அமெரிக்க மக்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராக போராட்ட களத்தில் உள்ளதை பார்த்து , நமது நாட்டில் குரோனாவில் எத்தனை எத்தனை பட்டினி கொலை, கேட்பறற்ற புலம் பெயர் தொழிலாளர்கள், அரசு கண்ணை மூடிக்கொண்டு எதை எதையோ பேசி ஏமாற்றும் முறைகள். இவ்வளவு நடத்தும் மக்கள் ஏன் கிளர்ந்தெளவில்லை என்ற கேள்வி.
இதனை பற்றி நான் அறிந்தவை… இந்தப் பதிவு
முதலாளிகளுக்கு சலுகைகள் வழங்குவதற்காக உறுதியாக நிக்கும் அதே வேளையில் உழைக்கும் கோடானு கோடி மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கத் துணியும் அரசின் மெத்தனம்.
ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு இறந்து போனதற்கு காரணமாக உள்ள நரேந்திர மோடியை வெறும் மத அடிப்படையில் தவறுகளை கேள்விக் கேடக்க துப்புக் கெட்ட ஊடகங்கள்.
முதலாளிகளின் பொருளாதார வளர்ச்சிப் பணிகளை முடுக்கி விட வழிவகுத்துக் கொடுக்கும் அரசின் பொருளாதாரத் திட்டங்கள்.
வாழ்வாதார உரிமையை தக்கவைத்துக்கொள்வதற்காக மக்கள் போராடினால் அந்தப் போராட்டங்களை ‘பயங்கரவாத’ செயல்பாடுகளாக அடையாளப்படுத்தும் அரசின் அறமற்ற, பொய்யான அரசியல் தந்திரம்.
மேலும் நாட்டு நலம், எல்லைப் பாதுகாப்பு, இந்திய இறையாண்மையை பேணுதல் என்பனவற்றின் பெயரில் தனது செயல்பாடுகளை சாடுபவர்களையும் எதிர்ப்பவர்களையும் ‘தேச துரோகி’களாக முத்திரையிட்டு,
இவ்வாறு செய்வதன் மூலம் ‘சட்ட ஒழுங்கு’ ‘பாதுகாப்பு’ அச்சுறுத்தல் இருப்பதாக கூறும் அரசு அதையையே தான் எடுக்கும் பொழுது “சட்டம் ஒழுங்கு” காக்க என்கிறது.
ஜன நாயக உரிமைகளுக்காகக் குரல் கொடுப்போரையும் ‘குற்றவாளி’களாக இந்த அரசு அறிவித்து வருகிறது. அரசு என்ன செய்தாலும் அது சட்டத்துக்கு உட்பட்டதாக விளக்கப் படுவதும், அதனை எதிர்ப்பவர்கள் நியாயம், நீதிகோரி போரிட்டாலும் அது சட்ட விரோதமானதாக ஆக்கப்படுவதும் காலத்தின் கோலமாக உள்ளது.
இந்திய அரசின் இந்த கோடூரங்களை மேன்மேலும் ஊக்குவித்து அவற்றை தொடரச் செய்வதில் பன்னாட்டு மூலதனத்துக்கும் உள்நாட்டு முதலாளிகளுக்கும் பெருத்த அக்கறை உள்ளது போலவே, முதலாளிகள் பெறும் கொள்ளை இலாபத்தில் தம் பங்கைக் கேட்டுப் பெறுவதற்காகக் காத்திருக்கும் நிர்வாகத் துறைக்கும், அரசின் நியாயத்தை ஏற்று அதற்கு மெருகூட்டும் நீதித்துறைக்கும் அக்கறை உண்டு. முதலாளித்துவ பகல் கொள்ளைக்கு ஆதரவாக அனைத்து அரசு நிறுவனங்களும் துறைகளும் செயல்பட்டு வருவதை நாம் யாவரும் அறிவோம்.
போராட்டகாரர்களை கூறுபோட்டு அவர்களின் சிலரைக் கொண்டே அங்கு நடைபெற்று வரும் மக்கள் போராட்டத்தை திசைத்திருப்பும் அரசின் சாதுரியமும் அதனை ஒரு அரசியல் கொள்கையாக ஆக்கத் துடிக்கும் சாணக்கியத்தனமும் இந்திய அரசின் வெளிபாடுகளே அன்றி வேறல்ல.