லிபிய நாட்டின் விடுதலைப்போராளி உமர்முக்தார் தன்வாழ்நாள் முழுவதும் இத்தாலிய ஏகாதிபத்திய அரசியலைஎதிர்த்து வீரச்சமர் புரிந்தவன்! அவன் ஒரு கையில் குரான்! மறுகையில் துப்பாக்கி! ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளி அவன்! தேசபக்தன்! அவன் கம்யூனிஸ்ட் அல்ல!
பாரதியும், பராசக்தியும் பாட்டும் அவன் ஆயுதங்கள்!
“பொழுதெலாம்
எங்கள் செல்வம்
கொள்ளை கொண்டு
போகவோ
நாங்கள் சாகவோ”
என கவிதை கொளுத்தியவன்.பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போர்ப்பரணி
பாடியவன். தேசபக்தன். அவன் கம்யூனிஸ்ட் அல்ல!
இயக்கவியல் பொருள்முதல்வாதம் மற்றும் வரலாற்று பொருள்முதல்வாதம்
எனும் எரிதழல்ஆயுதத்தை ஏந்தியவன் மட்டுமே தான் கம்யூனிஸ்ட்.
உலக பாட்டாளிவர்க்கத்திற்கு வழிகாட்டும் தத்துவம் மார்க்சிய தத்துவமான இயக்கவியல் பொருள்முதல்வாதம் மற்றும் வரலாற்று பொருள்முதல்வாதம் மட்டுமே.
உழைக்கிற மக்களின் தத்துவம் மார்க்சியம் இருக்கையில்
அதை விடுத்து மண்ணுக்கேற்ற மார்க்சியம் கும்பலை பற்றி என்ன சொல்ல, இவை மார்க்சிய தத்துவத்தை கொச்சை படுத்துவதை விட வேறு என்ன இருக்கிறது. மார்க்சியர்களின் அளப்பரிய தியாகத்தால் விளைந்தது இயக்கவியல் பொருள்முதல்வாதம் மற்றும் வரலாற்று பொருள்முதல்வாதம்.
பாரதி வெள்ளைக்காரர்களுக்கு பயந்து வெள்ளைக்காரர்களுக்கு எதிராக கட்டுரை எழுதவில்லை. வாதத்திற்காக ஏற்றுக்கொள்வோம் வெள்ளையர்களுக்கு ஆதரவாக இருந்தாரா? ஆனால் பெரியாரியவாதிகள் எங்கேயும் பெரியார் பிரிட்டீசாரை எதிர்த்தார் என்று வாதிடுவதில்லை. காரணம் பெரியார் காங்கிரசு கட்சியில் செயல்படும்போது மட்டும்தான் பிரிட்டீசாரை எதிர்த்த போராட்டங்களில் கலந்துகொண்டார். அதைவிட்டு வெளியில் வந்து தொடர்ந்து காங்கிரசு எதிர்ப்பு போராட்டமே நடத்தினார். காங்கிரசு கட்சி பெயரளவிலாவது பிரிட்டீசாரை எதிர்த்தபோது பெரியார் அதற்கு எதிராக பிரிட்டீசாரை வெளிப்படையாக ஆதரித்து பார்ப்பனர்களை எதி்ர்த்துப் போராடினார். இப்போதும் அவர்களது வாரிசுகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்க்காமல் பார்ப்பனிய எதிர்ப்பு வேசம்கட்டி ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்களை திசைதிருப்புகிறார்கள் என்பதே எங்களது விமர்சனம் ஆகும். இந்த விமர்சனத்திற்கு பதில் அளிக்காமல் பெரியார் அதைச்செய்தார் இதைச்செய்தார் என்று கதையளந்து கொண்டிருக்கிறார்கள். இப்போதும் கார்பரேட்டு முதலாளிகள் உயர்கல்வியை வணிகமயமாக்கி கார்பரேட்டு முதலாளிகள் குறிப்பாக அமெரிக்க முதலாளிகள் கொள்ளையடிப்பதற்காக நீட் தேர்வு கொண்டுவரப்படுகிறது என்பதைப்பற்றி பேசாமல் பார்பனிய சூழ்ச்சி என்றும் பார்ப்பனர்களே இதில் ஆதாயம் பெற்றார்கள் என்று சொல்லி இதில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலையீடையும் WTO வின் தலையீட்டையும் மறைக்கிறார்கள்.
வரலாற்று நிகழ்வுகளை நமது அனுபவமாக எடுத்துக்கொள்ளத்தான் இந்த வாதம். இதில் வெள்ளைக்காரன் வரவில்லை என்றால் என்ற கற்பனை எதற்கு? பெரியார் மற்றும் பாரதி பற்றிய தனிமனிதர் பிரச்சனை அல்ல இங்கு விவாதப் பொருள். கருத்துமுதல்வாத சிந்தனை உள்ள ஒருவர் சுதந்திரத்திற்காகப் பாடுபட்டால் அவருடன் அணிசேரலாமா? அல்லது சுதந்திற்கு எதிராக செயல்படும் ஒருவர் பகுத்தறிவுவாதியாக இருந்தால் அவரோடு நாம் அணிசேரலாமா? என்பதே இங்கே வாதமாகும். கருத்துமுதல்வாதத்தை எதிர்ப்பதே முதன்மை என்பது தோழர் ஈஸ்வரன் அவர்களின் வாதமாக உள்ளதாக நான் கருதுகிறேன். நாங்கள் முதன்மையாகப் பார்ப்பது ஏகாதிபத்திய எதிர்ப்பே முதன்மையானதாகும். இதற்கு தியாகம் செய்ய தயாராக வேண்டும். அது எல்லோராலும் முடியாது.
காலனியம் ஆதிக்கை கொடுமைகளை பற்றி
கிருத்துவ காலனியம் என்று மார்க்சால் வரையறுக்கப்பட்ட கிருத்துவ பாதிரியார்கள் அடிமை வியாபாரம் செய்து காலனிய நாடுகளிலுள் விவசாயிகளை அடிமைகளாக்கி விற்று படுகொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை பலகோடி இருக்கும். அந்த கிருத்துவ கொடுங்கோலர்கள் செய்த அநியாயத்தோடு இந்துத்துவ நிலபிரபுத்து சக்திகள் செய்த கொடுமை மிகவும் குறைவானதே. இந்துத்துவ கொடுமையை பேசும்போது கிருத்துவ கொடுமையையும் இணைத்தே பேசவேண்டும். முன்னது நிலபிரபுத்துவ கொடுமை பின்னது காலனிய முதலாளிகளின் கொடுமை. இந்த இரண்டு கொடுமைகளும் இன்றும் தொடர்கிறது. அதனை ஒழிக்க வழி என்ன? காலனியாதிக்கத்திற்கு முடிவு கட்டுவது. உள்நாட்டில் ஜனநாயத்திற்கான போராட்டத்தில் வெற்றிபெறுவதே அந்த வழியாகும்.
இன்றைய ஏகாதிபத்திய கட்டத்தில் பாட்டாளிவர்க்க புரட்சி கட்டத்தில் ஏகாதிபத்தியங்களுக்கு எதிராக இரண்டு முனைகளில் போராட்டங்கள் நடந்துகொண்டிருக்கிறது. ஒரு முனையானது அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளிலுள்ள பாட்டாளி வர்க்கமானது அதன் ஏகபோக முதலாளிகளுக்கு எதிராக சோசலிசத்திற்காக நடத்தும் போராட்டம் இன்னொரு முனையானது காலனி நாடுகளில் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நடத்தப்படும் விடுதலைப் போராட்டம். இந்த இருமுனைகளில் நடத்தப்படும் போராட்டமே ஏகாதிபத்தியத்தை வீழ்த்தி உலக மக்களை விடுவிக்கும். இதற்கான முழக்கமே ஒடுக்கப்பட்ட மக்களே ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்றுபடுவோம் என்பதாகும்.
பாரதி காலனிய எதிர்பாளன் என்பதை சுட்டிகாட்ட ஏகாதிபத்தியம் பற்றி எழுதியுள்ளென்.