பெரியார் எந்த வர்க்கத்தின் தேவைக்கானவர்
பெரியார் எந்த வர்க்கத்தின் தேவைக்கானவர்

பெரியார் எந்த வர்க்கத்தின் தேவைக்கானவர்

ஈரோட்டு பாதையின் 20 வருட சரித்திரம் எடுத்துக் காட்டுவது என்பது ஈ.வெ.ரா என்றும் சமூகப் புரட்சிக்கு விஞ்ஞானியாக பாதை காட்டியதில்லை. தொழிலாள, விவசாய பொதுமக்களிடையில் வேரூன்றி நிற்கிற எந்த போக்கும், கட்சியோடும் ஸ்தாபனத்தோடும் கூட்டணிக்கு முயன்றதும் இல்லை, நெருங்கி உறவாடி படிப்பினை பெற்றுதுமில்லை. போகட்டும், தனித்து நின்று பொதுமக்களுக்கும் புரட்சி கட்சிகளுக்கும் வழிகாட்டும் வடிவத்தில் உருப்படியான எந்த முன்னேற்றத்தையாவது கண்டரா? அதுவும் இல்லை. நேர்மாறாக புரட்சி கட்சிகளின் நடவடிக்கைகளை எதிர்த்து வந்திருக்கிறார். ஜனநாயக ஸ்தாபனங்களை திருத்துவதற்கு பதிலளிக்க முற்பட்டிருக்கிறார். ‘சுயமரியாதை தந்தை’ ‘சிந்தனையின் சிற்பி’ ‘புரட்சி பெரியார்’ என்ற பெரிய பட்டங்களை சூடி சமதர்ம இயக்கத்தை பொது மக்களின் புரட்சி எழுச்சியை காட்டிக் கொடுத்து இருக்கிறார். இந்த நாட்டில் பிற்போக்கு சக்திகளான ஜமீன்தாரி- நிலச்சுவான்தார் முதலாளி வர்க்கங்களின் கையாளாக, கடனாற்றி வந்திருக்கிறார். தமது எதிர்ப்புரட்சி கொள்கைகளுக்கு சாதகமாக இளைஞர்களின் வேகத்தை பயன்படுத்திக் கொள்ளும் பொருட்டு, மக்கள் அணியில் பிளவு உண்டாகும் பொருட்டும். புரட்சிச் சொற்றொடர்களையும் இனவெழுச்சி அடைமொழிகளையும் தாராளமாக அள்ளி வீசி வந்திருக்கிறார்.எனவே ஈரோட்டுப் பாதை புரட்சிப் பாதை அல்லது பொதுவுடமை பாதை அல்ல. பொதுமக்கள் பாதையும் அல்ல சாதி-மத தவறுகளிலிருந்தோ சமூகக் கொடுமைகளிலிருந்தோ, ஜமீன்தார் முதலாளிகளான சகலவித சுரண்டல்களிலிருந்தோ, தமிழ் மக்களை விடுவிக்கும் பாதையும் அல்ல, அழுகிப்போன ஜமின்தாரி, நிலச்சுவான்தார் வர்க்கத்தின் பாதை, பிற்போக்குப் பண மூட்டைகளின் பாதை இந்த ஈரோட்டுப் பாதை.(தோழர் பா.ஜீவானந்தம்.-ஈரோட்டுப்பாதை சரியா?)பதிவு தோழர் AC New Redman

வர்க்கப் போராட்டத்தைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் சோறு கிடைக்க போராடினால் போதும் அரசியல் போராட்டம் தேவை இல்லை என்று சிலர் நினைக்கின்றனர். புரட்சிகரமான தெருச் சண்டை நடத்தினால் போதும் நிறுவனம் கட்சி ஒன்றும் தேவையில்லை என்று சிலர் நினைக்கின்றனர். அரசியல் போராட்டம் ஒன்று தான் இந்த வர்க்கப் போராட்ட பிரச்சினைக்கு பரிகாரம் தொழிற்சங்க இயக்கம் முதலான மற்றவை வேண்டியதில்லை என்று சிலர் எண்ணுகின்றனர்.ஆனால் ஒரு மார்க்சியவாதி இந்த வர்க்கப் போராட்ட எப்படிப் பார்க்கிறான் மூன்று அம்சங்களை கொண்ட ஒரே ஒரு பிரச்சினையாக பார்க்கிறான். இங்கேதான் பெரியார் எப்படி பட்டவர் என்று தெரிந்துக் கொள்ள முடிகிறது

பெரியார் மார்ஸ்க்கும் எங்கெல்சுக்கும் பிந்திய காலத்தைசேர்ந்தவர் அதாவது நமது காலத்தை சேர்ந்தவர். விஞ்ஞான கண்டுபிடிப்புகள் இன்னும் பல படிகள் வளர்ந்த காலத்தை சேர்ந்தவர். என்றாலும் அவர் வளர்ந்த விஞ்ஞான கோட்பாடுகளையோ மார்க்சும் எங்கெல்சும் வகுத்து இயங்கியல் பொருள்முதல்வாத விதிகளையோ அறிந்து கொள்ளவில்லை, அவரைப் பொறுத்தவரை சமுதாய வரலாற்றில் தத்துவஞான துறையில் ஏற்பட்ட வளர்ச்சியுடன் தன்னை இணைத்துக் கொள்ளாமல் பதினெட்டாம் நூற்றாண்டின் நிலையில் தன்னைப் பின் தள்ளி இருக்கச் செய்து கொண்டார். இதனால் அவருடைய தத்துவக் கண்ணோட்டம் முழுவதும் கொச்சை பொருள்முதல்வாத அடிப்படையில் அமைவது தவிர்க்கவே முடியாதவையே.கடவுள் மத நம்பிக்கைகளை ஒழிக்க வேண்டுமானால் மனிதனாலேயே உருவாக்கப்பட்ட அந்த நம்பிக்கைகளை ஒழிப்பது சாத்தியமா?இன்றைய மத நம்பிக்கை மனிதனுக்கு அன்னியமாக நின்று மனிதன் மீது ஆதிக்கம் செலுத்துகிறது அதாற்க்கு ஆளும் வர்க்கம் துணைப்போகிறது அப்படியெனில் வெறும் கருத்தால் மதம் கடவுள் நம்பிக்கைகளை ஒழித்து விட முடியுமா?முதலாளித்துவ உற்பத்தி முறை ஒழிக்கப்பட வேண்டும் உற்பத்தி சாதனங்களில் தனியுடைமை ஒழித்து எல்லா உற்பத்தி சாதனங்களையும் சமுதாயமே தன் உடைமையாக்கிக் அவற்றை திட்டமிட்ட அடிப்படையில் உபயோகிப்பதன் மூலம் சமுதாயம் தன்னை தானே விடுவித்துக் கொள்ளும் போது அதாவது சமுதாயத்தோடு விடுதலை பெற முடியும். அப்போதுதான் மனிதன் வெறுமனே நினைப்பதோடு மட்டுமல்லாமல் நினைப்பதை அவனே முடிப்பதாக முடியும். அந்த காலத்தில்தான் மதத்தில் இன்னும் பிரதிபலித்துக் கொண்டிருக்கின்ற அந்நிய மயமான அந்த கடைசி சாத்தியம் அறிந்துகொள்வதுடன் மதத்தின் பிரதிபிம்பம் தானே மறைந்துவிடும் ஏனெனில் அதற்கு பிரதிபலிப்பு எதுவும் இருக்காது.“ஆனால் இதை சாதிப்பதற்கு அதாவது சமுதாய சக்திகள் சமுதாயத்தின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தது வெறும் அறிவு மட்டும் போதாது அதற்கு எல்லாவற்றையும் விட மிகவும் அவசியமான சமுதாய செயல்முறை தான்” என்று ஏங்கெல்ஸ் சுட்டிக்காட்டுகிறார்.

  • அதாவது உற்பத்தி சாதனங்களில் தனியுடைமை ஒழித்து சமுதாய உடைமையாக்கிக் திட்டமிட்ட பொருள் உற்பத்தியின் கீழ் விடுதலை பெற்ற சமுதாயம் திட்டமிட்ட பொருள் உற்பத்தியில் விடுதலைப் பெற்ற சமுதாயத்தையும் சமுதாயத்தின் அங்கத்தவர்களையும் வழிநடத்துவதற்கு வெறும் அறிவு மட்டும் போதாது மாறாக தனியுடைமை சக்திகளுக்கு எதிரான போராட்டம் வர்க்கப் போராட்டம் என்ற சமுதாய செயல்முறை அவசியமாகும். முதலாளித்துவத்தை வர்க்கத்தை எதிர்த்து அதை தூக்கி எறிந்து முற்றாக ஒழித்துக் கட்டும் பாட்டாளி வர்க்கத்தின் போராட்டத்தின் கீழ் மட்டுமே அதை சாதிக்க முடியும் இதுதான் அந்த சமுதாய செயல்முறையாகும்.ஆனால் இங்கே பெரியாரின் நிலை சீர்திருத்தம் மட்டுமே உண்மையில் வர்க்கப் போராட்டத்தை புறக்கணித்து விடுகிறார்.பதினெட்டாம் நூற்றாண்டின் பொருள்முதல்வாதம் பெரும்பாலும் இயந்திர வகைப்பட்டதாக இருந்தது ஏனென்றால் அப்பொழுது உயிரியல் ரசாயன விஞ்ஞானங்கள் குழந்தைப் பருவத்தில் இருந்தது. இயந்திரவியல் அடிப்படையில் தத்துவஞானிகள் விளக்கம் அளித்தனர். இவை இயக்க மறுப்பியலை அடித்தளமாக கொண்டிருந்தது.பத்தொன்பதாம் நூற்றாண்டில் விஞ்ஞானம் பல துறைகளிலும் வளர்ச்சி அடைந்தது குறிப்பாக மூன்று முக்கியமான மகத்தான கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன 1). உயிர்ச் செல் பற்றிய கண்டுபிடிப்பு, 2). சக்தி இடைவிடாது மாறிக் கொண்டே இருக்கிறது. 3). பரிணாம கோட்பாடு டார்வின் கண்டுபிடிப்பு, இவை இயந்திர வகைப்பட்ட பொருள் முதல்வாத குறைபாடுகளை களைந்து இயக்கவியல் பொருள்முதல்வாத கோட்பாடுகளை மார்க்சும் எங்கெல்சும் உருவாக்குவதற்கு இக் கண்டுபிடிப்புகள் இடமளித்தன.பெரியாரின் தத்துவக் கண்ணோட்டம் இயந்திர வகைப்பட்ட பொருள்முதல்வாதம் என்று சொன்னோம் அவர் மனிதனின் உயிரியல் பண்பையும் சமூகவியல் பண்பையும் அறியாதவராக மனித உயிரின் இயக்கம் மனிதனின் குணாம்சம் மனிதனின் உணர்வு பேச்சு மற்றும் சிந்தனை பற்றி தத்துவ விளக்கம் அளிப்பது இதற்கு மேலும் சான்றாகும்.மனிதன் பிறப்பில் இருந்து வேறுபடும் ஒரு உயிர் பிராணி அவன் பிற பொருள்களில் இருந்து வேறுபடும் ஒரு இயக்கம் வடிவத்தை உயிரியக்க வடிவத்தை கொண்டிருக்கிறான் உயிரில் இயக்கம் என்பது வளர்சிதை மாற்றம் கொண்டது இனப்பெருக்க சக்தி கொண்டது உறுத்துணர்ச்சியும்(Irritability) உலகின் மீது விளைவும் எதிர்வினையும் கொண்டது. இப்பண்புகள் எவையும் இயந்திர இயக்கத்தில் இல்லை, எனவே பெரியாரின் இயந்திர இயக்கத்தினோடு உயிருள்ள மனிதனை சமன்படுத்திய பண்பானது இயக்கியலை புரிந்துக் கொள்ளாத போக்கே ஆகும்.
  • பெரியாரைப் பொருத்தவரை ஒரு இயந்திரம் பல்வேறு பாகங்களை உருவாக்கப்பட்டிருப்பது போல மனிதன் ஒரு சரீர கூட்டமைப்பு ஆகும் இயந்திரங்கள் மின்சாரம் அல்லது டீசல் மூலம் இயங்குவது போல மனிதனின் ஆகராதிகள் மூலம் இயங்குகின்றன அவ்வளவுதான் பெரியாரின் தத்துவ கண்ணோட்டத்தில் மனிதன் உயிரியல் இயக்க வடிவம் எவ்வித முக்கியத்துவம் பெறவில்லை .அது மட்டுமன்றி மனிதனின் சமூகவியல் இயக்கம் கூட பெரியாரின் தத்துவ கண்ணோட்டத்தில் எவ்வித முக்கியத்துவம் பெறுவதில்லை மனிதன் பிற பொருள்களில் இருந்து வேறுபட்ட ஒரு உயிரினம் என்பது மட்டுமல்ல பிற உயிரினங்களிடமிருந்து வேறுபட்ட ஒரு சமூக பிரியாணியும் ஆவான் .அவன் ஒரு சமூக வாழ்க்கை வாழ்கிறான் அவனுடைய வாழ்க்கை உழைப்பு உற்பத்தி செய்யும் முறை உணர்வுபூர்வமான பாத்திரமாகி அவனுக்கே உரிய பண்புகள் ஆகும்.அவனுடைய சமூக வாழ்க்கை பொருளாதார வாழ்க்கை கலாச்சார ஆன்மீக வாழ்க்கை என இரு பக்கங்களாக கொண்டிருக்கிறது. மனிதன் ஒரு உயிர் பிரியாணி என்ற முறையில் அவன் உயிரற்ற பிற பொருள்கள் இருந்து வேறுபட்ட முறையில் உயிரியக்க வடிவத்தை கொண்டிருப்பது போல அவன் ஒரு சமூக பிரியாணி என்ற முறையில் பிற உயிரினங்களிடமிருந்து வேறுபட்ட முறையில் சமூகவியல் இயக்க வடிவத்தையும் கொண்டிருக்கிறான்.பெரியார் கூறுகிறார், “இன்றைய தினம் மனித சமுதாயத்திற்கு ஒன்று கூடி வாழ்வதற்கு அரசனும் சட்டமும் தண்டனையும் இல்லாவிட்டால் பாதுகாப்புடனும் சாந்தியும் சமாதானமும் சிறிதாக இருக்க முடியுமா நாம் யாவரும் இந்த அளவுக்கு வாழ்வது அரசாங்கம் சட்டம் தண்டனை ஆகியவை பாதுகாப்பு நிலை மனித சமுதாய கூட்டு வாழ்க்கைக்கு இவை போதும் என்றாலும் ஒரு அளவுக்குதான் போதுமானதாகும்….( பெரியாரின் தத்துவம் நூல் பக்கம்..(17-19)

பகை வர்கங்கள் தத்தம் நலனுக்காக மோதிக் கொண்டதன் விளைவாக குறிப்பாக சுரண்டும் ஆதிக்க வர்க்கங்கள் எதிராக ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்கள் மோதி இதன் விளைவாக சமுதாயம் மேலும் மேலும் வளர்ச்சி அடைந்து வந்திருக்கிறது என்பதே வரலாறு. ஆண்டைகளின் நலனுக்கு எதிராக அடிமைகள் மோதி இதன் விளைவாக ஆண்டான் அடிமை சமுதாயம் வீழ்ந்தது அதனை விட உயர்வான நிலப்பிரபுத்துவ சமூகம் தோன்றியது நிலப்பிரபுக்களுக்கு எதிரான பண்ணை அடிமைகளின் போராட்டத்தால் நிலப்பரப்பு சமூகம் வீழ்ந்தது அதனிடத்தில் முதலாளித்துவ சமுதாயம் தோன்றியது.முதலாளி வர்க்கத்தை எதிர்த்து பாட்டாளி வர்க்கம் போராட்டம் இதன் விளைவாக முதலாளித்துவ சமுதாயம் வீழ்ந்து சோசலிச சமுதாயம் மலர்ந்தது, இங்கெல்லாம் நாம் காண்பது என்னே அடிமைகளும் பண்ணையடிமைகள் தொழிலாளி வர்க்கமும் போராடியதன் விளைவாக ஓர் உயர்வான சமூகம் மலர்ந்தது. இவை கேடு விளைவிப்பதாக இல்லை எனலாம்.மனிதனை அச்சுறுத்தி நேர் பாதையில் செலுத்துவதற்காக கடவுளையும் மதத்தையும் சமுதாய நலனில் அக்கறை கொண்ட பெரியோர்கள் படைத்தார்கள் என்று கூறும் பெரியார் வாழ்நாள் முழுவதும் கடவுளுக்கும் மதத்திற்கும் தீவிரமான எதிரியாக திகழ்ந்தார் ஆனால் பெரியாரின் கடவுள் மறுப்பு கடவுள் மதம் தோன்றுவதற்கு நிலவும் காரணமாக இருக்கும் அடிப்படைகளுக்கு எதிராகத் இல்லை. ஏன் அதைப் புரிந்து கொண்டதாக கூட தெரியவில்லை.கடவுளும் மதமும் சில பெரிய மனிதர்களால் படைக்கப்பட்டு பரப்பப்பட்டது என்று அதன் தோற்றம் வளர்ச்சி பற்றி பெரியார் கருதுகிறார் எனவே அதற்கு எதிரான பிரசாரங்கள் மூலமே கடவுளையும் மதத்தையும் ஒழித்துவிட முடியும் என அவர் நம்புகிறார் ஆனால் கடவுளும் மதமும் தோன்றுவதற்கும் அது நிலவுவதற்கான காரணம் அவ்வளவு எளிமையானது அல்ல.

“எல்லா மதங்களும் மனிதர்களின் அன்றாட வாழ்க்கையை கட்டுப்படுத்தும் புற சக்திகளைப் பற்றி அவர்களின் மனதில் ஏற்படும் வினோதமான பிரதிபிம்பமே மண்ணுலக சக்திகள் இயற்கை கடந்து சக்திகளின் வடிவத்தை ஏற்க்கும் ஒரு பிரதிபிம்பம்” என்று எங்கெல்ஸ் கூறினார்.எனவே கடவுள் மத நம்பிக்கைகளை ஒழிக்க வேண்டுமானால் மனிதனாலேயே மதம் உருவாக்கப் பட்டது என்றாலும் மனிதனுக்கு அன்னியமாக நின்று மனிதன் மீது ஆதிக்கம் செலுத்திவரும் முதலாளித்துவ உற்பத்தி முறை ஒழிக்கப்படவேண்டும் உற்பத்தி சாதனங்களில் தனி உடைமையை ஒழித்து எல்லா உற்பத்தி சாதனங்களையும் சமுதாயமே தன் உடைமையாக்கிக் அவற்றை திட்டமிட்ட அடிப்படையில் உபயோகத்தின் மூலம் சமுதாயம் தன்னை தானே விடுவித்துக் கொள்ள வேண்டும் அப்போதுதான் சமுதாயத்தின் அங்கத்தினர்களும் சமுதாயத்தோடு விடுதலை பெறமுடியும் அப்போது தான் மனிதன் வெறுமனே நினைப்பதோடு மட்டுமல்லாமல் நினைப்பதை அவனை முடிக்க முடியும் அந்த காலத்தில்தான் மதம் இன்னும் பிரதிபலித்துக் கொண்டிருக்கும் என்ற கடைசி சக்தியும் மறைந்துவிடும்.எனவே உண்மையிலேயே கடவுளையும் மதத்தையும் ஒழிக்க விரும்புபவர் ஒருவர் தனியுடமை ஒழித்து பொதுவுடமை சமூகத்தை படைப்பதையே நோக்கமாகக் கொண்டு முதலாளி வர்க்கத்திற்கு எதிரான பாட்டாளி வர்க்கப் போராட்டத்தை கட்டமைப்பதாக இருக்க வேண்டும்.ஆனால் பெரியாரை பொருத்த வரையில் அவருடைய நிலை இதற்குத் தலைகீழானதாகும் அவர் பல சமயங்களில் தனியுடமை ஒழிப்பிலும் சமூக தர்மத்திலும் நம்பிக்கையும் ஆர்வம் தெரிவித்து இருக்கிறார் என்பது உண்மை என்றாலும் , புதிய சமுதாயத்திற்கான வர்க்கப் போராட்டத்தை கடவுள் மத ஒழிப்புக்கான முன்நிபந்தனையாக எங்கும் கருதவில்லை மாறாக கடவுள் மத ஒழிப்பைப் மட்டுமே போராட்ட வடிவமாக கொள்வதன் மூலம் உண்மையில் வர்க்கப் போராட்டத்தை புறக்கணித்து விடுகிறார்.

  • “எல்லா மதங்களும் மனிதர்களின் அன்றாட வாழ்க்கையை கட்டுப்படுத்தும் புற சக்திகளைப் பற்றி அவர்களின் மனதில் ஏற்படும் வினோதமான பிரதிபிம்பமே மண்ணுலக சக்திகள் இயற்கை கடந்து சக்திகளின் வடிவத்தை ஏற்க்கும் ஒரு பிரதிபிம்பம்” என்று எங்கெல்ஸ் கூறினார்.எனவே கடவுள் மத நம்பிக்கைகளை ஒழிக்க வேண்டுமானால் மனிதனாலேயே மதம் உருவாக்கப் பட்டது என்றாலும் மனிதனுக்கு அன்னியமாக நின்று மனிதன் மீது ஆதிக்கம் செலுத்திவரும் முதலாளித்துவ உற்பத்தி முறை ஒழிக்கப்படவேண்டும் உற்பத்தி சாதனங்களில் தனி உடைமையை ஒழித்து எல்லா உற்பத்தி சாதனங்களையும் சமுதாயமே தன் உடைமையாக்கிக் அவற்றை திட்டமிட்ட அடிப்படையில் உபயோகத்தின் மூலம் சமுதாயம் தன்னை தானே விடுவித்துக் கொள்ள வேண்டும் அப்போதுதான் சமுதாயத்தின் அங்கத்தினர்களும் சமுதாயத்தோடு விடுதலை பெறமுடியும் அப்போது தான் மனிதன் வெறுமனே நினைப்பதோடு மட்டுமல்லாமல் நினைப்பதை அவனை முடிக்க முடியும் அந்த காலத்தில்தான் மதம் இன்னும் பிரதிபலித்துக் கொண்டிருக்கும் என்ற கடைசி சக்தியும் மறைந்துவிடும்.எனவே உண்மையிலேயே கடவுளையும் மதத்தையும் ஒழிக்க விரும்புபவர் ஒருவர் தனியுடமை ஒழித்து பொதுவுடமை சமூகத்தை படைப்பதையே நோக்கமாகக் கொண்டு முதலாளி வர்க்கத்திற்கு எதிரான பாட்டாளி வர்க்கப் போராட்டத்தை கட்டமைப்பதாக இருக்க வேண்டும்.ஆனால் பெரியாரை பொருத்த வரையில் அவருடைய நிலை இதற்குத் தலைகீழானதாகும் அவர் பல சமயங்களில் தனியுடமை ஒழிப்பிலும் சமூக தர்மத்திலும் நம்பிக்கையும் ஆர்வம் தெரிவித்து இருக்கிறார் என்பது உண்மை என்றாலும் , புதிய சமுதாயத்திற்கான வர்க்கப் போராட்டத்தை கடவுள் மத ஒழிப்புக்கான முன்நிபந்தனையாக எங்கும் கருதவில்லை மாறாக கடவுள் மத ஒழிப்பைப் மட்டுமே போராட்ட வடிவமாக கொள்வதன் மூலம் உண்மையில் வர்க்கப் போராட்டத்தை புறக்கணித்து விடுகிறார்.

இதனால்தான் பெரியாரின் பொருள்களைப் பற்றிய விளக்கம் “ஒவ்வொரு பொருளும் அவற்றின் உள் முரண்பாடுகளின் சுயமாக இயங்கிக் கொண்டும் மாறிக்கொண்டு உயிரியல் பண்பை பெற்றிருப்பதைக் காணமுடிகிறது மனிதன் உழைப்பு உற்பத்தி செய்யும் முறை உணர்வுபூர்வமான பாத்திரம் மாற்றுவது ஆகியவற்றால் மற்ற உயிரினங்களை விட வளர்ந்தும் வேறுபட்டும் ஒரு சமூக வாழ்க்கை பெற்றிருப்பது” காண மறுக்கிறது.இந்த இயக்க மறுப்பியல் சிந்தனை போக்கே பெரியாரை சாதியதை பார்ப்பனர்கள் படைத்தாகக் கருதிக் கொண்டு, அதன் தோற்திற்கான பொருளாதாரப் போக்கை முறியடிப்பதற்கு முயலாமல், தோன்றிய சாதியத்தைக் காப்பாற்றும் பார்ப்பனர்களை முதன்மைப்படுத்தி அவர்களை ஒழிக்க வேண்டும் என்று கூறுகிறார். இதன் மூலம் பணம் படைத்தவர்களின் சுரண்டலை நீடிக்கச் செய்கிறார், அதாவது காப்பாற்றுகிறார்.இன்றைய வர்க்க முரணுக்குக் காரணமான தனிச்சொத்துடைமையை ஒழிக்க முயற்சிக்காமல், அந்தத் தனிவுடைமையைக் காப்பாற்றுகிற சிந்தனையை முதலில் ஒழிக்கப் பெரியார் முயற்சிக்கிறார். கம்யூனிசத்தை வந்தடைதல் என்பது அறிவு வளர்ச்சியாகப் பார்க்கிறார். அதற்கான பொருளாதார வளர்ச்சியும், அதனை ஒட்டிய தத்துவப் போக்கையும் பெரியார் கண்டுகொள்ளவே இல்லை.இன்றும் மக்களின் வறுமைக்கும் பசி பட்டினிக்கும் காரணமான ஆளும் வர்க்கத்தை கேள்வி கேட்க்காமல் பார்பனர்களை குறைக்கூறி வாழ்ந்து வருகின்றனர். இவை சமூக வளர்ச்சிப் போக்கை கணக்கில் கொள்ளாமையே என்பேன்.

பெரியாரின் நாத்திகம் இயக்க மறுப்பியல் கண்ணோட்டத்தை கொண்டது என்பது சரியே. கடவுள், மதம் ஆகியவற்றை திட்டமிட்டு மனிதர்கள் உருவாக்கினார்கள் என்ற அவரது கருத்து அபத்தம் .மனிதன் உற்பத்தி நடைமுறையில் ஈடுபடும்போது இயற்கை விதிகளை புரிந்து கொள்ளாதபோது உண்டானது கடவுள் நம்பிக்கை. அந்த மூட நம்பிக்கையை பலப்படுத்தி மனிதனை தனக்கு அடிமையாக்க சுரண்டும் வர்க்கமும் ஆளும் வர்க்கங்களும் மதத்தை உருவாக்கின என்பதே உண்மை. இந்தியாவில் பார்ப்பனர்கள் அதற்கு உறுதுணையாக இருந்தார்கள் என்பதும் உண்மை. ஆனால் கடவுள் நம்பிக்கையை அவர்கள்தான் உருவாக்கினார்கள் இல்லையென்றால் மக்களுக்கு கடவுள் நம்பிக்கையே வந்திருக்காது என்பது அபத்தம் ஏற்கத்தக்கதல்ல.மனிதனின் கடைசி புகலிடம் மதம் என்று மார்க்ஸ் கூறுவதன் அர்த்தம் என்ன? மனிதன் தான் நினைத்தது நடக்காத போது வேறுவழியின்றி கடவுளைநாடிச் செல்கிறான் என்பதே இதன் அர்த்தம். அப்படி தேவைகள் பூர்த்தியாகி அவன் நினைத்தபடி நடக்கும் போதும் அவன் கடவுளை நாட வேண்டிய அவசியம் இல்லை என்றுதானே இதற்கு அர்த்தம்.மனிதனின் தேவை நிறைவு பெற்று அவன் நினைத்தபடி வாழ்க்கை அமையும்போது அவன் கடவுளை நாடவேண்டிய அவசியம் இருக்காது. இயற்கை விதிகளை புரிந்து கொள்ளும் பொழுது மூடநம்பிக்கையும் ஒழிந்து போகும்.ஆகவே மூடநம்பிக்கை, கடவுள், மதம் ஆகியவை ஒழிந்து போக பார்ப்பானை ஒழித்துவிட்டால் ஒழிந்து போகாது. மனித வாழ்க்கைக்கு உகந்த சோசலிச சமுதாய மாற்றமே இதற்கு தீர்வாகும்.

பெரியாரின் ஏகாதிபத்தியத்தையும் நிலப் பிரபுத்துவத்தையும் எதிர்க்காமலேயே சமூக சீர்திருத்தம் சாத்தியம் எனும் வழி சாத்தியம்தானா?

“மேல்நாடுகளில் சாதியம் இல்லாததால், அங்கு பொதுவுடைமை கொண்டுவர வர்க்கச்சண்டை தொடங்க வேண்டியிருந்தது. இங்கு சாதிமுறை இருப்பதால் சாதிச்சண்டை தொடங்கவேண்டியதுதான்” என்று பெரியார் கூறினார்.பொதுவுடைமைக்கு சுயமரியாதையை வழியாக வைத்தார். சுயமரியாதை இயக்கம் ஒரு கலாச்சார இயக்கம் என்றும், அரசியல் இயக்கம் அல்ல என்றும் பெரியார் விளக்கம் தந்தார். எனவே அவருடைய கருத்துப்படி, சுயமரியாதை என்பது கலாச்சாரத்துறைக்கு மட்டுமே உரியது. அரசியல், பொருளாதாரத் துறைகளுக்கு உரியதல்ல. கலாச்சாரத் துறையிலும்கூட எல்லா மக்களுக்குமானது என்று பொருள்கொள்ளக் கூடாது. அது முதலில் பார்ப்பனனை நீக்கிவிட்டு, இறுதியில் தீண்டத்தகாதார்களுக்கு சலுகைகள் வேண்டும் பொழுதும், (சமுதாய சீர்திருத்தம் – பக்.25,44) ஏனைய இடங்களிலும் ஆதிதிராவிடர் அல்லது மக்களில் பார்ப்பனர் அல்லாத எல்லோருடைய நன்மைக்கும் பேசுவதாகப் பெரியார் குறிப்பிடுகிறார் (குடியரசு – 1.10.1931).பெரியார் குறிப்பிடும் பார்ப்பனர் அல்லாதார் என்ற சொற்றொடரின் பொருள் – பார்ப்பனர்களைத் தவிர்த்து, தீண்டத்தகாதார் உட்பட அனைவரும் என்ற பொருளில் அல்ல. ‘பார்ப்பனர், தீண்டத்தகாதார் தவிர்த்த’ என்ற பொருளில் கூறுகிறார். ஆக, பெரியார் குறிப்பிடும் சுயமரியாதை, அரசியல், மற்றும் பொருளாதாரத் துறைகளுக்கு இல்லாததோடு மட்டும் இன்றி, அவரது கலாச்சார சுயமரியாதை – பார்ப்பனர், தீண்டத்தகாதார் நீங்கிய பார்ப்பனரல்லாத மக்களுக்கான கலாச்சார சுயமரியாதையாகவே உள்ளது.பார்ப்பனர் அல்லாதோரில் கூட, அனைவருக்கும் சுயமரியாதை என்று கொள்ளமுடியாது. பெரியார், சாதியத்தை அதற்கு அடித்தளமான உற்பத்தி உறவிலிருந்து பிரித்து, வெறும் பார்ப்பனர் கலாச்சாரமாக மட்டுமே பார்க்கிறார். பார்ப்பனர் அல்லாதாரிடமும் உள்ள நிலவுடைமைக் கலாச்சாரக் கூறுகளைக் கூட நெடுங்காலமாக மக்களது சிந்தனைகளை ஆதிக்கம் செலுத்திவரும் நிலவுடைமைக் கலாச்சார ஆதிக்கத்தின் உருவாக்கத்திலும், விரிவாக்கத்திலும் பார்ப்பனர்களுக்குள்ள பெரும்பங்கை மறுக்க இயலாது. எனினும், பார்ப்பனர் அல்லாத வேளாளர் சாதி சித்தாந்தங்களும்; மன்னர்களும் – மறவர்சாதி, வன்னியர்சாதி, நாயக்கர்சாதி மன்னர்களும் இதைக் கண்ணுங்கருத்துமாகப் பே­னியதை தமிழர் வரலாற்றில் காணமுடியும். (கோ.கேசவன் – சுயமரியாதை இயக்கமும் பொதுவுடைமையும்).பார்ப்பனரல்லாத வேளாளர் சாதியைச் சேர்ந்த சைவ சித்தாந்தவாதிகள், சாதியத்தைக் காப்பதில் பார்ப்பனர்களைவிட சளைத்தவர்கள் அல்ல என்பதை, 1997 டிசம்பர் 19ல், தஞ்சைப் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற ஆறாவது உலக சைவ மாநாட்டில் தருமபுரி ஆதீன மடாதிபதி, கர்மவிதியை ஆதரித்துப் பேசிய பின்வரும் கூற்றிலிருந்து புரிந்து கொள்ளலாம். அதாவது, ஆதிதிராவிடர்கள் முன்னேறுவதற்கு அவசரப் படக்கூடாது என்றும், மனிதன் ஒவ்வொரு பிறவியிலும் ஒவ்வொரு சாதியில் பிறந்து, கடைசியாக உயர்சாதியில் பிறந்து நன்மை பெறுவார் என்றார். இந்திய ஜனாதிபதியாக இருந்த சங்கர்தயாள் சர்மா ஒரு பிறவியில் ஆதிதிராவிடராகப் பிறந்தார். இறுதியாக பார்ப்பனர் சாதியில் பிறந்தார். அதைப்போலவே, இன்றுள்ள ஆதிதிராவிடர்கள், அடுத்த பிறவிகளில் பிறந்து முன்னேறுவதற்கு வாய்ப்புண்டு, எனவே முன்னேற்வதற்கு அவசரப்படக்கூடாது என்று உழைக்கும் ஆதிதிராவிட மக்களுக்கு ‘அருளுரை’ கூறினார். இதன்மூலம், இந்தச் சைவசிந்தாந்தி அடுக்குமுறையை (படிநிலை முறையை) மதத் தத்துவத்தின் மூலமாக ஆரிய (பார்ப்பனிய) சனாதனிகளைப் போலவே நியாயப்படுத்தினார்.பெரியார் நிலவுடைமைச் சித்தாந்தப் பரவலுக்கு பார்ப்பனரை மட்டுமே பொறுப்பாளிகளாக்குகிறார்; வேளாளர் சித்தாந்த வாதிகளையும், மடாதிபதிகளையும், பெருமன்னர்களையும் அதைக் கட்டிக் காப்பதில் உறுதியாக நின்ற மறவர், நாயக்கர் சாதி மன்னர்களையும் அதற்குரிய பொறுப்புகளிலிருந்து பெரியார் நீக்கிவிடுகிறார்.பார்ப்பனரல்லாதாரில் மிகப் பெரும்பான்மையினரான உழைக்கும் மக்களின் சுயமரியாதையை, பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிப்பதால் மட்டுமே காப்பாற்றிவிட முடியாது. கூடவே, முதலாளிகள் நிலப்பிரபுக்களின் ஆதிக்கத்தை ஒழிப்பதன் மூலமே காப்பாற்ற முடியும்.ஆனால், பெரியார், முதலாளிகள், நிலப்பிரபுக்கள் ஆகியோரின் ஆதிக்கத்திற்கு எதிரான வர்க்கப்போராட்டத்திற்கு மாறாக வர்க்கச் சமரசத்தைப் போதிக்கிறார். தொழிலாளர் உழவர் வர்க்க அடிப்படையில் 1952 ஆம் ஆண்டில், திராவிடர் உழவர் – தொழிலாளர் கழகம் என்னும் அமைப்பை நிறுவினார். அதன் தீர்மானம் பின்வருமாறு கூறுகிறது.“திரவிடத் தொழிலாளர்களுக்கும், அவர்கள் வேலைசெய்யும் பண்ணையார், மிராசுதார், முதலாளிகள், ஆண்டைகள் ஆகியோருக்கும் இடையில், நட்பும், நல்லுறவும், நம்பிக்கையும், கூட்டுப்பொறுப்பும் இருக்கும்படி செய்வது” என்றும், அதனுடைய நோக்கம் தெளிவாக வர்க்கப்போராட்ட முறைக்கு எதிரான வர்க்க உடன்பாட்டுக் கொள்கை என விளங்குகிறது இதையே பெரியார் ‘பங்காளி’ நிலை என்று குறிப்பிடுகிறார்.எனவேதான், பெரியாரின் சுயமரியாதைத் தத்துவம், பார்ப்பனரல்லாத உழைக்கும் மக்களுக்கு முழுமையான சுயமரியாதைத் தத்துவமாக இல்லை.பெரியாரின் சுயமரியாதைக் கொள்கை ஒரு சமுதாயச் சீர்திருத்தக் கொள்கையாகும். சுயமரியாதை இயக்கம் ஒரு கலாச்சார இயக்கம் என்றும், அரசியல் இயக்கம் அல்ல என்றும் பெரியார் விளக்கம் அளித்தார். இவ்வாறு, பெரியார், அரசியல் சுதந்திரத்திற்கான இயக்கத்தையும், சமுதாய சீர்திருத்தத்திற்கான இயக்கத்தையும் பிரித்துவிடுகிறார். ஆகையால், நாட்டின் சுதந்திரத்திற்கான இயக்கத்திலிருந்து பிரிந்து, தன்னளவில் தனித்து இயங்குவது. சமுதாய சீர்திருத்தம் என்பன பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் அடிப்படையான கொள்கை ஆகிவிடுகிறது.பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தை எதிர்த்த, நாட்டின் சுதந்திரத்திற்கான போராட்ட காலகட்டத்தில், சுதந்திரத்திற்கான போராட்டத்திலிருந்து, சமுதாயச் சீர்திருத்த இயக்கத்தைப் பிரிப்பதும், சமுதாயச் சீர்திருத்த இயக்கத்தையும்கூட வெறும் பார்ப்பன எதிர்ப்பு இயக்கமாகக் சுருக்கிவிடுவதும் பெரியாரை, பிரிட்டிஷ் ஆட்சிக்கும், நிலப்பிரபுத்துவ மன்னர்களின் ஆட்சிக்கும் ஆதரவு தெரிவிப்பதற்கும்; பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின்கீழ் அன்றைய சென்னை மாகாணத்திற்கு டொமீனியன் அந்தஸ்த்துள்ள தனிநாடு கோரும் நிலைக்கு இட்டுச் சென்றது.பெரியாரின் பின்வரும் கூற்றுக்களே இதற்குச் சான்று:“நான் இன்று, நேற்றாகச் சொல்லவில்லை நாடு பிரிய வேண்டும் என்று, வெள்ளைக்காரன் காலத்திலேயே ஏன் 1938லேயே ஆச்சாரியார் மந்திரியானவுடனேயே சொன்னேன். 1947க்குப் பிறகு, அதாவது சுதந்திரம் அடைந்த பிறகுதான் நான் நாடு பிரியவேண்டும் என்று சொல்லவில்லை. வெள்ளைக்காரன் காலத்திலேயே, நமது நாடு இந்த மதராஸ் கவர்மென்ட்டின் ஆதிக்கத்தில் இல்லாமல், வைசிராய் ஆதிக்கத்தில் இருக்கும்படி பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று கேட்டேன். மதராஸ் கவர்மென்ட் என்றால் அப்போதும் பார்ப்பான் ஆதிக்கம் – நம் நாட்டை நாமே ஆண்டுகொண்டு சிற்சில விஷயங்களில் மாத்திரம் வெள்ளைக்காரனின் அதிகாரத்திற்கு உட்பட்டு நாம் இருப்பதில் ஆட்சேபனை இல்லை என்று கருத்துத் தெரிவித்தேன்.”(22.5.1960)“பார்ப்பான் கையில், அவன் ஆதிக்கத்தில் நாடு வந்தவுடன் செய்த முதல்வேலை, சுதேசி இராஜாக்களையும், “பரசுராமன் சத்திரியர்களை வெட்டிக்குவித்ததுபோல்”, எல்லா ராஜாக்களையும் ஒழித்துக்கட்டி, பார்ப்பன சர்வாதிகார அட்சியாக ஆக்கிக் கொண்டான். அதற்குக் காரணம் 632 அரசர்களில், கிட்டதட்ட 600 பேருக்கு மேல் சூத்திரர்கள் (பார்ப்பனர் அல்லாதவர்கள்). மனுதர்ம சாஸ்த்திரத்தி, “சூத்திரன் ஆளுகின்ற ராஜ்ஜியத்தில் பிராமணர்கள் வகிக்கக் கூடாது, போர் நடத்தி சூத்திர ஆட்சியை ஒழிக்க வேண்டும்.” என்றும் இருக்கிறது. அதனால் ஒழித்தார்கள். அதுவும் எப்படி எப்படி ஒழித்தார்கள்? மிரட்டிக் கையெழுத்து வாங்கிக் கொண்டு வெளியே போ என்றார்கள். நீ இராஜாவாக உள்ளே வந்தாய், மனுஷனாகவாவது வெளியே போக நினைத்தால் மரியாதையாகக் கையெழுத்துப்போடு என்று மிரட்டினார்கள். ஒரு தடவை புதுக்கோட்டை மகராஜா குடும்பத்தார் என்னிடம் இதைத் தெரிவித்தார்கள். இப்போது சில ராஜாக்களுக்கு கவர்னர் பதவி மாதிரி சில சிமிஞி பதவிகளைக் கொடுத்தார்கள். அத்தோடு அவர்கள் வாழ்வும் தீர்ந்தது.” (22.5.1960)“அவர்கள் எல்லாம் வெள்ளையர்களுக்கு அடிமைகள் அல்ல அவரவர்கள் நாட்டுக்கு சர்வாதிகார இராஜாக்கள். அவர்களால் தனக்கு எந்தக் கேடும் வராத வண்ணம் ரீஜண்டுகளைப் போட்டு அவர்களை முழுச்சுதந்திரம் உள்ளவர்களாகவே, மகாராஜாக்களாகவே வைத்திருந்தான். மற்றபடி ஆட்சியில் சகல அதிகாரங்களும் அவர்களுக்கே இருந்தது. தனி ரயில், தனி தபால் ஸ்டாம்ப், நாணயம், சுங்கம், பட்டாளம், வரிவிதிக்கும் அதிகாரம் இந்தப்படிக்கு சகல உரிமைகளும் அவர்களுக்கே – அந்தந்த நாட்டு அரசர்களுக்கே இருந்தது. வெள்ளைக்காரன் ஆட்சியில் அவர்களுக்கே நமக்கோ என்ன கேடு வந்தது?” (22.5.1960)சுயமரியாதை இயக்கத்தையும்கூட பார்ப்பனர், தீண்டத்தகாதோர் மற்றும் பார்ப்பனர் அல்லாதோரிலும் உழைக்கும் மக்கள் ஆகியோரை நீக்கிவிட்டு (அவர்களின் முழுமையான விடுதலைக்கு இல்லாததால்) பார்ப்பனர் அல்லாத சாதிகளில் உள்ள சுரண்டும் வர்க்க – ஆளும் வர்க்கக் கும்பல்களின் இயக்கமாக சுருக்கிவிடுவது; ஒருபுறம், பிரிட்டிஷ் காலனி அரசதிகார அமைப்புகளில் இடம் பிடிப்பதற்காக, பார்ப்பன ஆளும்வர்க்க கும்பலுக்கும், பார்ப்பனர் அல்லாத சாதிகளில் உள்ள ஆளும்வர்க்க கும்பல்களுக்கும் இடையில் நடைபெற்ற போட்டியில், பார்ப்பனர் அல்லாத சாதிகளில் உள்ள ஆளும் வர்க்கக் கும்பல்களுக்கு ஆதரவு அளிப்பது; மறுபுறம், பார்ப்பனர் அல்லாத சாதிகளில் உள்ள ஆளும் வர்க்க கும்பலுக்கும், தீண்டத்தகாத சாதியினருக்கும் இடையில் முரண்பாடுகள் மோதல்கள் ஏற்படும்போது, தாழ்த்தப்பட்டோர் பக்கம் உறுதியாக நிற்காமல், கபட நாடகம் ஆடுவதும், தீண்டத்தகாதார்க்கு வெறும் வாய்ச்சொல் உபச்சாரம் செய்வது ஆகிய நிலைக்கு இட்டுச்சென்றது. இதன் விளைவாக, பார்ப்பனர் அல்லாத சாதிகளில் உள்ள சுரண்டும் ஆளும் வர்க்கக் கும்பல்கள் கட்டியமைத்த சாதிசங்கங்கள் ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதையோ, சாதி ஒழிப்பையே தமது நோக்கமாகக் கொள்ளாமல், அரசை அண்டி இட ஒதுக்கீட்டையும் சலுகைகளையும் கேட்டுப் பெறுவதையே முதற்பெரும் நோக்கமாகக் செயல்பட்டன.ஏகாதிபத்தியச் சீர்திருத்தக் கொள்கைகள் – 1909 ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த மார்லி – மிண்டோ சீர்திருத்தங்களோடு புதிய சாதிச்சங்கங்கள் கட்டும் போக்கு இணைந்திருந்தது. முஸ்லீம்கள், பிற்படுத்தப்பட்ட சாதிகள் மற்றும் தீண்டத்தகாதோர் ஆகியோருக்கு தனி வாக்காளர் தொகுதிகள்; அரசாங்கப் பணிகளிலும், கல்வி வாய்ப்புகளிலும் இட ஒதுக்கீடுகள் வழங்குவது; இதன்மூலம் அவர்களுக்கு, பிரிட்டிஷ் ஆட்சியின் மூலம் முன்னேற முடியும் என்ற ஒரு கற்பனையான நம்பிக்கையை ஏற்படுத்துவது என்பதே இச்சீர்திருத்த நடவடிக்கைகளின் உள்ளடக்கமாக இருந்தன. காலனி ஆட்சிக்கெதிராக மக்கள் ஒன்று திரளாமல் தடுத்து நிறுத்துவது; ஏற்கனவே இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையிலிருக்கும் மத அடிப்படையிலான முரண்பாடுகளையும், பிற்போக்கு சாதி ஒடுக்குமுறை காரணமாக மேல்சாதி, கீழ் சாதிகளுக்கிடையிலான முரண்பாடுகளையும் பயன்படுத்துவதுடன், ஏற்கனவே ஏகாதிபத்தியத்திற்கும் நிலப்பிரபுத்துவத்திற்கும் இடையில் உருவாகியிருந்த கூட்டணி அடிப்படையில், நிலப்பட்டா, பட்டம் வரி, ஆகியவற்றை அளவு கோலாக வைத்து தன் அதிகாரத்திற்குச் சேவைசெய்யும் வர்க்கங்களுக்கு இச்சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம் அமையவுள்ள அரசதிகார அமைப்புகளில் இடம் அளிப்பது மற்றும் பிற சலுகைகளை வழங்குவது என்பதே இச்சீர்திருத்தங்களின் நோக்கம் ஆகும். உண்மையான ஜனநாயகத்தைத் கொண்டுவருவதோ, இச்சலுகைகளைப் பெறுகின்ற பிரிவினருக்கு ஜனநாயக உரிமைகளை வழங்குவதோ நோக்கமாக இல்லை. சுருங்கக்கூறின், இது பிரிட்டிஷ் காலனி ஆட்சியில் ஒரு செயல்தந்திரம் ஆகும். உருவாகிவந்த தேசிய இனங்களை மத அடிப்படையில் உடைப்பது; பிரிப்பது. ஒரு மொழி அடிப்படையில் மாநிலங்கள் அமைப்பதற்குப் பதிலாக, பலமொழி பேசும் மக்களை உள்ளடக்கிய மாநிலங்களை உருவாக்குவது, மக்களின் ஒன்றுபட்ட போராட்டங்களைத் தடுத்து நிறுத்த சாதி அடிப்படையில் மக்களைப் பிரிப்பது, இதன்மூலம் மதம் மற்றும் சாதிப்பிற்போக்கை நிலைநிறுத்துவது; அனைத்து மக்களுக்கும் வாக்குரிமை என்பதற்கு மாறாக, முதலாளித்துவத்திற்கு முந்தைய ஆளும் வர்க்கப் பிரிவினருக்கு மட்டுமே வாக்குரிமை ஆகிய இச்சீர்த்திருத்தம் – காலனி ஆதிக்கச் சீர்திருத்தக் கொள்கையே தவிர, இந்தியச் சமுதாயத்தை ஜனநாயகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதல்ல. இத்தகைய நிலமைகளில்தான், புதிதாக நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, சாதி ஒழிப்பு என்பவற்றை முன்னிறுத்தாமலும், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்கிற ஜனநாயகக் கோட்பாட்டை முன்னிறுத்தாமலும், காலனிய ஆட்சியதிகாரத்தை அண்டிப்பிழைப்பதையும் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டன. இட ஒதுக்கீடு, அதிகாரப்பகிர்வு என்பதையே முழுமுதல் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டன.பெரியார்.ஏ.எம்.கே.சாதி பற்றிய குறிப்புகள் எனும் கட்டுரையிலிருந்துபதிவு: தோழர்: செங் காற்று

May be an image of text that says 'வெள்ளை ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தில் புரட்சிகர இளைஞர்கள் திரண்டுக்கொண்டிருக்கையில் பெரியார் தன்னை இவ்வாறு வெளிபடுத்துகிறார் "சுயராஜ்யம் என்பது அர்த்தமற்ற பேச்சு" "வெள்ளைக்காரன் நம்மை ஆள்வதற்கு காரணம் இருக்கலாம்" "வடக்கிலிருப்பவர்கள் ஆரியர்கள் தென்னிந்தியாவை சார்ந்த நாம் திராவிடர்கள்" "இந்தியா என்பது கற்பனை" ("ஆரியர் திராவிடர்" குறுநூல்- வெளியீடு பெரியார் திராவிட கழகம்) காங்கிரஸ், பார்ப்பான் எதிர்ப்பு எனும் பெயரில் இவ்வாறு போராட்டத்தை திசைதிருப்பி ஏகாதிபத்திய சேவகனாக மாறுகிறார்.'
May be an image of text that says 'ஆண் இரண்டு மனைவி கட்டினால் பெண்ணும் இரண்டு கணவன் கட்டலாம் என்றும், குடும்ப அமைப்பும் குழந்தை பெற்றுக் கொள்வதும் தான் பெண் அடிமையானதற்கு காரணம் என்றும் பெண்கள் கர்ப்பப்பையை வெட்டியெறிய வேண்டும் என்றும் பெரியார் கூறுகிறார். பெண் அடிமைத் தனத்திற்கு தனிச் சொத்துடமை தான் காரணம் என்ற பொருளில் அடிப்படையை காண மறுக்கிறார். பெரியாரின் இந்த அறிவியலுக்கு எதிரான அராஜகமான கருத்துக்கள் தமிழகத்தின் முத்லாளித்துவ பெண்ணியவாதிகளுக்கு வழிகாட்டியாக திகழ்கின்றன. நிலவுகின்ற தனியுடமை சமூக அமைப்புக்குள்ளாகவே மணதக விடுதலைக்கான தீர்வுகள் தேடப்படுகிறது. முகம் தாங்கிய பல்வேறு வகையினரால் பெண்களுக்கான வேலை வாய்ப்பினை ஏற்படுத்தித் தருவது, பெண்களுக்கான இட ஒதுக்கீடு கோருவது போன்றவற்றின் மூலமாக பெண் சமத்துவத்தை ஏற்படுத்திவிட முடியுமென வாதிடுகிறார்கள்; உண்மையில் நடிக்கிறார்கள். -சமரன்'
May be an image of 1 person and text that says '"வெள்ளைக்காரன் காலை நக்கியவர்கள் என்று நீங்கள் எங்களை கேவலமாகச் சொல்லலாம். பார்ப்பான் காலை விட வெள்ளைக்காரன் கால் சுத்தமானது. அது சாக்ஸ் போட்ட கால்-சுத்தமாக இருக்கும். இதை நக்குவதை விட அதை நக்குவது என்பது நல்லது என்று பெரியார் தனக்கே உரிய பாணியில் ஓங்கி அடித்து பதில் சொன்னார்" -வீரமணி, மொழியால் தமிழர், இனத்தால் திராவிடர்'

தேவைப் பட்டால் இன்னும் எழுதுவேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *