புரட்சியை நேசிக்கும் தோழர்களே பதிலளியுங்கள்-சிபி
புரட்சியை நேசிக்கும் தோழர்களே பதிலளியுங்கள்-சிபி

புரட்சியை நேசிக்கும் தோழர்களே பதிலளியுங்கள்-சிபி

எனது இந்தப் பதிவின் நோக்கம் மா லெ அமைப்புகளில் உள்ள புரட்சியின் உயர் நிலையை
அறிய எழுதினேன்,பரவாயில்லை நான் நினைத்தது போலவே இதனை வரவேற்க்க யாரும் இல்லை இருந்தாலும் 45 பேர் பார்த்துள்ளனர் மகிழ்ச்சியே நான் இதனை எழுதுவதன் நோக்கம் எந்த ஒரு குழுவும் புரட்சியை சாதிக்க முடியாது அதற்க்கு பலம் வாய்ந்த கட்சி வேண்டும் அதற்க்கு இங்குள்ள புரட்சிகர குழுக்களிடையே ஒற்றுமை வேண்டும் ஏன் எதற்க்கு என்பதெ என் பதிவு, நீங்கள் புரட்சியை நேசிப்பவர் என்றால் வாசித்து சுட்டிக் காட்டவும். புரட்சி பேசும் தோழர்களே நாம் ரசிய சீனாவை பற்றி பேசுவது அவர்கள் புரட்சியை அடைய நடத்திய வழி முறைகளை பின்பற்றி நமது நாட்டிற்க்கு பொருந்துவதை நடைமுறை படுத்த தான்… ரசியாவில் கட்சி கட்டுவதற்க்கு முன் பல்வேறு புரட்சிகர குழுக்கள் மார்க்சிய வாசகர் வட்டம் தோன்றி இருந்தன தனித்தனியாக ஜார் ஏதெச்சாதிகாரத்தை எதிர்த்து போராடி வந்தன. 1885 ல். தொழிலாளர் விடுதலை குழிவினரால் வேலை திட்டம் முன் வைக்கப்பட்டது. 1895ல் தொழிலாளர் விடுதலைக்கான போராட்ட குழு லெனினால் அமைக்கப் படுகிறது. அதற்க்கு நகல் வேலை திட்டம் லெனின் முன்வைக்கிறார். புரட்சிகர குழுக்கள் சிதறுண்டு கிடப்பதால் பலம் பொருந்திய அதிகார வர்க்கத்தை எதிர் கொள்ள முடியாது ஆகவே நாடு தழுவிய அளவில் ஒரு கட்சி வேண்டும் பல்வேறு குழுக்களிடையே ஒற்றுமையை உருவாக்க குழுக்களிடையே நிலவும் முரண்பாடுகளையும் குழ்ப்பங்களையும் நீக்கி சித்தாந்த ஒற்றுமை என்பது கட்சி வேலை திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு அடைய வேண்டும் என்று கூறுகிறார். லெனினது தீவிர மான முயற்சியினால் ஒரு கட்சி கட்டப் பட்டது அதன் பின்னரே 1905 ல் ரசியாவில் முதல் புரட்சிக்கு எழுச்சியூட்டியது.
இன்று 100 ஆண்டை கொண்டாடும் CPI,CPM திருத்தல்வாதிகளாகட்டும், நகசல்பாரி இயக்கம் என்னும் மா-லெ அமைப்பகட்டும் இன்றைய நிலையில் ஒற்றுமையின்றி சிதைந்து கிடப்பது ஏன் எனபதே எனது தேடுதல்.
புரட்சியை கைவிட்டு திருத்தல்வாதத்தை கையில் எடுத்த CPI CPM பற்றி வேறொரு நேரத்தில் பார்க்கலாம் முதற்கண்.
பல்லாயிரக் கணக்கில் தன் இயக்கத்தினரின் இன்னுயிரை புரட்சியின் வேள்வியில் நாட்டின் விடுதலைக்காக ஆம் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக புரட்சி தீயில் அர்பணித்த நக்சல்பாரி என்னும் மா-லெ அமைப்பு பற்றி மட்டுமே இங்கே சில தேடுதல்கள்.
இந்தியாவில் புரட்சியை முன்னெடுக்க அர்ப்பணிப்புடன் இயங்கிய இயக்கம் இன்று மக்களுக்கான புரட்சிக்கு முன் மார்க்சிய லெனின்ய இயக்கத்தினுள் புரட்சியை நடத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். கடந்த 50 ஆண்டுகள் வரலாற்றில் மா-லெ இயக்கத்தின் சிதைவும் சீர்குலைவும் அந்த நோய் நாடி இதற்க்கான மருந்தையும் கண்டடையாமல் இந்த வெற்று கோசங்கள் புரட்சிக்கு வித்திடாது என்பதே என் கருத்து.
பாட்டாளி வர்க்க இயக்கமாக தங்களை அடையாளப் படுத்திக் கொள்ளும் இந்த இயக்கங்கள் – கட்சிகள் இன்று சிதறுண்டு பல குழுக்கலாக போய் கொண்டிருப்பதற்க்கு என்ன காரணம்?.
இங்குள்ள பிரச்சினையை முன் வைத்து பேசுவோம்.
ஒவ்வொரு குழுவும் தாம்தான் கட்சி தாம்தான் புரட்சிகரமானவர், தாமதான் புரட்சிக்கு வித்திட்டவர் என்று பறைசாற்றி கொள்வதில் பெருமிதம் கொள்கிறது. இவை சரிதான என்று அறிந்து கொள்ள ஒரு நிகழ்ச்சியை கற்பனை செய்து கொள்வோம். பல்வேறு குழுக்களை ஒரே பகுதியில் தொழிலாளி விவசாயிகளிடையே தனித்தனியாக தங்களின் கருத்துகளை ஒரு மாதம் பரப்ப செய்தால் மாத இறுதியில் அந்த தொழிலாளி விவசாயிகளிடம் கருத்துக் கேட்டால், அவர்கள் என்ன சொல்வார்கள். எல்லோரும் தொழிலாளி விவசாயி வர்க்க ஒற்றுமை தேவையை உணர்த்தினீர்கள். ஏகாதிபத்தியம்- அதிகார வர்க்கம், தரகு முதலாளித்துவம், நிலபிரப்புத்துவம் ஆகிய எதிரிகளை தூக்கி எறியப் பட வேண்டும் என்று சுட்டிக் காட்டினீர். அரசியல் அதிகாரத்தை கைப்பற்றி உற்பத்தி உறவுகளை மாற்ற வேண்டும், உற்பத்தி சக்திகளை விடிவிக்க வேண்டும் என்றெல்லாம் பேசினீர்கள். ஆனால் எல்லோரும் ஒரெ கருத்தை முன் வைக்கும் பொழுது இத்தனை குழுக்கள் தேவை எதற்க்கு ஒன்று பட்ட சக்தியாக புரட்சிகர அமைப்புகள் செயல் படாமல் தனித்தனி குழுக்களாக இயங்குவது எதற்க்காக? கூட்டு நடவடிக்கையின்றி இந்த பலம் பொருந்திய அரசமைப்பை தனித்தனியாக எதிர்கொள்வது சரியாகுமா?
நக்சல்பாரி எழுச்சிக்கு பின் தமிழகத்தில் தோன்றி மூன்று பிரிவு இன்று முப்பதிற்க்கும் மேலான குழுக்கலானவை ஏன்?
எஸ்.ஒ.சி- டி.என்.ஒ.சி நடந்த மோதல்கள் நட்ப்பு முரணாக இன்றி பகை முரணாக அல்லவா கடந்த காலம் பதிவு செய்துள்ளது. இன்று மக்கள் அதிகாரம் மற்றும் ம.ஜ.இ.க இன்று அடைந்துள்ள பிளவுக்கு காரணம் தத்துவ பிரச்சினையா? மேலும் தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பல குழுக்கள் தங்களை மா-லெ கட்சி என்று சொல்லிக் கொண்டு ஒற்றை இலக்க எண்ணிகை கொண்டோரே கட்சி என்றால் மக்களை புரட்சியிலிருந்து மீது நம்பிக்கை ஏற்படுத்தவா? அல்லது புரட்சியை காட்டிக் கொடுக்கவா?
“தங்களது இயகத்தில் உள்ள குறைபாடுகளை பூசி மறைக்காமல் இருக்க வேண்டுவது கம்யூனிஸ்டுகளின் கடமையாகும். ஆனால் அவைகளை விரைவில் மற்றும் அடிப்படையில் சரி செய்வதற்காக பகிரங்கமாக அவைகளை விமர்சனம செய்ய வேண்டும்”. (லெனின்- அகிலத்தின் இரண்டாம் காங்கிரசின் அடிப்படைப் பணிகள்).
இங்குள்ள ஒவ்வொரு குழுவும் தம்மை தாமே ஒரே சரியான புரட்சிகரமான கம்யூனிஸ்ட கட்சியாக கருதிக் கொள்ளும் மனப்பான்மை கொண்டவை. சுவர்களில் காணும், “நானே உயிரும் ஆன்மாவும், வழியுமாக இருக்கிறேன்”, என்கிற வாசகத்துக்கும், மேலே கண்ட மனபான்மைக்கும் ஏதாவது வேறுபாடு இருக்கிறதா? புற நிலை உண்மை என்று கூறுகிறோமே, அதற்க்கு ஒத்துப் போகிறதா?
விருப்பங்களிலிருந்து அல்லாமல் தமக்கு அப்பால் நிலவும் புறவய உண்மைகளிலிருந்து விசயங்களை பார்க்க வேண்டும் என்று மார்க்க்சியம் போதிக்கிறது. இந்த அரிச்சுவடி பாடத்தை இந்தியப் பொதுவுடைமை இயக்கம் குறிப்பாக மா-லெ என்று அறியப்படும் நக்சல்பாரி இயக்கம் புறக்கணித்து விட்டது, இன்று குழுக்களாக நீடிக்கிறது
மா லெ அமைப்புகளில் உள்ள மாபெரும் நோய் பற்றிய எனது மூன்றாவது பதிவு. இதற்க்கு முன் சில தோழர்கள் தங்களின் பங்களிப்பை நல்கியும் விவதித்தும் உள்ளனர் அவர்ககுக்கான விடுபட்ட பதில்களை தனி பதிவாக எழுதுவேன் அமைப்பு சார்ந்த தோழர்களின் மௌனம் அவர்களின் புரட்சியின் பால் உள்ள நிலையை கேள்விக் குறியாக்குகிறது? எனது மொழி நடை புரியவில்லையோ என்னவோ அதன் மீதான தங்களின் கருத்தை அவசியம் புரட்சியை நேசிக்கும் தோழர்கள் பகிரும் படி கேட்டுக் கொள்கிறேன்.
மா-லெ இயக்கத்தில் உள்ள மாபெரும் மூன்று நோய்கள்
(1) நவக்கிரகப் போக்கு
(2) யதுகுல மனப்பான்மை
(3) பரமபத விளையாட்டு
முதல் நோயான நவக்கிரகப் போக்கு என்பது, ஒன்றை ஒன்று பார்க்காமல், ஒன்றுக்கொன்று பேசாமல், ஒன்பது திசைகளில் திரும்பி இருப்பதை நவக்கிரகப் போக்கு என்கிறோம். மா-லெ இயக்கம் சிதறுண்டு இந்த நவக்கிரகப் போக்கில் இல்லையா? முப்பதுக்கும் மேல் குழுக்கள் தமிழ்கத்திலே எதற்க்காக?
ஒவ்வொரு குழுவும் தாம்தான் கட்சி தாம்தான் புரட்சிகரமானவர், தாமதான் புரட்சிக்கு வித்திட்டவர் என்று பறைசாற்றி கொள்வதில் பெருமிதம் கொள்கிறது. இங்குள்ள எந்த ஒரு குழுவும் ஆவண பரிமாற்றம் கூட்டு நடவடிக்கை விவாதித்தல் முறையில் ஈடுபட்டதா அல்லது ஈடுபடுவதற்க்கான முயற்ச்சியில் உள்ளனவா? எல்லா குழுக்களும் குறுங்க்குழுவாத போக்கில் மூழ்கி உள்ளதை தெளிவாக அறியலாம்.
இரண்டாவது நோயான யாதுகுல மனப்பான்மை- மகாபாரதத்தின் இறுதியில் கிருஸ்ணணின் குலமான யாதவகுலம் இதற்க்கு ஒரு சாபம், அது தன்னைதானே அடித்துக் கொண்டு அழிந்து போகும் அதாவது யமுனை கரையில் உள்ள கோரை புற்களை பிடிங்கியவுடன் அவை தடிகளாக மாறி ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு யாதுகுலமே அற்று போனதாக கதை. இங்குள்ள ஒவ்வொரு புரட்சிகர அமைப்பும் இதில் விதிவிலக்க? (இன்றைய தமிழக புரட்சிகர அமைப்புகள் என்னும் மக்கள் அதிகாரம், ம.ஜ.இ.க மற்றும் லிபரெசனில் இருந்து வெளியேறிய தோழர்கள் பொது வெளியில் எழுதுவதும் பேசுவதும் என்னவகை சொல்வீர்களா?)
மூன்றாவது பரமபத விளையாட்டு இவை சிவராத்திரி சமயத்தில் தாயத்தை வைத்து ஏணியும் பாம்பும் இருக்கும் வரைபடத்தில் விளையாடுவதுதான், ஏணிகளில் ஏறி பாம்புகளை கடந்து பரம பதத்தை (கடவுளின் திருவடியை) அடைவதுதான் இலக்கு.
மா-லெ அமைப்பு பிளவு பட்ட போதிலிருந்தே ஒற்றுமைக்கான முயற்ச்சியும் நடந்து கொண்டே இருக்கிறது.
தோழமைகளே உங்களின் மனசோர்வை அறிந்தே இந்தப் பதிவை பாதியில் நிறுத்தி கொள்கிறேன் இதில் கேட்க்கப் பட்ட கேள்விக்ளுக்கு நாளை பதில் சொல்வேன்.
—————————முற்றும்——————————-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *