ஆளும் வர்க்கத்தின் ஊடகங்கள் எந்த செய்தியை பெரிதாக்கி தன் வணிகத்தை பெருக்கி கொள்வது என்பதில் கருத்தும் கண்ணுமாக இருப்பது போலவே ஆளும் வர்க்க ஆண்டைகளின் தேவையை அறிந்து மக்கள் மீது திணிப்பதும் அவர்களின் வேலைதானே. தவறியும் உழைக்கும் மக்கள் விழிப்படைய கூடாது என்று செய்திகளை அமைப்பதும் அவர்கள்தானே.
ஆக உழைக்கும் ஏழை எளிய மக்களின் பிரச்சினையை பேச யாருக்குமே நேரமில்லை!!!!
வேங்கை வயல் நீர் தொட்டியை அகற்ற முடியவில்லை ஆனால் பல கோடி சொத்து குவிப்பு பற்றி வாய்கிழிய பேசுகின்றனர்.
மெரீனாவில் மீனவர்களுக்கு வாழ வழி சொல்ல வக்கற்ற இவர்கள் அவர்களின் வாழ்விடங்களை அபகரித்தில்லாமல் மெத்தனமான நடவடிக்கை!!!
தினம் தினம் மக்கள் ஏழை எளிய உழைக்கும் மக்கள் வரி கொள்ளையால் வாழவே வழியில்லாத நிலை வாழ்கின்றனர் ஆனால் ஆளும் வர்க்க கோமாளிகள் சொல் போரில் மக்களை ஆழ்த்தி ஏமாற்றிக் கொண்டுள்ளனர்.
அவர்களின் சொத்து பிரச்சினையும்அவர்களின் வர்க்க பிரச்சினையை நம் மீது திணித்து நம்மை சுரண்டுவதை மூடி மறைக்கவே.
இந்த நாடகங்கள் எவர் ஆட்சிக்கு வந்தலும் இந்தஆட்சி முறையில் உழைக்கும் ஏழை எளிய மக்கள் சுரண்ட பட்டு கொண்டேதான் இருப்பர் இவை இந்த அமைப்புமுறையின் தன்மை.
ஆக இதன் பின் ஓடுவதோ ஏதோ ஒரு பக்கம் நிற்பதோ உண்மையில் உழைக்கும் மக்களின் விடுதலைக்கான சிந்தனை அல்ல அவை ஆளும் வர்க்கத்தை ஆதரிக்கும் சிந்தனையே சித்தாந்தமே….
ஆகவே இதற்கு மாற்றை பேசு முன்வருவதும் அதனை செயல் முறை படுத்துவதுமே மார்க்சிய லெனினியம் நமக்கு வழிகாட்டுகிறது …. சிந்திப்போமா செயல் படுவோமா தோழர்களே…
