டாக்டர் அழைப்பை எதிர்பார்த்து நெடுநேரமாகக் காத்துக் கொண்டிருந்த என்னால் நிலைகொள்ள முடியவில்லை வானை அண்ணாந்து பார்க்கிறேன். அவர் வீட்டுக்கு முன் அமைந்துள்ள முல்லைப் பந்தல் கதிரவனின் கைகளைத் காணத்துடிக்கும் எனது விழிகளுக்குத் திரை போட்டுவிட்டது. சுவரிலுள்ள அந்த எழுத்துகளைப் பார்க்கிறேன்.
காய்ச்சல் தலைவலி, லொக். லொக். இருமல், வேண்டாத சனியனை விலை கொடுத்து வாங்கிவிட்டேன். 'ஒ. தூஉ.', துப்பிய கோழையில் மண்ணைத் தள்ளி மூடுகிறேன். ரயில் எஞ்சின் கூட தோற்றுப் போகும். அதைக் குடிக்காமல் இருந்திருந்தால். "கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா!' என்கிறது மனம். -
டாக்டர் அறையை ஒட்டியுள்ள சிமெண்ட் பெஞ்சியில் முல்லைப் பந்தலுக்கீழ் அமர்ந்திருக்கிறேன். இன்னும் நாலைந்து பேர் போன பிறகுதான் டாக்டரைப் பார்க்க வேண்டும். மருத்துவமனைச் சுவரைச் சுற்றிப் பார்க்கிறேன். அறிக்கைப் பலகை, அதில் ஒன்றுமில்லை. இவ் வாரத்தில் டாக்டர் வெளியூர் போகவில்லை போலிருக்கிறது. அதுக்கு மேலே இரண்டு வரிகள் எழுதப்பட்டுள்ளன. 'நாடு மொழி இனம். ' 'லொக். ஒ . . . வாசகங்களில் என்னல் கவனஞ் செலுத்த முடியவில்லை. ஆயினும் அவற்றை மனனம் செய்ய முயல்கிறேன். w
டாக்டர் உள்ளே நோயாளியைப் பரிசோதிக்கிறர் . அவர் அறை பக்கத்திலேயே இருக்கிறது. நோயாளிகளோடு உரையாடுவது வெளியே அமர்ந்திருப்பவர்கள் விரும்பாவிட்டாலும் அவர்கள் காதில் வந்து விழும். எங்கள் காதிலும் வந்து விழுகின்றன.
‘என்ன, இப்போ உடம்பு தேவலைதானே?
“கொஞ்சந் தேவலை. “பயப்பட வேண்டாம் எல்லாம் குணமாகிவிடும். வேறு மருந்து தருகிறேன். என்ன பீடியை மறக்க மருந்து கொடுத்தேனே சாப்பிட்டீங்களா பீடியை விட்டிடணும் இல்லேனா மருந்து சரியா வேலை செய்யாது'
நோயாளியோடு உரையாடிக் கொண்டிருக்கும் பொழுதே தன் ஹோமியோபதி மருத்துவத்தின் பத்திய முறைகளை நோயாளிகள் பின்பற்றுகிறர்களா இல்லையா என்பதைக் கவனிப்பதிலும் வலியுறுத்து வதிலும் டாக்டர் தன் கவனத்தைத் தவறவிட்டுவிடுவதில்லை.
பீடியை விட்டிட்டாரா என்று டாக்டர் கேட்டதுதான் தாமதம் நோயாளிகூட வந்த மனைவி “நல்லா உரைக்கிழுப்பிலே கேளுங்கய்யா. பீடியெ ஊதியூதி காசுக்கு காசும் போயி தூணா இருந்த மனுசன் துரும்பாப் போயிட்டார். . ' கணவனது செயல்களினல் உண்டான வெறுப்பு, அவளது வார்த்தைகள் நெருப்பாய் விழுகின்றன.
