நமது கல்வியை குழிதோண்டி புதைக்க நினைக்கும் அரசும் அதன் கொள்கையும்!!!- சி.ப
எங்கே ஓடி கொண்டிருக்கிறோம், நம் சமுதாயம் எப்படியெல்லாம் நஞ்சாகி கொண்டிருக்கின்றது, நேற்று ஆங்கிலேயன் எப்படி இந்திய மக்களை அடிமையாக்கினான் என்பதனை அறிந்தவையே இருந்தாலும் இன்றைய கல்வி கொள்கை எப்படி உள்ளது என்பதனை அறியுமுன் இந்த அரசு மக்களுக்கான அடிப்படையான கல்வி வழங்காமல் தட்டி கழிப்பதை எப்படி ஏற்க்க முடியும்!! தற்போது தமிழ் இந்துவிலும் பல ஊடகங்களும் அவர்கள் வசதிக்கேற்ப்ப எழுதி கொண்டிருக்கும்போது, நாம் சிறிது அலசுவோமா?
அமெரிக்காவின் உலக கொள்ளையின் அடிப்படையில் ஏற்படுத்தபட்ட, “ஏகாத்தியபத்திய சுரண்டலுக்காக,” பல்வேறு முறையில் உலக நாடுகளை அடிமைபடுத்த கொண்டிருந்த கொள்கையில் ஒன்று மக்களின் அடிப்படை கல்வியை பறிப்பது அதாவது சிந்தனையை சிதைப்பது,”மக்களை சிந்திக்காத தனக்கான (அமெரிக்க ஏகாத்தியபத்திய) தேவையை சரியாக நடத்தி முடிக்கும் அடிமை கூட்டம் மட்டுமே தேவையாக்க தகுதியான கல்வி மட்டுமே அளித்து ஒரு சிந்தனை அற்ற கூட்டத்தை உருவாக்குவதே ஆகும்”. இனி மக்களுக்கான் கல்வியை கைவிட்ட அரசை பற்றி ஒரு சின்ன விளக்கம். நாட்டை அந்நியனிடம் அடகு வைக்கும் “தனியார் மயம், தாராள மயம்” கொள்கையை முதன்மைபடுத்தி மைய அரசின் திட்டம் மக்களின் நலன் மறந்து, தரகு முதலாளிகளின் தேவை கேற்ப்ப ஏகாத்தியபத்திய ஆணைக்கினங்க, மக்களை கல்வியற்ற தற்குறிகளாக்க கல்வியையும் விற்ப்பனை பொருளாக்கி மக்களின் எதிர் காலத்தையே சூனியமாக்கிவிட்டது. ஒரு தேசத்தின் எதிர்காலம் அதன் கல்வியாலேயே நிர்ணயிக்கப்படுகிறது. பல ஆண்டுகளாக சட்டத்தின் மூலமும் கமிசன் மூலமாகவும் வெளியிடபட்ட இ.க.க சட்டம் 2009 உண்மைகள் என்ன நீங்களே புரிந்து கொள்வீர்.
இலவச கட்டாய கல்விச்சட்டம் 2009: அரசு கடைபிடிக்கும் தாராளமய, தனியார்மயக் கொள்கைகளின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. பெயரில் இலவசம் என்ற சொல் இருந்தாலும் கட்டணப் பள்ளிகளுக்கும் இடம் அளிப்பதால் அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவசக் கல்வி கிடைக்காது. சட்டத்தில் சில வரவேற்கத்தக்க அம்சங்கள் இருக்கின்றன. அவற்றில் சில: பள்ளிகள் அமைவிடம் குழந்தைகள் எளிதாகச் சென்றடையும் வண்ணம் இருக்க வேண்டும்; 5 -ஆம் வகுப்பு வரைப் படிக்க 1 கி.மீ. தொலை விற்குள்ளும், எட்டாம் வகுப்பு வரைப் படிக்க 3 கிமீ தொலைவிற்குள்ளும் பள்ளிகள் அமைய வேண்டும்.
அரசு அங்கீகாரமில்லாது எப்பள்ளியும் இயங்கக்கூடாது. அங்கீகாரம் பெறாத அல்லது மறுக்கப்பட்ட பள்ளிகளில் பயிலும் குழந்தைகளை வேறு பள்ளியில் சேர்ப்பது அரசின் பொறுப்பாகும். பள்ளிச் சேர்க்கை எளிதாக்கப்பட்டுள்ளது. நுழைவுத் தேர்வு, பெற்றோரை அல்லது குழந்தைகளை நேர்காணல், வயதுச் சான்றிதழ், நன்கொடை ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன. மாற்றுகைச் சான்றிதழ் குழந்தைகளின் உரிமை. அதனைத் தர மறுத் தாலோ, கால தாமதம் செய்தாலோ தண்டனைக்கு உட்படுத்தப்படும்.
பள்ளியில் சேராமலோ, அல்லது பள்ளியிலிருந்து இடைவிலகியோ இருக்கும் குழந்தைகள் பள்ளியில் மீண்டும் சேரும்போது அவர்கள் வயதுக்கேற்ற வகுப்பில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அக்குழந்தைகள் சேரும் வகுப்பிற்குத் தகுதியுள்ளவராக்கும் பொறுப்பு பள்ளியைச் சார்ந்தது. 3 முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு முன்பருவக்கல்வி அளித்திட வேண்டும். பள்ளிகளில் எவ்வித பாகுபாடுகளுக்கும் எந்தக் குழந்தையும் உட்படக்கூடாது. பள்ளிகளில் உடல், மனரீதியான தண்டனைகள் ஒழிக்கப்பட்டுள்ளது. எந்த வகுப்பிலும் மாணவர்கள் ஓராண்டிற்கு மேல் தக்கவைக்கக் கூடாது. இடையில் பள்ளியை விட்டு வெளியேற்றவும் கூடாது.
அரசு உதவிபெறா தனியார் பள்ளிகளில் 25 விழுக்காடு இடங்கள் பள்ளிக்கு அருகில் வசிக்கும் எளியவர் வீட்டுக் குழந்தைகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும். தகுதி பெற்ற ஆசிரியர்கள்தான் நியமிக்கப்பட வேண்டும். கல்விப் பணியல்லாத மாற்றுப்பணிகளில் ஆசிரியர்களைப் பயன்படுத்தக்கூடாது. ஒவ்வொரு பள்ளிக்கும் பெற்றோரைப் பெரும்பான்மை யோராகக் கொண்ட பள்ளி நிர்வாகக்குழு அமைக்கப்பட்டு செயல்பட வேண்டும்.
நடப்பது ( நடை முறை ) தான் என்ன என்பதனை நான் விளக்க தேவையில்லை?
பொதுச் செலவில், உயர்கல்வி உதவித்தொகையாக வழங்கும் பணத்தின் அளவு பாதியாகக் குறைந்துவிட்டதைப் புள்ளிவிவரங்கள் சுட்டிக் காட்டுகின்றன. உயர்கல்வி நிறுவனங்களில் எங்கெல்லாம் ஜனநாயகம் உயிர்ப்புடன் இயங்குகிறதோ, அங்கெல்லாம், கல்வித் தரம், கற்றல் கற்பித்தல் முறைகள், புதியன காணும் போக்கு அதிகமாக இருப்பதைக் காண முடியும். இந்நிலையில், முன்னணியில் இருந்த பல உயர்கல்வி நிறுவனங்கள், அதில் பயிலும் மாணவர்களின் செயல்பாடுகளை முடக்க, கல்வி உதவித்தொகையை முடக்க நுட்பமான பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன. ஒரு கல்வி நிறுவனத்தால் பாதிக்கப்படும் மாணவன் நேரடியாக நீதி கேட்க நீதிமன்றத்தை அணுகும் வாய்ப்பை மறுக்கும் ஏற்பாடுகள் இந்தப் பரிந்துரையில் இருப்பது அச்சம் தருகிறது. (நா.மணி
The Hindu 17/08/2016)
நம்பப்படும் ‘2016-ம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கைக்கான சில உள்ளீடுகள்’ என்ற மத்திய மனிதவளத் துறையின் ஆவணம் உயர்கல்விச் சிக்கல்களைப் பற்றிப் பேசுவதாகச் சிலர் குறிப்பிடுகிறார்கள். உயர் கல்வித் துறையில் சிக்கல்கள் இல்லாமல் இல்லை. மூன்றில் இரண்டு பங்கு பல்கலைக்கழகங்கள்,
90% கல்லூரிகள் சராசரிக்கும் கீழாகத் தரம் குறைந்தவை. துணைவேந்தர்கள் நியமனங்களோ, சாதி, சமய அரசியல் சார்புத்தன்மை கொண்டதாகவும் லஞ்ச லாவண்யம் சார்ந்ததாகவுமே மாறிவிட்டது என்று கூறினார்
2007-ல் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். தமிழ்நாட்டுக் கல்வி நிலைமைகளை அறிந்தவர்களுக்கு இது புதிய விஷயம் இல்லை. இந்திய உயர்கல்வித் துறையின் அவலங்கள் இவ்வளவுதானா? இக்குழு கண்டறிந்து வெளிச்சத்துக்குக் கொண்டுவராத அவலங்கள், சிக்கல்கள் பல. அவற்றை அறிந்திருந்தால் மட்டுமே பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும்.
இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களை நிர்வகித்து வரும் பல்கலைக்கழக மானியக் குழு, அகில இந்திய தொழில்நுட்பக் குழுமம், மருத்துவக் கல்விக் குழுமம் ஆகியவற்றைக் கலைத்துவிட்டு, அவற்றுக்குப் பதிலாக ஒற்றை நிறுவனம் ஒன்றை அமைக்கப் பரிந்துரைத்தது சுப்ரமணியம் குழு. ஆனால் அப்படியெல்லாம் வெளிப்படையாகக் கூறாமல், அதைப் பூடகமாகப் பேசுகிறது அரசு வெளியிட்டிருக்கும் ஆவணம். (நா.மணி
The Hindu 17/08/2016).
நாட்டின் கல்வியை அழிக்க துணிந்துவிட்ட அரசும் அதன் ஏவலர்களும் மக்களுக்காக சிந்திக்க போவதில்லை, உண்மையான மக்கள் நலனில் அக்கரை கொண்ட ஒவ்வொருவரும் இதனை எதிர்ப்போம் மக்களின் விடுதலைக்கான சரியான கல்வியை எல்லா மக்களுக்கும் கிடைக்க, உண்மையான இலவச கல்வி கொள்கை நடைமுறை படுத்த பரந்துபட்ட மக்களுடன் இணைந்து இன்னொரு சுதந்திர போர் அறை கூவினால் மட்டுமே இந்த ஏகாத்திபத்திய கொள்ளையிரிடமிருந்து காப்பாற்ற படுவோம்