TO ARM THE REVOLUTIONARY MASSES
TO BUILD THE PEOPLE’S ARMY.”
என்ற ஜெனரல் கியாப்பினுல் எழுதப்பட்ட நூலிலிருந்து சில தொடர் பதிவு எழுத நினைக்கிறேன்.
இவை என் நெடு நாள் ஆசை ஆனால் இங்கு நமது இடதுசாரி அல்லது புரட்சிகர அமைப்புகளின் நிலையை கண்டு இந்த நூலின் தேவை இப்பொழுது இல்லாத பொழுது எழுதி என்ன பயன் என்று பின்வாங்கி இரு நாளுக்கு முன் எழுதிய என் பதிவை அழித்து விட்டேன், இன்று சரி எழுதுவோம் படிப்பினைக்காக என்று தொடருகிறேன் தோழர்க்ளே.
உங்களின் உயரிய கருத்துகளை வழங்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.
இனி பதிவில் கீழே:-
பாட்டாளி வர்க்கத்தின் இராணுவ அமைப்பு -1
++++++++++++++++++++++++++++++++++
வீரம் மிக்க வியட்நாம் மக்கள் அந்நிய ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடிய தீரமிக்க வரலாறு கொண்டவர்கள். அவர்கள் பல நூற்றண்டுகளுக்கு முன்பே தங்களை விடப் பெரிய வலிமையான ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து நாடு தழுவிய எழுச்சியையும், மக்கள் யுத்தத்தையும் நடத்திய செழுமையான அனுபவத்தைப் பெற்றிருந்தார்கள்.
வியட்நாமிய பாட்டாளி வர்க்கம் உருவான பின்னர்,தம் கட்சியின் தலைமையில், சுதந்திரம், ஜனநாயகம், சோஷலிசம் கம்யூனிசம் ஆகிய புரட்சிகர இலக்குகளுக்காக, தமது நாட்டின் அந்நிய ஆக்கிரமிப்பை எதிர்த்த செழுமைமிக்க பாரம்பரியத்தை மேலும் வளர்த்தெடுத்து தேசந்தழுவிய எழுச்சியையும், மக்கள் யுத்தத்தையும், மிக உயர்ந்த மட் டத்திற்கு வளர்த்தெடுத்தார்கள்.
ஜப்பானிய பாசிஸ்டுகளை ‘யும், பிரெஞ்சு காலனியவாதிகளையும் அவர்கள் முறியடித் தார்கள். அமெரிக்க ஏகாதிபத்தியத்தை முறியடித்தார்கள்; முறியடித்துக் கொண்டிருக்கின்றர்கள். தங்கள் நாட்டின் வரலாற்றை சிறப்புமிக்க பக்கங்களால் நிரப்பிக் கொண்டுள்ளார்கள். இந்தோசீன, தென் கிழக்காசியா மற்றும் உலக மக்களின் புரட்சிக்கான தனது பங்களிப்பை தந்து கொண் டிருக்கின்றது.
ஏகாதிபத்தியம் மற்றும் காலனியாதிக்கத்தை எதிர்த்த,
இருபதாம் நூற்றண்டின் காட்டுமிராண்டித்தனமான ஆக் கிரமிப்பாளர்களை எதிர்த்த வியட்நாம் தனது வெற்றிகர
மான போராட்டத்தின் மூலமாக, முறியடிக்க முடியாத
போர்க்குணத்திற்கும், ஆக்கபூர்வமான அறிவிற்கும், இரா ணுவ வலிமைக்கும், மக்கள் யுத்த முறையின் மேன்மைக்கும் அடையாளமாக விளங்குகின்றது. இருபதாம் நூற்றண்டின் மிகச் சிறந்த அம்சமாக வியட்நாமிய மக்கள் யுத்தம்விளங்குகின்றது.
வியட்நாம் மக்கள் பின்வரும் ஒளிரும் உண்மையை உலக மக்களுக்குப் புலப்படுத்துகிறர்கள். அதாவது ஒரு சிறிய, பரந்த பரப்பில்லாத, மக்கள் தொகை அதிகமில்லாத, பொருளாதார வலிமை இல்லாத நாடு திட மனதுடன் ஒன்றுபட்டு, சரியான புரட்சிகர மார்க்கத்தைக் கொண்டு, நாடு தழுவிய ஆயுத எழுச்சி மற்றும் மக்கள் யுத்தம் பற்றிய மார்க்சிய-லெனினிய கோட்பாட்டை தங்கள் நாட்டுக்குரிய வகையில் பிரயோகித்து, முற்போக்கான மனித இனம் மற்றும் சகோதர சோஷலிச நாடுகளின் ஒத்துழைப்பு ஆகியவற்றுடன் முதன்மையான ஏகாதிபத்திய அரசான அமெரிக்கா உள்ளிட்ட வலுமிக்க ஆக்கிரமிப் பாளர்களை முறியடிக்க முடியும்.
வியட்நாம் நாட்டுக்குரிய புரட்சிக்கு ம், புரட்சிப் போருக்குமான சரியான மற்றும் ஆக்கபூர்வமான மார்க் கத்தை தமது கட்சியானது வகுத்தெடுக்க, சமூக வளர்ச்சியின் விதிகளையும், தமது நாட்டின் புரட்சிப் போரின் வளர்ச்சி விதிகளையும், புரட்சிகர வன்முறையின் வளர்ச்சி விதிகளையும் கண்டறிந்து அவற்றைக் கற்றுத் தேர்ந்து புரட்சிகர வன்முறை என்ற விதியின் சாரம் அரசியல் சக்திகளை ஆயுதப் படைகளுடன் இணைப்பதும், அரசியல் போராட்டங்களை ஆயுதப் போராட்டங்களுடன் இணைப்ப தும், ஆயுத எழுச்சியை புரட்சிப் போருடன் இணைப்பது மாகும்.
நாடு தழுவிய ஆயுத எழுச்சியையும், மக்கள் யுத்தத் தையும் வழிநடத்திச் செல்கையில் தம் கட்சி, பாட்டாளி வர்க்கத் தலைமையில் பாட்டாளி-விவசாயி கூட்டின் அடிப் படையிலமைந்த ஒரு தேசிய ஐக்கிய முன்னணியை அமைத்துள்ளது. தம் கட்சி பரந்துபட்ட மக்களின் அரசியல் சக்திகளை ஒழுங்கமைத்துள்ளது; மக்களின் வலிமையான ஆயுதப்படைகளைக் கட்டியுள்ளது. இவற்றுள் புரட் சிச் சேனை, பரந்துபட்ட மக்களின் ஆயுதப் படை இரண்டும் அடங்கும். எதிரியை முறியடிக்கவும், அதிகாரத்தைக் கைப்பற்றிப் பாதுகாக்கவும், காலனியாதிக்கத்தையும் அதன் அடிவருடிகளையும் தூக்கியெறியவும், ஏகாதிபத்தி யத்தின் ஆக்கிரமிப்புப் போரை முறியடிக்கவும், தமது மக் கள் ஆக்கபூர்வமான அனைத்துப் போராட்ட வடிவங்களை யும் கையாண்டார்கள் தாக்குதல்களையும், எழுச்சிகளையும் இணைத்தார்கள்.
மலைப்பகுதி, சமவெளிப் பகுதி, நகரப் பகுதி ஆகிய மூன்று விதமான யுத்த முக்கியத்துவம் வாய்ந்த கேந்திரங்களிலும் போர்த் தந்திரரீதியான தாக் குதல்களை மேற்கொண்டுள்ளனர்.
பாட்டாளி வர்க்கத்தின் இராணுவ அமைப்பு பற்றிய மார்க்சிய – லெனினிய ஆய்வுரைகள்.
ஆயுதப்படைகளைக் கட்டியமைப்பதில் நம் மக்களுக்
குள்ள மரபும் அனுபவமும்,
புரட்சிகர மக்கள் திரளினரை ஆயுதபாணியாக்கியதிலும், மக்கள் சேனையை உருவாக்கியதிலும் நம் கட்சியும், மக்களும் ஆற்ற வேண்டிய ஆக்கபூர்வப் பணி அறிந்துக் கொள்ள
புரட்சிகர மக்களை வலுவாகவும் விரிவாகவும் ஆயுத பாணியாக்குவதும், நவீன கிரம மக்கள் சேனயைக் கட்டியெழுப்புவதும் பற்றி தெரிந்துக் கொள்ள.
இந்தக் கட்டுரை, நம் நாட்டில், எழுச்சிக்கும் புரட்சிப் போருக்கும் பயன்படக்கூடிய, மக்களின் ஆயுதப் படைக ளைக் கட்டுவது எப்படி என்பதை விளக்குகின்றது.