“உங்களுக்கு எத்தனை தடவை சொல்லுறது. வெத்திலை பீடி காபி டீ பொயிலை நம்ம மருந்துகிட்டே ஆகவே ஆகா தென்று. ஒன்று மருந்து சாப்பிடுங்க. இல்லே பீடியைச்
சாப்பிடுங்க குழந்தையைக் கடியும் அன்னைபோல நோயாளியைக் கடியும் டாக்டரின் வார்த்தைகள், நோயாளியின் மூளையைச் சலவை செய்கிறன போலும். அதனுல்தான் அவன் மறுமொழியின்றி மெளனியாக நிற்கிறான்.
'அம்மா ஒன்றும் கவலைப்பட வேணும். பீடியையும் விட்டிடு
வார். நோயும் குணமாகிவிடும். சுவரை வச்சுத்தானே சித்திரம், குழந்தைகளெல்லாம் செளக்கிந்தானே.” - நோயாளிகளின் நோயோடு நின்றுவிடாமல் அவர்களது வீட்டுப் பிரச்சினை களோடும் ஐக்கியமாகி விடுவது டாக்டரின் வழக்கம். வெளியே காத்திருப்பவர்களுக்கு இது பெரிய சுமை. உள்ளே இருப்பவர்களுக்கு அது டானிக், டாக்டரால் இந்த பிரச்சினையை நெடுகிலும் சமாளிக்க முடியவில்லை.
டாக்டர் மணியடிக்கிறார், உள்ளே இருந்தவர் வெளியேறுகிறார், வெளியே இருந்து ஒரு பெரியவர் உள்ளே செல்கிறார், இம். இவர் போன பிறகுதான் நான் டாக்டரைப் பார்க்கமுடியும். சிமெண்ட் பெஞ்சியில் கொஞ்சம் வசதியாக நிமிர்ந்து உட்காருகிறேன்.
"வாங்கைய்யா . . வணக்கம். இப்படி அமரலாம்ய்யா. உடம்புக்கு என்ன'
வணக்கம் காம்ரேட். ஒண்ணுமில்லே. கொஞ்சம் நெஞ்சு வலி.. இருமல். கிறுகிறுப்பு. அலைச்சலும் சாஸ்தி.
“ஒன்றுங் கவலைப்பட வேண்டாம். எல்லாம் குணமாக்கிடலாம். உங்க மில்லிலே போராட்டம். என்னைக்கு முடியும்?. . போராட்டத்திலே உங்க சங்கமும் சேர்ந்திருக்கா'
‘ஆமங்கைய்யா ... பட்டினிபோட்டு தொழிலாளர்களை பணிய வைச்சிடலாமென்று முதலாளி நினைக்கிறான், நாங்க விட்டிடுவோமா . இல்லை மற்ற தொழிலாளிகள் தான் விட்டிடுவாங்களா?' டாக்டர் நோயாளியின் நோயோடு நின்று விடாமல் அவர்களைச் சார்ந்துள்ள பிரச்சினைகளையும் எடுத்து அலசுவதில் கெட்டிக்காரர். உள்ளிருக்கும் நோயாளி தொழிற்சங்கத் தலைவராகவோ அல்லது தொழிலாளியாகவோ இருக்கவேண்டும். அதனால்தான் உங்கசங்கமும் சேர்ந்திருக்கா...' என்று கேட்கிறார் . அவரவர் துறைகளைப்பற்றிய பிரச்சினைகளைத் தனது பரந்துபட்ட அறிவோடு டாக்டர் அலசி ஆராயத் தொடங்கும் போது நோயாளியின் நோய் பாதி குணமாடுவிடுகிறது.
“மருந்து சாப்பிடும் போது. சிகரட், பீடி, காபி. டீ எங்களுக்குள்ள ஒரே இன்பம், அவைகள்தான். வேணுமின்ன காபி டீயைக் கூட விட்டிடலாம். ஆஞ சிகரட்... நானே செயின் சுமோக்கர். நாலைஞ்சு பாக்கட் நாளைக்குக் குடிச்சவன் வேணு மின்ன ரெண்டைக் குறைச்சுக்கிடலாமா தோழர்.
