நாட்டின் முரண்பாடுகள் தெரிந்துக் கொள்வோம்

உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இங்கு பார்பன எதிப்பு மற்றும் பல்வேறு எதிர்ப்பு என்பது நேரடியான முரணை ஒடுக்குமுறையை மக்கள் முன் திசைத் திருப்ப செய்யும் வேலையே இவை பல் ஆண்டுகளுக்கு முன் தோழர் ஒருவரின் பதிவு தேவைக்க் கருதி பதிவிடுகிறேன்.
[1]பிரிட்டிஷ் ஏகாதிபத்திய வாதிகள் இங்கு வாழ்ந்த பல்வேறு தேசியஇன மக்களை அடிமைப்படுத்தினர்.பல தேசங்களை அழித்து ஒரே நாடாக்கினர்.
[2]ஆமாம் இந்திய அரசு
தரகுமுதலாளிகளின் அரசு தான்.
இதில் என்ன முரண்பாடு!
[3]ஐரோப்பாவில் மன்னர் ஆட்சியை நிலப்பிரபுத்துவத்தை அழித்து முதலாளிகள் மொழிவழி தேசங்களை உருவாக்கினர்.
ஒன்றாக இருந்த ஐரோப்பா….
ஆங்கிலம் பேசியோர் இங்கிலாந்து என
ஜெர்மன் பேசியோர் ஜெர்மனி என
பிரெஞ்சு பேசியோர்
பிரான்ஸ் என
15 தேசங்கள் தோன்றின.
[4]ஐரோப்பாவில் தேசிய முதலாளிகள் தேசத்தை உருவாக்கினர்.
[5]இந்தியாவில் ஐரோப்பிய காலனியவாதிகள் ஆரிய-திராவிட இனவியல் கோட்பாடுகளை உருவாக்கினர்.இனங்களை ஆரியஇனம்,திராவிடஇனம் பிரித்து
ஆரியர் எதிரி இஸ்லாமியர் என்ற முரணை உருவாக்கி ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தை திசைதிருப்பினர்.ஆரியர் எனும் பார்ப்பனர் தங்களின் எதிரி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அல்ல.கிறித்துவம் அல்ல!
இஸ்லாமியர் என்றனர்.
சாவர்க்கர் கும்பல் ஏகாதிபத்திய தாசர்களாக இருந்து ஏகாதிபத்திய கொள்ளையை ஆதரித்தனர்.இங்கே
திராவிட மொழிக்குடும்பம் அடிப்படையில் திராவிட இனவியல் பேசிய நீதிக்கட்சியும் பெரியாரும் எங்கள் எதிரி பார்ப்பனர்,இந்துமதம் என்றனர்.
ஏகாதிபத்திய எதிர்ப்பை திசைதிருப்பினர்.திராவிட இனத்தின் எதிரிகள் ஆரிய பார்ப்பனியம்,இந்துமதம் என்றனர்.
ஏகாதிபத்திய எதிர்ப்பை,ஏகாதிபத்தியம் கொள்ளையை ஒரு காலும் எதிர்க்கவில்லை.
இரண்டு கும்பலும் (ஆரிய-திராவிட)
ஏகாதிபத்திய கரசேவை செய்து இந்தியா அடிமைப்பட்டதை எதிர்க்கவில்லை.
[5]இரண்டு கும்பலும் மொழிவழி தேசங்கள் அடைய போராடவில்லை.ஆரிய-திராவிட இனவியல் பேசினர்.ஆரிய-திராவிட மொழிக்குடும்பக் கோட்பாடுகளை ஆதரித்தனர்.இந்தக் கோட்பாடுகள் பிரிட்டிஷ் காலனிய ஆதிக்கத்திற்கு சேவை செய்தது.
[6]காலனிய ஆதிக்கத்தை எதிர்த்து தமிழ்தேசியஇன விடுதலைக்கு போராடவேண்டிய பெரியார் காலனிய ஆதிக்கத்தை ஆதரித்தார்.
[7]பிரிட்டிஷ் காலனிய ஆதிக்க வாதிகள் தாங்கள் உருவாக்கிய தரகுமுதலாளித்துவ கும்பலிடம் அதிகாரத்தை கைமாற்றினர்!
காலனிய ஆதிக்கத்திற்கும், ஏகாதிபத்தியத்திற்கும்,தரகுமுதலாளித்துவத்திற்கும் சேவை செய்யும் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கினர்.
[8]தரகுமுதலாளிகள் எந்த ஒரு தனிப்பட்ட தேசியஇனத்தையும் சேர்ந்தவர் அல்ல.அவர்கள் தமிழராக,மலையாளியாக,குஜராத்தியாக,வங்காளியாக இருந்தாலும் எந்த தேசியஇனத்தின் நலனுக்காகவும் பாடுபடுபவர்கள் அல்ல.அவர்களின் வர்க்க நோக்கம்
(1)ஏகாதிபத்திய-நிலப்பிரபுத்துவ உறவை பாதுகாத்தல்.
(2)ஏகாதிபத்திய சேவை
(3)இந்திய அளவிலான சந்தை மற்றும் இலங்கை,பங்களாதேஷ்,நேபாளம் சந்தைகளும் தேவை.
(4)பல தேசியஇனங்கள் கொண்ட பல தேசங்களை ஒரே இந்தியா என்ற நாடாக,உடையாமல் பாதுகாத்தல்.
(5)ஏகாதிபத்திய சேவைக்கு ஆங்கில மொழி.
இந்திய சந்தைக்கு இந்தி மொழி
(6)இந்தியாவில் இனங்களுக்கிடையே ஒடுக்கும் இனம் ஒடுங்கும் இனம் என்றில்லை
(7)ஒடுக்கும் தரகுமுதலாளித்துவ, ஏகாதிபத்திய நலன் காக்கும் அரசே இனங்களை ஒடுக்கும் அரசாக,அரசியலமைப்புச் சட்டமாக உள்ளது.