பாரதிஅரசியல்
பாரதிஅரசியல்

பாரதிஅரசியல்

July 27, 2017 at 10:50 AM · 

நான் எழுத முடியாமல் அல்லது தற்போதைய அரசியல் பரப்பரபில் முதன்மையான அரசியல் பின்னால் ஓட வேண்டிய நிர்பந்தம் ஆகவே இன்றைய அவசியமான அரசியலை முதன்மை படுத்தி அதன் அடிப்படையில் பல அறிந்து கொள்ள நேரம் போதாமையால் என்னுடைய இந்த பதிவு எழுத முடியாமலே போய் விட்டது என்பேன், ஆனால் சில ஆளும் வர்க்க சகபாடிகள் மக்கள் மீது தினம் தினம் ஏற்றப் படும் சுமைகள் மீதான அதற்கான தீர்வை தேடுவதை விடுத்து, மேட்டுக்குடி புத்தியில் தன் கூட்டத்தை தக்க வைத்துக் கொள்ள எதையும் எழுதும் மனபான்மை, அதற்கு எதிராக எழுத வேண்டிய தேவை உள்ளது ஆகவே இனி பாரதி பற்றிய சிறிய தேடல்.( இதில் உள்ள என் புரிதல்களை சரிபார்க்க தோழர்களின் உதவி எதிர்பார்க்கிறேன்- தோழமையோடு உதவும்).

இந்துத்துவ எதிர்ப்பே பாரதி என்ற ஒரு வரலாற்று பாத்திரத்தை இன்று எதிர்க்கும் கூட்டம் தெரிந்து கொள்ள வேண்டிய பல நிகழ்வுகள்:-

ஏன் பாரதியை தூக்கி நிறுத்த வேண்டும் அதேபோல் எதிர்பதற்கான காரணங்கள் அறிவோம்.
பாரதியின் பணி:-
சமூக அரசியல் விமர்சனத்தை (தமிழ்) இலக்கியத்தின் பணி ஆக்கியமையாகும்.
இந்தப் பயன்பாடு தமிழில், பாரதிக்கு முன்னர் அழுத்தப்பட வில்லை, அதிகாரத்தை நிலைநிறுத்தும், நியாயப்படுத்தவும் பயன்பட்டது. சங்க இலக்கியம்,பிற்க்கால அரசவை இலக்கியங்கள் நல்லாட்சிக்கான தேவைகளை உணர்த்துவதாக இருந்தன, அரசியல் அதிகாரத்தை விமர்சித்து, சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதற்க்கு இலக்கியத்தைச் சகல மக்கள் மட்டத்திலும் ஒரு கருவியாகப் பயன்படுத்தும் பணி தமிழ் இலக்கியத்திற் பாரதியுடனேயே நிச்சயமாகிறது. இலக்கியத்தின் இந்த பணியைப் பாரதி சனநாயத்தின் பேரால் நிலைநிறுத்தினான்.
பாரதியின் சாதனை தமிழ் மொழியின் பயன்பாட்டைப் பொதுமக்கள் நிலைப்படுத்தலுக்கான குரலைக் கொடுத்தும், அந்த சாதனையை செயல் சாத்தியபடுத்தும் படைப்புகளை முன் வைத்தது ஆகும்.

பாரதி இந்த மாற்றத்தை செய்யும் பொழுது, அந்த காலகட்டத்துக்குரிய சமூக பின் புலம், அரசியற் கருத்து நிலை, சமூக பார்வை ஆகியவற்றைக் கொண்டிருந்தான், அவர்களின் சாதனை என்னவெனில், அவன் திறந்து விட்ட கதவும், தளர்த்தி விட்ட பொருளும் பின் வந்த தேவைகளை பூர்த்தி செய்வனவாக அமைத்தன.

பாரதியின் இந்த வரலாற்று பின்புலத்தை புரிந்து கொள்ள வரலாற்று பொருள்முதல்வாதம் அவசியம். ( நன்றி தோழர். கி. பார்த்திபராஜா ).
எதிர் தரப்பு பாரதியை சாதி அடிப்படையில் இன்றைய RSS கயவர்களுடன் தொடர்புபடுத்து பேசுவதற்கு காரணம், தங்களின் அரசியல் ஓட்டாண்டிதனமே!!!

பாரதி ஆய்வு விளங்காவிட்டால் விவாதிப்போம், இங்கே நாட்டை அடகு வைக்க புதிய காலனி கொள்கைக்கு துணை போகும் கூட்டம் இங்கே பல முற்போக்கு முகமூடிகள், மக்களின் விடுதலைக்கு மக்களின் உணர்வுகளை கிளர செய்த பாரதி ஒரு ஒப்பற்ற பாத்திரம்… அவனின் வாழ்க்கையில் மதம் மாயை என்பன அறிந்து செயல்படும் நிலை அவனின் புற சூழல் அதே போல அவனின் …. தேவைப்பட்டால் தொடருவோம்…..14ஈஸ்வரன் அ.கா., புவன சேகர் and 12 others7 Comments1 Share

 • பகத்சிங் பாரதி தொடரவும் தோழர்1Delete or hide this
 • அன்பு செல்வன் நாத்திக முகமூடி அணிந்து ஆண்டைகளிடம் பிச்சை கேட்பதை விட ஆத்திகம் இருந்தாலும் ஆதிக்கத்தை எதிர்பதே விடுதலைக்கான வழி.2Delete or hide this
 • Thirumeni Gt மகாகவி பாரதி
  வாழ்ந்தகாலம் …..
  இந்தியா பிரிட்டிஷ் காலனிய ஆதிக்கத்தில்
  அடிமைத்தனத்தில் உழன்றது.
  இந்தியாவின் மீதான காலனிய ஆதிக்கத்தை பாரதி எதிர்த்தான்.
  அவன் வாழ்ந்த காலத்தில் இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் இல்லை.
  வடபுலத்தில் பகத்சிங்,சுகதேவ்,ராஜகுரு போன்ற போராளிகள் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தை எதிர்த்து கர்ஜித்தனர்.
  பிரிட்டிஷ் காலனிய ஆதிக்கத்தை எதிர்த்து நாட்டின் விடுதலைக்காக போராடுவது அன்றைய
  இந்திய மக்களின்
  #பிரதானகடமையாக இருந்தது.

  பாரதி…நீ எழுதக்கூடாது.
  பாரதி….நீ பேசக்கூடாது.என வாய்ப்பூட்டு,கைப்பூட்டை
  பாரதிக்கு எதிராக பிரிட்டிஷ் கொள்ளையர்கள் சட்டம் போட்டனர்.
  பிரிட்டிஷ் காலனிய சட்டத்தை எதிர்த்து
  தனது
  கவிதைகளால்….
  கட்டுரைகளால்….
  பேச்சுக்களால்….
  சண்டாமருதம் செய்தான்.விடுதலைக் கவிஞன் பாரதி வேடக்காரன் அல்ல.
  விடுதலைப்போராளி என அவன் வாழ்க்கை
  பிரகடனம் செய்கிறது.
  கைலாசபதி,சிவத்தம்பி,கேசவன் போன்றோர் தங்களின் ஆய்வுகளால் அவனை விடுதலை மீட்டிய வேங்கையாய்
  வரலாற்றில் படைத்துள்ளனர்.3Delete or hide this
  • Palani Chinnasamy தோழர் சில பிழைப்புவாதிகள் அவ்வப்போது பாரதியை சீண்டுவதே வேலையாக கொண்டுள்ளனர், மேலே அன்பு செல்வன் தோழர் குறிப்பிட்டது போல் சில நாத்திகம் பேசும் அரசியல் தலைவர்களுக்கு பாரதியின் ஆளுமையை எதிர்க்க துணிவின்று அவனின் பிறப்பு ஆத்திகத்தின் மீது அடிக்கடி தேவையற்ற கேள்வி எழுப்புவது ஆகவே இதனை முடிந்தளவு எழுத நினைத்தேன் தோழர்Edit or delete this
  • Thirumeni Gt தோழர் பழனிசின்னசாமி,
   [1]தமிழகத்தில்,நீதிக்கட்சி, திராவிட இயக்கங்கள் பிரிட்டிஷ் காலனிய ஆதிக்கத்தை ஆதரித்தனர்.ஆரிய-திராவிட இனவியல் கோட்பாடுகள்,ஆரிய-திராவிட மொழிக்குடும்பம் கொள்கைகள் மூலம் பிரிட்டிஷ் காலனிய எதிர்ப்பை திசைதிருப்பினர்.காலனிய ஆதிக்கத்தை நியாயப்படுத்தினர் என்பதை விரிவான ஆய்வுகளால் மஜஇக நிரூபித்துள்ளது.அவர்கள் பாரதியை விமர்சிப்பதை எதிர்த்து கேசவன்,கைலாசபதி போன்றோர் அம்பலப்படுத்தி உள்ளனர்.கேசவன் பாரதியை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.
   [2]நீதிக்கட்சி மற்றும் திராவிட இயக்கம்
   +ஏகாதிபத்தியத்துடன் சமரசம்
   +திராவிட நிலப்பிரபுத்துவத்துடன் சமரசம்
   +தேசியஇனங்களின் விடுதலைக்கு தடையாக விளங்கினர்.
   பிரிட்டிஷ் காலனிய ஆட்சியின் கீழ் தனித்தமிழ்நாடு கோரியவர் பெரியார்.
   [3]பெரியார் தாய்மொழி கல்வி பற்றியும் சாதி ஒழிப்பு பற்றியும் பேசியதெல்லாம் வேடிக்கையானது.ஆங்கில மொழிமீது அவர் கொண்டிருந்த காதல்,வெண்மணியில் 44 உயிர்கள் எரிந்ததை குறித்த அறிக்கைகள் பெரியாரின் நோக்கத்தை வெளிப்படுத்தும்.
   [4]ஏகாதிபத்திய எதிர்ப்பில் பாரதி உறுதியானவன்.”பொழுதெலாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ நாங்கள் சாகவோ”என முழங்கியவன் பாரதி!3Delete or hide this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *