பிரெஞ்சு நாட்டின் கொடுஞ் சிறைச்சாலை பாஸ்டீல். இருநூறு ஆண்டுகளின் முன் ம க் க ள |ா ல் உடைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நாடெங்கும் புரட்சி பரவியது. மன்னன் லூயியும் நூற் றுக் கணக்கான நிலப்பிரபுக்களும் கொல்லப்பட்டனர்; சிரச்சேதம் செய்யப்பட்டனர்.
ஆறு ஆண்டுகளின் அமைதியற்ற வன்புரட்சியின் பின் ன ர் பிரெஞ்சுக் குடியரசு நிறுவப்பட்டது.
இவ்வா(mண்டு கால கட்டத்தையே 'பிரெஞ்சுப் புரட்சி" என்று வரலாறு கூறும். -
இப்புரட்சி ஐரோப்பிய நாடுகளின் மன்னராட்சிகளை அதிர்ச்சிக் குள்ளாக கியது. கதிகலங் ச் செய்தது புரட்சியை முறியடித்து மீண் டும் முடியாட்சியை ஏற்படுத்த பேரரசர்கள் முயன்றனர்; தோல்வி யுற்றனர்
இவ்வரலாற்றுப் போக்குப் பற்றி பல அறிஞர்கள் ஆராய முற் பட்டனர். அவை கற்பனை ஆய்வுகளாகவே முடிந்தன.
மார் 4 சும் ஏங்கெல்சும் 1848ல் வரலாற்றுப் பொருள் முதல் வாத நோக்கில் கம்யூனிஸ்டு அறிக்கையை வெளியிட்டனர்.
அதன் பின்னரே விஞ்ஞ ன பூர்வமான புதிய கண்ணுேட்டத் துடன் வரலாற்று நிகழ்வுகளைக் காணக் கணிக்க முடிந்தது.
‘மனித சமுதாயத்தில் இதுவரை நடந்த வரலாறு யாவும்" வர்க்கப் போரட்டம் என்ருர் மார்க்ஸ் போர்கள், கிளர்ச் சிகள், மக்கள் எழுச்சிகள் அனைத்தும் வர்க்கப் போராட்டம் என்ற பின்னணியில் ஆராயப்பட்டன.
அடிமைகள், எசமானுர் சளுக் கெதிராக கிளர்ச் சி செய்தனர். அவர்களது கைவிலங்குகள் மட்டும் உடைக் கப்பட்டன.
மன்னர்களும் நிலப்பிரபுக்களும் மக்களை நிலத்துக்கு அடிமை யாக்கினர் உழைப்பதற்கு கை விலங்குகள் மட்டும் உடைக்கப்பட்
ஐரோப்பாவில் மன்னர்களுக்கும் நிலப்பிரபுக்களுக்கும் உற்பத்திக் கருவிகளையும் போரா யுதங்களையும் கம்மாளர் தயாரித்து வந்தனர்; பட்டறை வைத்திருந்த இக்கம்மாளர் பின்னர் வணிகர்களுக்காகவும் கருவிகளை உற்பத்தி செய்யத் தலைப்பட்டனர்.
கப்பல் கட்டிய, கடல் கடந்த வாணிபம் விரிவடைந்தது. வாணிப மூலதனம் பட்டறை மூலதனத்துடன் இணைந்து வேக வளர்ச்சி பெற்றது. கிராமப்புற விவசாயிகள் பட்டறைகளில் கூலி வேலைக்கு ஓடிவந்தனர். இதனுல் நிலப்பிரபுக்கள் பாதிக்கப்பட்டனர்.
பட்டறைத் தொழிலில் ஈடுபட்ட வர்க்கத்தவர் நிலப் பிரபுக்க ளாலும் மன்னர்களாலும் விரட்டப்பட்டனர். ஆயினும் அவர்கள் மன்னரின் எதிர்ப்புடன் ஆங்காங்கே நிலை பெற்றனர். துரித வளர்ச்சி யில் மூலதனத்தைப் பெருக்கி ஆதிக்கம் மிக்க வர்க்கமாக கம்மாளர் வளர்ந்தனர்.
இப்புதிய வர்க்கத்தவரையே பிரெஞ்சு நாட்டில் பூர்ஷ்வாக்கள் (முதலாளி வர்க்கத்தவர்) என அழைத்தனர். கம்மாளர்களாக, நசுக்கப்பட்ட சாதியினராகக் கருதப்பட்டவர் புதிய பல ம் மிக் க வர்க்கமாகத் தலை எடுத்தனர். இவர்களது பட்டறைகளில் யந்திரங் களில் கூலிக்கு
வேலைசெய்ய வந்து, குடிசைகளில் வாழ்ந்து, தூங்கும் நேரம் தவிர முழு நேரமும் உழைத்து வாழ்ந்த புதிய வர்க்கமே பாட்டாளிகள் என அழைக்கப்பட்டனர்.
