“ஐரோப்பாவிடம் புரட்சிக் கட்சி இல்லை என்பது தான் அதன் மிகப் பெரிய துர்ப்பாக்கியம், அதன் மிகப் பெரிய அபாயம். ஷெய்டெமன்கள், ரெனொடேல்கள், ஹெண்டர்சன்கள், வெப்புகளும் கூட்டாளிகளும் போன்ற துரோகிகளது கட்சிகளும் காவுத்ஸ்கி போன்ற அடிமைப் புத்தி கொண்டோரது கட்சிகளும் தான் அதனிடம் இருக்கின்றனவே ஒழிய, புரட்சிக் கட்சி ஏதும் இல்லை.சக்தி வாய்ந்த வெகுஜனப் புரட்சி இயக்கம் இந்தக் குறையினை நிவர்த்தி செய்யக் கூடியது தான், எனினும் இந்தக் குறை ஒரு பெரிய துர்ப்பாக்கியமே ஆகும், கடுமையான அபாயமே ஆகும்.எனவே தான் காவுத்ஸ்கியைப் போன்ற ஓடுகாலிகளை அம்பலப்படுத்தி, மெய்யான சர்வதேசியத் தன்மை வாய்ந்த பாட்டாளிகளது புரட்சிகரக் கோஷ்டிகளுக்கு இவ்வழியில், ஆதரவளிக்க நாம் இயன்ற அனைத்தையும் செய்தாக வேண்டும். இம்மாதிரியான கோஷ்டிகள் எல்லா நாடுகளில்லும் காணக் கூடியவையே. பாட்டாளி வர்க்கத்தினர் விரைவாகவே துரோகிகளிடமிருந்தும் ஓடுகாலிகளிடமிருந்தும் விலகி வந்து, இந்தக் கோஷ்டிகளைப் பின்பற்றுவார்கள், தம் மத்தியிலிருந்து தலைவர்களைத் தெரிந்தெடுத்துப் பயிற்சி பெறச் செய்வார்கள். எல்லா நாடுகளிலும் முதலாளித்துவ வர்க்கத்தினர் “உலக போல்ஷிவிசம்” குறித்துக் கூச்சல் எழுப்புவதில் வியப்பு ஏதும் இல்லை“((பாட்டாளி வர்க்கப் புரட்சியும் ஓடுகாலி காவுத்ஸ்கியும்-1918- அக்டோபர் 9)(பக்கம்-320-321)