Dr. S. Ramadoss
FeSbrgtSigupsafoiry c13mns, 2nnsor018emcrdSna · கதை கேளு… கதை கேளு கழகத்தின் கதை கேளு!72. ஊழல் நாயகர் ஓ.பி.எஸ்பணிவுக்கு உதாரணம் கேட்டால் பன்னீர்செல்வம் என்று குழந்தைகள் கூட சொல்லி விடும். அந்த அளவுக்கு பணிவில் சிறந்தவராக தமிழக மக்கள் மத்தியில் அறியப்பட்டிருந்தார் தமிழகத்தின் துணை முதலமைச்சராக பணியாற்றி வரும் ஓ.பன்னீர்செல்வம்.ஆனால், பணிவு என்பது ஊழலை மறைக்க பன்னீர்செல்வம் போர்த்தியிருக்கும் போர்வை என்பது பலருக்கும் தெரியாத விஷயமாகும். ஒரு காலத்தில் நண்பருடன் இணைந்து நடத்தி வந்த தேநீர்க் கடை தான் பன்னீர்செல்வத்தின் வாழ்வாதாரமாக இருந்தது. இப்போது தமிழகத்தின் கால்வாசியையும், கேரளத்தின் அரைவாசியையும் வளைத்துப் போட்டிருக்கும் பன்னீர்செல்வம் வெளிநாடுகளிலும் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களை குவித்து வைத்திருக்கிறார் என்பது அதிர்ச்சியாகத் தான் இருக்கும். அந்த அதிர்ச்சியை மறைப்பதற்காகத் தான் பணிவு என்ற போர்வையை போர்த்தியிருக்கிறார் பன்னீர்செல்வம்.மாட்டுப்பண்ணைபன்னீர்செல்வத்தின் முன்னோர்கள் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அங்கு விவசாயம் செய்ய வழியில்லாமல் பிழைப்புத் தேடி பெரியகுளத்தில் தஞ்சம் புகுந்தார்கள். பன்னீர்செல்வத்தின் தந்தை ஓட்டக்காரத் தேவர் அவரது காலத்தில் வட்டிக்கு பணம் கொடுத்து வருவாய் ஈட்டினார். பன்னீர் குடும்பத்திடம் பெரிய அளவில் பணம் இருந்தது என்றாலும், குடும்பம் மிகவும் பெரியது என்பதால் வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருந்தது. இதனால் 1980-ஆம் ஆண்டுகளில் வட்டிக்கு பணம் தருவது ஒருபுறமிருக்க அடுத்த தலைமுறையினர் வேறு தொழில்களைத் தொடங்க முடிவு செய்தனர். அதன்படி, பன்னீர்செல்வம் பட்டப்படிப்பு முடித்தவுடன் மாடுகளை வாங்கி பால் பண்ணை நடத்தினார். பண்ணையில் விற்பனை செய்யப்பட்டது மீதமுள்ள பாலைப் பயனுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்வதற்காக பன்னீர்செல்வமும், அவரது பள்ளித் தோழர் விஜயனும் இணைந்து பெரியகுளத்தில் பி.வி கேண்டீன் (இதில் பி என்பது பன்னீர்செல்வத்தையும், வி என்பது விஜயனையும் குறிக்கும்) என்ற பெயரில் தேனீர் கடை அமைத்தனர். இதற்குக் கூட பன்னீர் செல்வத்திடம் பணம் இல்லை. எனவே, தேனீர்க்கடைக்கான மொத்த முதலீடும் (ரூ.20,000) சிட்டி யூனியன் வங்கியின் பெரியகுளம் கிளையில் கடனாகப் பெறப்பட்டது. பன்னீர்செல்வத்தின் தம்பி பாலமுருகன் பெயரில் கடன் வாங்கப்பட்டது. பன்னீர்செல்வம் பிணைதாரராக இருந்தார். அதன்பின் தேனீர்கடை நன்றாக ஓடினாலும் அதற்காக வாங்கப்பட்ட கடனை அடைக்கவில்லை என்பதால் அதற்காக வழக்குத் தொடரப்பட்டது. பன்னீர் ஆன பேச்சிமுத்துஇந்த இடத்தில் ஓர் உண்மையை சொல்ல வேண்டும். கடனை திரும்பச் செலுத்தாததற்காக வங்கி நோட்டீஸ் அனுப்பும்வரை பன்னீர்செல்வத்தின் பெயர் பேச்சி முத்து ஆகும். அந்த பெயரில் கடன் வாங்கி திரும்பிச் செலுத்தாததால் எதிர்காலத்தில் ஏதேனும் சிக்கலாகக் கூடும் என்பதால் தமது பெயரை பன்னீர்செல்வம் என்று மாற்றிக் கொண்டார். அதன்பிறகும் நீண்டநாட்களாக கட்டப்படாமல் இருந்த கடன் பன்னீர்செல்வம் முதலமைச்சரான பிறகு 2003&ஆண்டில் தான் அடைக்கப்பட்டது. தேனீர் கடை மூலம் கிடைத்த வருமானம் போதுமானதாக இல்லை என்பதால் நிலத்தரகராகவும் பன்னீர்செல்வம் பணியாற்றி வந்தார். அண்மையில் ஆண்டாள் சர்ச்சையில் சிக்கிய வைரமுத்துவுக்கு பெரியகுளம் அருகில் புள்ளக்காப்பட்டி என்ற இடத்தில் 12 ஏக்கர் தென்னந்தோப்பை வாங்கிக் கொடுத்தது பன்னீர்செல்வம் தான். இதற்காக வைரமுத்துவிடம் அவர் ஒரு சிறு தொகையை கமிஷனாக பெற்றார். தரகராக பணியாற்றிய காலத்தில் அவருக்கு அதிகபட்சமாக ரூ.2000 கமிஷனாகக் கிடைத்தால் பெரிய விஷயம் என்கிறார்கள் பெரியகுளத்தில் அவருடன் ஒன்றாக வளர்ந்த நண்பர்கள்.இவற்றையெல்லாம் பன்னீர்செல்வத்தின் வரலாற்றை எழுதுவதற்காக நான் இங்கு பதிவு செய்யவில்லை. இந்த அளவுக்கு பொருளாதார நிலையின் அடிமட்டத்தில் இருந்த பன்னீர்செல்வம் இப்போது உலக்லக் கோடீஸ்வரர்களில் ஒருவராக உருவெடுத்தது எப்படி என்பதை விளக்குவதற்காகத் தான் இந்த அறிமுகம்.பன்னீர்செல்வத்திற்கு பதவிஅரசியலில் பன்னீர்செல்வத்துக்கு பெரிய அளவில் செல்வாக்கு எதுவும் இல்லை. இப்போது திமுகவில் இருக்கும் கம்பம் செல்வேந்திரன் தான் பன்னீர்செல்வத்தின் அரசியல் குரு. எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு அதிமுக இரு அணிகளாக பிரிந்த போது ஜானகி அணியில் பன்னீர் ஐக்கியமானார். அந்தத் தேர்தலில் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி ஆண்டிப்பட்டியிலும், ஜெயலலிதா போடி நாயக்கனூரிலும் போட்டியிட்டனர். போடியில் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்ட நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா பன்னீர்செர்ல்வம் வீட்டில் தான் தங்கி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாகவும், ஜெயலலிதாவுக்கு எதிராகவும் தீவிரமாக பிரச்சாரம் செய்தவர் பன்னீர்செல்வம்.அதிமுகவின் இரு அணிகளும் இணைந்த பின்னர் அங்குள்ள மூத்த தலைவர்களின் தயவால் ஒருங்கிணைந்த அதிமுகவின் பெரியகுளம் நகர செயலாளர் பதவியை தக்கவைத்துக் கொண்டார். 1996&ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்த நிலையில், அடுத்த சில மாதங்களில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பெரியகுளம் நகராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பன்னீர்செல்வம் யாரும் எதிர்பாராத வகையில் வெற்றி பெற்று விட்டார். இதுதான் அவர் வகித்த முதல் அரசு பதவியாகும்.அதன்பின்னர் 1999&ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்ட தினகரன் பெரியகுளத்தில் பன்னீர்செல்வத்தின் சகோதரர் ராஜாவின் வீட்டில் தான் தங்கினார். அப்போது தினகரனுக்காக தேர்தல் பணியாற்றிவர்களில் மிகவும் முக்கியமானவர் பன்னீர்செல்வம். அப்போது பன்னீரின் பணிவு தினகரனுக்கு பிடித்துப் போய்விட்டதால் பன்னீர் காட்டில் மழை பெய்யத் தொடங்கி விட்டது. 2001&ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்ற தனது விருப்பத்தை தினகரனிடம் பன்னீர் தெரிவித்தார். அதுமட்டும் தான் அவர் செய்த வேலை. தனது போயஸ் தோட்ட செல்வாக்கைப் பயன்படுத்தி அவருக்கு சீட் வாங்கிக் கொடுத்ததில் தொடங்கி, வெற்றி பெற வைத்து வருவாய்த்துறை அமைச்சர் பதவி வாங்கிக் கொடுத்தது வரை அனைத்தையும் தினகரனே பார்த்துக் கொண்டார். இதற்காக பன்னீர் செய்தது தினகரனின் காலில் விழுந்து கிடந்தது மட்டும் தான்.பன்னீர் முதலமைச்சர்2001-ஆம் ஆண்டு மே மாதம் தான் பன்னீர் அமைச்சர் ஆனார். ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் தமிழ்நாட்டில் அமைச்சர் ஒருவர் இருக்கிறார் என்பதை என்பதை மக்கள் உணர்ந்து கொள்ளும் முன்பாகவே அதே ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் ஜெயலலிதாவின் முதலமைச்சர் பதவியை உச்சநீதிமன்றம் பறித்தது. அடுத்த முதலமைச்சர் காளிமுத்து தான் என்று சிலரும், பொன்னையன் தான் என்று பலரும் விவாதம் நடத்திக் கொண்டிருந்த நிலையில் அடுத்த முதலமைச்சர் பன்னீர்செல்வம் தான் என்று ஜெயலலிதா அறிவித்தார். அரசியல் அதிசயம் என்றால் பன்னீர்செல்வம் முதலமைச்சர் ஆனது தான். பன்னீர்செல்வம் முதலமைச்சர் ஆக்கப்பட்டதற்கு அவர் அரசியலைக் கரைத்துக் குடித்தவர் என்பதோ, நிர்வாகத்தில் சிறந்தவர் என்பதோ காரணம் அல்ல. அவர் ஒரு நல்ல அடிமை… விசுவாசி என்பது தான். ஜெயலலிதா இல்லாத ஆட்சியில் 6 மாதங்கள் மட்டும் முதலமைச்சராக இருந்த பன்னீர்செல்வம் அந்த பதவியை பயன்படுத்தி குவித்தவை பல கோடிகள். இவை இவராக வாங்கிய லஞ்சமோ, கையூட்டோ இல்லை. ஜெயலலிதா அறிவுறுத்தலின் பெயரில் அவருக்கு வாங்கிக் கொடுத்து, அதற்காக பெற்றுக் கொண்ட கமிஷன் மட்டும் தான். ஏற்கனவே நிலத்தரகராக பணியாற்றி கமிஷன் வாங்கிய அனுபவம் கை கொடுத்ததால் பன்னீர்செல்வம் கைககளில் பணம் விளையாடத் தொடங்கியது.2003&ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அப்போது பன்னீருக்கு என்ன பதவி கிடைக்கும்? என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருந்தது. ஏற்கனவே முதலமைச்சர் பதவியை வகித்தவர் என்பதாலும், எள் என்றால் எண்ணெயாக இருப்பவர் என்பதாலும் அவருக்கு அமைச்சரவையில் இரண்டாவது இடம் அளித்தார் ஜெயலலிதா. அதன்பிறகு அதிமுகவில் பன்னீருக்கு வளர்பிறை தான். அதிமுகவின் அதிகார வரிசையில் இரண்டாவது இடத்தை அவர் கைப்பற்றிக் கொண்டார்.2001 & 06 காலத்தில் அவர் ஊழல் செய்து ஈட்டிய சொத்துக்களின் மதிப்பு பல ஆயிரம் கோடிகள் ஆகும். 2006-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பன்னீர்செல்வத்தின் வீடுகள், அலுவலகங்களில் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டன. வருவாய்க்கு மீறிய வகையில் 374 விழுக்காடு சொத்துக்குவித்ததாக வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கை மிகவும் திறமையாக இழுத்தடித்த பன்னீர்செல்வம் 2011&ஆம் ஆண்டு மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் அவ்வழக்கில் இருந்து விடுதலை ஆனார்.2011&ஆம் ஆண்டு அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது பன்னீர்செல்வத்தைக் கட்டுப்படுத்த அதிமுகவில் யாருமே இல்லை. அதிமுகவின் மூத்த தலைவர்களான பொன்னையன் போன்றவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இன்னொரு மூத்த தலைவரான செங்கோட்டையனுக்கு ஜெயலலிதா அமைச்சர் பதவி கொடுத்தார். ஆனால், அடுத்த 6 மாதங்களில் செங்கோட்டையன் அமைச்சரவையிலிருந்து பன்னீர் தரப்பினரின் சதியால் நீக்கப்பட்டார். மற்றொரு மூத்த தலைவரான டி.ஜெயக்குமாருக்கு அமைச்சர் பதவி மறுக்கப்பட்டு சபாநாயகராக்கப்பட்டார். அதேபோல், பொள்ளாச்சி ஜெயராமனுக்கும் பதவி மறுக்கப்பட்டு கொறடா ஆக்கப்பட்டார். இடைப்பட்டக் காலத்தில் பன்னீருக்கு அனைத்து வகையிலும் காட்பாதராக இருந்த தினகரன் ஜெயலலிதாவின் கோபப் பார்வைக்கு ஆளாகி ஒதுக்கி வைக்கப்பட்டார். 2011&ஆம் ஆண்டில் அவர் கட்சியிலிருந்தே நீக்கப்பட்டார். இதனால் பன்னீரின் செல்வாக்கு அதிகரித்தது. நிதித்துறை மட்டுமின்றி குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பொதுப்பணித் துறை உள்ளிட்ட துறைகளும் பன்னீரிடம் ஒப்படைக்கப்பட்டன. இதனால் மணல் கொள்ளை, தாது மணல் கொள்ளை, அனைத்துத் துறை அமைச்சகங்களின் ஒப்பந்தங்கள் என அனைத்தையும் முடிவு செய்பவராக மாறிய பன்னீர்செல்வம் நாளொரு ஊழலும், பொழுதொரு லஞ்சமுமாக வளர்ந்தார்.வேலூர் சேகர் ரெட்டி, பள்ளத்தூர் படிக்காசு, ஆறுமுகசாமி, திண்டுக்கல் ரத்தினம் என தமிழ்நாடு முழுவதும் மணல் கொள்ளையர்கள் தான் இவரது நண்பர்கள். அவர்கள் தாராளமான மணல் கொள்ளை அடிக்க பன்னீர்செல்வம் அனுமதித்ததால் அவர்கள் அவ்வப்போது பன்னீரை சந்தித்து பணத்தால் அபிஷேகம் செய்தனர். மணல் கொள்ளையால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.35,000 கோடி இழப்பு ஏற்படுகிறது என்பதிலிருந்தே பன்னீர்செல்வமும் அவரது கூட்டாளிகளும் எவ்வளவு கொள்ளை அடித்திருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.2011-ஆம் ஆண்டு திசம்பர் மாதம் அதிமுகவிலிருந்து சசிகலா குடும்பம் நீக்கப்பட்டது. சசிகலாவிடனான உறவை ஜெயலலிதா துண்டித்துக் கொண்டார். ஆனால், அடுத்த 4 மாதங்களில் சசிகலாவை மட்டும் திரும்ப சேர்த்துக் கொண்டாலும் கூட, அரசியல் மற்றும் ஆட்சி நிர்வாகத்திலிருந்து ஜெயலலிதா விளக்கியே வைத்திருந்தார். இதை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்ட பன்னீரும், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பாப்பிரெட்டிப்பட்டி பழனியப்பன் ஆகிய ஐவர் குழு தமிழகத்தை சுரண்டிக் கொழுத்துக் கொண்டிருந்தது.இதையெல்லாம் சசிகலாவும், அவரது குடும்பத்தினரும் பார்த்துக் கொண்டிருந்தனர். தங்களுக்கு வர வேண்டிய வருமானம் அனைத்தும் அமைச்சர்களுக்கு செல்கிறதே என்ற ஆத்திரம் வந்தாலும், அந்த நேரத்தில் தம்மால் எதையும் செய்ய முடியாது என்பதை உணர்ந்து மவுனமாக இருந்தார். ஆனால், பன்னீர்செல்வம் குழுவின் சொத்துக்குவிப்பை சசிகலா ஆதாரங்களுடன் திரட்டி வைத்திருந்தார். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்று திரும்பியதும் சசிகலா மீது ஜெயலலிதாவுக்கு நம்பிக்கை பிறந்திருந்தது. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வரையும் விடுதலை செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் ஆணையிட்டதால் சசிகலா மீதான ஜெயலலிதாவின் கோபமும் குறைந்தது.இந்த வாய்ப்புக்காக காத்திருந்த சசிகலா பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்களின் சொத்துக்குவிப்பை ஆதாரங்களுடன் ஜெயலலிதாவிடம் கொடுத்தார். அதன்பிறகு தான் அதிரடி ஆரம்பித்தது. ஐவர் குழு என்றழைக்கப்படும் 5 அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களில் ஜெயலலிதாவின் தனிப்படை சோதனை நடத்தி பல்லாயிரம் கோடி பணம், சொத்துக்களை கைப்பற்றியது. 5 அமைச்சர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் எடப்பாடி, வைத்திலிங்கம் ஆகிய 2 அமைச்சர்கள் உடனடியாக உண்மையை ஒப்புக்கொண்டு பணத்தை ஒப்படைத்துவிட்டதால் அவர்கள் மன்னிக்கப்பட்டனர். பன்னீர்செல்வம் உள்ளிட்ட மற்ற அமைச்சர்கள் தொடர்ந்து விசாரணை வளையத்தில் வைக்கப்பட்டிருந்தனர்.இது தொடர்பாக 21.03.2016 அன்று நான் வெளியிட்ட அறிக்கையில், ‘‘நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தி சேர்த்த சொத்துக்கள் பற்றி அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது மட்டுமின்றி, அவரது மகனும் சட்டவிரோத காவலில் வைத்து 3 நாட்கள் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.அனைத்து உண்மைகளையும் ஒப்புக்கொண்டதுடன், தம்மிடம் உள்ள பணம் மற்றும் சொத்துக்களை ஒப்படைத்ததையடுத்து விடுவிக்கப்பட்டதாக தெரிகிறது. ஐந்து அமைச்சர்களிடமிருந்து பறிக்கப்பட்ட பணம் மற்றும் சொத்துக்களின் மதிப்பு ரூ.30,000 கோடி என்றும், அப்பணம் மேலிடத்தின் கணக்கில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலிடத்திற்கு தெரியாமல் 5 அமைச்சர்கள் பதுக்கி வைத்த பணத்தின் மதிப்பு மட்டுமே இவ்வளவு என்றால், 5 ஆண்டுகளில் நடந்த மொத்த ஊழலின் மதிப்பை கணக்கிடும் போதே தலை சுற்றுகிறது’’ என்று குற்றஞ்சாற்றியிருந்தேன்.பன்னீரின் உண்மை முகத்தை அறிந்திருந்த ஜெயலலிதா அவரது அரசியல் வாழ்வுக்கு முடிவுரை எழுதவே விரும்பினார். ஆனால், அவ்வாறு செய்தால் அவர் சார்ந்த சமுதாய வாக்குகளைப் பெற முடியாமல் போய்விடும் என்று சசிகலா எச்சரித்தார். அதனால் தான் பன்னீருக்கு மீண்டும் சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவிகள் கிடைத்தன. ஜெயலலிதா மறைந்தவுடன் தாமே முதலமைச்சராக பதவியேற்றால் அதிருப்தி வெடிக்கும் என்பதால் தான் பன்னீர் மீண்டும் முதலமைச்சராக்கப்பட்டார்.ஜெயலலிதா மட்டும் இன்னும் சில மாதங்கள் உயிருடன் இருந்திருந்தால் பன்னீர்செல்வம் இந்நேரம் முகவரி இல்லாதவராக மாறியிருந்திருப்பார். ஆனால், ஜெயலலிதாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு இறுதி வரை அவர் நலம் பெறாமல் இறந்ததால் இப்போது அவரது சமாதியில் தர்மயுத்தம் நடத்துகிறார் பன்னீர்செல்வம். இது தான் காலத்தில் கோலம்!அடுத்து ….. எடப்பாடி எனும் ஏகபோக ஊழல்வாதி! ******************