பகுத்தறிவும் போலி பகுத்தறிவும்-1
+++++++++++++++++++++++++++
பகுத்தறிவின் அடிப்படையில் மத சடங்குகளும் புராணங்களும் மறுக்கப்படும் அதேவேளையில் அவ்விடத்தில் புதிய கருத்துக்கள் நிலை நாட்டப்படுகின்றன.
இதற்கான காரணம் கருத்துக்களும் நம்பிக்கைகளும் ஒவ்வொரு சமுதாயத்துக்கும் பிரபலமானவை அவற்றை மாற்றுவது எளிதான காரியமில்லை. அடிப்படையான சமுதாய மாற்றம் ஏற்படும் போது தான் அவற்றினை மாற்றியமைக்கக் கூடிய சூழ்நிலை உருவாகிறது. அங்கும் கூட அரசியல் பொருளாதார நிறுவனங்கள் மாற்றப்படும் வேகத்தை விட குறைந்த வேகத்திலேயே இவை மாற்றமறைகின்றன.
பகுத்தறிவும் போலி பகுத்தறிவும்-2
+++++++++++++++++++++++++++
மதம் பற்றி மார்க்ஸ் கூறும் போது “மக்களின் அபினி ” என்று மட்டும் கூறவில்லை “ஒடுக்கப்பட்ட மக்களின் பெருமூச்சு இதயமற்ற உலகின் இதயம்” “ஆத்மா அற்ற நிலையின் ஆத்மா” என்றும் கூறிய பின்னரே “மதம் மக்களின் அபின்” என்று சொன்னார்.
அபினி வெறும் மயக்கம் மட்டும் தருவதல்ல ஒரு பொய்மையான தற்காலிக சந்தோஷத்தையும் தருவதாகும் .இதை ஒழித்து எதார்த்தமான நிரந்தர மகிழ்வு ஏற்படுத்துவதற்கு பொய்மையின் தேவையை விடுவிப்பதற்கேற்ற சூழலை, கடப்பாடுகளை மன நிலைமைகளை நாம் ஏற்படுத்த வேண்டும்.
“யதார்த்தவாதம் சமுதாய முரண்பாடுகளும் அவற்றுக்குக் காரணமான பௌதீக நிலைமைகளுமே வாழ்க்கையின் தன்மைக்குக் காரணம் எனக் கண்டு “துன்பமே இயற்கை ” என்னும் சொல்லை மாற்ற முயலும் உள்ளங்களின் நம்பிக்கைக் குரல்” என்று பெரும்பாலான மக்கள் மதம் என்ற பொய்யான மயக்கத்தில் மயங்கி விடுகின்றனர்.
மீண்டும் நாம் மார்க்சின் கூற்றுப்படி வருவோம் மதம் என்ற அபினி மூலம் மக்களை பிரித்தும் மோதவிட்டும் தற்காலிக திருப்தி பெறுவதிலேயே இன்றும் மதவாதிகளும் ஓட்டு அரசியல்வாதிகளும் குறியாக உள்ளனர். மக்களுக்கு இதை உணர்த்தி நிரந்தர மகிழ்ச்சியுடன் சேர்ந்து நல்வாழ்வு கிடைப்கேற்ற சூழலை கடப்பாடுகளை மன நிலைகளை ஏற்படுத்தி பொய்மைகளிலிருந்து அவர்களை விடுவிக்கும். முயற்சிகளில் மக்களை நாம் ஈடுபடுத்த முயல வேண்டும்.
இவைதான் மார்க்சிய பார்வை இதனை பற்றி மேலும் எழுதுவேன் பின்னர்.
ஆனால்
இங்கு பேசப் படும் நாத்திகம் என்பது சமூக வளர்ச்சி போக்கை புரிந்துக் கொள்ளாமல் செக்கு மாட்டுதனமான இயக்க மறுப்பியல் கண்ணோட்டத்தை கொண்டது என்பது சரியே.
கடவுள், மதம் ஆகியவற்றை திட்டமிட்டு மனிதர்கள் உருவாக்கினார்கள் என்ற இவர்களின் கருத்து அபத்தம் .
அதாவது மனிதன் உற்பத்தி நடைமுறையில் ஈடுபடும்போது இயற்கை விதிகளை புரிந்து கொள்ளாதபோது உண்டானது கடவுள் நம்பிக்கை. அந்த மூட நம்பிக்கையை பலப்படுத்தி மனிதனை தனக்கு அடிமையாக்க சுரண்டும் வர்க்கமான ஆளும் வர்க்கம் மதத்தை சுரண்டும் கருவி ஆக்கிகொண்டுள்ளது என்பதே உண்மை.
இந்தியாவில் பார்ப்பனர்கள் அதற்கு உறுதுணையாக இருந்தார்கள் என்பதும் உண்மை. ஆனால் கடவுள் நம்பிக்கையை அவர்கள்தான் உருவாக்கினார்கள் இல்லையென்றால் மக்களுக்கு கடவுள் நம்பிக்கையே வந்திருக்காது என்பது அபத்தம், ஏற்கத்தக்கதல்ல.
மனிதனின் கடைசி புகலிடம் மதம் என்று மார்க்ஸ் கூறுவதன் அர்த்தம் என்ன? மனிதன் தான் நினைத்தது நடக்காத போது வேறுவழியின்றி கடவுளை நாடிச் செல்கிறான் என்பதே இதன் அர்த்தம். அப்படி தேவைகள் பூர்த்தியாகி அவன் நினைத்தபடி நடக்கும் போதும் அவன் கடவுளை நாட வேண்டிய அவசியம் இல்லை என்றுதானே இதற்கு அர்த்தம்.
மனிதனின் தேவை நிறைவு பெற்று அவன் நினைத்தபடி வாழ்க்கை அமையும்போது அவன் கடவுளை நாடவேண்டிய அவசியம் இருக்காது. இயற்கை விதிகளை புரிந்து கொள்ளும் பொழுது மூடநம்பிக்கையும் ஒழிந்து போகும்.
ஆகவே மூடநம்பிக்கை, கடவுள், மதம் ஆகியவை ஒழிந்து போக பார்ப்பானை ஒழித்துவிட்டால் ஒழிந்து போகாது. ஆக சமூக விதிகளை புரிந்துக் கொள்வதன் அவசியம் உள்ளது.
கடவுள் மத நம்பிக்கைகளை ஒழிக்க வேண்டுமானால் மனிதனாலேயே உருவாக்கப்பட்ட அந்த நம்பிக்கைகளை ஒழிப்பது சாத்தியமா? இன்றைய மத நம்பிக்கை மனிதனுக்கு அன்னியமாக நின்று மனிதன் மீது ஆதிக்கம் செலுத்துகிறது அதாற்க்கு ஆளும் வர்க்கம் துணைப்போகிறது அப்படியெனில் வெறும் கருத்தால் மதம் கடவுள் நம்பிக்கைகளை ஒழித்து விட முடியுமா?
முதலாளித்துவ உற்பத்தி முறை ஒழிக்கப்பட வேண்டும் உற்பத்தி சாதனங்களில் தனியுடைமை ஒழித்து எல்லா உற்பத்தி சாதனங்களையும் சமுதாயமே தன் உடைமையாக்கிக் அவற்றை திட்டமிட்ட அடிப்படையில் உபயோகிப்பதன் மூலம் சமுதாயம் தன்னை தானே விடுவித்துக் கொள்ளும் போது அதாவது சமுதாயத்தோடு விடுதலை பெற முடியும். அப்போதுதான் மனிதன் வெறுமனே நினைப்பதோடு மட்டுமல்லாமல் நினைப்பதை அவனே முடிப்பதாக முடியும். அந்த காலத்தில்தான் மதத்தில் இன்னும் பிரதிபலித்துக் கொண்டிருக்கின்ற அந்நிய மயமான அந்த கடைசி சாத்தியம் அறிந்துகொள்வதுடன் மதத்தின் பிரதிபிம்பம் தானே மறைந்துவிடும் ஏனெனில் அதற்கு பிரதிபலிப்பு எதுவும் இருக்காது. “ஆனால் இதை சாதிப்பதற்கு அதாவது சமுதாய சக்திகள் சமுதாயத்தின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தது வெறும் அறிவு மட்டும் போதாது அதற்கு எல்லாவற்றையும் விட மிகவும் அவசியமான சமுதாய செயல்முறை தான்” என்று ஏங்கெல்ஸ் சுட்டிக்காட்டுகிறார்.அதாவது உற்பத்தி சாதனங்களில் தனியுடைமை ஒழித்து சமுதாய உடைமையாக்கிக் திட்டமிட்ட உற்பத்தியின் கீழ் விடுதலை பெற்ற சமுதாயம் திட்டமிட்ட பொருள் உற்பத்தியில் விடுதலைப் பெற்ற சமுதாயத்தையும் சமுதாயத்தின் அங்கத்தவர்களையும் வழிநடத்துவதற்கு வெறும் அறிவு மட்டும் போதாது மாறாக தனியுடைமை சக்திகளுக்கு எதிரான போராட்டம் வர்க்கப் போராட்டம் என்ற சமுதாய செயல்முறை அவசியமாகும். முதலாளித்துவத்தை வர்க்கத்தை எதிர்த்து அதை தூக்கி எறிந்து முற்றாக ஒழித்துக் கட்டும் பாட்டாளி வர்க்கத்தின் போராட்டத்தின் கீழ் மட்டுமே அதை சாதிக்க முடியும் இதுதான் அந்த சமுதாய செயல்முறையாகும்.
ஆனால்
இங்கே பகுத்தறிவு பேசும் சீர்திருத்தம் மட்டுமே உண்மையில் வர்க்கப் போராட்டத்தை புறக்கணித்து விடுகிறாது.
இங்குள்ள பகுத்தறிவுவாதிகள் மனிதனின் உயிரியல் பண்பையும் சமூகவியல் பண்பையும் அறியாதவர்களாக உள்ளனர்.
மனிதன் பிறப்பில் இருந்து வேறுபடும் ஒரு உயிர் பிராணி அவன் பிற பொருள்களில் இருந்து வேறுபடும் ஒரு இயக்கம் வடிவத்தை உயிரியக்க வடிவத்தை கொண்டிருக்கிறான் உயிரில் இயக்கம் என்பது வளர்சிதை மாற்றம் கொண்டது இனப்பெருக்க சக்தி கொண்டது உறுத்துணர்ச்சியும்(Irritability) உலகின் மீது விளைவும் எதிர்வினையும் கொண்டது. இப்பண்புகள் எவையும் இயந்திர இயக்கத்தில் இல்லை, எனவே பகுத்தறிவுவாதம் இயந்திர இயக்கத்தினோடு உயிருள்ள மனிதனை சமன்படுத்திய பண்பானது இயக்கியலை புரிந்துக் கொள்ளாத போக்காகவே உள்ளது (இவர்களின் நிலைப்பாடே).
“ஒவ்வொரு பொருளும் அவற்றின் உள் முரண்பாடுகளின் சுயமாக இயங்கிக் கொண்டும் மாறிக்கொண்டு உயிரியல் பண்பை பெற்றிருப்பதைக் காணமுடிகிறது.
மனிதன் உழைப்பு உற்பத்தி செய்யும் முறை உணர்வுபூர்வமான பாத்திரம் ஆற்றுவது ஆகியவற்றால் மற்ற உயிரினங்களை விட வளர்ந்தும் வேறுபட்டும் ஒரு சமூக வாழ்க்கை பெற்றிருப்பது” காண மறுக்கிற இந்த இயக்க மறுப்பியல் சிந்தனை போக்கே போலி பகுத்தறிவாதம் மதத்தை பார்ப்பனர்கள் படைத்தாகக் கருதிக் கொண்டு, அதன் தோற்திற்கான பொருளாதாரப் போக்கை முறியடிப்பதற்கு முயலாமல், தோன்றிய சாதி மதத்தைக் காப்பாற்றும் பார்ப்பனர்களை முதன்மைப்படுத்தி அவர்களை ஒழிக்க வேண்டும் என்று கூறுகிறார்.
இதன் மூலம் பணம் படைத்தவர்களின் சுரண்டலை நீடிக்கச் செய்கிறார், அதாவது காப்பாற்றுகிறார்கள்.
இன்றைய வர்க்க முரணுக்குக் காரணமான தனிச்சொத்துடைமையை ஒழிக்க முயற்சிக்காமல், அந்தத் தனிவுடைமையைக் காப்பாற்றுகிற சிந்தனையை முதலில் ஒழிக்கப் இந்த போலி பகுத்தறிவாளர்கள் முயற்சிக்கிறார்.
இன்றும் மக்களின் வறுமைக்கும் பசி பட்டினிக்கும் காரணமான ஆளும் வர்க்கத்தை கேள்வி கேட்க்காமல் பார்பனர்களை குறைக்கூறி வாழ்ந்து வருகின்றனர். இவை சமூக வளர்ச்சிப் போக்கை கணக்கில் கொள்ளாமையே என்பேன்.