நமது கல்விமுறை-aa
நமது கல்விமுறை-aa

நமது கல்விமுறை-aa

வகுப்பிலே ஒழுங்கு முறைகளைச் சிறிது மீறிச் சத்தம் போட்டாலோ, குழப்படி செய்தாலோ தண்டிக்கிறார்கள். பிரம்பால் அடிக்கிறார்கள். மேசை மேல் வகுப்பு முடியும் வரை நிற்கச் செய்கிறார்கள். பள்ளி முடிந்த பின்னரும் தண்டனை தருகிறார்கள். சில வகுப்புகளில் குற்றத்திற்குப் பணமாகவும் வாங்குகிறார்கள். பள்ளி தலைமையாசிரியரிடம் தெரிவித்து மாணவர் முன்னிலையில் தண்டனையளிக்கின்றனர். பள்ளியிவிருந்து சில வேளை வெளியேற்றியும் விடுகின்றனர். பள்ளிகளைப் பொறுத்து வெவ்வேறு விதமாகத் தண்டனை வழங்கப்படுகிறது.

இவற்றை எதிர்த்து மாணவர்கள் போராடுவதில்லை எவரும் எதிர்க்காது கீழ்ப்படிகின்றனர் என்பதனை அறிவோமா?.

பள்ளியை விட்டு வெளியேறிய பின்னரும் கட்டுப்பாடாக, இன்றைய சமூக சட்ட விதிமுறைகளுக்கமைய கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். தவறினல் பள்ளியில் கிடைக்கும் தண்டனைகள் வேறு வடிவத்தில் வழங்கப்படும். போலிசாரின் குண்டாந்தடிகள், பூட்ஸ்கால்கள், விலங்குகள், அதன் மேல் நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் தண்டனை களை வழங்கும்.

மேலே கூறியவற்றைச் சுருக்கிக் கூறிவிடலாம். உற்பத்திக்கு வேண்டியவை தொழில் நுட்பம், செயலாற்றும் திறன், உடலுழைப்பு மட்டுமல்ல. இன்று நடைமுறையிலுள்ள சட்ட விதிகள், ஒழுங்கு முறைகளுக்குக் கட்டுப்பட்டும் தொழிலாளர்கள் நடக்க வேண்டும்! இவையும் பள்ளிகள் மூலம் பயிற்றப்படுகின்றன. அதனலேயே பள்ளிகளில் புத்தகப் பாடங்கள் மட்டுமல்ல சமுக உற்பத்தி ஒழுங்காக நடைபெறுவதற்கு வேண்டிய விதி முறைகளும் கற்பிக்கப்படு கின்றன என்று கூறினேன்.

இக் கல்வி முறையையும் இரண்டாகப் பிரித்துப் பார்க்க வேண்டும்.

பெரும்பாலான மக்களே உழைப்பவர்கள். அவர்கள் இன்றுள்ள சட்ட விதி முறைகளுக்கு அடங்கி நடக்க வேண்டியவர்கள் தொழிலாளர், அரசு ஊழியர்கள் இன்று தனியார்துறையையும் கணக்கில் கொள்வோம்.

மற்றொரு சிறுபான்மையினர் இச்சட்டவிதிகளின் காவல்காரர்கள். அடக்கி ஒடுக்குபவரின் ஏஜெண்டுகள். இவர்களும் அதற்கேற்ற ஆரம்பக் கல்வியைக் கற்றுவிட்டே வெளிவருகின்றனர்.

இதில் வேடிக்கை என்னவெனில் அடக்குபவர்களும் அடக்கி ஒடுக்கப்படுபவர்களும் ஒரே பள்ளியிலிருந்தே பயிற்சி பெற்று வெளியேறுகின்றனர்.

பள்ளியில் தலைமையாசிரியர், ஆசிரியர், இன்னும் பிற… என்றெல்லாம் மாணவரின் ஒழுங்கு விதிகள். கட்டுப்பாடுகளைக் கவனிக்க இருக்கிறார்களல்லவா? இவர்களும் அரசுயந்திரத்தின் பொம்மைகளே.

இன்றைய சமுக அமைப்பு இருக்கும் வரை இளம் வயதில் மாணவர்களே அடக்கி ஒடுக்கும் பணி நடைபெற்றுக் கொண்டேயிருக்கும். இவற்றை புரிந்துகொள்ள வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *