நமது கல்வி முறை-2

நமது இன்றைய கல்வி முறையானது உண்மையில் ஏன் சமுக பிரச்சினையை தீர்பவனாக இல்லை?

அரசு எந்திரமானது தனது ஒடுக்கு முறையை கல்வியில் எப்படி திணிக்கிறது என்பதனை பற்றி பார்ப்போம்.

உற்பத்தி உறவுகளின் மறு உற்பத்தி அதாவது முதலாளித்துவ சுரண்டல் உறவு, அதற்க்கு சேவை செய்யும் கல்வி மிகவும் அமைதியான மற்றும் ஆழமான கருத்தியலாகும்.

சிறுவயதிலே குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பப் படுகிறார்கள் அவர்கள் தாய் தந்தை மற்றும் பள்ளியில் பல விசியங்கள் திணிக்கப் படுகிறது, நடைமுறையில் உள்ள கருத்தியல் கற்ப்பிக்கப் படுகின்றன.

இயற்க்கை அறிவியல் ,அறிவியல் வகுப்புகளில் பகுத்தறிவுப் பூர்வமாக கற்றுக் கொடுக்கப் படுகிறது ஆனால் மொழிப் பாடத்தில் மதம் சார்ந்து பகுத்தறிவு மறுப்பு முக்கியமாக உள்ளது.

சமூக அறிவியல் முற்றிலுமாக பகுதறிவு மறுப்பு கண்ணோட்டத்தில் பொய்களை தவறான தக்வல்களின் அடிப்ப்டையில் கற்ப்பிக்கப் படுகின்றன.

இத்தகை இரண்டுச் சிந்தனைகளின் மூலவேர் நம் கல்வி அமைப்பில் உள்ளது. இதை திட்டமிட்டு ஆளும் வர்க்கம் செய்கிறது.

இன்றைய ஆளும் வர்க்கம் தனது நலனுக்காக சமூக நிகழ்வுகளை பகுத்தறிவு மறுப்பு கண்ணோட்டத்தில் கொண்டு செல்கிறது…. சிபி

இன்னும் வரும்.