பாட்டாளி வர்க்கத்தின் இராணுவ அமைப்பு -2
பாட்டாளி வர்க்கத்தின் இராணுவ அமைப்பு -2

பாட்டாளி வர்க்கத்தின் இராணுவ அமைப்பு -2

நவீன ஆயுதங்களும், நவீனப் போர் முறைகளும் உலகில் இடையருது வளர்ந்து வருகின்ற காலகட்டத்தில், தேசிய சுதந்திரம், ஜனநாயகம், சோஷலிசம் ஆகியவற்றுக்காகப் போராடி வருகின்ற பல்வேறு மக்களைப் பொறுத்தவரை, மக்களை ஆயுதபாணியாக்குதல், மக்கள் இராணுவம்க் கட்டுதல் பற்றிய தத்துவமும் நடைமுறையும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.பாட்டாளி வர்க்கத்தின் இராணுவ அமைப்பு பற்றிய மார்க்சிய-லெனினிய ஆய்வுரைகள்மார்க்சிய-லெனினியம், வர்க்கப் போராட்டம் மற்றும் அரசு பற்றிய தத்துவத்துடன் ஒருங்கிணைந்த பிரச்சினை யாக பாட்டாளி வர்க்கத்தின் இராணுவ அமைப்பு பற்றிய பிரச்சினையை ஆராய்கிறது.புராதன பொதுவுடமை சமுதாயத்தின் அழிவிற்குப் பின் சமுதாயம் வர்க்கங்களாகப் பிளவுபடுகின்றது. சமுதா யத்தின் வரலாறு வர்க்கப் போராட்டத்தின் வரலாறுகின் றது. சமுதாயம் நாடுகளாக அமையப் பெற்றவுடன் நாடு களை ஒடுக்குவதும் அடிமைப்படுத்துவதும் தொடங்கியது. இப்போது வர்க்கப் போராட்டங்கள் தேச விடுதலேப் போராட்டங்களாக மாறின. ஆண்டான்களும் அடிமைக குளும், பண்ணையார்களும் கூலி விவசாயிகளும், நாடுகளை அடிமைப்படுத்துபவர்களும் அடிமைப்பட்டவர்களும், ஒன்றுக்கொன்று பகைமை கொண்ட சமுதாயப் பிரிவுகளும் பல்வேறு வடிவமான போராட்டங்களைச் சந்தித்தன. அவை பின்னர் ஆயுத மோதல்களாகவும், போராகவும் பரிணமித்தன. பன்னெடுங்காலமாக வர்க்க சமுதாயத்தில் எண்ணற்ற போர்கள் நடந்துள்ளன. கடந்த ஐயாயிரம் ஆண்டுகளில் ஏறற்தாழ 10,000 போர்கள் நடந்திருப்பதாக மதிப்பிடப்படுகிறது.போர் நடத்துவதற்கு வேண்டிய மிக முக்கியமான கருவி சேனையாகும். சமுதாயம் பகை வர்க்கங்களாகப்பிளவுபட்டவுடன் அரசு தோன்றுகின்றது. சேனை என்பது அரசின் சிறப்பான கருவியாகும்; ஒரு குறிப்பிட்ட வர்க்கம் தனது அரசியல் மார்க்கத்தை ஆயுதமேந்திய வன்முறை மூலமாக பிரயோகிப்பதற்கு பயன்படுத்தப்படும் கருவி யாகும்.அரசின் வர்க்கத் தன்மை, சேனையின் சமுதாயத் தன் மையையும் அதன் செயல்பாடுகளையும் தீர்மானிக்கிறது. சுரண்டுகிற அரசுகளின் சேனைகள் பின்வரும் அம்சங்களைக் கொண்டிருக்கும்; சுரண்டப்படுகின்ற உள்நாட்டைப் பொறுத்தவரை, பிற வர்க்கங்களைக் கீழ்ப்படுத்தி வைக்கும் ஆளும் வர்க்கங்களின் கட்டளைகளுக்கு அவை அடிபணிய நிர்ப்பந்திக்கும்; வெளி விவகாரங்களைப் பொறுத்தவரை, மற்றைய நாடுகளைப் பிடிக்கக் கூடியதாகவும், வெளியார் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ளக் கூடியதாகவும் இருக்கும். சுரண்டும் அரசுகளில் மூன்று விதமான அரசுகள் வர லாற்றில் தோன்றியுள்ளன. இந்த அரசுகளுக்குப் பொருத் தமான மூன்றுவித சேனைகளும் தோன்றியிருக்கின்றன. 1).அடிமைச் சமுதாய அரசின் சேனை, 2).நிலப்பிரபுத்துவ அர சின் சேனை, 3).முதலாளிய அரசின் சேனை என்பன மூன்று விதமான சேனைகளாகும். : .வரலாற்றின் போக்கில் அச் சேனைகளுக்குப் பல்வேறு பெயர்கள் இடப்பட்டிருக்கின்றன. அவற்றின் அமைப்பு வடிவங்களும் ஆட்களைச் சேர்க்கும் முறைகளும் பல்வேறு சூழ்நிலைகளுக்கேற்ப பல்வேறு விதமாக இருந்திருக்கின்றன. ஆணல் அவற்றின் இயல்பு மட்டும் ஒன்றேயாகும்; அதாவது சுரண்டும் வர்க்க அரசின் சேனையானது ஆளும் வர்க்கத்தின் கருவியாகச் செயல்பட்டு மற்றைய வர்க்கங்களை ஒடுக்குவதும் மற்றைய நாடுகளைக் கொள்ளையடிப்பதும்,அடிமைப்படுத்துவதுமாகும். இருந்த போதிலும் சுரண்டு வோரின் கீழ் ஒடுக்குவோரின் சேனைகள் மட்டுமே இருந்த தென்பதில்லை. ஆயுதந் தாங்கிய ஒடுக்கு முறையை எதிர்த்து ஒடுக்கப்பட்ட வர்க்கங்களும் தங்களுடைய புரட் சிப் படையை தங்களுடைய புரட்சிகரப் போராட்டங்களூக்காக கட்டியிருக்கின்றன. ரோம் நாட்டில் ஸ்பாட்டகஸ் தலைமையில் அடிமைகள் ஆயிரக்கணக்கில், படை அமைத்து அடிமைப்படுத்தும் அரசை எதிர்த்துப் போராடினார்கள். மார்க்ஸ், ஸ்பாட்டகஸை ‘தொன்மைக்கால வரலாற்றில் காணப்படும் மிகச் சிறந்த மனிதன் போர்த் தளபதி; சிறந்த பண்பாளன் ; தொன்மைக் காலப் பாட்டாளி வர்க்கத்தின் மிகச்சிறந்த பிரதிநிதிஎன்று பாராட்டியுள்ளார்.நிலப்பிரபுத்துவக் காலகட்டத்தில் ஐரோப்பா, ஆசியா, ஆபிரிக்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எழுச்சிகளின் போதும், விவசாயப் போரின் போதும், விடுதலைப் போரின் போதும் பல்வேறு நாடுகளில் விவசாயிகளின் படைகள் மிகப் பெரிய அளவிலும், மிகச் சிறந்த தாக்கும் திறநோடும் தோன்றியிருக்கின்றன. நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்து முதலாளியப் புரட்சி தோன்றி முதலாளியம் உருவாகும் காலத்திலும் விவசாயிகளின் படைகளும், தொழிலாளர்களின் படைகளும் முதலாளிகளின் தலைமையில் தோன்றி யிருக்கின்றன.இருந்த போதிலும் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் ஆயுதப் படைகள் மிகச் சிறந்த வெற்றிகளை ஒரு சில போது ஈட் டியிருந்த போதிலும் அவற்றின் வரலாற்று ரீதியான வரம்பு களாலும், சரியான அமைப்பு, அரசியல், இராணுவ மார்க்கம் இன்மையினுலும் இறுதியில் எதிரியால் நசுக்கப்பட்டி ருக்கின்றன; தங்கள் கூட்டாளிகளால் காட்டிக் கொடுக்கப் பட்டிருக்கின்றன. இத் துரோகம் முதலாளியப் புரட்சிக் காலகட்டத்தில் தான் மிக முழுமையாகத் தன்னை வெளிப்படுத்தியுள்ளது. ஏங்கெல்ஸ் சுட்டிக் காட்டியது போல, பிரான்சில் உள்ள தொழிலாளர்கள் ஒவ்வொரு புரட்சியின் போதும் ஆயுத பாணிகளாகியிருக்கிறர்கள். அதானால் அதிகாரத்தைக் கைப்பற்றியவுடன் முதலாளிகள் செய்த முதல் காரியம் தொழிலாளர்களே நிராயுதபாணிகளாக்குவது தான். ஒவ் வொரு புரட்சியும் தொழிலாளர்களின் இரத்தத்தால் வெற் றியடைகின்றது. வெற்றியடைந்ததுடன் மற்றெரு போராட்டம் வெடிக்கிறது. இது தொழிலாளர்களின் தோல்வியில் போய் முடிகிறது.மார்க்சியமும் பாட்டாளி வர்க்கக் கட்சிகளும் தோன்றி யவுடன் வரலாற்றில் புதிய பரிமாணம் தோன்றுகின்றது. அதற்கு முன் ‘தன்னெழுச்சியாகப் போராட்டங்கள் நடந்த நிலை மாறி **உணர்வுபூர்வமான?? சரியான பாதையில் போராட்டங்கள் உருவாக்கப் படுகின்றன. இது பாட்டாளிய புரட்சிகரப் போராட்டத்தில் ஒரு புதிய பாய்ச்சலை உருவாக்குகிறது. அந்த அடிப்படையில் தான் சுரண்டப்படும் மக்களின் இராணுவ அமைப்பு என்ற பிரச்சினை பாட்டாளி வர்க்கத்தின் இராணுவ விஞ்ஞானத்தில் தீர்க்கப்படுகிறது. பாட்டாளி வர்க்கத்திற்கான அரசியல் கட்சிகள்-கம்யூனிஸ்ட் கட்சிகள்-அரசியல் உலகில் தோன்றி அவை பல்வேறு நாடு களில் புரட்சிக்குத் தலைமை கொடுக்கத் தொடங்கின. -ஜெனரல் கியாப்பினுல் எழுதப்பட்ட நூலிலிருந்துதொடரும் தோழர்களே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *