இன்று மதவாதிகளின் ஆட்சியில் பகுத்தறிவாதிகள் நாத்திகவாதத்தை தூக்கி நிறுத்த முயற்ச்சிக்கின்றனர் மதவாதிகளோ மக்களிடம் மண்டிக்கிடக்கும் பழைமைவாதம் மற்றும் மதம் சார்ந்த சிந்தனையை அறுவடை செய்துக் கொண்டுள்ளனர்.
இதனை நாம் நமது கல்விமுறையில் இருந்து இனம் கண்டால் நலம்
வெறும் புத்தகக் கல்வியால் மட்டுமே வாழ்க்கைக்கு தேவையான எல்லாம் கிடைத்துவிடும் என்று போட்டா போட்டி எங்கும் நீக்கம் மற நிறைந்துள்ளவைதானே. இன்றைய உலக மய தனியார் மய கொள்கையால் அரசு தனது பணியை தனியாருக்கு கொடுத்துவிட்டது இன்று பெரிய சுரண்டும் யந்திரங்களாக வளர்ந்து வருகின்றன, இன்று இலவசக் கல்வி என்பது கேலிக் கூத்தாகி வருகிறது.
இன்றைய கல்விமுறையானது வெறும் மனனம் செய்வது மட்டுமே சமுக அறிவோ அறிவியல் ரீதியான அறிவியல் பூர்வமான சிந்தனை அற்ற வெறும் கருத்து முதல்வாதிகளாக சாதி மத குப்பைகளை சுமந்து திரியும் கீழான சிந்தனையுள்ளவர்களாக அரசே மாணவர்களை நடத்துகிறது. இவை ஒருபுறமிருக்க கல்வி என்பது பள்ளியில் மட்டுமல்லாது வீட்டிலும் படிப்பு. இவ்வாறு இளம் வயதினரின் காலமெல்லாம் உழைப்பேயன்றி வெறும் புத்தகப் படிப்பிலும் மனனம் செய்வதிலும் கழிகிறது, இவை அவர்களை ஒரு செக்கு மாட்டுதனத்திற்க்கு கொண்டு போகிறது.
மேல் படிப்புக்கு பல போட்டிகள் நடத்தப் படுகின்றன இப்போட்டிப் படிப்பில் தேர்ச்சிஅடைந்த போதும் பல்கலைக் கழகப் படிப்பிற்கு நுழைய அவர்கள் பெரும் பொருள் செலவுக்கு பின்னரே கல்விக் கற்க்கின்றனர். இதில் சேர முடியாத மற்றவர்கள் மலிந்த கூலிச் சந்தையில் தள்ளப்படுகின்றனர். ஏற்கெனவே கூலிச்சந்தை நிரம்பி வழிகிறது. இதற்கு மேலும் மேலும் ஆண்டுதோறும் இந்த கூலியடிமைச் சந்தைக்கு படித்தவர் அனுப்பப்படுகின்றனர். இதுவே பெரிய வியப்பான செய்தியாகும்.
தொழிற்சாலையில் பண்டங்களே உற்பத்தி செய்யப்படுவதுண்டு. இக்கல்விக்கூட தொழிற்சாலைகளில் (கல்லூரிகள் உட்பட) கூலியடிமைச் சந்தைக்கு தயாராகும் பண்டங்கள் அனுப்பப்படுகின்றன சிந்தனை முறையில் தங்களின் இன்னிலை பற்றிய கல்வி அறிவு போதிக்கப் படவில்லை. முதலாளித்துவத்தின் திட்டமற்ற உற்பத்தியை இங்கும் காணலாம் ஆம் இவர்களை ஒரு கருவியாக சிந்தனையற்ற உழைப்பு கருவியாக வள்ர்த்தெடுக்கிறது. முதலாளித்துவத்தின் அரச நிர்வாசம், தொழிற்சாலைகள், விற்னை, இறக்குமதி ஏற்றுமதி வாணிபம் இன்னும் பல சிறு தொழில்கள் நடத்த படித்த கூலியடிமைகள் தேவைப்பதிகின்றனர், அத்தேவைக்கு சந்தை நிரம்பி வழிவதால் மிக மலிந்த விலையில் கூலி அடிமைகளின் உழைப்பைப் பெறமுடிகிறது.
முதலாளித்துவ உற்பத்தி முறையில் உள் முரண்பாடு எழுவதும் தவிர்க்க முடியாததாகும். அதுவே அவ்வமைப்பை உடைத்தும் விடுகிறது.
கல்வி முடிந்து கூலியடிமைத் தொழிலை பெறமுடியாது சந்தையில் நிற்பவர்கள் விரக்தியடைகின்றனர். அவர்களது விரக்தி பல்வேறு வகையில் ஆளும் வர்க்கத்திற்கு பிரச்சனையாகி விடுகிறது.
படித்த மாணவர்களுக்கும் அரசிற்கும் இடையில் ஏற்படும் முரண் பாடுகள் வேறும் பல பயங்கர வடிவங்கள் பெற்றுவருகின்றன. இந்த அரசு அவர்களுக்கு கொடுப்பது ஒடுக்குமுறை மட்டுமே முதலாளித்துவ சட்டங்களால் தற்காலிக ஒடுக்கு முறையால் தள்ளிப் போகும் பல போராட்டங்கள் இந்த அமைப்பில் தீர்வு காண முடியாது இருக்கிறது.
எல்லா மக்களுக்கான பாட்டாளி வர்க்க பாதையை நோக்கிய புரட்சியால் மட்டுமே தேசிய புத்தகக் கல்வியால் ஏற்படும் முரண்பாடுகளைத் தீர்க்கமுடியும் … இன்னும் வரும். சிபி.