சமூகத்தில் சரிபாதியாக உள்ள பெண் இன்றும் சமூகத்தில் தனக்கு வேண்டிய இடமின்றி ஒரு ஒதுக்கப்பட்டவளாக வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளால்.
பெண்ணின் இந்த நிலையானது மொத்த சமூக வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதை தெரிந்தும் தெரியாமல் ஒதுங்கி செல்லும் இந்த அவசர உலகம் தன் மிக உன்னத சக்தியைப் பாழ்படுத்திக் கொண்டிருப்பதை அறிவதில்லை.
பெண்ணே இந்த சமூகத்தின் எதிர்காலமான குழந்தைகளை வளர்தெடுக்கும் நிலையில் உள்ளவள், அவளே குழந்தைகளின் உளவியல் நிலைக்கு அடிப்படையாக திகழ்கிறாள்.
சமூகத்தில் பெண்ணை அவளின் சுய விருப்பத்தில் அவளின் கண்ணோட்டத்தில் செயல்பட விடுவதில்லை. அவளின் சுதந்திர போக்கு தடை படுத்தப் பட்டுள்ளது. அவை சமூகத்தின் வளர்ச்சிக்கு அதாவது பெண்ணின் அறிவுத் திறனையும் திறமைகளையும் பயன்படுத்தி கொள்ளாமல் வீண்ணடிக்கப்படுகிறது.
ஒரு சமூகம் சிறக்க சமூகத்தின் சரிபாதியான பெண்கள் சுதந்திர மானவர்களாக, நல்ல கல்வி கற்றவர்களாக, சமூக அறிவு படைத்தவர்களாக மற்றும் சுதந்திரமான ஆளுமை கொண்ட தாயால் மட்டுமே ஒரு குழந்தையை சமூகத்தின் சரியான பங்களிக்கும் திறன் கொண்ட வளமான எதிர்கால சந்ததயை வளர்தெடுக்க முடியும்.
ஏன் பெண்கள் மீதான இத்தனை கட்டுப்பாடுகள்.
அதனை அறிய கடந்த காலத்தை சற்று திருப்பிப் பார்த்தால் நன்றாக இருக்கும்.