“என்ன ! சிகரட் பிடிக்கிறீங்களா . என்னலே நம்பவே முடியலையே. நீங்களோ தொழிற்சங்க முழுநேர ஊழியர். . நிதி நிதின்னு அடிக்கடி மக்களிடம் போநீங்க ஆளு எவ்வளவு நிதியை நீங்க தினம் கரியாக்கிறீங்க. டாக்டரின் கபடமற்ற
தர்க்கப் பேச்சு நோயாளி மனதில் சிலேடை போல் சுருக்கென்று தைத்திருக்க வேண்டும், அதனால்தான் மறு மொழியின்றி மெளனமாய் இருக்கிருர் போலும், டாக்டர் மருந்து எடுக்கிறார்,
சிகரட், பீடி பிடிப்பதில்லை யென்றால் தான் இனிமேல் இங்கு மருந்துக்குவரலாம்."
டாக்டரின் குரல் அழுத்தமாக தொனித்தது.
'சிகரட், பீடி பிடிப்பது நீண்ட காலமாக பழகிவிட்டது. ஆதை எப்படி. காம்ரேட் திடீரென நிறுத்திவிட முடியும்?"
இடையே இருமலும் ஒலித்தது. 'உங்க உடம்பையே கெடுக்கும் இந்த சிறிய பழக்கத்தையே விட முடியாது என்று நீங்க சொல்லுறீங்க, அப்போது பரம்பரை பரம்பரையாய் சொத்துச் சேர்த்து வைக்கிறவனிடம் மட்டும் சொத் தைக் கொடுத்துவிடு, கொடுத்துவிடு என்று எப்படிக் கேட்டுவிட முடியும்? அவனும் எப்படித் தருவான் என நீங்கள் எதிர்பார்க்க முடியும்.''
அது .” பதில் கூற திணறும் வேளை மீண்டும் இருமல் . . . ‘‘ வந்து அவரைத் தலைகுணிய வைத்தது.
'அதனல் தான் சொத்துகளை பறித்தெடுப்போம் என்று கூறு கிருேம் ; அதனல் மட்டும் அவர்கள் உங்கள் நண்பர்கள் ஆகார். அவர்கள் சிந்தனையை வென்ருெடுக்கும் வரை ஆபத்து உண்டு. அவர்கள் நம் பகைவர்கள் என்பதை நாங்க மறந்து விடப்படாது. அதற்காக உங்கள் உழைப்பெல்லாம் நாட்டுக்குத் தேவை. உங்கள் உடம்பே சமுதாயத்தின் சொத்து. அதை நீங்க விரும்பியபடி நீங்களே அழித்து விட முடியாது. சிகரெட், பீடி உங்க உடலின் பகைவர். உடலையும் கெடுத்து உங்க நண்பர்களான பாட்டாளிகளின் போராட்டத்திற்குப் பயன்பட வேண்டிய பணத்தையும் சூரியாக்குகிறது. காம்ரேட் என என்னை இனிமேல் அழைப்பதானுல் இப்பழக்கங்களை முற்ற க விட்ட பின்வாருங்கள்.'
டாக்டரின் பேச்சில் கண்டிப்பும் உயர்ந்த மனிதாபிமான உணர்வும் ஒலித்தது, அவர் கூறிய கருத்து என் இருமலையும் நிறுத்தி விட்டது. -
உள்ளே ஒரேமெளனம்.மீண்டும் ம்ணியடிக்கிறது.நான் எழுகிறேன்.
வெளியே வந்த தோழரின் முகத்திலே புதிய ஒளி. நெற்றியிலே சிந்தனையின் சுருக்கம். −
என் இருமல் மாறிவிட்டது போன்ற தென்பு. சோர்வு நீங்கிய உணர்வுடன் உள்ளே நுழைகிறேன். என் செவியில் புதிய அர்த்தத் துடன் சுவர் பலகையில் பொறித்திருந்த வார்த்தைகள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
'நம் தோழர் நம்பகைவர் நாமறிவோம்'
Related