பெரியாரியத்தை மார்க்சியத்தோடு கலக்க சொல்லும்
பெரியாரியத்தை மார்க்சியத்தோடு கலக்க சொல்லும்

பெரியாரியத்தை மார்க்சியத்தோடு கலக்க சொல்லும்

ஒவ்வொரு கேள்விக்கும் தனியாக உள்ளவற்றை அறிந்து பதிலாக…
ஏகாதிபத்தியம் உங்கள் வீட்டு கதவை தட்டி நமது அனிதாவை நீட் என்ற பெயரில் கொலை செய்துவிட்டது இப்போதும் அவர்களை வெளியில் இருக்கிறார்கள் என்கிறீர்கள் நியாயமா? இந்திய அரசின் ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் யார் பயனடைகிறார்கள் என்று கவனியுங்கள். அதுதான் மிகவும் முக்கியமானது அவர்கள் பயனடையவே நமது அனிதாவையும் தாழ்த்தப்பட்ட மற்றும் இஸ்லாமிய சகோதரர்களையும் படுகொலை செய்கிறார்கள். தற்போது நீட் தேர்வை நடத்தியது ஒரு அமெரிக்க கார்பரேட் நிறுவனம். அது கேள்வித்தாளை விற்று அடித்த கொள்ளை பல ஆயிரம் கோடி. இவர்களுக்காகவே மோடி உலகம் சுற்றுகிறார். யாருடைய நலனுக்காக இந்த அரசு இருக்கிறது என்பதை மக்கள் புரிந்துகொள்ளவில்லை என்றால் மக்கள்.ஏமாந்துகொண்டே இருப்பார்கள். ஆகவே இந்த அரசு ஏகாதிபத்தியவாதிகளின் நலனுக்காகவே செயல்படுகிறது என்ற உண்மையை மக்களுக்கு தெரியவிடாமல் மறைப்பதற்கே இந்த அரசை பார்ப்பனிய அரசு என்று பிரச்சாரம் செய்கிறார்கள். இதன் மூலம் மோடி கும்பல் இந்துக்களுக்காகவே இந்த அரசு இருக்கிறது என்று சொல்லி ஏகாதிபத்தியத்திற்கு இந்த அரசு சேவை செய்வதை எப்படி மறைக்கிறதோ அதுபோலவே இது பார்ப்பனிய அரசு என்று சொல்லி இது ஏகாதிபத்திய நலன்காக்கும் அரசு என்ற உண்மையை மக்கள்.தெரிந்துகொள்ள விடாமல் மறைத்து ஏகாதிபத்தியங்களுக்கு இவ்விருவரும் சேவை செய்கிறார்கள்.
இந்துத்துவ பாசிஸ்ட்டுகள் இந்திய மக்களின் எதிரிகளே. அதில் எங்களுக்கு கருத்து வேறுபாடு இல்லை. உலகம் முழுவதிலுமுள்ள மக்களை அடிமைப்படுத்திட பல லட்சக்கணக்கான மக்களை படுகொலை செய்யும் உலக பயங்கரவாதி அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்யும் கூட்டமே இந்த இந்துத்துவ பாசிச கூட்டம் என்ற உண்மையை சிலர் தொடர்ந்து புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். இந்த பாசிச கூட்டம் அன்னியர்களை கூவிக்கூவி அழைத்து இங்கே மூலதனம் இடுங்கள் என்று சொல்லி அன்னியர்கள் இந்த நாட்டை கொள்ளையடிக்க வழி செய்துகொடுக்கிறது. அதனால் இங்கு விவசாயிகள் தொழிலாளர்கள் வணிகர்கள் மாணவர்கள் என்று பலரும் பாதிக்கப் படுகிறார்கள். ஆகவே அவர்கள் இதனை எதிர்த்து தன்னியல்பாக போராடுகிறார்கள். இந்த போராட்டத்தை திசைதிருப்பவும் மக்கள் ஒரு புரட்சிகர அமைப்பின் பின்னால் அணிதிரண்டுவிடக்கூடாது என்பதற்காகவும் சாதி மத அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தி மோதவிடுகிறது இந்த காவிக்கூட்டம். இந்த கூட்டம் ஜனநாயக சக்திகளையும் படுகொலை செய்கிறது. இவ்வாறு இவர்கள் செய்யும் கொலைகளை மட்டும் பார்த்து இவர்களை மத வெறியர்கள் என்று மதிப்பிடுகிறார்கள். ஆனால் இவர்கள் நாட்டு மக்களுக்கு துரோகம் செய்து அன்னிய ஏகாதிபத்தியங்களுக்கு சேவை செய்வதை பார்க்க மறுக்கிறார்கள். ஆகவே இந்துத்துவ பாசிச கும்பலின் நாட்டு மக்கள் விரோத விதேசிக் கொள்கைகளை எதிர்த்தும் சாதி மத மோதல்களை தூண்டுவதை எதிர்த்தும் போராட வேண்டும். வெறுமனே மத அடிப்படையை மட்டும் எதிர்த்தால் அவர்கள் மேலும் மேலும் வளர்வார்கள். ஆகவே அவர்களை வீழ்த்த அவர்களின் எஜமானன் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்த சுதந்திரப் போராட்டத்தை நாம் நடத்த வேண்டும். பெண்கள் பற்றிய மதிப்பீடு:-ஆதி பொதுவுடமை சமூகத்தில் பெண் தலமை பாத்திரம் வகித்தாள். ஆகவே அதனை தாய்வழி சமூகம் என்பர். அங்கு எல்லா ஆண்களும் அனைத்து பெண்களுக்கும் கணவன்மார்களாவர். அதேபோல் அனைத்து பெண்களும் அனைத்து ஆண்களுக்கும் மனைவிமார்களாவர். வரைமுறையற்ற பாலுறவு இருந்தபோதும் அங்கு யாரும் யாரையும் அடிமைப்படுத்தவில்லை. உற்பத்தி வளர்ச்சியின் காரணமாக தலமை பாத்திரம் வகித்த பெண் எளிமையான வீட்டு வேலைகளுக்கு பொறுப்பெடுத்தாள் ஆண்கள் வெளியிலுள்ள கடின வேலைகளுக்கு பொறுப்பெடுத்து தனியுடமை சமூகம் உருவானபோது சொத்துடமை பெற்ற ஆண்கள் ஆதிக்க சக்தியாக வளர்ந்து பெண்களை அடிமைப்படுத்தினார்கள். ஆகவே பெண் அடிமையானதற்கு காரணமான தனியுடமையை ஒழிப்பதன் மூலம்மட்டுமே பெண்விடுதலை அடையமுடியும். அனைத்து விசயங்களிலும் சமத்துவம் சாத்தியமில்லையே அப்படியானால் பொதுவுடமை என்பது ஒரு கற்பனையே என்று சிலர் வாதிடுகிறார்கள். ஆம் அனைத்து விசயங்களிலும் சமத்துவம் சாத்தியம் இல்லை என்பது உண்மைதான் எனினும் சாத்தியமான அனைத்து விசயங்களிலும் சமத்துவத்தை கொண்டுவருவதுதான் பொதுவுடமையாகும். வீரம்விளைந்தது நாவலில் ஒரு கம்யூனிஸ்ட்டு கட்சிக்குழுவிலுள்ள இளைஞர்கள் ஒரு சிறு வீட்டில் தங்கியிருப்பார்கள் அங்குள்ள பொருள்களில் எதையெல்லாம் அனைவராலும் பயன்படுத்தமுடியுமோ அதையெல்லாம் அந்த குழுவின் உடமையாக ஏற்றுக்கொள்வார்கள். எந்த பொருள்கையெல்லாம் ஒவ்வொரு தனிநபர் மட்டுமே பயன்படுத்த முடியுமோ அந்த பொருள்களை மட்டும் ஒவ்வொருவரது தனியுடமையாக ஏற்றுக்கொள்வார்கள். தனியுடமை சமுதாயம் உருவானபோது ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கை வகுக்கப்பட்டு ஒருத்திக்கு ஒருவன் என்று நடைமுறையில் செயல்படுத்தப்பட்டு ஒருவன் எத்தனை பெண்களோடும் உறவு கொள்ளலாம் என்றானதே. அதற்கு உண்மையிலேயே முடிவுகட்டப்பட்டு ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலை பொதுவுடமை சமுகத்தில் உருவாகும். இத்தகைய தனியுடமையுடன் கூடிய சமத்துவம்தான் பொதுவுடமையாகும். தனியுடமை சமுதாயத்தில் ஒரு ஒடுக்கப்பட்ட ஆணும் வன்முறைக்கு பலியாகிறான். உதாரனம் இளவரசன், கோகுல்ராஜ் போன்றவர்களின் படுகொலைகள். இந்த சமுதாயத்தில் பெண்கள் கூடுதலாக பாலியல் வன்முறைக்கு பலியாகிறார்கள். இந்த ஆண், பெண் இரு பாலினத்தின்மீதும் நடைபெறும் கொடுமைகளை போக்க தனியுடமையை ஒழிப்பதுதான் ஒரே வழி இதனை மறைப்பதற்கு ஆண், பெண்ணுக்கு இடையிலான உடலியல், மனவியல் வேறுபாடுகளை பேசி மயிர்பிளக்கும் வாதம் செய்வது வீன்வேலை பெண்விடுதலைக்கு பயன்படாது, மட்டுமல்ல பெண்விடுதலைக்கு எதிரானதாகும்.லத்தீன் அமெரிக்காவிலிருந்து அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்குத் தொடர்ச்சியாக வெள்ளம்போல் பணம் செல்கிறது. ஒரு நிமிடத்தில் 4ஆயிரம் டாலர், ஒரு நாளில் 50 லட்சம் டாலர், ஒரு வருடத்தில் 20கோடி டாலர், ஒவ்வொரு 5 வருடமும் 100 கோடி டாலர் பணம் செல்கிறது. நம்மைவிட்டுச் செல்லும் ஒவ்வொரு ஆயிரம் டாலருக்கும் இங்கே ஒரு மனிதன் செத்துப் பிணமாகிறான். ஆம் ஒரு சாவுக்கு ஆயிரம் டாலர் என்பதுதான் ஏகாதிபத்தியத்தின் விலை. (மாபெரும் விவாதம் நூலில் இருந்து).
1960ஆம் ஆண்டுகளிலேயே மாவாவின் தலைமையிலான சீன கம்யூனிஸ்ட்டு கட்சி, ரஷ்ய கம்யூனிஸ்ட்டு கட்சிக்கு எதிரான போராட்டத்தில் ஏகாதிபத்திய புதியகாலனியாதிக்கத்தின் விளைவுகள் குறித்து முன்வைத்தது. இதற்குப் பிறகு ஐம்பது ஆண்டுகள் கடந்துவிட்டது தற்போது நமது நாட்டில் விவசாயிகள் 5 லட்சம்பேர் தற்கொலை செய்து இறந்துள்ளனர், நமது நாடு பிரிட்டீஷ் ஏகாதிபத்தியவாதிகளின் நேரடி காலனியாதிக்கத்தின் கீழ் அடிமைகளாக இருந்தபோதும் கூட விவசாயிகள் இப்படி தற்கொலை செய்து சாகவில்லை ஆனால் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளின் தலைமையின் கீழுள்ள ஏகாதிபத்தியங்களின் புதிய காலனிய ஆட்சியின் கீழ் விவசாயத்தை தொடர்ந்து நடத்தவியலாது என்று நம்பிக்கை இழந்த விவசாயிகள் தற்கொலை செய்துள்ளார்கள். அன்று மாவோவால் சொல்லப்பட்டதுபோல் ஆயிரம் டாலரை இங்கிருந்து அமெரிக்க கார்பரேட்டு கம்பெனி முதலாளிகள் கொள்ளையடிக்க ஒருவர் சாகிறார் என்பதை கணக்கிட்டால் 5 லட்சம் விவசாயிகளை கொன்று அமெரிக்க முதலாளிகள் எவ்வளவு கொள்ளையடித்திருப்பார்கள் என்று கணக்குப் பாருங்கள். இங்கு சிலர் சொல்கிறார்கள் நமது நாட்டை ஆள்பவர்கள் முதலாளிகள் என்று பொதுவாக சொல்கிறார்கள். ஆம் நமது நாட்டை முதலாளிகள்தான் ஆளுகிறார்கள். அமெரிக்க ஏகாதிபத்திய முதலாளிகள் அவர்களின் ஏஜென்டுகளைக்கொண்டு புதிய காலனியமுறைகளில் ஆள்கிறார்கள். இதனையும் மாபெரும் விவாதத்தில் மாவோ முன்வைத்துள்ளார். ஆகவே இங்கே சோசலிசப் புரட்சியை நடத்தவேண்டுமானால் முதலில் புதியகாலனிய முறையில் ஆட்சி நடத்திவரும் அன்னிய எகாதிபத்தியவாதிகளின் பிடியிலிருந்து நமது நாட்டை மீட்கும் விடுதலைப் போராட்டத்தை நாம் நடத்திட வேண்டும். இந்த உண்மையை மாபெரும் விவாத்த்தில் மாவோ சாரமாக கீழ்கண்டவாறு விளக்குகிறார். 
ஆசிய, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்க நாடுகளின் தேசிய விடுதலை இயக்கம் மாபெரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றிகளை ஏற்கனவே சாதித்திருக்கிறது. இதனை யாரும் மறுக்க முடியாது. ஆனால் ஏகாதிபத்தியம், கலனியம் மற்றும் அவர்களின் அடிவருடிகளை எதிர்த்துப் போராடும் கடமையை ஆசிய, ஆப்பிரிக்க லத்தீன் அமெரிக்க மக்கள் முழுமையாக நிறைவேற்றிவிட்டார்கள் என்று யாரேனும் கூறமுடியுமா? இல்லை என்பதே எமது பதில் இந்தப் போராட்டக் கடமையை முழுமையாக நிறைவேற்ற இன்னும் நீண்டகாலம் பிடிக்கும். 
ஏகாதிபத்திய காலனியாதிக்கம் பற்றிய மாவோவின் சாரம் இதுதான்.  மாபெரும் விவாதம் (தொடர்ச்சியாக)…..
நாம் சுதந்திரம் பெற்றுவிட்டோம் என்பது உண்மைதான். ஆனாலும் ஏகாதிபத்திய காலனியாதிக்கத்திலிருந்து முழுமையாக விடுதலை பெற நாம் போராட வேண்டும். அதில் நாம் வெற்றிபெற இன்னும் பல காலமாகும். அத்தகைய போராட்டங்களே நம்மைப்போன்ற நாடுகளில் இப்போது நடந்துகொண்டிருக்கிறது. இதற்கு ஆப்கானும் ஈராக்கும் மிகவும் வெளிப்படையான உதாரணமாகும். இந்த கண்ணோட்டத்திலிருந்தே நாம் நமது நாட்டில் முதலாளித்துவம் வளர்ந்துகொண்டிருக்கிறதா? என்ற கேள்விக்கு ஆம் என்று பதில் சொல்கிறோம் எனினும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டமும் நிலவுடமைக்கு எதிரான போராட்டங்களையும் இன்னும் தொடர்ந்து நடத்தி அதில் முழு வெற்றியடையவேண்டிய நிலையிலேயே உள்ளோம். இந்த பணிகளை முடிக்காமல் சோசலிசம் என்பது வெறும் கனவு மட்டுமல்ல சோசலிசத்திற்கு எதிரான ஏகாதிபத்தியங்களின் காலனியாதிக்கத்திற்கு சேவைசெய்யும் சதியே ஆகும். உழைக்கும் மக்கள் தமது இயக்கத்தின் நிகழ்வு போக்கிலே தாங்களாகவே ஒரு சுதந்திரமான சிந்தாந்தத்தை வகுத்துக் கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை ஆதலால் ஒன்றுதான் தேர்ந்தெடுக்கவேண்டும் முதலாளித் துவ சித்தாந்தம் அல்லது சோசலிச சித்தாந்தம் என்று நடு வழி ஏதும் கிடையாது. ஏனெனில் மனித குலம் ஒரு மூன்றாம் சித்தாந்தத்தை படைக்கவில்லை. மேலும் வர்க்கப் பகைமைகளால் பிளக்கப்பட்டுள்ள ஒரு சமுதாயத்தில் வர்க்கதன்மையற்ற சித்தாந்தமோ? வர்க்கத்துக்கு அப்பாற்பட்ட சித்தாந்மோ என்றைக்கும் இருக்க முடியாது எனவே சோசலிஸ்டு சித்தாந்தத்தை எந்த விதத்தில் சிறுமைப்படுத்தினாலும் அதிலிருந்து இழையளவேனும் விலகிச் சென்றாலும் முதலாளித்துவ சித்தாந்த்தை பலப்படுத்துவதாகவே பொருள்.மமேதை லெனின்( என்ன செய்ய வேண்டும் பக்கம்- 61,62)பகுத்துப் பகுத்துப் பார்ப்பது பின்நவீனத்துவம்.தொகுத்துத் தொகுத்துப் பார்ப்பது மார்க்சிய லெனினியம்.அடிக்கட்டுமானத்தில் மாற்றம் இல்லாமல் சமூக மாற்றம் நிகழ்வதில்லை என்று மார்க்சியம் கூறுகிறது.மேற்கட்டுமானம் பற்றி மட்டும் பேசுவது சீர்திருத்தவாதம் என்று லெனினியம் கூறுகிறது.அடிப்படையில் ஒருநாடு அன்னிய ஆதிக்கத்திற்கு உட்பட்டிருக்கும் போது விடுதலை என்பதே பிரதான முழக்கமாகிறது.எனவே ம.ஜ.இ.க ஏகாதிபத்திய எதிர்ப்பை முன்வைத்து செயல்படுவது மார்க்சிய லெனினிய வகைப்பட்டதே!?நமது நாட்டு மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சனைகள் ஒன்று புதியகாலனியாதிக்க முறையில் அன்னியர்களின் ஆதிக்கத்திற்குட்பட்ட அடிமைத்தனம். இரண்டாவது பிற்போக்கு நிலவுடமை உற்பத்தி முறையின் மூலம் ஜனநாயக விரோத ஆட்சிமுறை மூன்றாவது தேசிய இனங்களின் சிறைக்கூடமாக உள்ள இந்திய ஆட்சி நான்காவது சாதி தீண்டாமை கொடுமைகள். இந்த நான்கு பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கான சரியான வழியை யார் முன்வைத்து உறுதியாக போராடுகிறார்களோ அவர்களே இந்திய மக்களின் உண்மையான நண்பர்கள் ஆவார்கள். இந்த நான்கு பிரச்சனைகளில் ஏதாவது ஒரு பிரச்சனை சில வேளைகளில் முதன்மையான பிரச்சனையாக மாறும் அதனை சரியாக மதிப்பீடு செய்து அந்த சமயத்தில் எந்தெந்த வர்க்கங்கள் அல்லது சமூக சக்திகள் குறிப்பிட்ட பிரச்சனையை தீர்ப்பதற்கு ஒன்று சேரவேண்டும் என்பதையும் எந்த சமூக சக்திகளை எதிர்த்து போராட வேண்டும் என்பதை சரியாக மதிப்பிட்டு சரியான செயல்தந்திரம் வகுத்து யார் செயல்படுகிறார்களோ அவர்களால்தான் நமது மக்களின் விடுதலை சாத்தியமாகும். இதற்கு மாறாக பொதுவாக பிரச்சனைகளை பேசுபவர்களால் எந்த பயனும் இல்லை. ஒவ்வொரு குறிப்பிட்ட சூழலிலும் மக்கள் என்ன செய்யவேண்டும் என்ற வழிகாட்டும் தலைமையே நமக்குத் தேவை. அத்தகைய தலைமையை நாம் தேர்ந்தெடுத்து அதன் பின்னால் அணிதிரண்டால் நாம் எதையும் சாதிக்க முடியும். இதற்கு தடையாக இருப்பது எது சிந்திப்போம் விடை காண்போம்.பெரியாரியத்தை மார்க்சியத்தோடு கலக்க சொல்லும் ஒரு மேதாவியோடு உறையாடிய போது சில தோழர்களின் பதிலும் இதில் அட்ங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *