பெரியாரின் சமூக பணி-1
++++++++++++++++++++
பெரியார், காங்கிரசில் இருந்தபொழுது தேசியவாதியாக இருந்தார். அக்கட்சியில் இருந்த பிற்போக்குத்தனம் மற்றும் பார்ப்பனிய ஆதிக்கத்தால் வெளியேறி சுயமரியாதை இயக்கம் துவங்கினார். வர்ணாசிரம எதிர்ப்பு, மூட நம்பிக்கை எதிர்ப்பு, சுயமரியாதை போன்ற அவரது நடவடிக்கைகள் சரியான ஒன்றே ஆகும். பிறகு சிங்காரவேலர் மற்றும் ஜீவாவின் நட்பால் சோஷலிச சமதர்ம கருத்துக்கள் பேசத்துவங்கினார். ரசிய பயணத்திற்குப் பிறகு அது தீவிரமடைந்து, கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை தமிழில் மொழிபெயர்க்கும் அளவுக்கு சென்றார். இதுவும் அவரின் சரியான அம்சமே ஆகும். சீர்திருத்தவாதியாக இருந்தவரை அவரை அனுமதித்த பிரிட்டிஷ் அரசு, அவரின் ஏகாதிபத்திய எதிர்ப்பு கருத்துகளை அனுமதிக்கவில்லை. அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அரசின் அச்சுறுத்தலுக்குப் பயந்து, ஏகாதிபத்திய எதிர்ப்பு, சோஷலிசக் கருத்துகளை அவர் கைவிட்டார்.
(தொடரும்)……………………..
பெரியாரின் சமூக பணி-2
++++++++++++++++++++
சமதர்மப் பாதையைக் கைவிட்டதற்கான காரணம் குறித்து பெரியார் இவ்வாறு கூறுகிறார்:
“சர்க்கார் வலிமையானது. அது நம்மை அடக்கி ஒடுக்க வேண்டும் என முடிவெடுத்துவிட்டதால் இனி புத்தியுடன் செயல்படவேண்டியுள்ளது. ….ஆகவே சுயமரியாதை இயக்கமே இன்றைய தேவை. ….இது ஜீவா மற்றும் சிங்காரவேலருக்கு பிடிக்காது. என்ன செய்வது? வேறு வழி இல்லை”
(தொடரும்)……………………
பெரியாரின் சமூக பணி-3
++++++++++++++++++++
மதத்தில் எதிர்ப்புப் போராட்டம் என்பது மதத்தினால் பயன் பயன்படும் பொருளியல் சக்திகளைக் கண்டறிந்து அவர்களை எதிர்த்த போராட்டமாக பெரியார் உணர்ந்து கொள்ளவில்லை ஆனால் மதக் கருத்துக்களையும் சாத்திரங்களையும் அவற்றைப் பரப்பி சமூக பிரிவுகளுக்குள் பிராமணர்களை மட்டும் எதிரிகளாக கண்டறிந்து அவற்றை எதிர்த்து போராட்டமாக சுருக்கிக் கொண்டார்.
மதத்தினால் பயன்பெறும் சக்திகளை பெரியார் வெளிப்புறத் தோற்றம் நிலையிலேயே கண்டறிந்தால் இத்தகைய கருத்து சுருக்கம் ஏற்பட்டு அதனால் தான் பெரியார் பார்ப்பனர்கள் மட்டுமே எதிரியாக கொண்டார்.
மதத்தில் பொருளியல் அடித்தளத்தை கண்டறிந்து, மதக் கருத்துக்களால் பயன்படும் அனைத்து சக்திகளையும் இலக்குகளை தாக்கி செயல் இலக்க செய்ய வேண்டியதை சாரம்சத்தில் சரியானதை பெரியார் செய்தாரா?. அப்படி இல்லை என்பேன்.
கடவுள் உண்டு என்பதற்கு மாற்றாக கடவுள் இல்லை என்பதால் கடவுள் என்று கருத்து இல்லாமல் போய்விடுவதில்லை.
கடவுளை கற்பித்து தீரவேண்டிய சமூக நிலைமையை அதன் துணை செய்யும் கருத்தியல் நிறுவனங்களையும் ஒருசேர தாக்குவதன் மூலம் இந்த சமூக நிலையை மாற்றி அமைப்பதன் மூலமாக மட்டுமே கடவுள் என்ற கருத்துக்கு உள்ள செல்வாக்கை அகற்ற முடியும்.
(தொடரும்)…………………………
Like
Comment
08/10/2021
இன்று நான் எழுதிக் கொண்டிருந்த “பெரியாரின் சமூக பணி” பதிவில் Pravin Vinu மற்றும் Manitham Mattum தோழர்கள் பல கேள்விகளை முன் வைத்துள்ளனர் அவர்களின் கேள்விக்கு பதிலளிப்பதோடு இன்றைய விவாதத்தை இத்துடன் முடித்துக் கொள்கிறேன் நாளை இன்னும் பல செய்திகளோடு தொடர்வேன் தோழர்களே.
இன்றைய விவாதமும் அதன் சாரம்சமும் இவைதான் மேலும் தேவைபடும் நூல் ஆதரம் கீழ் படங்களில் உள்ளவையே.
தமிழக வரலாற்றில் 1932ஆம் ஆண்டு ஒரு பாரிய மாற்றம் நிகழ்ந்தது. அது தான் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தால், இந்தியா முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சி சட்ட விரோதமாக்கப்பட்டு தடைசெய்யப்பட்டது. இதன் பின்னர்தான் முற்போக்கு வாதிகள் என்று அறியப்பட்ட பலரின் முகமூடி கிழிக்கப்பட்டது. அதில் ஒருவர் தான் ஈ.வே.ரா அவர்கள். 1932க்கு முன்னிருந்த ரஷ்யக் காதல், மற்றும் சமதர்மக் கோட்பாடுகளின் மீது அவருக்கிருந்த ஆர்வம் முழுவதும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளின் அடக்குமுறைக்கு பின்னர் சந்தர்ப்பவாதமாகக் கைவிடப்பட்டு, காலனியாதிக்கவாதிகளால் உருவாக்கப்பட்ட, திராவிட இனக் கோட்பாடுகளை தன்னுடைய கொள்கையாக மாற்றிக்கொண்டு, எப்படி பிரிட்டிஷ் சர்க்காருக்கு சேவகனாகவும், பார்ப்பனரல்லாத நிலவுடமை கும்பலின் பிரதிநிதியாகவும் மாறினார் என்பதை தனது சொந்த அனுபவத்தின் மூலம் தோழர் ஜீவா அவர்கள் மிகச் சிறப்பாக அம்பலப்படுத்தியுள்ளார்.
ஈ.வே.ராவின் அரசியல் வழியையும் சாதி, மதம் பற்றிய அவருடைய நிலைப்பாட்டை மிகச் சுருக்கமாக பார்ப்போம்.
“மேல்நாடுகளில் சாதியம் இல்லாததால், அங்கு பொதுவுடைமை கொண்டுவர வர்க்கச் சண்டை தொடங்க வேண்டியிருந்தது. இங்கு சாதிமுறை இருப்பதால் சாதிச்சண்டை தொடங்கவேண்டியதுதான்” என்று பெரியார் கூறினார்.
அவருடைய கருத்துப்படி, சுயமரியாதை என்பது கலாச்சாரத்துறைக்கு மட்டுமே உரியது. அரசியல், பொருளாதாரத் துறைகளுக்கு உரியதல்ல. கலாச்சாரத் துறையிலும் கூட எல்லா மக்களுக்குமானது என்று பொருள்கொள்ளக் கூடாது. அது முதலில் பார்ப்பனனை நீக்கிவிட்டு, இறுதியில் தீண்டத்தகாதார்களுக்கு சலுகைகள் வேண்டும் பொழுதும், (சமுதாய சீர்திருத்தம் – பக். 25, 44) ஏனைய இடங்களிலும் ஆதிதிராவிடர் அல்லாத மக்களில் பார்ப்பனர் அல்லாத எல்லோருடைய நன்மைக்கும் பேசுவதாகப் பெரியார் குறிப்பிடுகிறார் (குடியரசு – 1.10.1931).
பெரியார், முதலாளிகள், நிலப்பிரபுக்கள் ஆகியோரின் ஆதிக்கத்திற்கு எதிரான வர்க்கப்போராட்டத்திற்கு மாறாக வர்க்கச் சமரசத்தைப் போதிக்கிறார். தொழிலாளர் உழவர் வர்க்க அடிப்படையில் 1952 ஆம் ஆண்டில், திராவிடர் உழவர் – தொழிலாளர் கழகம் என்னும் அமைப்பை நிறுவினார். அதன் தீர்மானம் பின்வருமாறு கூறுகிறது.
“திராவிடத் தொழிலாளர்களுக்கும், அவர்கள் வேலை செய்யும் பண்ணையார், மிராசுதாரர், முதலாளிகள், ஆண்டைகள் ஆகியோருக்கும் இடையில், நட்பும், நல்லுறவும், நம்பிக்கையும், கூட்டுப்பொறுப்பும் இருக்கும்படி செய்வது” என்பதே அது. அதனுடைய நோக்கம் தெளிவாக வர்க்கப்போராட்ட முறைக்கு எதிரான வர்க்க உடன்பாட்டுக் கொள்கை என விளங்குகிறது. இதையே பெரியார் ‘பங்காளி’ நிலை என்று குறிப்பிடுகிறார்.
எனவேதான், பெரியாரின் சுயமரியாதைத் தத்துவம், பார்ப்பனரல்லாத உழைக்கும் மக்களுக்கு முழுமையான சுயமரியாதைத் தத்துவமாக இல்லை.
வெறும் பணக்காரா பெரும் பண்ணைகளின் ஆளும் வர்க்கத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதே சுயமரியாதை என்று சுருக்கி கொண்டார்….
விடுபட்டுள்ள கேள்விகளுக்கு தொகுப்பாக பின்னர் பதிலளிப்பேன் தோழர்களே.
இன்னும் நாளை விரிவாக தொடருவேன் தோழமைகளே
++++++++++++++++++++++++++++++++++++++++++++++பதிவு செய்யப் பட்ட நாள் 07/10/2021 மேலே உள்ளவை
நாளை எழுத வேண்டும்
Share
பெரியாரின் சமூக பணி-4
++++++++++++++++++++
பெரியார் பொருட்களை அல்லது நிகழ்வுகளை வெறும் கருத்தளவிலும் அவற்றின் வெளிப்புறத் தோற்ற அளவிலும் காண்பதுதால்தான், புராணக் கதைகளில் உள்ள ஆபாசங்களை விமர்சிக்கின்றார். புராண கதைகள் அந்தக் காலத்திய மக்களின் வாழ்வியல் நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்ட கற்பனைக் களஞ்சியம் ஆகும்.
இன்று காவிகள் இராமன் பெயரில் நாட்டை பழைமைவாதத்தில் மூழகடிக்க நினைப்பதும் அதனை மறுப்பதன் பெயரில் அதே பழைமை வாதத்தை கையில் எடுப்பதும் எவ்வித சமூக மாற்றத்திற்க்கும் பங்களிக்காது!
புராண கதைகளில் உள்ள மானுடவியல் சாதக அம்சங்கள் புறக்கணிக்கப்பட்டு புராண சாஸ்திரிகள் இயக்க மறுப்பியல் கண்ணோட்டத்துடன் புராணங்களை அறிமுகம் செய்ததற்கு பெரியார் உடனடி எதிர்ப்பு தெரிவித்த புராணங்களில் உள்ள ஆபாசங்கள் ஒழுக்கக் கேடுகள் ஆகியவற்றை எள்ளி நகையாடினர் புராண கற்பனைகளை பொய்கள் என்று விமர்சித்தார் ஆனால் இவை புராணங்கள் தோன்றிய காலத்தில் மனித சமூக ஒழுக்கங்கள் என்பதில் சந்தேகமில்லை. இந்த வரலாற்றுப் பார்வை பெரியார் இடத்தில் இல்லை.
பெரியார் சாதியை பார்ப்பனர்கள் படைத்தாகக் கருதிக் கொண்டு, அதன் தோற்திற்கான பொருளாதாரப் போக்கை முறியடிப்பதற்கு முயலாமல், சாதியத்தைக் காப்பாற்றும் பார்ப்பனர்களை முதன்மைப்படுத்தி அவர்களை ஒழிக்க வேண்டும் என்று கூறுகிறார் அதாவது சாதியத்தை கட்டிக்காக்கும் சமூக வேரை அறிந்து அதனை அழிப்பதற்க்கு பதில் சாதியத்தை கட்டிக் காக்கும் ஆளும் வர்க்கத்தையும் இந்த சமூகத்தையும் காப்பதன் மூலம் பணம் படைத்தவர்களின் சுரண்டலை நீடிக்கச் செய்கிறார், அதாவது காப்பாற்றுகிறார் எனலாம்.
இதை இன்றைய காவிகள் மற்றும் காவிகளை எதிர்பதன் பெயரில் கருப்புகளிடையே நடக்கும் நிழல் சணடையில் நீங்கள் புரிந்துக் கொள்ள முடியும்.
ஒருபுறம் பெரும் முதலாளி வர்க்கம் தம் மூலதன பலத்தின் மூலம் அதிகார வர்க்கத்தையும் அரசியல் கட்சிகளையும் கட்டுப்படுத்துவதன் மூலம் முழு அரசையும் கட்டுப்படுத்துகிறார்கள். பெரும் முதலாளிகளும் இவர்களின் எடுபிடிகளான அதிகாரவர்க்கமும் அரசியல் கட்சிகளின் தலைமையும் கூட்டாக இந்நாட்டின் செல்வங்கள் அனைத்தையும் சூறையாடுகிறார்கள்.
தங்கள் சூறையாடலுக்கு சாதகமாக கருத்துகளை ஊடகங்கள் வாயிலாக விதைக்கின்றனர் அதற்கு ஏற்ப மக்களின் மனதை பக்குவப்படுத்துகிறார்கள்.
இதில் காவியும் கருப்பும் யார் பக்கம் என்ன பங்களிப்பு செய்துக் கொண்டுள்ளனர் என்று நான் சொல்லத் தேவையில்லை.
(தொடரும்)…
இந்த இயக்க மறுப்பியல் சிந்தனை போக்கே பெரியாரை சாதியதை பார்ப்பனர்கள் படைத்தாகக் கருதிக் கொண்டு, அதன் தோற்திற்கான பொருளாதாரப் போக்கை முறியடிப்பதற்கு முயலாமல், தோன்றிய சாதியத்தைக் காப்பாற்றும் பார்ப்பனர்களை முதன்மைப்படுத்தி அவர்களை ஒழிக்க வேண்டும் என்று கூறுகிறார். இதன் மூலம் பணம் படைத்தவர்களின் சுரண்டலை நீடிக்கச் செய்கிறார், அதாவது காப்பாற்றுகிறார்.
பெரியாரின் சமூக பணி-5
++++++++++++++++++++
பெரியாரின் தத்துவத்தை காண்போம் .சுய மரியாதை பற்றி பேசும் பெரியார் கூறுவதை போன்று காரணகாரியம் அறிந்து தான் செய்யவேண்டும், காரண காரியத்தின் சரி தவற்றை அவற்றுக்கே விட வேண்டும் என்பதும் மனிதன் சரி என்று கருதிய எண்ணங்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பதும் பொதுப்படையாக்கிக் கொள்ள இயலாது.
காரியத்தின் அகநிலை போக்கையும் நோக்கையும் புற நிலைவிளைவையும் கொண்டே அதை மதிப்பிட வேண்டும் . மனிதர்களின் எண்ணங்களுக்கு கொடுக்கவிருக்கும் மரியாதையை பருண்மையாக காண வேண்டும். எந்த சூழலில் எந்த கருத்துக்கள் என்ன பயன் விளைவிக்கும் என அறிந்து அந்தக் கருத்துக்களுக்கு மரியாதை கொடுக்க முடியும்.
பெரியார் சொல்வது போல பொதுப்படை ஆக்கினால் பிறவியினால் ஏற்றத் தாழ்வு கற்பிக்கும் வருணாசிரம நெறிகளுக்கு கருத்துக்களுக்கும் பார்ப்பனர் வேளாளர் ஆகியோரின் ஆத்திக கருத்துக்களுக்கும் மரியாதை கொடுக்க வேண்டியிருக்கும்.
சுயமரியாதைக்கு பெரியார் கொடுக்கும் இந்த விளக்கம் அனைத்து கருத்துகளுக்கும் பொருந்துவதால் சுயமரியாதைக்கு ஆத்தீக விளக்கம் கொடுக்கப்பட்டது. இதனாலே பெரியாரின் பக்கத்தில் அவரது நம்பிக்கைக்கு உகந்த சகாக்களாக ஆத்திகர்களும் இருக்க முடிந்தது. இரண்டாம் மாநாட்டில் வரவேற்புரை ஆர் கே சண்முகம் நாத்திகத்தை பரப்புவது எமது இயக்க நோக்கமாக இருந்ததில்லை இருக்கப் போவதும் இல்லை(குடியரசு 10-0501930) எனக்கூறியுள்ளார்.
பெரியாரின் சகா பொன்னுசாமி கைவல்யம் சாமியார் சுயமரியாதை இயக்கத்துக்கு ஆத்தீக விளக்கம் தருகின்றார்,” சுயமரியாதைச் சங்கம் கடவுள் என்று சொல்பவருக்கு அவர்கள் தத்துவத்திற்கும் துணைபுரியும். வலியோர் இடத்திலும் மெலியோர் இடத்திலும் எவன் கடவுளை பார்க்கிறானோ அவனே உண்மையான ஆத்திகன் என்று சொல்ல வந்து இருக்கின்றது. வேதம் ஸ்மிரிதி இதிகாச புராணங்களின் வாக்கியங்களை எடுத்துக்காட்டவே வந்திருக்கிறது.”…(குடி அரசு 16-10-1932).
பொப்பிலி அரசரும் சண்முகம் செட்டியாரும் கைவல்ய சாமியாரும் பெரியாருடன் அடிப்படை நிலையில் ஒத்திசைவு கொண்டிருந்தனர் என்பதே இதன் மூல காரணமாகும்.
பெரியாரின் சமூக பணி-6
++++++++++++++++++++
ஏகாதிபத்திய பொருளாதார சீர்திருத்தத்தில் மேலிருந்து திணிக்கப்பட்ட முதலாளிய உறவுகள், பல்வேறு வகைப்பட்ட சங்கிலித் தொடர் மாற்றங்களை தமிழகத்தில் ஏற்படுத்தியது அந்த மாற்றங்களினால் பயனடைந்த பல சாதியிலிருந்து (குறிப்பாக கவுண்டர், நாயுடு, செட்டியார், நாடார்)… கிளைத்தெழுந்த முதலாளிய விவசாயிகளும் தரகு வணிகர்களும் ஆலை முதலாளிகளும் தத்தமக்கென கருத்தியல்களை உருவாக்கி கொண்டிருந்தனர். இந்த புதிய வர்க்கங்களுக்கான பொது கருத்தியலை சிற்சில தனித்த அம்சங்களுடன் உருவாக்குவதே பெரியாரின் நிலைப்பாடாக அமைந்தன. முதலாளிய சமூகத்திற்க்கு முந்தைய பல்வேறு கலாச்சார நிறுவனங்கள் தம்மை வேறு வடிவில் தகவமைத்துக் கொண்டன. குறிப்பாக சாதி சங்கங்களும் அது தன் வர்க்க நலனுக்கேற்ப்ப மக்களை ஏய்த்துக் கொள்ள ஏதுவாயின.
ஆர்ப்பாட்டமான, வீர ஆவேசமாக பேச்சுகள் உணர்ச்சியை தூண்டி விடும் சவால்கள் போர்க்குணத்தை உசுப்பி விடும் வேலை செய்யும் சோற்போர் என்று பல அம்சங்கள் மூலமாகவே தமிழனின் வீர உணர்ச்சியை தூண்டிய இத்தகைய அரசியல் கலாச்சாரத்தை காந்திக்கும் காந்திக்கு மேலாக காந்தி விஞ்சும் காந்தியாக பெரியார் இருந்தார் என்கிறார் அவர்காலத்தவர்.
காந்திக்கும் பெரியாருக்கும் இடையில் பெருத்த வேறுபாடுகள் இல்லை இரண்டும் அரசியல் சீர்திருத்தங்கள் வழியாக தான் சார்ந்து நிற்க்கும் வர்கத்துக்குரிய சலுகைகளை பெறுவதற்கு சட்டபூர்வமான கிளர்ச்சிகளில் ஈடுபட்டு அதன் வழி பெறப்பட்ட ஆற்றலை கொண்டு தொடர்ந்து இயங்கி கொண்டிருந்தது. இரண்டுக்கும் (காந்திக்கும் பெரியாருக்கும்) இடையில் காற்று சுவர் இருக்கிறதே தவிர கனத்த சுவர்கள் இல்லை எனலாம்.