பெண்விடுதலை-1
பெண்விடுதலை-1

பெண்விடுதலை-1

“மாவோவின் சீனத்தில் சோசலிசமும் பெண்விடுதலையும் “என்ற நூல் சமீபத்தில் நான் வாசித்தேன், வாசித்து கொண்டுள்ளேன்.அதனைக் குறித்து எழுதும் முன் வரலாற்று ரீதியாக பெண்ணின் நிலை அதன் வளர்ச்சி போக்கோடு பெண்விடுதலை பற்றிய பல்வேறு கோட்பாடுகளையும் சற்று அறிந்து அதன் பின் நூல் பற்றிய விமர்சனம் எழுதவுள்ளேன்.
நமது ஆசான் எங்கெல்ஸ் சொல்லியது போல் சமூகத்தில் பெண்களின் நிலையை வெகு சிறப்பாக “குடும்பம் தனி சொத்து அரசு” என்ற நூளில் எழுதியிருப்பார். அதனை வாசித்த தோழர்கள் இந்த பதிவை உள்வாங்குவது சிரம்மாக இருக்காது.
ஆதி பொதுவுடைமை சமூகத்தில் சுதந்திரமாக இருந்த பெண் அடுத்த கட்ட உடைமை சமூகத்தில் ஆணுக்கு பெண் அடிமை ஆவதோடு அவளின் எல்லா திறமையும் முடகப் படுகிறது.
முதலாளித்துவ சமூகத்தில் சிறிது சுதந்திரம் கிடைத்தாலும் ஒட்டுமொத்த பெண்களின் சுதந்திரமாகவோ அல்லது பெண்கள் ஒடுக்குமுறையில் இருந்து விடுபட்டு விட்டார்கள் என்பதோ அபத்தமே ஏனெனில் ஒடுக்கும் வர்க்கத்தின் கையில் உள்ள அதிகாரம் ஒடுக்கப்பட்ட பெண்களுக்காக சுதந்திரம் அளிப்பதற்காக இல்லை என்பது உண்மை நிலவரம்.
பெண் விடுதலைக்கான சில போராட்ட வடிவங்கள் கோட்பாடுகளும்.இதுவரை உலகில் பெண் விடுதலைக்கு பல போராட்ட வடிவங்களை கண்டிருந்தாலும் கீழ் காணும் நான்கு பிரிவுக்குள் அடக்கமே எனலாம்.
1). NGO பாணி பெண் விடுதலை2). சீர்திருத்தவாத பெண் விடுதலை 3). முதலாளித்துவ பெண் விடுதலை4). சோசலிச பெண் விடுதலை (இதனை குறித்து விரிவாக பின்னர் பார்ப்போம்)
ஒரு சமுதாயம் சிறக்க சமூகத்தின் சரிபாதியான பெண்கள் சுதந்திரமானவர்களாக நல்ல கல்வி கற்றவர்களாக சமூக அறிவு படைத்தவர்களாக மற்றும் சுதந்திரமான ஆளுமை கொண்ட தாயால் ஆம் பெண்ணால் மட்டுமே ஒரு குழந்தையை சமூகத்தின் சரியான பங்களிக்கும் திறன் கொண்ட வளமான எதிர்கால சந்ததியை வளர்க்க முடியும் என்பது திண்ணம்.அப்படி இருக்க பெண்கள் சந்திக்கும் இன்னலுக்கு காரணம் ஏன்?ஏன் பெண்மீதான இத்தனை வன்மம் கடந்த காலத்தை சற்று திரும்பிப் பார்ப்போம்.அதனூடாக இன்று பெண் மீது சுமத்தபரத்தக் கட்டுக்கதைகளையும் அறிவோம்.
மதம் பெண்கள் மீது ஏவி உள்ள அடக்குமுறை.
ஒவ்வொரு மதத்தின் கடும் கோட்பாட்டு வாதம் பெண்களை அடக்கி ஒடுக்கி வைத்திருக்கிறது. ஒவ்வொரு மதகலவரம் மதவெறி படுகொலையின் போதும் பெண்களை மிருகத்தனமாக தாக்குகிறார்கள் பாலியல் வன்முறையில் பெண்களையே துன்புறுத்துகின்றனர்.
பெண்களை சமூகத்தின் அடிமை நிலையில் வைத்திருக்கும் மதம் அதையே புனிதமானது என்றும் மாற்று மதத்தினர் ரத்தக் கலப்பை தடுக்கும் தன் மதத்தின் தனிச் சிறப்பான அம்சமாக பீற்றிக் கொள்கிறது கற்பு புனிதம் என்று செயற்கையாக ஏற்பட்ட கருத்தை பெண்கள் மீது திணித்து அமிழ்த்து வைத்திருப்பது கொடுமை…………………சி.பி.தொடரும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *