நமது கல்வி முறை-5

இன்று உலக மயம் தனியார் மய சூழலில் எல்லாம் லாபம் கொழிக்கும் தொழிலாகி போயுள்ள போது நாம் எங்கெ தேடுவது தரமான கல்வியை.

உலக மயமாக்கலுக்கு பிறகு கூட்டுக் குடும்பங்கள் உடைந்து தனித்தனியாக நீயுக்கிளியர் குடும்பங்களாக உள்ள சூழலில் குழந்தை வளர்ப்பு என்பதே பெற்றோருக்கு பெரும் பாரமாகி உள்ளது குழ்ந்தையை எப்படியேனும் ஒரு பள்ளியில் சேர்க்க வேண்டும் அவை விளம்பரத்தில் முன்னணியில் உள்ள பள்ளியாக இருக்க வேண்டும் அந்தப் பள்ளியில் சேரும் பிள்ளை வீட்டிலும் பள்ளியிலும் தனக்கு ஏற்படும் சந்தேகங்களை கேட்டால் பதிலளிக்க முடியாத பள்ளி பதிலளிக்க நேரமில்லாத குடும்பம் இப்படி சிந்தனை முடக்கப் பட்டு கேள்விக்கு பதிலளிக்க திறனற்ற பள்ளி ஆசிரியர்கள் எடுக்கும் ஆயுதம் ஒடுக்குமுறை அடி உதை குழந்தைகள் ஒருமுறையில் அடங்கி ஒடுங்கி அடிமைதனத்திற்க்கு பயிற்றுவிக்கும் இடமாக பள்ளி இருக்கிறது.

பள்ளிப் பாடம் என்பது ஒருவித சிந்தனையற்ற மனனம் செய்து ஒப்புவிக்கும் முறையே, இதில் தேர்ச்சி என்பது புத்தக புழுக்களாக இருப்பவர்களுக்கு மட்டுமே, இங்கே சிந்தனை எங்கேயும் தேவையின்றி ஒரு நடமாடும் எந்திரமாக்கும் வேலையை செய்கிறது இந்தக் கல்வி முறை. ஆகவே இங்குள்ள சமூக சிக்கலுக்கு காரமாண பல்வேறு பிர்ச்சினை குறித்து நமது கல்விமுறையில் எங்கேயும் போதுப்பதில்லை… இந்த வாழ்க்கை பாடம் அனைவ்ரும் அறிந்திருக்க வேண்டிய ஒன்றாயினும் ஏன் நம்க்கு போதிப்பதில்லை? நாம் சிந்தனை அற்ற மூடர்களாக ஆளும் வர்க்க அடிமைகளாக வாழ சொல்கிறது இந்தக் கல்விமுறை..

தொடரும்…