இதில் அம்பேத்கார் பேசிய தீர்வு நடைமுறையில் ஏன் பயன்படவில்லை என்ற கேள்வியோடு இரண்டு பதிவுகளை ஒன்றிணைது பதிவிடுகிறேன்.புரிந்தவர்கள் விள்ங்கிக் கொள்வதற்க்காக மட்டுமே…“இந்து சமூக அமைப்பு உழைப்புப் பிரிவினையை அடிப்படையாகக் கொண்டது. இதன்படி, இந்த அமைப்பு இந்துக்களுக்கு அழுக்குப்படியாத, சுத்தமான சமுதாய மதிப்புடைய பணிகளை வழங்குகிறது; அதே சமயம் தீண்டப்படாதவர்களுக்கோ அது அருவருப்பான, இழிவான வேலைகளை ஒதுக்குகிறது; இதன் மூலம் இந்துக்களின் மீது கண்ணியத்தைப் பொழிந்து அவர்களைக் கௌரவிக்கிறது; அதேபோழ்து தீண்டப்படாதவர்களின் மீது இழிவைச் சுமத்தி அவர்களை அவமதிக்கிறது” (தொகுதி 10, பக்.204)இதன் பொருள் என்ன? இந்துக்களுக்கும், தீண்டப்படாதோருக்கும் உழைப்புப் பிரிவினையின் காரணமாகவே வேறுபாடு நிலவுகிறது. உண்மையில், இந்த வாதம் தீண்டப்படாதோருக்கு மட்டுமல்ல, எல்லாச் சாதிகளுக்கும் பொருந்தும். **** பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாகப் பேசுவதற்கு முன்னர், அதன் பொருளை அம்பேத்கர் தெளிவுபடுத்தினார்:“ஒடுக்கப்பட்ட மக்கள் வர்க்கத்திற்கு நல்வாய்ப்புகளை நல்கி சமூக, அரசியல், பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை அகற்றுதல்” (தொகுதி 2, பக்.205).சமூக ஏற்றத்தாழ்வு என்றால் சாதிய வேறுபாடுகள்: மேல் மற்றும் கீழ் சாதிகள்.பொருளாதார ஏற்றத்தாழ்வு ஏழை மற்றும் பணக்காரர் பேதங்களைக் குறிக்கிறது.பணக்காரர்கள் அரசு நிர்வாகத்தை உடனடியாக அணுக முடிவதும், ஏழைகளுக்கு அது மறுக்கப்படுவதும் அரசியல் ஏற்றத்தாழ்வு. இந்த ஏற்றத்தாழ்வுகளைக் களைவதே பாதுகாப்பு நடவடிக்கைகளின் குறிக்கோள். சுருக்கமாக சாதியற்ற, வர்க்கமற்ற சமுதாயத்தை நிறுவுவதே இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளின் குறிக்கோள். ******* இந்தியாவில் இத்தனை வருடங்களாக இடஒதுக்கீடு இருந்தாலும், பெரும்பான்மை தாழ்த்தப்பட்ட சாதி மக்களுக்குக் கல்வி வாய்ப்பு கிட்டவில்லை. இடஒதுக்கீட்டின் மூலம் அனைத்துக் தாழ்த்தப்பட்ட மக்களும் கல்வி பெறமுடியவில்லை என்பதே இதன் பொருள்.மேலும், இடஒதுக்கீடு என்பது தற்காலிகத் தீர்வு, அது சில காலம் மட்டுமே தொடரும், அது நிரந்தரத் தீர்வல்ல.சரி, அரசு இடஒதுக்கீட்டை நிரந்தரமாக்குவதன் மூலம் தலித் மக்கள் பிரச்சினை தீருமா? இடஒதுக்கிட்டை நிரந்தரமாக்குவது என்றால் என்ன? சாதியின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்படுவதால், இடஒதுக்கீடு நிரந்தரமானால், சாதியும் நிரந்தரமாகும். எங்களுக்குக் ‘கீழ்’ சாதி என்பது நிரந்தரமாக இருக்க வேண்டும்’ என்று சொல்வதற்கு நிகரானது இது. உண்மையில் இது தாழ்த்தப்பட்ட சாதியினருக்குப் பெரும் தீங்கையே விளைவிக்கும். ‘சாதி ஒழிப்பு’ என்னும் கொள்கையும், ‘இட ஒதுக்கீட்டைத் தொடர்ந்து வழங்குதல் என்னும் கொள்கையும் தற்காலிகமாக மட்டுமே ‘சக வாழ்வு’ வாழ்கின்றனவே தவிர நீண்ட காலத்திற்கு அல்ல. #சில_காலங்களுக்கு_மட்டுமே_இருக்க_வேண்டும்.சில காலம் கழித்து இது நீக்கப்பட்டால் தாழ்த்தப்பட்ட சாதி மக்களின் நிலை என்னவாகும்? இடஒதுக்கீட்டைப் பயன்படுத்தி, தாழ்த்தப்பட்ட சாதி மக்களில் ஒரு பகுதியினர், உயர் கல்வி பெற்று, மூளை உழைப்பு பணியில் சேர்ந்திருப்பர். அவர்களுடைய பொருளாதார நிலைமை கொஞ்சம் மாறியிருக்கும். ஆனால் பெரும்பான்மையான தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் ‘தாங்கமுடியாத’ வறுமையிலேயே வாழ்கின்றனர், கீழ்நிலை உடல் உழைப்பைச் செலுத்தி வருகின்றனர். இடஒதுக்கீடு தொடர்ந்தாலும், நீங்கினாலும் இவர்களுக்கு அது ஒன்றுதான். பெரும்பான்மை மக்களுக்கு அது எந்த நன்மையையும் தராது. ஒரு சில தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் மட்டுமல்லாது, ஒட்டுமொத்தக் தாழ்த்தப்பட்ட சாதி மக்களும் முன்னேற வேண்டும். அதற்கு ‘இடஒதுக்கீட்டைத் தொடர்ந்து வழங்குதல்’ என்பதற்குச் செல்லாமல் உழைப்புச் சுரண்டலிலிருந்து அவர்களை விடுவிக்கும் கோட்பாட்டிற்கு நாம் செல்ல வேண்டும்.- ரங்கநாயகம்மா, சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு: புத்தர் போதாது! அம்பேத்கர் போதாது! மார்க்ஸ் அவசியத் தேவை