பெரியாரின் சமுக பணி-7
+++++++++++++++++++++++++++
பெரியாரை தெரிந்துகொள்வதற்கு முன்பு காந்தியை தொடங்கி அன்றைய ஆங்கில ஏகாதிபத்திய காலகட்டத்தில் பல தலைவர்களை அறிந்துக் கொள்ள நினைக்கும் பொழுது , காந்தி மற்ற தலைவர்களை விட எப்படி முதன்மையானவர் ஆனார் என்று தெரிந்துக் கொண்டால் பெரியாரின் பணி என்ன என்பது பொருத்தி பார்ப்பது எளிதாக இருக்கும் தெளிவாக இருக்கும்.
1915 ஆம் ஆண்டு முதற்கொண்டு காந்திய மக்கள் திரள் இயக்கங்கள் அரசியலை நோக்கித் தள்ளியது அரசியல் தளத்தில் இது மட்டுமின்றி நிறைய மாற்றங்கள் பண்பாட்டுத் தளத்திலும் குறிப்பாக மதத்திலும் வினையாற்றினார். முன்புகூட திலகர் போன்றவர்கள் சிவாஜி விழா, வினாயகர் விழா போன்றவற்றைப் பயன்படுத்தி இந்து சமய மக்களை மீட்பது என்ற பெயரில் இந்துக்களை பழைமைவாதத்தில் மூழ்கடிக்க முயன்றுள்ளனர். இதையே காந்தியும் எல்லா சமய சடங்குகள் கட்டுப்படுத்தி எல்லா சமய மக்களையும் ஒருங்கிணைத்த பயன்படுத்தினர் .
விவசாயிகள் தொழிலாளர்கள் பிரச்சினைகளை முன்னேடுத்த காந்தி வன்முறையற்ற சட்டபூர்வமான கிளர்ச்சிகளில் மக்களை பழக்கப்படுத்தி, மக்கள் வன்முறையில் இறங்கும் போது போராட்டத்தை நிறுத்தி விடுவது அவரின் தனி தன்மையாகியது. அது போன்ற ஒரு அமைப்பினை உருவாக்கினார் காந்தி. எல்லாம் வல்ல தனிமனிதர் அதன் கீழே எதற்கும் தயாரான தொண்டர் என்ற இடத்தில் காந்தியின் தலைமை இருந்தது.
எனவே இதன் தன்மைகளை இவ்வாறு வகைப்படுத்தலாம்
1). ஜனரஞ்சக வாதத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது.
2). ஒரு அமைப்பின் கட்டுப்பாட்டில் இல்லாமல் ஒரு தனி மனிதனின் கட்டுப்பாட்டில் இருந்தது.
3). எவ்விதமான வன்முறையிலும் மக்கள் ஈடுபடக் கூடாது.
4). சிறபம்சம் ஒன்று எவ்விதத்திலும் பொதுவுடமைக் கொள்கை செல்வாக்குப் பெற்று விடக்கூடாது.
காந்தியின் மக்கள்திரள் இயக்கத்தையும் அதன் போராட்டங்களையும் காணும்பொழுது மக்களிடத்தில் ஏகாதிபத்திய நிலவுடைமை எதிர்ப்பு அதிகம் இருந்தது என்பதையும் போராட்டத்தின் தலைமைக்கு ஏகாதிபத்திய அரசுடன் சமரசம் செய்துகொள்ளும் குணம் மேலோங்கி இருந்தது என்பதையும் கவனிக்கலாம்.
இத்தகைய பொதுவான பின்னணியில் சுயமரியாதை இயக்கம் என்ற மக்கள்திரள் இயக்கத்தின் பணிகளை காண்போம்.
(தொடரும்)
பெரியாரின் சமுக பணி-8
+++++++++++++++++++
சுயமரியாதை இயக்கம் என்ற மக்கள் திரள் இயக்கத்தில் பணிகளை காண்போம். 1929 பிப்ரவரி 17 18 ஆகிய நாட்களில் செங்கல்பட்டில் இயக்கத்தின் முதல் மாநாடு நடந்தது. இது அரசியல் மாநாடு அல்ல என்றும் வாலிபர்கள் பெண்கள் தாழ்த்தப்பட்டவர்கள் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்றும் பெரியார் தெரிவித்தார்.
மாகாண முதல்வர் மாநாட்டை திறக்க பி.டி.ராசன் கொடியேற்ற (மாநாட்டில் யூனியன் ஜாக் கொடி ஏற்றப்பட்டது) சௌந்தரபாண்டியன் தலைமை தாங்க சேதுரத்தினம் ஐயர் முன்னிலையில் மாநாடு நடந்தது. தமிழகத்தில் முன்னேறி வந்த கவுண்டர் பணக்கார விவசாயிகளும் வேளாளர் மிராசுதாரர்களும் நாடார் தரகு வணிகர்களும் தலைமைப் பொறுப்புகளை ஏற்க மாநாடு நடத்தப்பட்டது.
அன்றைய பத்திரிக்கை வாயிலாக வந்த விமர்சனங்களை கருத்தில் கொண்டு நமது நிலைப்பாட்டை பொதுவில் வைப்போம்.
1). சமயத்திலும் சாதியிலும் உள்ள மூடப் பழக்கங்களையும் வேறுபாடுகளையும் களைந்து அவற்றை ஜனநாயகப் படுத்தும் தன்யே உள்ளது.
2). பெண்களுக்கு சம உரிமை கோருதல் முற்போக்கானதாகும். ஆண்களுக்கு நிகரான சொத்து உரிமை தொழில் உரிமை என்பதோடு இது நின்று விடுகிறது. இதுவரை ஒடுக்குமுறைக்கு எதிரான எல்லாவிதமான பாகுபாடுகளையும் கலைந்து சமூக மாற்றத்தால் நிகழும் நிகழ்வு ஆனால் இந்த வர்க்க அமைப்பில் இருந்து வெளியே வராமலே இதற்க்குள்ளே சீர்திருத்தம் கோரும் போக்கானது முதலாளித்துவத்தில் உள்ள போகுதானே?
3). அரசியலில் ஏகாதிபத்திய ஆதரவும் கலாச்சாரத்தில் நிலவுடமை கலச்சாரம் எதிர்ப்பு நிலையும் முரண்பட்ட நிலைகளாக தோற்றமளித்தாலும் இது சீர்திருத்தவாதிகளில் பெரும்பாலும் அரசு ஆதரவாளர்கள் இருந்துள்ளனர் என்பதை காட்டும் சான்றாகள் அன்றோ
(தொடரும்)…..