மதததை பற்றி மார்க்சியம் பேசுவது,”மதம் ஒரு சமூக நிறுவனம், அது மேற்கட்டுமானத்தின் ஒரு பகுதி, அடிதளத்தை பிரதிபலிக்கும் பல்வேறு கருத்துகளில் இதுவும் ஒன்று” என்ற மார்க்ஸ், மதத்தை வரலாற்று ரீதியாக ஆய்வுக்குட்படுத்தினார். அதன் தோற்றம், வளர்ச்சி, தன்மை பற்றி விரிவாக ஆய்ந்தறிந்து அதன் மீதான அணுகுமுறையை உருவாக்கியுள்ளார்.
மதத்தை எதிர்த்து போராட்டம் என்பது தொடர்ந்து இருக்க வேண்டும் என்ற மார்க்ஸ். மதமானது மனிதனின் அறியாமையால் துவக்க காலத்தில் தோன்றிய ஒன்று, பின்னர் சமூகத்தில் வர்க்கங்களாகப் பிளவுண்ட பொழுது அது ஆளும் வர்க்கத்தின் நலனை பாதுகாக்கும் சாதனமாக மறியது.
சமூக அடிப்படை தான் மதத்திற்கு ஆதாரமாக உள்ளது. இந்த அடிப்படை மாறும் பொழுது மதத்தின் தன்மை மாறுகிறது. அதாவது நிலப்பிரபுத்துவ காலத்தில் சர்வாதிகார சக்தியாக திகழ்ந்த மதம், மக்களை மூடதனமாக வலுக்கட்டாயமாக செயல்பட்ட மதம், முதலாளித்துவ சமூகத்தில் சமத்துவம் பேண ஜனநாயக வேசம் அணிந்தது. இதில் இருந்து நாம் அறிந்துக் கொள்வது இந்த சமூகத்தை மாற்றி அமைக்கும் பொழுது அதன் ஆணிவேர்கள் கருகி விடும். பின்னர் மதம் சிலகாலம் பழங்கால சின்னமாக இயங்கி உதிர்ந்து விடும். அதற்கான வர்க்க போராட்டத்தை மார்க்சியம் கோருகிறது.
ஆனால் பகுத்தறிவாதம் என்ற முதலாளித்துவ நாத்திகவாதம் என்பது கடவுள் எதிர்ப்பு மத எதிர்ப்பு மட்டுமே முழுக் கொள்கையாக செயல்படுகின்றனர். மதத்தின் அடிப்படைகள், அதன் தோற்றம் அதன் பங்கு பற்றி பேசாமல் அதன் குறைகளை சாடும் விமர்சனபாணி மதவாதிகளின் அட்டூழியங்கள் புராணங்களில் உள்ள முரண்பாடுகள் பற்றிய பிரச்சாரங்கள் ஒரு கருத்தை மற்றொரு கருத்தால் எதிர்க்கும் போராட்டம் இது ஒரு கருத்து முதல்வாத போராட்டமே… மக்களுக்கும் மதத்திற்கு இடையில் உள்ள தொடர்பை அறிந்துக் கொள்ளாமல் சீர்திருத்தம் கோரி இதே அமைப்பு முறைக்குள் தீர்வு காண நினைக்கும் ஏமாற்றே இதில் விடிவு அல்ல. அடித்தளத்தை அசைக்காமலே மேள்கட்டுமானத்தை மாற்ற நினைக்கும் அர்ப்பவாதம் தான் நாத்திகவாதம். இதற்குள் ஒடுக்குபவனும் ஒடுக்கப்பட்டவனும் சமத்துவம் காண்பது எந்தவித மாற்றமும் நிகழாது!
மார்க்சியம் நமக்களித்த தத்துவம் இந்த சமுகத்தை புரட்டி போடும் புரட்சி ஆம் மாற்றம் மட்டுமே தீர்வு.