புதிய காலனியத்தின்ஆதரவாளர்கள்!-மாவோ.(22.10.1963)

புதிய காலனியத்தின்ஆதரவாளர்கள்!-மாவோ.(22.10.1963) ———————————————————இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஏகாதிபத்தியவாதிகள்,காலனியாதிக்கத்தைக் கைவிட வில்லை.புதிய காலனியம் என்ற வடிவத்தை மட்டுமே புதிதாக மேற்கொண்டிருக்கிறார்கள்.ஏகாதிபத்தியவாதிகள் சில இடங்களில், தங்களது பழைய முறையான நேரடி காலனி ஆட்சி வடிவத்தைக் கைவிடுமாறும்,தேர்ந்தெடுக்கப்பட்டுப் பயிற்சி யளிக்கப்பட்ட ஏஜெண்டுகள் மூலம் ஒரு புதிய வகை காலனி யாட்சியையும் சுரண்டலையும் மேற்கொள்ளுமாறும் நிர்பந்திக்கப் பட்டிருப்பது,புதிய காலனியாதிக்கத்தின் ஒரு முக்கிய குணாம்சமாகும்.அமெரிக்காவின் தலைமையிலான ஏகாதிபத்தியவாதிகள்,இராணுவ முகாம்களை உருவாக்கியும்,இராணுவ தளங்களை அமைத்தும்,கூட்டமைப்புகள்,பொருளாதார சமூகங்கள் ஆகியவற்றை நிறுவியும்,பொம்மை அரசுகளை வளர்த்துவிட்டும் தங்கள் காலனி நாடுகளையும் சுதந்திரமடைந்த நாடுகளையும் அடிமைப்படுத்து கிறார்கள் அல்லது கட்டுப்படுத்து கிறார்கள்.பொருளாதார உதவியின் மூலமாகவோ அல்லது வேறு வடிவங்களிலோ இந்நாடுகளை தங்கள் பொருட்களை விற்பதற்கான சந்தையாகவும்,கச்சாப் பொருட்களை பெறுவதற்கான ஆதாரமாகவும், தங்களது மூலதன ஏற்றுமதிக்கான வாசலாகவும் தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்கள்; இந் நாடுகளின் செல்வங்களை கொள்ளையடித்துச் செல்கிறார் கள்; இந்நாட்டு மக்களின் இரத்தத்தை உறிஞ்சுகிறார்கள்.மேலும் அந்நாடுகளின் விவகாரங்களில் தலையிடுவதற்கும்,அந்நாடுகளின் மீது இராணுவ,பொருளாதார,கலாச்சார ஆக்கிரமிப்புத் தொடுப் பதற்கும் ஐக்கிய நாடுகள் சபையை அவர்கள் ஒரு கருவியாக பயன்படுத்துகின்றனர்.அந்நாடுகளில்,சமாதான முறையிலான தங்களது ஆட்சியை தொடர முடியவில்லை எனில் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புகளை செய்து ஆட்சியை மாற்றுகிறார்கள், சீர்குலைவு வேலைகளில் ஈடுபடுகிறார்கள்,அல்லது நேரடியான இராணுவ தலையீட்டையோ, ஆக்கிரமிப்பையே நடத்துகிறார்கள்.புதிய காலனியத்தை உருவாக்குவதில் மிகுந்த திறமையுடனும்,தந்திரத்துடனும் அமெரிக்கா செயல்படுகிறது.இதனை ஆயுதமாகக் கொண்டு அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள், பிற ஏகாதிபத்தியங்களின் காலனிகளையும் செல்வாக்கு மண்டலங்களையும் பறித்துக் கொள்ள கடுமையாக முயன்று வருகின்றனர்.உலக மேலாதிக் கத்தை நிறுவ முயன்று வருகின்றனர்.—- —– ———————————————-மாபெரும் விவாதம்,பக்கம்-390.


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *