நான் நாவல், சிறுகதை என்றால் நேரம் காலம் பார்க்காமல் வாசித்து முடிப்பேன். அதுவும் முதல் தலைப்பே “பட்டாளத்தார் இறந்துவிட்டார்”.
அதன் முதல் பக்கம் கிரைம் நாவல் போல் தொடங்கிய கதை பட்டாளத்தாரோடு பயணிக்க வைத்த விதம் ஒரு தேர்ந்த கதையாசரியருக்கே உரித்தான வாகு. உடனடியாக படித்து முடித்த நான் அவரின் வாழ்க்கையை மறக்க முடியவில்லை. ஏனெனில் நானுமே பட்டாளத்தான்தான்.
சிறுகதைத் தொகுப்பில் மொத்தமாக எட்டு கதைகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். சக்தியின் அதீத உழைப்பு கதை களம் அவர் தொழில் சார்ந்தே நீதிமன்றம், வழக்குகள் தீா்ப்புகளென்று அங்கே நம்மை நடமாட வைத்த பெருமை அவரின் எழுத்தில் உள்ளது என்றால் மிகையன்று.
அகம் புறம் என்று தனது இலக்கிய திறமையை அமீரின் நாட்குறிப்புகளில் கொட்டித் தீர்த்துள்ளார். கல்லூரி வாழ்க்கையின் பல பக்கங்களூடாக தன்னையும் வெளிக்காட்ட துணிந்துள்ளார்.
ஆணாதிக்கம் எவ்வளவு குரூரமானது? ஒரு பெண்ணை எப்படியெல்லாம் பேச முடியும்? அதுவும் ஒரு நீதிபதி முன்? அதில் வழக்கறிஞர்களே வாதிக்கு எதிராக திரும்பும் நிலை மிகவும் வேதனைபட வைக்கும் நிகழ்வுகள் என நம்மையும் அதில் ஒருவராக கொண்டு நிறுத்தும் சாமார்த்தியம்.
“சோபியா” போன்ற பெண்களை யாரும் மறந்திருக்க மாட்டோம். உண்மையில் வழக்கறிஞா்கள் தொழில் தீா்ப்புகளோடு முடிந்து விடுவதில்லை, அதற்கு மேல் இந்த சமுகத்தில் அவர்களின் பங்கும் உள்ளது என்பதனைச் சொல்லும் கதை களம். அதில் இளம் வழக்கறிஞர்களின் பாடசாலையாக அவர்களின்முன் எது சரி, எது தவறு மற்றும் வழக்காடும் தந்திரங்களை சொல்லித் தருவதோடு தவறுகளை எதிர்க்கும் திறனையும் முன் நிறுத்தும் கதை.
கதைகளில் பிளாஸ்பேக் உத்திகளைப் பயன்படுத்தியிருப்பது கண்முன்னே சினிமா போல் காட்சிகளை நிறுத்தி உள்ளதை நினைத்தால் சினிமாவுக்கு இவர் திரைக்கதை எழுத போகலாம் என்று நினைக்கத் தோன்றுகிறது.
நான் வாசித்த பல நாவல் சிறுகதை ஒட்டி இவரின் திறன் உண்மையில் கதை சொல்லும் விதம் ஒரு பழுத்த எழுத்தாளன் என்று காட்டுகிறது. முதல் சிறுகதை தொகுப்பு என்பதனால் அதிகமான திறமையை பயன்படுத்தியுள்ளீர்கள்! குமரி மாவட்ட வட்டார வழக்குக்குள் புரிந்துகொள்ளதான் சிரமமாக இருந்தது. இவ்வளவு ஆழமான இலக்கிய செழுமை தேவைதானா தோழர்?
உங்களின் புகழ் ஓங்குக, விருதுகள் பல பெற வாழ்த்துகள் தோழர்.
Comments
Most Relevant
- Palani Chinnasamyநன்றி தோழர் படத்தை எப்படியோ பிடித்து விட்டீர் நன்றி நன்றி. நான் எனது படத்தை முகநூல் பகுதியில் குறைவாகவே பகிர்வேன் நீங்கள் அதை எடுதுள்ளமை உங்களின் ஊக்கத்தை காட்டுகிறது தோழர். உங்களின் நூல் குறித்து அதிகம் எழுதவே உள்ளது நேரம் உள்ள போது இன்னும் எழுதி அனுப்புவேன் தோழர். உங்களின் பணி சிறக்க வாழ்த்துகள் தோழா…