பல்வேறு புரட்சி பற்றி
பல்வேறு புரட்சி பற்றி

பல்வேறு புரட்சி பற்றி

நேற்றிலிருந்து ஒரு தோழரிடம் (Pravin Vinu) விவாதித்துக் கொண்டுள்ளேன் அவர் புரிந்துக் கொண்டாரா இல்லையா என்பதனை விட அவருக்கான எனது பதில் சரி தவறு அறிய பயன்படும் ஆகையால் இங்கே பகிர்கிறேன் தோழர்களே விவாதத்தை செலுமை படுத்துபடி கேட்டுக் கொள்கிறேன்.இனி Pravin Vinu அவர்களின் பதிவு:- ///கம்யூனிசம் தத்துவம் உலகத்தின் அனைத்து சுரண்டலுக்கும் முடிவுகட்டுகிறது என்பதில் கம்யூனிசத்தை கொஞ்சமேனும் அறிந்தவர்களுக்கு மாற்றுக்கருத்து இருக்க முடியாது, அதை நானும் ஒப்புக்கொள்கிறேன்,ஆனால் பண்பு வழியில் வேறுபட்ட சுரண்டல் வடிவத்திற்கும் கம்யூனிச புரட்சி தான் தீர்வா?இதுதான் கேள்வி,மாவோ சொல்கிறார்,”பண்பால் வேறுபட்ட முரண்பாடுகளை பண்பால் வேறுபட்ட முறையில் தான் தீர்க்க வேண்டும்””பாட்டாளி வர்க்கத்திற்கும் முதலாளி வர்க்கத்திற்கும் உள்ள முரண்பாடு சோசலிச புரட்சி முறையால் தீர்க்கப்பட வேண்டும்”,”பரந்துபட்ட மக்களுக்கும் நிலவுடமை அமைப்புக்கும் உள்ள முரண்பாடு ஜனநாயக புரட்சி மூலமாக தீர்க்கப்பட வேண்டும்”,”காலனி குடியேற்ற நாடுகளுக்கும் ஏகாதிபத்தியத்திற்கும் உள்ள முரண்பாடு தேசிய புரட்சி யுத்த முறையால் தீர்க்கப்பட வேண்டும்”,கம்யூனிசம் அனைத்து வகையான சுரண்டலுக்கும் முடிவு கட்டுகிறதே பிறகு ஏன் மாவோ முதலாளித்துவ ஜனநாயக புரட்சியையும் தேசியவாத புரட்சியயும் கூட ஆதரித்து தீர்வாக முன்வைக்கிறார்,கறாறாக அனைத்துக்கும் கம்யூனிசம் தான் தீர்வு என ஏன் முன்வைக்கல? அதாவது கம்யூனிசத்தை இலக்காகவும் முதலாளித்துவ ஜனநாயக புரட்சியை நடைமுறை தீர்வாகவும் ஏன் முன்வைக்கிறார்,இந்த வரிசையில்,இந்தியாவின் தற்போதைய முரண்பாடான பார்ப்பனியத்திற்கும் பார்ப்பனரல்லாத வெகுமக்களுக்கும் உள்ள முரண்பாட்டை எந்த வழி முறையில் தீர்க்க வேண்டும்?இதுதான் சாமி எனக்கு தெரியவேண்டிய உண்மை,திராவிடம் என்பதை ஒரு தத்துவமாக கூட ஏற்கவிரும்பாத கம்யூனிஸ்ட்கள் பதில் சொன்னா நல்லா இருக்கும்./////தோழருக்கான பதில்புரட்சியை பற்றி தோழர் கருத்து கம்யூனிசம் என்றால் என்ன சோசலிசம் என்றால் என்ன என்ற புரிதல் அற்ற பதிவு.எல்லாவற்றிக்கும் முடிவு கம்யூனிசம் தான் இடை கட்டம் வேறு வேறு நாட்டின் குறிப்பான நிலை அறிந்து நடத்துவதுதான் புரட்சி அதில்(1). முதலாளித்துவ நாட்டி,ல் சோசலிச புரட்சி(2). நிலஉடைமை சமூகத்தில் புதிய ஜனநாயகப் புரட்சி(3). காலனிய நாட்டில் தேசிய இனப் புரட்சிமூன்றின் இறுதி இலக்கு கம்யூனிசம்தான் என்பதனை புரியாத புதிராக எழுதியுள்ள பதிவு.திராவிடத்தை தூக்கி நிறுத்த போராடும் இவர் கம்யூனிசத்தில் குறைக்காணுகிறார் என்ன செய்ய? மார்க்சியம் மெத்த படித்தவர்களே மார்க்சிய விரோதமாக எழுதும் பொழுது தோழரின் புரிதலில் தவ்று இல்லை. இன்னும் அவர் பார்பன எதிர்ப்பை முக்கியமாக தூக்கி நிறுத்துகிறார் அவருக்கு விள்க்க கீழ்காணும் பதில்…உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இங்கு பார்பன எதிப்பு மற்றும் பல்வேறு எதிர்ப்பு என்பது நேரடியான முரணை ஒடுக்குமுறையை மக்கள் முன் திசைத் திருப்ப செய்யும் வேலையே இவை பல் ஆண்டுகளுக்கு முன் தோழர் ஒருவரின் பதிவு தேவைக்க் கருதி பதிவிடுகிறேன். [1]பிரிட்டிஷ் ஏகாதிபத்திய வாதிகள் இங்கு வாழ்ந்த பல்வேறு தேசியஇன மக்களை அடிமைப்படுத்தினர்.பல தேசங்களை அழித்து ஒரே நாடாக்கினர். [2]ஆமாம் இந்திய அரசு தரகுமுதலாளிகளின் அரசு தான். இதில் என்ன முரண்பாடு! [3]ஐரோப்பாவில் மன்னர் ஆட்சியை நிலப்பிரபுத்துவத்தை அழித்து முதலாளிகள் மொழிவழி தேசங்களை உருவாக்கினர். ஒன்றாக இருந்த ஐரோப்பா…. ஆங்கிலம் பேசியோர் இங்கிலாந்து என ஜெர்மன் பேசியோர் ஜெர்மனி என பிரெஞ்சு பேசியோர் பிரான்ஸ் என 15 தேசங்கள் தோன்றின. [4]ஐரோப்பாவில் தேசிய முதலாளிகள் தேசத்தை உருவாக்கினர். [5]இந்தியாவில் ஐரோப்பிய காலனியவாதிகள் ஆரிய-திராவிட இனவியல் கோட்பாடுகளை உருவாக்கினர். இனங்களை ஆரியஇனம்,திராவிடஇனம் பிரித்துஆரியர் எதிரி இஸ்லாமியர் என்ற முரணை உருவாக்கி ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தை திசை திருப்பினர். ஆரியர் எனும் பார்ப்பனர் தங்களின் எதிரி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அல்ல. கிறித்துவம் அல்ல! இஸ்லாமியர் என்றனர்.சாவர்க்கர் கும்பல் ஏகாதிபத்திய தாசர்களாக இருந்து ஏகாதிபத்திய கொள்ளையை ஆதரித்தனர். இங்கேதிராவிட மொழிக்குடும்பம் அடிப்படையில் திராவிட இனவியல் பேசிய நீதிக்கட்சியும் பெரியாரும் எங்கள் எதிரி பார்ப்பனர், இந்துமதம் என்றனர்.ஏகாதிபத்திய எதிர்ப்பை திசைதிருப்பினர்.திராவிட இனத்தின் எதிரிகள் ஆரிய பார்ப்பனியம், இந்துமதம் என்றனர்.ஏகாதிபத்திய எதிர்ப்பை,ஏகாதிபத்தியம் கொள்ளையை ஒரு காலும் எதிர்க்கவில்லை. இரண்டு கும்பலும் (ஆரிய-திராவிட) ஏகாதிபத்திய கரசேவை செய்து இந்தியா அடிமைப்பட்டதை எதிர்க்கவில்லை. [5]இரண்டு கும்பலும் மொழிவழி தேசங்கள் அடைய போராடவில்லை.ஆரிய-திராவிட இனவியல் பேசினர்.ஆரிய-திராவிட மொழிக்குடும்பக் கோட்பாடுகளை ஆதரித்தனர்.இந்தக் கோட்பாடுகள் பிரிட்டிஷ் காலனிய ஆதிக்கத்திற்கு சேவை செய்தது.[6]காலனிய ஆதிக்கத்தை எதிர்த்து தமிழ்தேசியஇன விடுதலைக்கு போராடவேண்டிய பெரியார் காலனிய ஆதிக்கத்தை ஆதரித்தார். [7]பிரிட்டிஷ் காலனிய ஆதிக்க வாதிகள் தாங்கள் உருவாக்கிய தரகுமுதலாளித்துவ கும்பலிடம் அதிகாரத்தை கைமாற்றினர்!காலனிய ஆதிக்கத்திற்கும், ஏகாதிபத்தியத்திற்கும், தரகுமுதலாளித்துவத்திற்கும் சேவை செய்யும் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கினர். [8]தரகுமுதலாளிகள் எந்த ஒரு தனிப்பட்ட தேசியஇனத்தையும் சேர்ந்தவர் அல்ல.அவர்கள் தமிழராக,மலையாளியாக,குஜராத்தியாக,வங்காளியாக இருந்தாலும் எந்த தேசியஇனத்தின் நலனுக்காகவும் பாடுபடுபவர்கள் அல்ல.அவர்களின் வர்க்க நோக்கம் (அ).ஏகாதிபத்திய-நிலப்பிரபுத்துவ உறவை பாதுகாத்தல். (ஆ)ஏகாதிபத்திய சேவை (இ)இந்திய அளவிலான சந்தை மற்றும் இலங்கை,பங்களாதேஷ்,நேபாளம் சந்தைகளும் தேவை. (ஈ)பல தேசியஇனங்கள் கொண்ட பல தேசங்களை ஒரே இந்தியா என்ற நாடாக,உடையாமல் பாதுகாத்தல். (உ)ஏகாதிபத்திய சேவைக்கு ஆங்கில மொழி. இந்திய சந்தைக்கு இந்தி மொழி (ஊ)இந்தியாவில் இனங்களுக்கிடையே ஒடுக்கும் இனம் ஒடுங்கும் இனம் என்றில்லை (எ)ஒடுக்கும் தரகுமுதலாளித்துவ, ஏகாதிபத்திய நலன் காக்கும் அரசே இனங்களை ஒடுக்கும் அரசாக,அரசியலமைப்புச் சட்டமாக உள்ளது.ஆகவே ஒடுக்குபவன் யார் ஒடுக்கப் படுபவன் யார் என்பதனை தெளிவாக உள்வாங்கி பேசினால் நன்றாக இருக்கும் மார்க்சியத்தை கொச்சை படுத்துவதை விடுத்து மக்களை இந்த சுரண்டும் கும்பலிடமிருந்து காக்கும் வழி காணுங்கள் அவை இந்த அமைப்பு முறையில் இல்லை என்பதே மார்க்சியம் இந்த அமைப்புக்குள் தேடுவதே பெரியாரியம்.தோழர் பிரவீன் பதில் அளித்த பின் தொடருவேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *