புரட்சிகர மக்களை ஆயுதபாணியாக்கலும் மக்கள் படையும்
புரட்சிகர மக்களை ஆயுதபாணியாக்கலும் மக்கள் படையும்

புரட்சிகர மக்களை ஆயுதபாணியாக்கலும் மக்கள் படையும்

ஜெனரல் கியாப்

புரட்சிகர மக்களை ஆயுதபாணியாக்கலும் மக்கள் படையும்1975இல் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட “TO ARM THE REVOLUTIONARY MASSES TO BUILD THE PEOPLE’S ARMY.”என்ற ஜெனரல் கியாப்பினுல் எழுதப்பட்ட நூலில்லிருந்து.

பாட்டாளி வர்க்கத்தின் இராணுவ அமைப்பு பற்றிய மார்க்சிய – லெனினிய அடிப்படையில், ஆயுதப்படைகளைக் கட்டியமைப்பதில் நம் மக்களுக்’குள்ள மரபும் அனுபவமும், புரட்சிகர மக்கள் திரளினரை ஆயுதபாணியாக்கியதிலும், மக்கள் படையை உருவாக்கியதிலும் தேவையை நம் கட்சி அறிந்துக் கொள்வதுடன், மக்களுடன் சேர்ந்து செய்ய வேண்டிய ஆக்கபூர்வப் பணி அறிந்து செயல் படுவோம்.

வீரம் மிக்க வியட்நாம் மக்கள் அந்நிய ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடிய தீரமிக்க வரலாறு கொண்டவர்கள். அவர்கள் பல நூற்றண்டுகளுக்கு முன்பே தங்களை விடப் பெரிய வலிமையான ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து நாடு தழுவிய எழுச்சியையும், மக்கள் யுத்தத்தையும் நடத்திய செழுமையான அனுபவத்தைப் பெற்றிருந்தார்கள்.

வியட்நாமிய பாட்டாளி வர்க்கம் உருவான பின்னர், தம் கட்சியின் தலைமையில், சுதந்திரம், ஜனநாயகம், சோஷலிச்ம் ஆகிய புரட்சிகர இலக்குகளுக்காக, தமது நாட்டின் அந்நிய ஆக்கிரமிப்பை எதிர்த்த செழுமைமிக்க பாரம்பரியத்தை மேலும் வளர்த்தெடுத்து தேசந்தழுவிய எழுச்சியையும், மக்கள் யுத்தத்தையும், மிக உயர்ந்த மட் டத்திற்கு வளர்த்தெடுத்தார்கள். ஜப்பானிய பாசிஸ்டுகளையும், பிரெஞ்சு காலனியவாதிகளையும் அவர்கள் முறியடித்தார்கள். அமெரிக்க ஏகாதிபத்தியத்தை முறியடித்தார்கள். தங்கள் நாட்டின் வரலாற்றை சிறப்புமிக்க பக்கங்களால் நிரப்பிக் கொண்டுள்ளார்கள். இந்தோசீனு, தென் கிழக்காசியா மற்றும் உலக மக்களின் புரட்சிக்கான தனது பங்களிப்பை தந்து கொண்டிருக்கின்றது.

ஏகாதிபத்தியம் மற்றும் காலனியாதிக்கத்தை எதிர்த்த,இருபதாம் நூற்றண்டின் காட்டுமிராண்டித்தனமான ஆக் கிரமிப்பாளர்களை எதிர்த்த வியட்நாம் தனது வெற்றிகரமான போராட்டத்தின் மூலமாக, முறியடிக்க முடியாத போர்க்குணத்திற்கும், ஆக்கபூர்வமான அறிவிற்கும், இரா ணுவ வலிமைக்கும், மக்கள் யுத்த முறையின் மேன்மைக்கும் அடையாளமாக விளங்குகின்றது. இருபதாம் நூற்றண்டின் மிகச் சிறந்த அம்சமாக வியட்நாமிய மக்கள் யுத்தம்விளங்குகின்றது. வியட்நாம் மக்கள் பின்வரும் ஒளிரும் உண்மையை உலக மக்களுக்குப் புலப்படுத்துகிறர்கள். அதாவது ஒரு சிறிய, பரந்த பரப்பில்லாத, மக்கள் தொகை அதிகமில்லாத, பொருளாதார வலிமை இல்லாத நாடு திட மனதுடன் ஒன்றுபட்டு, சரியான புரட்சிகர மார்க்கத்தைக் கொண்டு, நாடு தழுவிய ஆயுத எழுச்சி மற்றும் மக்கள் யுத்தம் பற்றிய மார்க்சிய-லெனினிய கோட்பாட்டை தங் கள் நாட்டுக்குரிய வகையில் பிரயோகித்து, முற்போக்கான மனித இனம் மற்றும் சகோதர சோஷலிச நாடுகளின் ஒத்துழைப்பு ஆகியவற்றுடன் முதன்மையான ஏகாதிபத் திய அரசான அமெரிக்கா உள்ளிட்ட வலுமிக்க ஆக்கிரமிப் பாளர்களை முறியடிக்க முடியும்.

வியட்நாம் நாட்டுக்குரிய புரட்சி க்கு ம், புரட்சிப் போருக்குமான சரியான மற்றும் ஆக்கபூர்வமான மார்க் கத்தை நமது கட்சியானது வகுத்தெடுக்க, நரிது சமூக வளர்ச்சியின் விதிகளையும், நமது நாட்டின் புரட்சிப் போரின் வளர்ச்சி விதிகளையும், புரட்சிகர வன்முறையின் வளர்ச்சி விதிகளையும் கண்டறிந்து அவற்றைக் கற்றுத் தேர்ந்து புரட்சிகர வன்முறை என்ற விதியின் சாரம் அரசியல் சக்திகளே ஆயுதப் படைகளுடன் இணைப்பதும், அரசியல் போராட்டங்களை ஆயுதப் போராட்டங்களுடன் இணைப்ப தும், ஆயுத எழுச்சியை புரட்சிப் போருடன் இணைப்பது மாகும்.

நாடு தழுவிய ஆயுத எழுச்சியையும், மக்கள் யுத்தத் தையும் வழிநடத்திச் செல்கையில் நம் கட்சி, பாட்டாளி வர்க்கத் தலைமையில் பாட்டாளி-விவசாயி கூட்டின் அடிப் படையிலமைந்த ஒரு தேசிய ஐக்கிய முன்னணியை அமைத்துள்ளது. நம் கட்சி பரந்துபட்ட மக்களின் அரசி யல் சக்திகளை ஒழுங்கமைத்துள்ளது; மக்களின் வலிமை யான ஆயுதப்படைகளைக் கட்டியுள்ளது. இவற்றுள் புரட் சிச் சேனை, பரந்துபட்ட மக்களின் ஆயுதப் படை இரண் டும் அடங்கும். எதிரியை முறியடிக்கவும், அதிகாரத்தைக் கை ப் பற்றி ப் பாதுகாக்கவும், காலனியாதிக்கத்தையும் அதன் அடிவருடிகளையும் தூக்கியெறியவும், ஏகாதிபத்தி யத்தின் ஆக்கிரமிப்புப் போரை முறியடிக்கவும், நமது மக் கள் ஆக்கபூர்வமான அனைத்துப் போராட்ட வடிவங்களை யும் கையாண்டார்கள் தாக்குதல்களையும், எழுச்சிகளையும் இணைத்தார்கள் மலைப்பகுதி, சமவெளிப் பகுதி, நகரப் பகுதி ஆகிய மூன்று விதமான யுத்த முக்கியத்துவம் வாய்ந்த கேந்திரங்களிலும் போர்த் தந்திர ரீதியான தாக் குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

இந்தக் கட்டுரை, நம் நாட்டில், எழுச்சிக்கும் புரட்சிப் போருக்கும் பயன்படக்கூடிய, மக்களின் ஆயுதப் படைக ளைக் கட்டுவது எப்படி என்பதை விளக்குகின்றது. இது நமது கட்சியின் இராணுவ மார்க்கத்தின் முக்கியமான அம்சமாகும்.

நம் கட்சியின் தலைமையில் நடத்தப் பெற்ற தேசந் தழுவிய எழுச்சி, மக்கள் யுத்தம், அனைத்து மக்களும் பங்குபெறும் வகையில் கட்டப்பட்ட தேசப் பாதுகாப்பு ஆகியவற்றினூடே மக்களின் ஆயுதப் படைகள் தோன்றின; வேகமாக முதிர்ச்சியடைந்தன; பல வெற்றிகளைப் பெற்றன. எதிரியை முறியடித்து நாட்டைப் பாதுகாக்க ஒவ்வொரு வியட்நாமிய தேசபக்தனும் எழுந்தான். ஒவ் வொரு குடிமகனும் போராளியாவது? என்ற நம் பழம் மரபு புதிய வடிவம் பெற்றது. மக்கள் சேனையும் நாடெங்கிலும் போராடும் மக்களின் ஆயுதம் தாங்கிய படைகளும் கட் டப்பட்டன. தற்போது மக்களின் ஆயுத ம் தாங் கி ய அமைப்புகளில் இலட்சக் கணக்கான போராளிகள் இருக் கின்றர்கள்; பல்லாயிரக் கணக்கானுேர் மக்கள் சேனையில் இருக்கின்றர்கள் பின்தங்கிய, நவீனமான, அரைகுறை நவீனமான பல்வேறு விதமான ஆயுதங்களை அவர்கள் ஏந்தி நிற்கிறர்கள், துணிவான, நல்லறிவு கொண்ட, திற மையான போராளிகள் இரவும் பகலும் தன்னலமின்றி சுதந்திரத்துக்காய் போராடுகிறர்கள் நாட்டை ஒன்றுபடுத் தவும், சுதந்திரத்திற்காகவும், ஜனநாயகத்திற்காகவும், சேர் ஷலிசத்திற்காகவும் நம் காலத்திய முதன்மையான ஏகாதிபத்தியமான அமெரிக்க ஏகாதிபத்தியத்தை முறி யடிக்க அவர்கள் உறுதி பூண்டிருக்கின்றர்கள்.

ஜப்பானிய பாசிஸ்டுகள், பிரெஞ்சு காலனிய வாதிகள், அமெரிக்க ஏகாதிபத்திய வாதிகள் ஆகியோருக்கெதிரான போராட்டத்தில், பொதுவாக நம் மக்களும் குறிப்பாக மக் களின் ஆயுதமேந்திய படைகளும் அடைந்துள்ள வேக மான வளர்ச்சியையும் புகழ்மிக்க வெற்றிகளால் தூவப்பட் டுள்ள பாதையையும் ஆராய்கையில், தேசங் தழுவிய எழுச் சியையும் மக்கள் யுத்தத்தையும் நடத்தும் சக்திகள் (இவற் றுள் அரசியல் படைகள், ஆயுதப் படைகள் இரணடும் அடங் கும்) புரட்சிகர மக்கள் சக்திகளை, புரட்சிகர வன்முறைச் சக்திகளே ஒன்றிணைத்து ஒழுங்கமைப்பதில் நமது கட்சி அடைந்த வெற்றியின் அடையாளங்களே என்று நம்மால் நமது கட்சியால் ஒழுங்கமைக்கப்பட்டு வழிநடத்தப் படும் நமது மக்களின் ஆயுதப் படைகளும், புரட்சிச் சேனை யும், நமது மக்களின் இராணுவப் படைகளை ஒழுங்கமைப் பதில் நமது கட்சி அடைந்துள்ள வெற்றியின் அடையா ளமே என்றும் நம்மால் கூறமுடியும். நம் காலத்தில் மூன்று ஏகாதிபத்தியச் சக்திகளை ஒன்றுக்குப் பின் ஒன்ருகத் தோற் கடித்துள்ள சிறிய நாட்டினரே எமது மக்கள்,

இவ் வெற்றி கைகூடியதற்கான காரணங்கள்:- ஆயுத எழுச்சிக்கும் புரட்சிப் போருக்கும் வேண்டிய இராணுவ அமைப்புப் பற்றிய மார்க்சிய-லெனினிய தத்துவம் முழுவ தையும் ந்ம் கட்சி கற்றுத் தேர்ந்துள்ளது; முன்னைய கால கட்டங்களில் நடந்தேறிய மக்களின் தேசந் தழுவிய எதிர்ப் புப் போராட்ட மரபையும் தேசிய எழுச்சிகளிலும் தேசி யப் போர்களிலும் ஆயுதப் படைகளைக் கட்டியமைப்பதில் அவர்கள் பெற்றிருந்த அனுபவத்தையும் சுவீகரித்து அவற்றை புதியதொரு மட்டத்திற்கு கொண்டு வந்துள்ளது; உலக மக்களின் அனுபவங்களில் இருந்து தனக்கு வேண் டியதைக் கற்றுக் கொண்டுள்ளது; இத்தகைய தத்துவத் தையும் நடைமுறையையும் நமது நாட்டின் எழுச்சிக்கும் போருக்கும் ஆக்கபூர்வமாகப் பிரயோகித்துள்ளது; அதா வது, நமது கட்சியால் வகுக்கப் பட்டுள்ள புரட்சி இலக்கு களை சாதிக்கும் பொருட்டு ஏகாதிபத்தியத்தினதும் ,காலனி யாதிக்கத்தினதும் வலுமிக்க ஆக்கிரமிப்புச் சக்திகளை ஒரு சிறிய நாடு எதிர்கொள்கின்ற நிலைமைகளுக்குப் பொருந் திய வகையில் அவற்றை ஆக்கபூர்வமாகப் பிரயோகித் துள்ளது.

புரட்சிகர வன்முறையையும் மக்கள் யுத்தத்தையும் மேற்கொள்ளும் எமது கட்சியின் நிலைப்பாடுகள்: ஆயுதமேந்திய எழுச்சியிலும் புரட்சிகர யுத்தத்திலும் அதே போல மக்களனைவரும் பங்கு கொள்ளும் தேசியப் பாதுகாப்பிலும், தேசிய விடுதலைப் போரிலும் அதே போல் தாய்நாட்டைக் காப்பதற்கான போரிலும் ஒரு வலுமிக்க மக்கள் சேனையைக் கட்டும் போதே, பரந்துபட்ட மக்கள் திரளினரையும் ஆயுத பாணிகளாக்கவும் வேண்டும்; மக்களின் ஆயுதப் படைகளே மக்கள் சேனையின் அத்திவாரமாகக் கருத வேண்டும் மக் கள் சேனையை, மக்கள் படையின் மையக்கூருகக் கருத வேண்டும்,

வரலாற்றின் திட்டவட்டமான வளர்ச்சியைக் கவ னித்து, நமது கட்சியானது புரட்சிப் போராட்டத்தின் பல்வேறு காலகட்டங்களிலும் மக்களை ஆயுதபாணிகளாக்கு தல், மக்கள் சேனையைக் கட்டுதல் என்ற பிரச்சினையை வெற்றிகரமாகத் தீர்த்துள்ளது. நிறைவேற்றப்பட வேண் டிய புரட்சிகரக் கடமைகள், எதிர்த்துப் போராட வேண் டிய எதிரியின் தன்மை, அரசியல் சமூக பொருளாதாரத் துறைகளில் நிலவும் திட்டவட்டமான வரலாற்று நிலைமை கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு காலகட்டத்திலும் மேற்கொள்ளப்பட வேண்டிய புரட்சிப் போராட்ட வடிவங்கள் என்பவற்றிற்கு ஏற்பவே மேற் காணும் தீர்வு அமைந்திருந்தது.

தற்போது நிக்சன் நிர்வாகம் கடுந் தோல்விகளைச் சந் தித்த போதிலும், “போரை வியட்நாமியர் மயமாக்குதல்? என்ற யுத்த தந்திரத்தை விடாம்பிடியாகப் பிரயோகிக் கின்றது. இந்தோசீனு முழுவதும் போரைக் கடுமையாக்கி விரிவாக்குகிறது.

தென் வியட்நாமில் உள்ள நமது மக்கள் புதிய கால கட்டத்தின் புரட்சிப் போர் விதியைக் கற்றுத் தேர்ந்து, ஆயுதப் போராட்டங்களையும், அரசியல் போராட்டத்தை

யும் ஆழப்படுத்துகின்றர்கள்; மலேப் பகுதி, சமவெளிப் பகுதி, நகர்ப் பகுதி ஆகிய மூன்று பகுதிகளிலும் எழுச்சி களையும் தாக்குதல்களையும் இணைத்து நடத்துகின்றர்கள்; சகோதர நாடுகளான கம்போடியா, லாவோஸ் மக்களு டன் இணைந்து போராடுகிறர்கள். போரை வியட்நாமிய மயமாக்கும்? திட்டத்தை முடியடிக்க உறுதி பூண்டுள்ளார் கள்; இந்தோசீனப் போர்க்களம் முழுவதிலும் நிக்சனின் திட்டத்தை முறியடிக்க உறுதி பூண்டுள்ளார்கள். முன் எப் போதைக் காட்டிலும் இப்போது நாம் ‘அரசியல் படைகளை வளர்த்து அரசியல் போராட்டத்தினை முன்னெடுக்கும்போது, ஆயுதப் படைகளைக் கட்டுவதையும் ஆயுதப் போராட் டத்தை நடத்துவதையும் துரிதப்படுத்த வேண்டும். ஆயு தப் போராட்டத் ைத மற்றப் போராட்ட வடிவங்களுடன் இணைக்க வேண்டும். அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும், அதன் அடிவருடிகளையும் முற்ருக முறியடிக்க முன்னேறிச் செல்ல வேண்டும்; தென் வியட்நாமை விடுவித்து, வட வியட்நாமைப் பாதுகாத்து, தேசத்தை ஒன்றுபடுத்துவதை நோக்கி முன்னேறி நமது சர்வதேசக் கடமையை நிறை வேற்ற வேண்டும்.

நமது புரட்சியின் இந்த அடிப்படைக் கடமையைப் பூர்த்தி செய்வதற்கான போராட்டத்தின் போதே நீண்ட காலத்துக்கான ஆயுதந் தாங்கிய படைகளைக் கட்டவும் அனைத்து மக்களும் பங்கு பெறுகின்ற தேசப் பாதுகாப்பிற்கு அத்திவாரமிடவும் திட்டத்தை வகுத்துக் கொள்ளவும் வேண் டும். அப்போது தான் எமது மக்களின் அழகான நிலத்தை ஆக்கிரமிக்கவும், நமது சுதந்திரத்தைப் பறிக்கவும் எந்த வலிமையான எதிரி முயன்றலும் முறியடிக்க முடியும்.

நமது மக்களின் மேற்கூறிய உடனடிக் கடமைகளையும் நீண்ட காலக் கடமைகளையும் நிறைவேற்ற புரட்சிகர மக்களே ஆயுதபாணிகளாக்கவும், மக்கள் சேனையைக் கட்ட வும் உகந்த சிறந்த வழியைக் கண்டறிய வேண்டும்.

அதைச் சாதிக்க பாட்டாளி வர்க்க இராணுவ அமைப்பு பற்றிய மார்க் சிய – லெனினிய கோட்பாடுகளை நாம் தொடர்ந்து கற்க வேண்டும்; கடந்த காலத்தில் ஆயுதப் படைகளைக் கட்டுவதில் நமது மக்கள் பெற்ற அனுபவத்தை ஆய்வு செய்ய வேண்டும்; அவையெல்லாவற்றையும் விட, குறிப்பாக சேனையைக் கட்டுவதிலும், மக்களை ஆயுதபாணி யாக்குவதிலும் நமது கட்சி கடந்த நாற்பதாண்டு கால மாகப் பெற்றுள்ள அனுபவத்தைப் படிப்படியாகத் தொகுத் துக் கொள்ள வேண்டும்.

வன்முறைக் கொள்கைகளையும், குரூரமான போரை யும் அமெரிக்காவைத் தலைவனுகக் கொண்டுள்ள ஏகாதிபத் தியங்கள் செய்து வருகின்ற காலகட்டத்தில், நவீன ஆயு தங்களும், நவீனப் போர் முறைகளும் உலகில் இடையருது வளர்ந்து வருகின்ற காலகட்டத்தில், தேசிய சுதந்திரம், ஜனநாயகம், சோஷலிசம் ஆகியவற்றுக்காகப் போராடி வருகின்ற பல்வேறு மக்களைப் பொறுத்தவரை, மக்களே ஆயுதபாணியாக்குதல், மக்கள் சேனையைக் கட்டுதல் பற் றிய தத்துவமும் நடைமுறையும் மிக முக்கியத்துவம் வாய்ந் தவையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *