பாலன் பற்றி ஒரு தோழர் பதிவு

Thirumeni Gt

SlteeipStpntembrueront sg8,m mdSh2odn01ttr7edl  · மக்கள் ஜனநாய இளைஞர் கழகமும்! வர்க்கப்போராட்டமும்!! [மலரும் நினைவுகள்]_________________________________ செப்டம்பர்-12. தோழர் பாலன் நினைவுநாள்! “””””””””””””””””””””””””””தருமபுரி மாவட்டம்…….மட்டுமல்ல.(சாதி ஒழிப்புக்கு மஜஇக கொடுத்த முக்கியத்துவம்.)ஏன் தமிழகமெங்கும்அன்றைய ஆர் ஒய் எல் (RYL) , இன்றைய #மஜஇக அமைப்பினர், 1976-80களில் நிலப்பிரபுத்துவ சாதிவெறியர்களை,சாதியத்தை எதிர்த்து வர்க்க ரீதியாக போராடியது.போராடுகிறது.உதாரணமாக….தனி டீ கிளாஸ் பிரச்சினை.தருமபுரி கிராமங்களில் அன்று நடைமுறையில் இருந்தது.மஜஇக-வின் நிலைபாடு,சாதிஒழிப்பு.அது நிலப்பிரபுத்துவ உற்பத்தி-முறையை,பண்பாட்டை ஒழிக்கும் போதே சாத்தியம்.ஆனால்….அதுவரை,இந்த சாதியம்,தீண்டாமை படுத்தும் பாட்டை எப்படி எதிர்கொள்வது என மஜஇக தலைமை வழிகாட்டியது.சமரனின் வழிகாட்டல் சாதியத்தை ஒழிப்பதில் மார்க்சிய கண்ணோட்டத்தில் தோய்ந்திருந்தது.அம்பேத்கர்,பெரியாரிடம் சாதிஒழிப்பு திட்டம் இல்லை என்பதை அன்றைய……..மஜஇக பிரசுங்களில் பார்க்க,படிக்க முடியும்.அதனடிப்படையில் தருமபுரி மாவட்டத்தில் சாதியக்கொடுமைகளை எதிர்த்து பிரச்சாரம் #தோழர்பாலன் தலைமையில் நடந்தது.பல பொதுக்கூட்டங்களில் தோழர் பாலன் சாதிஒழிப்பின் அவசியம் பற்றியும்,வர்க்கமாக அணிதிரண்டு எப்படி போராடுவது என்பதையும் எளிமையாக பேசுவார்.ஒரு கட்டத்தில்…குறிப்பாக,#டீகிளாஸ் ஒடுக்குமுறையை எதிர்த்து போராட வியூகம் வகுத்தது கட்சித்தலைமை.அதனடிப்படையில் கிராமங்களில் பிரச்சாரம்,பொதுக்கூட்டங்கள்,சுவரெழுத்துக்கள்,சுவரொட்டிகள்,நோட்டீஸ்,பிரசுரங்கள் வாயிலாக நிலப்பிரபுத்துவ சாதிய டீ கிளாஸ் ஒடுக்குமுறையை எதிர்த்து இயக்கங்களை மஜஇக நடத்தியது.இயக்கத்தில் அனைத்து சாதி உழைக்கிற மக்களும் வர்க்கமாய் அணிதிரண்டனர். தோழர்கள் மத்தியில் உற்சாகம் கரைபிரண்டொடியது.என்ன நடந்தது?டீ கடை நடத்திய ஆதிக்க சாதிக் காரனிடம் நமது தோழர்கள் தொடர்ந்து பேசினர்.சாதி பாகுபாடு கூடாது என்றனர்.தனிக்கிளாஸ் வைத்து உழைக்கிற மக்களைகூறுபோடாதே எனப்பேசிபார்த்தனர்.ஆதிக்க சாதிவெறியர்கள் ஒத்துக்கொள்ளவில்லை என்றால்…..தோழர் பச்சையப்பன் முதல் அடி கொடுப்பார்.அவர் பிற்பட்ட சாதிக்காரர்.கடை வைத்திருப்பவர் அதே சாதி.இங்கே முரண்பாடு தலித்துக்கும் வன்னியருக்கும் வரவில்லை.சாதியை மறுக்கும் வன்னியரே,சாதி ஆதிக்கம் செய்யும் வன்னியரை அடித்து நொறுக்கினார்கள்.தனி டீ கிளாஸ் கடைகள் ஒழிந்தது. தலித் சாதி உழைக்கிற மக்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண் டனர்.ஆனால்….அவர்கள் போராட்டத்தின் முன் பக்கம் நிற்கமாட்டார்கள்.பின்னால் நிற்பர்.தலித் மக்கள் மீது தொடுக்கப்பட்ட சாதிய அநியாயத்தைபிற,பிற்பட்ட உழைக்கிற மக்கள் முன்னின்று ஆதிக்கச்சாதிகளின் அநியாயத்தை அடித்து நொறுக்கினர்.அப்படித்தான்…..#தனிகிளாஸ் டீக்கடை இல்லாமலே போனது.சில ஆதிக்க சாதியினர் உடனே தங்களை மாற்றிக் கொள்ளவும் செய்தனர்.அடிதாங்க முடியாமல்….பிற்பட்ட சாதி உழைக்கிற மக்கள் வர்க்க ரீதியாக அணிதிரண்டு தங்கள் சொந்த சாதி உறவுகளை ரத்த உறவு பார்க்கவில்லை.தன் சொந்த சாதி பந்தங்களை கம்யூனிச லட்சியத்திற்காக அடித்து நொறுக்கினர்.இப்படித்தான் கிராமங்களில் சாதிய அடக்குமுறைகளை எதிர்த்து மஜஇக-வினர் இயக்கங்கள் எடுத்தனர்.உழைக்கிற பிற்பட்ட,தலித் மக்கள் வர்க்க ரீதியாக அணிதிரண்டனர்.தருமபுரியில் தலைவிரித்தாடிய #கந்துவட்டிக்கொடுமையையும் இப்படித்தான் அடித்து நொறுக்கினர்.சாதியை மறந்து வர்க்கமாய் வர்க்க போராட்டமாய்இயக்கம் வளர்ந்தது.இப்படிப்பட்ட சூழலில் தான்ஆளும்வர்க்கங்களின் திட்டமிட்ட காவல்துறை அடக்குறைக்குதோழர் பாலன் தன் இன்னுயிர் ஈந்தார்.1990-களில் உலகமயமாக்கல் வந்தது.ஏகாதிபத்திய சித்தாந்தம் வந்தது.அம்பேத்கர் நூற்றாண்டு எடுக்கப்பட்டது.தலித்தியம் நுழைந்தது.வர்க்கமாய் ஒன்றினைந்து போராடிய தோழர்களே சாதியாய் பிரிந்து போயினர்.இது எதனால் நடந்தது? ஏன் நடந்தது? தலித் இயக்கங்கள் புற்றீசல் போல் கிளம்பியது.இதற்கு சமமாக பெரியார் இயக்கங்கள் திராவிட சாதியாய் கிளம்பியது.


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *