Palaniyandi Nagarethinam
ogdtMafSpy hr2ons,ssou h2r0etg19d ·

பியூஸ் மனுஷ்/சேத்தியா நல்லவரா? வல்லவரா?—————————மனித உரிமைகள் /மாண்புகளை மதிக்கிறேன். சிறைக்குள் பியூஸ் மீது தாக்குதல் நடைபெற்றதாக அறிந்த பின்னர், “கண்டிக்கிறேன் ” எனப் பதிவு செய்திருந்தேன். அதை மறு உறுதி செய்கிறேன்.——————————————————————–# விரிவான விமர்சனம் தேவை என பியூஸ் ஆதரவாளர்கள், ஊடக நண்பர்கள் சிலர் கேட்டுக் கொண்டதற்கு ஏற்ப இக் குறிப்புரைகளை பதிவு செய்கிறேன். சொன்னபடியே, அவர் ஜாமீனில் வெளிவந்த பிறகுதான் எழுதுகிறேன்.# “நிறைய வியாபாரம், கொஞ்சம் சண்டை -இதுதான் பியூஸ்” எனவும், “மூங்கில், நிலம், நீர் சார்ந்த சாமர்த்தியமான வியாபாரி (Shrewed Businessman) பியூஸ்” எனவும், கடந்த சில ஆண்டுகளாக பியூஸின் நண்பர்கள், ரசிகர்கள், தோழர்கள் ஆகியோரிடம் சொல்லி வந்ததை விரிவாக முன்வைக்கிறேன்.# அவரால் பாதிக்கப்பட்ட மக்கள், நண்பர்கள், அவரது முகநூல் Facebook குறிப்புகள், கள ஆய்வுகள் போன்ற ஆதாரங்களிலிருந்தே எழுதியுள்ளேன்.#பியூஸ் செயல்பாடுகள் மீதான கொள்கை வேறுபாடுகள் தவிர, எனக்கு அவரிடம் தனிப்பட்ட பகை, மோதல், நலன்களோ எதுவும் இல்லை.*******************************************Chapter 1- பகுதி 1 தருமபுரி————————————–(2010 க்கு பிந்தைய அவரது சமூக செயல்பாடுகளில் தருமபுரி பற்றிய பகுதியை விரிவாகவும், சேலம் பற்றிய சில முக்கியமான குறிப்புகளை மட்டும் பதிவு செய்கிறேன்)பாக்கு மட்டையிலிருந்து மூங்கிலுக்கு மாறுதல் :-தமிழகத்தில் உள்ள வட இந்திய மார்வாரி பான் புரோக்கர் வட்டிக்கடை முதலாளிகள், ரியல் எஸ்டேட் /நில வியாபாரத்தில் ஏராளமான முதலீடுகளை குவித்துள்ளனர். அவர்களில் சிலரோடு பங்குதாரர் ஆகவும், அவர்களின் நலன்களைப் பாதுகாப்பவராகவும் பியூஸ் சேத்தியா உள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான் ! துவக்கத்தில் பாக்கு மட்டை பொருட்கள், இயந்திரங்கள் தயாரிப்பு தொழிலில் இருந்த பியூஸ் நிலம் மற்றும் மூங்கில் வியாபாரத்திற்கு மாறிய பின்னர்தான் மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்தார்.சேலம் மாவட்ட கல்வராயன் மலைப்பகுதியில், கருமந்துறையில் சுமார் பத்தாண்டுகளுக்கு முன்னர் மார்வாரி சேட்டுகள் பழங்குடியினர் நிலங்கள் உட்பட 70 ஏக்கர் நிலங்களை வாங்கி சுமார் 35,000 மூங்கில் செடிகளை வளர்த்தனர். பியூஸ் ஒரு பங்குதாரர் மட்டுமல்ல, நிர்வாகியும் கூட. ஒரு ஏக்கர் ரூ.3 இலட்சம் எனவும், நல்ல லாபம் கிடைக்கும் எனவும் தொடர்ந்து பியூஸ் விளம்பரம் செய்தார். (பார்க்க : 23.4.2013 தேதிய அவரது முகநூல் பதிவு)வெற்று வாக்குறுதிகள் !அந்த மூங்கில் பண்ணையில் பல பிரச்சினைகள். மூங்கில் வெட்டி வெளியே கொண்டு வருவதில் வனத்துறையுடன் பிரச்சினை. ஒரு பகுதி நிலங்களை விற்றுவிட்டு தருமபுரியில் கவனம் செலுத்தினார்.ஜருகு மூங்கில் பண்ணை :-ஜருகுவில் 8 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இப் பண்ணையானது, ரியல் எஸ்டேட் வியாபாரி திலீப் பேட் மற்றும் பியூஸ் சேத்தியாவிற்கு சொந்தமானதாகும். பெரிதும் மூங்கில் வளர்க்கப்படும் இப் பண்ணையில், மூங்கில் பொருட்கள் தயாரிக்கும் பட்டறையும் (Workshop) உண்டு. (படம் இணைக்கப்பட்டுள்ளது) வடகிழக்கு மாநில கைவினைஞர்களைகுறைந்த கூலிக்கு சுரண்ட முயற்சிக்க அவர்கள் பணியாற்ற முடியாது எனச் சென்றுவிட்டனர். உள்ளூர் தலித் தொழிலாளர்கள் பண்ணை வேலை மற்றும் மூங்கில் பொருட்கள் தயாரிப்பு வேலைகளில் பணியாற்றி வருகின்றனர்.ஆண்களுக்கு மாதக் கூலி ரூ.6,000, பெண்களுக்கு ரூ.4,500 ஆகும். மூன்று மின் இணைப்புகள் உள்ளன. இயந்திரம், மின் மோட்டார்கள் உள்ள இப் பண்ணையின் சமீபத்திய மின் கட்டணம் ரூ.881(749+132) மட்டுமே ஆகும். திலீப் பேட் பெயரில் உள்ள இணைப்பு எண் 019-011-1263 க்கு நீண்ட காலமாக மின்கட்டணம் செலுத்தப்படவேயில்லை. அந்த பூந்தோட்ட இணைப்பில் மின்சாரம் திருடப்படுவதைப் பற்றி த.நா.மின் வாரியம் தான் கவலைப் பட வேண்டும்.நமது கவலை என்னவெனில், இந்தப் பண்ணையை முன்மாதிரியாக சுட்டிக் காட்டி, ஜருகுவிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ள நாகாவதி அணைப் பகுதியின் அருகில் ஏழை விவசாயிகளின் நிலங்கள் அற்ப விலைக்கு வாங்கப்பட்டு அமைந்துள்ள ” கூட்டுறவு வனம்” எனப்படுகிற Coop Forest பற்றியதே ! (படங்கள் இணக்கப்பட்டுள்ளது)கூப் பாரஸ்ட் (Coop forest) :-பியூஸின் சாதனைகளில் ஒன்றாக புகழப்படுவது இந்த கூட்டுறவு வனம் எனப்படுகிற Coop forest ஆகும். பெண்ணாகரம் வட்டத்தில், நாகாவதி அணை அருகிலுள்ள எர்ரப்பட்டியில் துவங்கி பெண்ணாகரம் நோக்கி சுமார் 600 ஏக்கருக்கு விரிந்து பரந்துள்ளது. மூங்கில் கோம்பை கிராமம் எனப் பெயர்பலகை வைக்கப்பட்டுள்ளது. சட்டப்பூர்மாக 150 ஏக்கர் நிலங்களையும், 40 பங்குதாரர்களையும் கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பங்குதாரர்கள் உள்ளூர் மக்கள் அல்ல ; சேலம் போன்ற வெளியூர் பணக்காரர்கள். அவர்களிடம் ஏக்கருக்கு ரூ.2.25 இலட்சம் வாங்கிக் கொண்டு,நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 மட்டுமே பியூஸ் வழங்கினார்.வளர்ச்சி நிதி ரூ.2 இலட்சம் என அறிவித்து விட்டு, 5 ஆண்டுகள் கழித்து இலாபத்தில் பங்கு என்றும் அறிவித்தார். எதுவும் நடக்கவில்லை. பலருக்கு பட்டா கூட கிடைக்கவில்லை. நாம் இந்த பணக்காரர்கள், சமூக ஆர்வலர்கள் பற்றி தற்போது கவலைப்படவில்லை.இதே காலகட்டத்தில், தருமபுரியில் வரவிருந்த சிப்காட் தொழில்வளாகத்திற்கு எதிரானப் போராட்டத்தில் பியூஸ் ஏன் ஈடுபட்டார் என்பது நமது கவலையாக உள்ளது.அடுத்த கவலையானது, இப் பகுதியில் பியூஸ் முதன் முதலாக வாங்கி மரங்களை நட்டுப் பயிரிட்ட நீரோடை பாய்கிற செழிப்பான “வெள்ள மலைக்காடு” பகுதியில் நடப்பட்டு உள்ள மூங்கில்களை, மரங்களை படங்கள் எடுத்து, மொத்த வனமும் “பாலைவனம் சோலைவனம் ஆகிவிட்டது ” எனப் பிரச்சாரம் கட்டமைத்ததுப் பற்றி தான். இன்றும் கூட கூப் பாரஸ்டில் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் கரடுகளாகத் தான் உள்ளன.காரப்பரேட் விவசாயம் :-ஏழை விவசாயிகள் நிலங்கள் இழந்தார்கள்; புறம்போக்கு நிலங்களையும் இழந்தார்கள்; பியூஸ் தடுப்பணைகளை அமைத்ததால் நீராதாரங்களை இழந்தார்கள்; வெளியேறினார்கள் அல்லது அங்கேயே கூலி வேலைக்கும் சென்றார்கள் என்பதைப் பற்றி தான் நமது கவலையுள்ளது.இந்த கூப் பாரஸ்டுக்குள் எவ்வளவு ரெவின்யூ நிலம், வனநிலம் வளைத்துப் போடப்பட்டுள்ளது, நில உச்சவரம்பிற்கு மேலாக எவ்வளவு நிலங்கள், யார் யார் பெயரில் உள்ளது என்பது எல்லாம் தமிழக அரசாங்கம் கவலைப்பட வேண்டிய விசயங்களாகும். கூட்டுறவு தத்துவத்தின் சாரமே, பின்தங்கிய பிரிவினர்களை கைதூக்கி விடுவது. அதாவது முன்னேற்றத்திற்கு உதவும் முறையே கூட்டுறவு ஆகும். பியூஸ் அமைத்துள்ளது முதலாளித்துவ பண்ணை ஆகும். (Corporate farming)இயற்கை சுற்றுலா! (Eco Tourism) :-அய்யப்பன் வனம் என்ற பெயரில், கூப் பாரஸ்டு பகுதியில் தங்கும் விடுதிகள் அமைக்க,2015 செப்.15 தேதியிலிருந்து ICICI வங்கி கணக்கில் பியூஸ் நிதி வசூலித்தார். (SEED- Socio Economic Environment Development) a/c number 611901077536 IFSC no. ICIC 006119). மேலும் 2015 அக். 2,3,4 தேதிகளில் நேரடியாகவும் நிதி வசூலித்தார். Summer Camp என்ற பெயரில், தலைக்கு ரூ.2250 என்றடிப்படையில் அறிவிப்புகள் அவரது வெளியாயின. (படம் இணைக்கப்பட்டுள்ளது ). முகாம்களை நடந்தது பற்றி விரிவான தகவல்கள் இல்லை. அவரது SEED முறையாக பதிவு செய்யப்பட்ட அமைப்பாகவோ, அதன் கணக்குகள் தணிக்கைக்கு உட்பட்டதாகவோ தெரியவில்லை.மா, பலா, தேக்கு எனப் பலவகை மரங்கள் மூலம் பணம் வரும் என்றார், பியூஸ். மூங்கில் மட்டும் தான் வனம் முழுவதும் பரவலாக நடப்பட்டுள்ளது. அடுத்தவர் முதலீட்டில் மூங்கில் பயிரிட்டு, தனக்கான கச்சாப் பொருள் தேவைகளை குறைந்த விலையில் கொள்முதல் செய்து கொள்ளும் சாமர்த்தியமான வியாபாரி பியூஸ் சேத்தியா ஆவார்.வேண்டுகோள்!*********************பினாயக் சென் போன்ற அறிவாளிகள், பல்வேறு காந்திவாதிகள் சத்தீஸ்கர் ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் வனப் பகுதிகளில் தங்கியிருந்து, அப்பகுதியில் உள்ள விவசாயத்தை, பழங்குடிகளின் வாழ்க்கையை முன்னேற்றுவதில் ஈடுபட்டுள்ளனர். பணக்காரர்களுக்கு நிலங்களை வாங்கி கொடுத்து விட்டு மக்களை நிலங்களில் இருந்து வெளியேற்றவில்லை. மக்களுக்காக அர்ப்பணித்துள்ள அவர்களோடு பியூஸ் சேத்தியாவை ஒப்பிட வேண்டாம்!வனம் Forest என்பது பல்லுயிர்களைக் கொண்டதாகும். மூங்கில் போன்ற எதாவது ஒரு ஒற்றைப் பயிரை மட்டுமே அமைக்கும் நடவடிக்கை முதலாளித்துவ, ஏகாதிபத்திய சிந்தனைப் போக்காகும். கூப் பாரஸ்ட் என்ற கருத்துக் கோப்பே ஏகாதிபத்தியம் உருவாக்கியது தான்!Chapter 2- சேலம் தெரியாத சேதிகள்****************************************(தற்போது சுருக்கமாக சிலக் குறிப்புகள் மட்டுமே) +++++++++++++++++++++++++++++++++தண்ணீரைத் தேடி……சேலம் மாநகரத்திற்கு அருகில், ஏற்காடு மலை அடிவாரத்தில் கன்னங்குறிச்சி அருகில் அமைந்துள்ள மூக்கனேரி இயற்கையாகவே, நீர் நிறைந்த, அழகான, பறவைகள் வந்து செல்கிற ஏரியாகும். 2009 ல் ஒருமுறை நீர் குறைந்தது ; பிளாஸ்டிக் கழிவுகளும் குவிந்தது. இப் பிண்ணனியில் தான், 2010ல், அக்கறை மிக்க சுற்றுச் சூழலியலாளர்கள் கொண்ட சேலம் மக்கள் குழு Salem Citizens Forum என்ற அமைப்பானது உருவானது ; அரசாங்கத்திடமிருந்து ஏரிப் பராமரிப்பை பெற்றுக் கொண்டது. பியூஸ் அதில் இணைந்து கொண்டார். படிப்படியாக அந்த அமைப்பே அவருடையதாக மாற்றிக் கொண்டார். அதிலிருந்த நல்லவர்கள் பலரும் வெளியேறிவிட்டனர்.இதுவரையில் ரூ.52 இலட்சம் செலவு செய்துள்ளதாக பியூஸ் கூறுகிறார். சேலம் மக்கள் குழு பதிவு செய்யப்பட்ட அமைப்பும் அல்ல ! ஏரி பிரபலமானதால் ஆதாயம் அடைந்த பியூஸ் உறவினர் மதன்லால் சேட் சுமார் 40 ஏக்கரில் பிளாட்டுகள், வீட்டு மனைகளை அப்பகுதியில் அமைத்திருந்தார்.அவரது நிலத்தின் மதிப்பு உயர்ந்தது. மதன்லால் சேட் ஒரு பிரபலமான மார்வாரி ரியல் எஸ்டேட் வியாபாரி. ரூ.1 இலட்சம் நன்கொடை வழங்கினார். மீதி பணம் எந்த வகையில் வந்தது ( SEED, ICICI கணக்கிலா அல்லது Piyush sethia, Bank of Maharashtra கணக்கிலா) என்பது தெரியாது. 2015 ல் தான், மாரி ஸ்தலம் Mari Sthalam என்ற டிரஸ்ட்டை பதிவு செய்துள்ளனர். (Axis Bank a/c no. 915020020105876). இதிலும் ஏராளமான வரவு செலவுகள் நடந்து வருகின்றன. முறையான தணிக்கை உள்ளதா எனத் தெரியவில்லை.சென்னை வெள்ளத்தில்….சிறப்பாக செயல்பட்டதாக பியூஸ் விருது பெற்ற சென்னை வெள்ளத்தின் போது, 2015 டிசம்பர் 5 ந் தேதி துவங்கி பல நாட்கள் பியூஸ் வெளிநாட்டு நிதி வசூல்களை மேற்கொண்டார். தனது கணக்கிற்கு (Piuush sethia, Bank of Maharashtra, S/B account no.20111114356) மட்டுமே அனுப்பச் சொல்லி பெற்றார். உள்நாட்டு நிதிகளை மட்டும் மாரி ஸ்தலம் கணக்கிற்கு அனுப்பச் சொல்லிவிட்டார். நிதி வரவு செலவு இதுவரையில் வெளியாகவில்லை.பல்வேறு மட்ட ராஜதந்திர முயற்சிகள் மூலம், வனத்துறையின் 20 டன்கள் மூங்கில்களை கருங்காலி கிராமத்தில் இருந்து பெற முயற்சிப்பதாக அவரால் அறிவிக்கப்பட்டது; பெற்றதாகவும் தெரிகிறது. ஆனால்…..தற்போது சேலம் மரக்கடை பஜாரில் தான் மூங்கில் வாங்கியதாக கூறுகிறார். மற்றொரு புறம் தொழில்நுட்ப ரீதியாக தகுதியில்லாத மூங்கில் படகுகள் Rafts, மூங்கில் வீடுகள் அமைக்க எவ்வளவு செலவிடப்பட்டது , யார் பணம் ? படகுகள் என்ன ஆனது, எங்குள்ளது, கோல்டன் கேட்ஸ் பள்ளியில் குவிக்கப்பட்ட மீதியான நிவாரணப் பொருட்கள் நிலை என்னவென்றெல்லாம் தெரியவில்லை.பணம்,பணம் அல்லது மூங்கில் -அதுதான் பியூஸ்******************************************12.6.2016 ல், சேலம் மாநகர காவல்துறை ஆணையரை கடுமையாக விமர்சனம் செய்து முகநூலில் எழுதிய பியூஸ், அதற்காக அவருக்கு ஆதரவு தெரிவிக்க, அவரது ஆதரவாளர்களை மூக்கனேரியில் ஒரு மூங்கில் குருத்தை நடச் சொன்னார். அல்லது ரூ.500 நோட்டைக் கவரில் போட்டு அவரது முகவரிக்கு அனுப்பச் சொன்னார்.இயற்கை ஆர்வலர், சுற்றுச் சூழலியலாளர் என்பதெல்லாம் அவரது முகமூடியே! 2000 ஆண்டுகளின் காலகட்டத்தில் அவர் செய்த கார்ப்பரேட் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக, சில நண்பர்கள் வழங்கியுள்ள “புரட்சியாளர் முகமூடி” பற்றியும், அன்னிய உதவி பெறும் பல்வேறு NGO க்களுடனான அவரது உறவுகள் பற்றியும் தொடர்ந்து எழுதுவேன். பியூஸை போராளியாக்கி, உண்மையான மக்கள் ஊழியர்களை குப்பைத் தொட்டிக்குள் எறிந்துவிட வேண்டாம் என முகநூல், ஊடக நண்பர்களை பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.