பாரதி அரசியல்-2
பாரதி அரசியல்-2

பாரதி அரசியல்-2

பாரதி மீது விமர்சிக்கும் அவரின் விரோதிகள் தெரிந்து கொள்ள:- (பகுதி-2).

பாரதியின் வாழ்க்கையை விமர்சிக்கும் நிலை என்பது, அவரின் சில கவிதைகள் கட்டுரைகளை ஆங்காங்கே உருவி எடுத்து தவறான முடிவுகளை அடையும் அவர்கள் அறியவே இந்த பதிவு:-

பாரதியின் வாழ்க்கையை அறிய அவனின் செயல் அடிப்படையில் காண வேண்டும், பாரதியை பிறப்பால் பார்ப்பனர் என்று ஒதுக்க நினைக்கும் அதே நேரத்தில் பாரதியின் சமகால, இந்திய தேசிய மற்றும் உலக அரசியல் மாற்றங்கள், செயல்பாடுகள், சமகாலச் சமூக சூழல், முற்போக்கு சிந்தனையின் வளர்ச்சி நிலை முதலானவற்றை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம் உள்ளது.

சாதியப் படிநிலையில் பார்ப்பனியம், வர்ணாசிரம தர்மம் நிலைநாட்டுவதில், பேணிக்காத்து வருவதால், தன்மீது சுமத்தப்பட்டிருந்த பார்ப்பன அடையாளத்தை உதறவும், அதற்கு எதிராக கலகம் செய்யவும் பாரதி துணிந்தார். சமூக ஒழுக்கமாக எந்தெந்த விதிகளை பார்ப்பனியம் திணித்ததோ அவற்றை எல்லாம் பாரதி எதிர்க்க துணிந்தான், பூணுலை அறுத்தெறிந்தான் மற்ற சாதி மக்களுடன் நெருக்கமாக பழகினான், வேற்று மத மக்களுடன் அமர்ந்து தேநீர் அருந்துதல், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பூணூல் அணிவித்தல், மக்கள் தெய்வங்களை போற்றி பாடுதல்,இப்படி வாழ்ந்து மறைந்த பாரதி, பார்ப்பனர்கள் பாரதியின் எதிர் நிலைக்காக இறந்த பிறகு பாரதியை பார்ப்பனர்கள் கண்டு கொள்ளாத்தை அறியலாம்.
பாரதியின் மறைவு பார்ப்பன எதிர்பாளனாகவே வாழ்ந்து மறைந்தான் என்பதை உலகுக்கு அறிவிக்கிறது.
(தொடரும்…..)14Vchinnadurai Durai, Thirumeni Gt and 12 others2 Comments3 Shares

Comments
  • Vchinnadurai Durai தோழர் கோ.கேசவன்,மருதைய்யன் போன்ற தோழர்களும் பாரதியை விமர்சித்து உள்ளனர்.உங்களது பார்வைக்கு எதிர்நிலையில்.அவர்களும் இயங்கியல்பொருள்முதவாதக்கல்வியில் தேர்ச்சிப்பெற்றவர்கள்தான்.பாரதியை உடுங்க அடுத்த கட்டத்திற்கு போகலாம்.1Delete or hide this
  • Palani Chinnasamy தோழர் இவை இங்கு தற்பொழுது தேவையில்லை ஆனால் மருதையன் வலாசா வல்லவன் மற்றும் வே் மதிமாறன் போன்றவைக்கு நான் பதில் தொகுத்துள்ளேன் தோழர், தற்போது அதன் தேவை இன்மையால் பதிவிட வில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *