நீண்ட நாட்களாக நான் தேடிக்கொண்டிருந்த ஒரு நூல் “நாடு அழைத்தது” என்ற மேஜர் ஜெயபால் சிங் அவர்களின் சுயசரிதை ஆகும். அந்த நூல் இன்று கிடைக்கப்பட்ட அதனைப் பற்றி எனது சில கருத்துக்களை எழுத போகிறேன்.அந்த நூல் தற்பொழுது சென்னை புத்தக கண்காட்சியில் அலைகள் பதிப்பகம் வெளியிட்டுள்ளது, வாங்கி வாசிக்கலாம்.இரண்டாம் உலகப் போரில் ஆங்கிலேயர்களுக்கு பெரும்படை போரிடத் தேவைப்பட்டது அதனை வழிநடத்த அதிகாரிகளும் தேவைப்பட்டனர் அவர்கள் இந்தியர்களாக தேவைப்பட்டது அதில் பல முரண்களைக் சந்தித்த ஒரு அதிகாரி தான் மேஜர் ஜெயபால் இவர் இரண்டாம் உலகப் போர் காலத்தில் லெப்டினன்டாக பின் கேப்டனாக உயர்ந்து தனது பணி காலத்தில் அங்கு நடந்த பல்வேறு ஆங்கில அதிகார வர்க்கத்தை எதிர்த்து நடத்திய பல போராட்டங்களை நினைவுகளை பகிந்துள்ளார்.பிரிட்டிஷ் ஆட்சியில் விமான ராணுவப் படைகளின் தலைமை அதிகாரியாக பணியாற்றிய மேஜர் ஜெயபால் சிங் தனது பதவி காலத்தில் அவர் செய்த செயல்களை கூறுவதுதான் இந்நூல்.சரி நூலை பற்றி தெரிந்துக் கொள்ள சில படங்களை கொடுத்துள்ளேன் தோழர்களே.அதற்க்கு முன் எனது சில கேள்விகள்.இராணுவம் என்பது என்ன? அதன் குண நலன்கள் என்ன? மக்கள் அதனை பற்றி என்ன நினைக்கிறார்கள்? என்பதல்ல என் கேள்வி.தங்களை புரட்சியாளர்களாகவும் முற்போக்காளர்கலாகவும் காண்பித்துக் கொள்ளும் அந்த புரட்சியாளர்களுக்கு இந்த அதிகாரியாய் ஆங்கில ஆதிக்கத்தில் அவர்களுக்கு எதிராக சங்கம் அமைத்து அதிகாரத்தை தூக்கி எறிய நினைத்ததை எத்தனை பேர் தெரிந்திருப்பார்கள் என்று தெரியவில்லை.அப்படி தெரிந்திருப்பின் உங்களின் பணியை நீங்கள் என்றாவது பரிசீலிக்க முடியுமா?இதனை பற்றி விரிவாக இன்னும் எழுதுவேன் நாளை…