புதிய வர்க்கமான பூர்ஷ்வாக்கள் (முதலாளிகள்) தமது வளர்ச் சிக்கு எதிரிகளாக மன்னர்களும் அவர்களைச் சார்ந்த நிலப்பிரபுக் களும் இருப்பதைக் கண்டனர். இவர்களிடை பகைமை உறவுகள் வலுத்து வந்தன. முதலாளிகள் தமது பக்க பலமான பாட்டாளி களையும்
அணிதிரட்டி மன்னராட்சியை எதிர்த்துப் புரட்சி செய்த னர்; (இவர்களுடன் வணிகர்களும் இணைந்தனர்) வெற்றி பெற்ற னர். முடியரசை வீழ்த்தி, குடியரசு என்ற அழகான பெயரில் புதிய அரசு அமைக்கப்பட்டது.
முதலாளிகளும் பாட்டாளிகளும் இணைந்து மன்னராட்சியை, நிலப் பிரபுக்களின் ஆதிக்கத்தை வீழ்த்தும் புரட்சியையே முதலாளித்துவப் புரட்சி என மார்க்சும் ஏங்கெல்சும் கூறினர்.
பிரெஞ்சுப் புரட்சி இத்தகைய ஒரு புரட்சி என மார்க்சிஸ்கு கள் கணித்தனர். கிராம்சியும் முதலாளித்துவப் புரட்சி எனக் கூறி ஞர். நிலப்பிரபுத்துவம் அதன் உச்சக்கட்டத்தை அடைந்து முத லாளித்துவத்துக்கு வழிவிட்டது; வாணிபர்களும் யந்திர உற்பத்தி
முதலாளிகளும் தலைமைத்துவத்தை நிறுவினர் என்பதே கிராம்சி போன் ருேரது முடிவாகும், புரட்சி பின் வரும் முடிவுகளைக் கொண்
-தி,
1. முதலா ரிகள், யாவரும் அறிய அரசியல் ஆதிக்கம் பெற்ற னர்.
2. புரட்சியின் பின் மு த லா விரித் து வ ‘மாதிரி” யான அரசு அமைக்கப்பட்டது; முதலாளிகளுக்கு வாய்ப்பாக அரசின் அமைப்பு முற்முக மாற்றப்பட்டது. •
3. பிரெஞ்சு அமைப்பு முதலாளித்துவ அரசியல் கருத்தியல் ஆதிக்க மாதிரி" யாக 'ஜாக்கோபினி சம் எனக் கூறப்படும் முத லாளித்துவ கடும் போக்குடன் ஆரம்பிக்கப்பட்டது.
முதலாளித்துவ புரட்சியின் கடும் போக்கு
பிரெஞ்சுப் புரட்சியின் போது ஜாக் கோபின்ஸ் என்ற குழுக்கள் நாடெங்கும் அமைக்கப்பட்டன. இவை அரசியலமைப்பில் மாற் றங்கள் கோரின. நகரங்களில் இக்குழுக்கள் இணைக்கப்பட்டன. இக் குழுக்கள் பின்னர் கடும் போக்கைக் கடைப்பிடித்தன. ருெபேஸ் பியரி என்ற புரட்சித் தலைவன் மன்னனின் சிரச்சேதத்திற்கும் குடி யாட்சி அமைப்பதற்கும் குரல் எழுப்பினன்.
* மன்னன மேல் நீதி விசாரணை எமக்கு வேண்டியதில்லை. அவன் கொல்லப்பட வேண்டும்," என்று தேசிய சபையில் இவன் கூறினன். பின்னர் இவனும் கொல்லப்பட்டான். முதலாளித்துவத்தின் கடும் போக்கை ஜாக் கோபின்ஸ் பிரதிபலித்தது என வரலாறு கூறும்.
“மெலோ டிராமா' வகையான பரபரப்பூட்டும் இன்றைய இலக்கியங்கள்
மக்களுக்கு இலக்கிய பொய்மையைத் தரின் அது விழிப்பு நிலையின் ஆரம்ப அறிவு நிலையை ஏற்படுத்துவதோடு "மக்கள்’ என்ற நிலையின் உணர்வுநிலையாயும் ஆகிவிடுகிறது.அதுவே ஒழுக்க, மத ஆதிக்க நிலையாகி அடிமைப்பட்ட, சிந்தனை ஆற்றலற்ற, அபினி நிலைக்கு மக்களை முடக்கிவிடுகிறது. பூர்ஷ்வா வர்க்கமே மெலோ டிராமா (Melo Drama) என்ற புகழ்பெற்ற பொய் மையை மக்களுக்காகக் கண்டுபிடித்தது. பரவலான அச்சு, மட்டமான நாவல்களையும், சினிமாக்களையும் முதலாளித்துவமே வழங்குகிறது.
இதேவேளை பூர்ஷ்வா விமர்சகர்களில் பெரும்பாலோர் “மெலோ டிராமாவை மட்டமானது என கூறுவர். இவர்களது பூர்ஷ்வா வர்க்கத்தின் கண்டுபிடிப்பே இது என்பதை அவர்கள் மறந்துவிடுகின்றனர். - அல்துசர்
- 4 -
பிரெஞ்சுப் புரட்சி முதலாளித்துவப் புரட்சி அல்ல
பிரெஞ்சுப் புரட்சியை முதலாளித்துவப் புரட்சி என முடிவு கட்ட முடியாது என்று இன்று நவ - மார்க்சிஸ்டுகள் பலர் கூறுகின் றனர் அவர்சளில் விஞ்ஞான அரசியலில் தலையாய வரில் ஒருவரான நிக்கோ பொலான்சாஸ் கூறும் காரணங்கள் சிலவற்றைக் கீழே 5T 675
1. முதலாளித் துவ உற்பத்தி முறை பிற உற்பத்தி முறைகளின் மேலாக (புரட்சியின் பின்) ஆதிக்கம் செலுத்தியதா? உண்மையில் பிரிட்டன். ஜெர்மனிய உற்பத்தி ஆதிக்கம் செலுத்தியதிலும் பார்க்க பிரான்சில் ஆதிக்கம் செலுத்தியதாக தீர்க்கமாகக் கூறுவதற் கில்லை. சிறு பண்ட உற்பத்தியை பிரெஞ்சுப் புரட்சி ஒழிக் துவிட வில்லை; விவசாயமும் சிறு பண்ட உற்பத்தியும் புரட்சியின் பின் மேலும் வலுப் பெற்றது.
2. விவசாயம் - முதலாளித்துவ உற் பத்தி முறை நிலவரி செலுத் தும் பணக்கார விவசாயிகளால் ஆரம்பிக்கப்படவில்லை. பணக்கார விவசாயிகள் கூலி விவசாயிகளை இணைத்து நிலப்பிரபுக்களுக்கெதி ராக புரட்சி செய்யவில்லை. வாணிப, கைத்த்ொழில் முதலாளிகளால் நிலப் பிரபுக் களின் உரிமைகள் பறிக்கப்பட்டது. இதற்கு விவசாயி கள் துணை நின்றனர். இறுதியில் சிறு உடைமை விவசாயிகள் பெரு கினர். இதனல் இவர்களது பலம் அரசியலில், புரட்சியின் பின்ன ரும் நீண்டகாலமாக நில பெற்றிருந்தது நெப்போலியனின் சர்வாதி காரததிற்கும் வழி வகுத்தது.
3. குட்டி பூர்ஷ் வாக்கள், சிறு பண்ட உற்பத்தியாளரும் ஆதிக் கம் பெற்றனர். பெரு முதலாளிகள், வாணிபரிடையேயே இச் சிறு கைத்தொழில் உற்பத்தியாளரும் நிலைத்து நிற்க முடிந்தது. பெருந் தொகையான பிரெஞ்சுக் குட்டி முதலாளிகள் ஆரம்பத்திலிருந்தே (ஜெர்மனியில் இருந்தது போல) ஒரளவு மூலதனத்துடன் தொழில் புரிந்தனர். இதனுல் 1848ல் பூர்ஷ்வாக்களோடு இனைந்தவர் பாரிஸ் கம்யூனின் போது 1871ல் பாட்டாளிகளுடன் சேர்ந்திருந்தனர். இவர்கள் பிரெஞ்சு நாட்டில் முக்கிய ஆதிக்கமுள்ள சமூக வர்க்க மாக விளங்கினர்.
4. பிரெஞசுப் புரட்சியைத் தொடர்ந்து 1792ல் வயதுவந்த வருக்கு வாக்குரிமை வழங்கப்பட்டதைக் கொண்டும் முதலாளித்து வப் புரட்சி என்று கூறிவிட முடியாது. முதலாளித்துவ உற்பத்தி முறை ஆதிக்கம் செலுத்துகிறதா என்பதைக் கொண்டே கணிக்க வேண்டும்.
5. முதலாளித்துவப் புரட்சி ஆதிக்கம் செலுத்தியிருப்பின் நெப் போலியனின் சர்வாதிகார பேரரசுக்கு இடமளித்திருக்காது.
6. விவசாயிகளும் குட்டி பூர்ஷ்வாக்களும் ஆதிக்கம் செலுத்திய தாலேயே முதலாளிகளுடன் முரண்பாடு ஏற்பட்டு பிரான்சு அர சியலில் தொடர்ந்து குழப்ப நிலை ஏற்பட்டு வந்தது.
Related
This is really interesting, You’re a very skilled blogger. I’ve joined your feed and look forward to seeking more of your magnificent post. Also, I’ve shared your site in my social networks!