர்சிபிசி என்ற எம்எல் அமைப்பு குறுங்குழு வாதத்தை நடைமுறைப்படுத்துகிறது.
5. சிபிஐ (எம்-எல்) ரெட்ஸ்டார் வலது திசை விலகலைக் கொண்டுள்ளதாேடு சிபிஎம் கட்சியின் வலது திசை விலகலைச் சென்றடைந்துள்ளது.
6. இந்தியாவிலும் உலகிலும் எப்பாேதுமாக ஆழப்பட்டுக் கொண்டிருக்கும் பொருளாதார அரசியல் நெருக்கடி கம்யூனிஸ்ட் புரட்சியாளர்களுக்கு ஒரு புரட்சிகர இயக்கத்தைக் கட்டுவதற்கும் நாம் மனதார நேசிக்கிற இந்தியாவின் புதிய ஜனநாயகப் புரட்சி என்கிற இலட்சியத்தை அடையப் பெறுவதற்கும் புரட்சிகரப் போராட்டங்களை இன்னும் தீர்மாணகரமான முறையில் தலைமை ஏற்று நடத்தவும் நல்ல வாய்ப்புகளை வழங்குகிறது.
புரட்சிகர இயக்கம் தானாகவே வந்துவிடாது.

அதற்கான தயாரிப்புகள் செய்யப்பட வேண்டும் என்பதாேடு கட்டியமைக்கப்படவும் வேண்டும்.
ஒரு வலிமையான பாட்டாளி வர்க்கப் புரட்சிகரக் கட்சியால் மட்டுமே தயாரிப்புகளைச் செய்ய முடியும் வெற்றியை ஈட்டிப்பெற முடியும்.
அத்தகைய ஒரு கட்சி இல்லாதது இன்றைக்கும் கூட ஒரு தீவிரமான பலவீனமாகத் தொடர்கிறது.
எல்லா உண்மையான புரட்சியாளர்களையும் ஐக்கியப்படுத்தி பாட்டளி வர்க்கப் புரட்சிகரக் கட்சியைக் கட்டியமைக்க வேண்டியது நமது கடமையாகும்.
7. “உழுபவனுக்கே நிலம் சொந்தம்” என்ற முழக்கத்துடன் விவசாயப் புரட்சிகர இயக்கத்தை கட்டியமைக்க வேண்டியது மிக முக்கியமான கடமையாகும்.

இக்கடமை ஏகாதிபத்திய நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் போராட்டங்களைக் கட்டியமைப்பது என்ற பிற முன்மையான கடமையுடன் ஒன்றிணைக்கப்பட வேண்டும்.
8. கீழ்வரும் உடனடிக் கோரிக்கைகளை முன் வைத்துப் பின்வரும் அடிப்படைக் கடமை களை அடைவதற்கான மக்கள் போராட்டங்களைக் கட்டியமைப்பதற்கு மக்களை விழிப்படையச் செய்யவேண்டும்.
#அடிப்படைக் கடமைகள்:-
1) “உழுபவனுக்கே நிலம்” என்பதை மைய முழக்கமாகக் கொண்டு புரட்சிகர நிலச்சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த எல்லா கிராமப்புற ஏழைகளும் போராடவேண்டும்.

2)எல்லா அந்நிய மூலதனங்களையும் தேசியமயமாக்க வேண்டும்.

3) தேசியத் தொழிற்சாலைகளை ஊக்கப்படுத்த வேண்டும்.

4)நிலத்தின் மீதும், நீரின் மீதும், காட்டின் மீதுமான பழங்குடியினரின் உரிமையைப் பாதுகாக்கப் போராட வேண்டும்.

5) நீரைத் தனியார் மயமாக்குவதை எதிர்ப்பாேம்.

6) விவசாயத்தை உள்நாட்டு வெளிநாட்டுப் பெருமுதலாளிய மயமாக்குவதை கார்ப்பாெரேட் மயமாக்குவதை எதிர்ப்பாேம்.

7) அந்நிய மூலதனம் நுழைவதைத் தடுப்பாேம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *